< ଇବ୍ରିଣଃ 13 >
1 ଭ୍ରାତୃଷୁ ପ୍ରେମ ତିଷ୍ଠତୁ| ଅତିଥିସେୱା ଯୁଷ୍ମାଭି ର୍ନ ୱିସ୍ମର୍ୟ୍ୟତାଂ
௧சகோதர அன்பு நிலைத்திருக்கட்டும்.
2 ଯତସ୍ତଯା ପ୍ରଚ୍ଛନ୍ନରୂପେଣ ଦିୱ୍ୟଦୂତାଃ କେଷାଞ୍ଚିଦ୍ ଅତିଥଯୋଽଭୱନ୍|
௨அந்நியர்களை உபசரிக்க மறக்காதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதர்களையும் உபசரித்ததுண்டு.
3 ବନ୍ଦିନଃ ସହବନ୍ଦିଭିରିୱ ଦୁଃଖିନଶ୍ଚ ଦେହୱାସିଭିରିୱ ଯୁଷ୍ମାଭିଃ ସ୍ମର୍ୟ୍ୟନ୍ତାଂ|
௩சிறைச்சாலையில் இருக்கிறவர்களோடு நீங்களும் சிறைச்சாலையிலே இருக்கிறவர்களைப்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; அவர்களுடைய சரீரங்களைப்போல உங்களுடைய சரீரங்களும் தீங்கு அனுபவித்ததாக நினைத்து, தீங்கு அனுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.
4 ୱିୱାହଃ ସର୍ୱ୍ୱେଷାଂ ସମୀପେ ସମ୍ମାନିତୱ୍ୟସ୍ତଦୀଯଶଯ୍ୟା ଚ ଶୁଚିଃ କିନ୍ତୁ ୱେଶ୍ୟାଗାମିନଃ ପାରଦାରିକାଶ୍ଚେଶ୍ୱରେଣ ଦଣ୍ଡଯିଷ୍ୟନ୍ତେ|
௪திருமணம் எல்லோருக்குள்ளும் கனமுள்ளதாகவும், பரிசுத்தமாகவும் இருப்பதாக; வேசிக்கள்ளர்களையும் விபசாரக்காரர்களையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.
5 ଯୂଯମ୍ ଆଚାରେ ନିର୍ଲୋଭା ଭୱତ ୱିଦ୍ୟମାନୱିଷଯେ ସନ୍ତୁଷ୍ୟତ ଚ ଯସ୍ମାଦ୍ ଈଶ୍ୱର ଏୱେଦଂ କଥିତୱାନ୍, ଯଥା, "ତ୍ୱାଂ ନ ତ୍ୟକ୍ଷ୍ୟାମି ନ ତ୍ୱାଂ ହାସ୍ୟାମି| "
௫நீங்கள் பணஆசை இல்லாதவர்களாக நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகளே போதும் என்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
6 ଅତଏୱ ୱଯମ୍ ଉତ୍ସାହେନେଦଂ କଥଯିତୁଂ ଶକ୍ନୁମଃ, "ମତ୍ପକ୍ଷେ ପରମେଶୋଽସ୍ତି ନ ଭେଷ୍ୟାମି କଦାଚନ| ଯସ୍ମାତ୍ ମାଂ ପ୍ରତି କିଂ କର୍ତ୍ତୁଂ ମାନୱଃ ପାରଯିଷ୍ୟତି|| "
௬அதினாலே நாம் தைரியத்தோடு: கர்த்தர் எனக்கு உதவிசெய்கிறவர், நான் பயப்படமாட்டேன், மனிதன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே.
7 ଯୁଷ୍ମାକଂ ଯେ ନାଯକା ଯୁଷ୍ମଭ୍ୟମ୍ ଈଶ୍ୱରସ୍ୟ ୱାକ୍ୟଂ କଥିତୱନ୍ତସ୍ତେ ଯୁଷ୍ମାଭିଃ ସ୍ମର୍ୟ୍ୟନ୍ତାଂ ତେଷାମ୍ ଆଚାରସ୍ୟ ପରିଣାମମ୍ ଆଲୋଚ୍ୟ ଯୁଷ୍ମାଭିସ୍ତେଷାଂ ୱିଶ୍ୱାସୋଽନୁକ୍ରିଯତାଂ|
௭தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாகச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.
