< 1 யோஹந: 1 >
1 ஆதி³தோ ய ஆஸீத்³ யஸ்ய வாக்³ அஸ்மாபி⁴ரஸ்²ராவி யஞ்ச வயம்’ ஸ்வநேத்ரை ர்த்³ரு’ஷ்டவந்தோ யஞ்ச வீக்ஷிதவந்த: ஸ்வகரை: ஸ்ப்ரு’ஷ்டவந்தஸ்²ச தம்’ ஜீவநவாத³ம்’ வயம்’ ஜ்ஞாபயாம: |
வாழ்வுதரும் வார்த்தையாகிய கிறிஸ்துவைக்குறித்து நாங்கள் உங்களுக்குப் பிரசித்தப்படுத்துகிறோம். தொடக்கத்தில் இருந்த வார்த்தையாகிய அவரையே நாங்கள் கண்டும், கேட்டும் இருக்கிறோம். அவர் பேசுவதை நாங்கள் கேட்டோம், அவரை எங்கள் கண்களால் கண்டோம், அவரை உற்றுப்பார்த்தோம், இந்த வார்த்தையாகிய அவரை எங்கள் கைகளால் தொட்டும் பார்த்தோம்.
2 ஸ ஜீவநஸ்வரூப: ப்ரகாஸ²த வயஞ்ச தம்’ த்³ரு’ஷ்டவந்தஸ்தமதி⁴ ஸாக்ஷ்யம்’ த³த்³மஸ்²ச, யஸ்²ச பிது: ஸந்நிதா⁴வவர்த்ததாஸ்மாகம்’ ஸமீபே ப்ரகாஸ²த ச தம் அநந்தஜீவநஸ்வரூபம்’ வயம்’ யுஷ்மாந் ஜ்ஞாபயாம: | (aiōnios )
உண்மையாகவே, அந்த வாழ்வு வெளிப்பட்டது; நாங்கள் அவரைக்கண்டு, அவரைக்குறித்து சாட்சி சொல்கிறோம். ஏற்கெனவே, பிதாவுடன் இருந்த அதே நித்திய வாழ்வைக்குறித்தே நாங்கள் உங்களுக்கு அறிவிக்கிறோம். இப்பொழுதோ, அவர் எங்களுக்கு வெளிப்பட்டிருக்கிறார். (aiōnios )
3 அஸ்மாபி⁴ ர்யத்³ த்³ரு’ஷ்டம்’ ஸ்²ருதஞ்ச ததே³வ யுஷ்மாந் ஜ்ஞாப்யதே தேநாஸ்மாபி⁴: ஸஹாம்’ஸி²த்வம்’ யுஷ்மாகம்’ ப⁴விஷ்யதி| அஸ்மாகஞ்ச ஸஹாம்’ஸி²த்வம்’ பித்ரா தத்புத்ரேண யீஸு²க்²ரீஷ்டேந ச ஸார்த்³த⁴ம்’ ப⁴வதி|
நீங்களும் எங்களுடன்கூட ஐக்கியம் வைத்துக்கொள்வதற்காக, நாங்கள் கண்டதையும் கேட்டதையும் உங்களுக்கு அறிவிக்கிறோம். எங்களுடைய ஐக்கியமோ, பிதாவோடும் அவருடைய மகனாகிய இயேசுகிறிஸ்துவோடுமே இருக்கிறது.
4 அபரஞ்ச யுஷ்மாகம் ஆநந்தோ³ யத் ஸம்பூர்ணோ ப⁴வேத்³ தத³ர்த²ம்’ வயம் ஏதாநி லிகா²ம: |
நமது சந்தோஷத்தை முழுநிறைவுபெறச் செய்வதற்காகவே இந்தச் சாட்சியத்தை நாங்கள் எழுதுகிறோம்.
5 வயம்’ யாம்’ வார்த்தாம்’ தஸ்மாத் ஸ்²ருத்வா யுஷ்மாந் ஜ்ஞாபயாம: ஸேயம்| ஈஸ்²வரோ ஜ்யோதிஸ்தஸ்மிந் அந்த⁴காரஸ்ய லேஸோ²(அ)பி நாஸ்தி|
கிறிஸ்துவிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட செய்தி இதுவே, அதையே உங்களுக்கு அறிவிக்கிறோம்: இறைவன் ஒளியாக இருக்கிறார்; அவரில் எவ்வித இருளும் இல்லை.
6 வயம்’ தேந ஸஹாம்’ஸி²ந இதி க³தி³த்வா யத்³யந்தா⁴காரே சராமஸ்தர்ஹி ஸத்யாசாரிணோ ந ஸந்தோ (அ)ந்ரு’தவாதி³நோ ப⁴வாம: |
எனவே, நாம் இறைவனுடன் ஐக்கியமாய் இருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு இருளிலே நடந்தால், நாம் சத்தியத்தின்படி வாழ்கின்றவர்கள் அல்ல; பொய் சொல்கிறவர்களாகவே இருப்போம்.
7 கிந்து ஸ யதா² ஜ்யோதிஷி வர்த்ததே ததா² வயமபி யதி³ ஜ்யோதிஷி சராமஸ்தர்ஹி பரஸ்பரம்’ ஸஹபா⁴கி³நோ ப⁴வாமஸ்தஸ்ய புத்ரஸ்ய யீஸு²க்²ரீஷ்டஸ்ய ருதி⁴ரஞ்சாஸ்மாந் ஸர்வ்வஸ்மாத் பாபாத் ஸு²த்³த⁴யதி|
ஆனால், இறைவன் ஒளியில் இருக்கிறதுபோல, நாமும் இறைவனின் ஒளியிலே நடந்தால், நமக்கு ஒருவரோடொருவர் ஐக்கியமுண்டு. இறைவனின் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்திலிருந்தும் நம்மைச் சுத்திகரிக்கிறது.
8 வயம்’ நிஷ்பாபா இதி யதி³ வதா³மஸ்தர்ஹி ஸ்வயமேவ ஸ்வாந் வஞ்சயாம: ஸத்யமதஞ்சாஸ்மாகம் அந்தரே ந வித்³யதே|
நாம் பாவம் அற்றவர்கள் என்று சொல்லிக்கொள்வோமேயானால், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்; சத்தியம் நமக்குள் இல்லை.
9 யதி³ ஸ்வபாபாநி ஸ்வீகுர்ம்மஹே தர்ஹி ஸ விஸ்²வாஸ்யோ யாதா²ர்தி²கஸ்²சாஸ்தி தஸ்மாத்³ அஸ்மாகம்’ பாபாநி க்ஷமிஷ்யதே ஸர்வ்வஸ்மாத்³ அத⁴ர்ம்மாச்சாஸ்மாந் ஸு²த்³த⁴யிஷ்யதி|
நம்முடைய பாவங்களை நாம் இறைவனுக்கு அறிக்கையிட்டால், அவர் நம்முடைய பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிப்பார். ஏனெனில் அவர் வாக்குமாறாதவரும் நீதி உள்ளவருமாய் இருக்கிறார்.
10 வயம் அக்ரு’தபாபா இதி யதி³ வதா³மஸ்தர்ஹி தம் அந்ரு’தவாதி³நம்’ குர்ம்மஸ்தஸ்ய வாக்யஞ்சாஸ்மாகம் அந்தரே ந வித்³யதே|
நாம் பாவம் செய்யவில்லை என்று சொல்வோமேயானால், நாம் இறைவனைப் பொய்யராக்குகிறோம். அவருடைய வார்த்தைக்கு நம்முடைய வாழ்க்கையில் இடமில்லை.