8 ଯୀଶୁଃ ଖ୍ରୀଷ୍ଟଃ ଶ୍ୱୋଽଦ୍ୟ ସଦା ଚ ସ ଏୱାସ୍ତେ| (aiōn )
௮இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார். (aiōn )
9 ଯୂଯଂ ନାନାୱିଧନୂତନଶିକ୍ଷାଭି ର୍ନ ପରିୱର୍ତ୍ତଧ୍ୱଂ ଯତୋଽନୁଗ୍ରହେଣାନ୍ତଃକରଣସ୍ୟ ସୁସ୍ଥିରୀଭୱନଂ କ୍ଷେମଂ ନ ଚ ଖାଦ୍ୟଦ୍ରୱ୍ୟୈଃ| ଯତସ୍ତଦାଚାରିଣସ୍ତୈ ର୍ନୋପକୃତାଃ|
௯பலவிதமான அந்நிய போதனைகளால் அலைந்து திரியாமல் இருங்கள். உணவுபொருட்களால் இல்லை, கிருபையினாலே இருதயம் உறுதிப்படுத்தப்படுகிறது நல்லது; உணவுபொருட்களால் பயனில்லையே.
10 ଯେ ଦଷ୍ୟସ୍ୟ ସେୱାଂ କୁର୍ୱ୍ୱନ୍ତି ତେ ଯସ୍ୟା ଦ୍ରୱ୍ୟଭୋଜନସ୍ୟାନଧିକାରିଣସ୍ତାଦୃଶୀ ଯଜ୍ଞୱେଦିରସ୍ମାକମ୍ ଆସ୍ତେ|
௧0நமக்கு ஒரு பலிபீடம் உண்டு, அங்குள்ளவைகளைச் சாப்பிடுகிறதற்கு ஆசரிப்புக்கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரம் இல்லை.
11 ଯତୋ ଯେଷାଂ ପଶୂନାଂ ଶୋଣିତଂ ପାପନାଶାଯ ମହାଯାଜକେନ ମହାପୱିତ୍ରସ୍ଥାନସ୍ୟାଭ୍ୟନ୍ତରଂ ନୀଯତେ ତେଷାଂ ଶରୀରାଣି ଶିବିରାଦ୍ ବହି ର୍ଦହ୍ୟନ୍ତେ|
௧௧ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களுக்காகப் பரிசுத்த இடத்திற்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் முகாமிற்கு வெளியே சுட்டெரிக்கப்படும்.
12 ତସ୍ମାଦ୍ ଯୀଶୁରପି ଯତ୍ ସ୍ୱରୁଧିରେଣ ପ୍ରଜାଃ ପୱିତ୍ରୀକୁର୍ୟ୍ୟାତ୍ ତଦର୍ଥଂ ନଗରଦ୍ୱାରସ୍ୟ ବହି ର୍ମୃତିଂ ଭୁକ୍ତୱାନ୍|
௧௨அப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே மக்களைப் பரிசுத்தம் பண்ணுவதற்காக நகர வாசலுக்கு வெளியே பாடுகள்பட்டார்.
13 ଅତୋ ହେତୋରସ୍ମାଭିରପି ତସ୍ୟାପମାନଂ ସହମାନୈଃ ଶିବିରାଦ୍ ବହିସ୍ତସ୍ୟ ସମୀପଂ ଗନ୍ତୱ୍ୟଂ|
௧௩ஆகவே, நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, முகாமிற்கு வெளியே அவரிடம் புறப்பட்டுப் போவோம்.
14 ଯତୋ ଽତ୍ରାସ୍ମାକଂ ସ୍ଥାଯି ନଗରଂ ନ ୱିଦ୍ୟତେ କିନ୍ତୁ ଭାୱି ନଗରମ୍ ଅସ୍ମାଭିରନ୍ୱିଷ୍ୟତେ|
௧௪நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே விரும்பித்தேடுகிறோம்.
15 ଅତଏୱ ଯୀଶୁନାସ୍ମାଭି ର୍ନିତ୍ୟଂ ପ୍ରଶଂସାରୂପୋ ବଲିରର୍ଥତସ୍ତସ୍ୟ ନାମାଙ୍ଗୀକୁର୍ୱ୍ୱତାମ୍ ଓଷ୍ଠାଧରାଣାଂ ଫଲମ୍ ଈଶ୍ୱରାଯ ଦାତୱ୍ୟଂ|
௧௫ஆகவே, அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாக எப்போதும் தேவனுக்குச் செலுத்துவோம்.
16 ଅପରଞ୍ଚ ପରୋପକାରୋ ଦାନଞ୍ଚ ଯୁଷ୍ମାଭି ର୍ନ ୱିସ୍ମର୍ୟ୍ୟତାଂ ଯତସ୍ତାଦୃଶଂ ବଲିଦାନମ୍ ଈଶ୍ୱରାଯ ରୋଚତେ|
௧௬அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறக்காமல் இருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாக இருக்கிறார்.
17 ଯୂଯଂ ସ୍ୱନାଯକାନାମ୍ ଆଜ୍ଞାଗ୍ରାହିଣୋ ୱଶ୍ୟାଶ୍ଚ ଭୱତ ଯତୋ ଯୈରୁପନିଧିଃ ପ୍ରତିଦାତୱ୍ୟସ୍ତାଦୃଶା ଲୋକା ଇୱ ତେ ଯୁଷ୍ମଦୀଯାତ୍ମନାଂ ରକ୍ଷଣାର୍ଥଂ ଜାଗ୍ରତି, ଅତସ୍ତେ ଯଥା ସାନନ୍ଦାସ୍ତତ୍ କୁର୍ୟ୍ୟୁ ର୍ନ ଚ ସାର୍ତ୍ତସ୍ୱରା ଅତ୍ର ଯତଧ୍ୱଂ ଯତସ୍ତେଷାମ୍ ଆର୍ତ୍ତସ୍ୱରୋ ଯୁଷ୍ମାକମ୍ ଇଷ୍ଟଜନକୋ ନ ଭୱେତ୍|
௧௭உங்களை நடத்துகிறவர்கள், உங்களுடைய ஆத்துமாக்களுக்காக உத்திரவாதம் பண்ணுகிறவர்களாக விழித்திருக்கிறதினால், அவர்கள் துக்கத்தோடு இல்லை, சந்தோஷத்தோடு அதைச் செய்வதற்காக, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்கி இருங்கள்; அவர்கள் துக்கத்தோடு அதைச்செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்காது.
18 ଅପରଞ୍ଚ ଯୂଯମ୍ ଅସ୍ମନ୍ନିମିତ୍ତିଂ ପ୍ରାର୍ଥନାଂ କୁରୁତ ଯତୋ ୱଯମ୍ ଉତ୍ତମମନୋୱିଶିଷ୍ଟାଃ ସର୍ୱ୍ୱତ୍ର ସଦାଚାରଂ କର୍ତ୍ତୁମ୍ ଇଚ୍ଛୁକାଶ୍ଚ ଭୱାମ ଇତି ନିଶ୍ଚିତଂ ଜାନୀମଃ|
௧௮எங்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்; நாங்கள் நல்ல மனச்சாட்சி உள்ளவர்களாக எல்லாவற்றிலும் யோக்கியமாக நடக்க விரும்புகிறோம் என்று உறுதியாக நம்புகிறோம்.
19 ୱିଶେଷତୋଽହଂ ଯଥା ତ୍ୱରଯା ଯୁଷ୍ମଭ୍ୟଂ ପୁନ ର୍ଦୀଯେ ତଦର୍ଥଂ ପ୍ରାର୍ଥନାଯୈ ଯୁଷ୍ମାନ୍ ଅଧିକଂ ୱିନଯେ|
௧௯நான் மிகவும் சீக்கிரமாக உங்களிடம் வருவதற்கு நீங்கள் தேவனை வேண்டிக்கொள்ளும்படி உங்களை அதிகமாகக் கேட்டுக்கொள்ளுகிறேன்.
20 ଅନନ୍ତନିଯମସ୍ୟ ରୁଧିରେଣ ୱିଶିଷ୍ଟୋ ମହାନ୍ ମେଷପାଲକୋ ଯେନ ମୃତଗଣମଧ୍ୟାତ୍ ପୁନରାନାଯି ସ ଶାନ୍ତିଦାଯକ ଈଶ୍ୱରୋ (aiōnios )
௨0நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழும்பிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், (aiōnios )
21 ନିଜାଭିମତସାଧନାଯ ସର୍ୱ୍ୱସ୍ମିନ୍ ସତ୍କର୍ମ୍ମଣି ଯୁଷ୍ମାନ୍ ସିଦ୍ଧାନ୍ କରୋତୁ, ତସ୍ୟ ଦୃଷ୍ଟୌ ଚ ଯଦ୍ୟତ୍ ତୁଷ୍ଟିଜନକଂ ତଦେୱ ଯୁଷ୍ମାକଂ ମଧ୍ୟେ ଯୀଶୁନା ଖ୍ରୀଷ୍ଟେନ ସାଧଯତୁ| ତସ୍ମୈ ମହିମା ସର୍ୱ୍ୱଦା ଭୂଯାତ୍| ଆମେନ୍| (aiōn )
௨௧இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய விருப்பத்தின்படிசெய்ய உங்களை எல்லாவிதமான நல்லசெய்கையிலும் தகுதி உள்ளவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
22 ହେ ଭ୍ରାତରଃ, ୱିନଯେଽହଂ ଯୂଯମ୍ ଇଦମ୍ ଉପଦେଶୱାକ୍ୟଂ ସହଧ୍ୱଂ ଯତୋଽହଂ ସଂକ୍ଷେପେଣ ଯୁଷ୍ମାନ୍ ପ୍ରତି ଲିଖିତୱାନ୍|
௨௨சகோதரர்களே, நான் சுருக்கமாக உங்களுக்கு எழுதின இந்தப் புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாக ஏற்றுக்கொள்ள உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
23 ଅସ୍ମାକଂ ଭ୍ରାତା ତୀମଥିଯୋ ମୁକ୍ତୋଽଭୱଦ୍ ଇତି ଜାନୀତ, ସ ଚ ଯଦି ତ୍ୱରଯା ସମାଗଚ୍ଛତି ତର୍ହି ତେନ ସାର୍ଦ୍ଧଂମ୍ ଅହଂ ଯୁଷ୍ମାନ୍ ସାକ୍ଷାତ୍ କରିଷ୍ୟାମି|
௨௩சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டான் என்று தெரிந்துகொள்ளுங்கள்; அவன் சீக்கிரமாக வந்தால், நான் அவனோடுகூட வந்து, உங்களைப் பார்ப்பேன்.
24 ଯୁଷ୍ମାକଂ ସର୍ୱ୍ୱାନ୍ ନାଯକାନ୍ ପୱିତ୍ରଲୋକାଂଶ୍ଚ ନମସ୍କୁରୁତ| ଅପରମ୍ ଇତାଲିଯାଦେଶୀଯାନାଂ ନମସ୍କାରଂ ଜ୍ଞାସ୍ୟଥ|
௨௪உங்களை நடத்துகிறவர்களையும், பரிசுத்தவான்கள் எல்லோரையும் வாழ்த்துங்கள். இத்தாலியா தேசத்தார் எல்லோரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
25 ଅନୁଗ୍ରହୋ ଯୁଷ୍ମାକଂ ସର୍ୱ୍ୱେଷାଂ ସହାଯୋ ଭୂଯାତ୍| ଆମେନ୍|
௨௫கிருபையானது உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.