< ផិលិបិនះ 2 >
1 ខ្រីឞ្ដាទ៑ យទិ កិមបិ សាន្ត្វនំ កឝ្ចិត៑ ប្រេមជាតោ ហឞ៌ះ កិញ្ចិទ៑ អាត្មនះ សមភាគិត្វំ កាចិទ៑ អនុកម្បា ក្ឫបា វា ជាយតេ តហ៌ិ យូយំ មមាហ្លាទំ បូរយន្ត
௧ஆகவே, கிறிஸ்துவிற்குள் எந்தவொரு ஆறுதலும், அன்பினாலே எந்தவொரு தேறுதலும், ஆவியின் எந்தவொரு ஐக்கியமும், எந்தவொரு உருக்கமான பரிவும் இரக்கங்களும் உண்டானால்,
2 ឯកភាវា ឯកប្រេមាណ ឯកមនស ឯកចេឞ្ដាឝ្ច ភវត។
௨நீங்கள் ஒரே சிந்தையும் ஒரே அன்பும் உள்ளவர்களாக இருந்து, இசைந்த ஆத்துமாக்களாக ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.
3 វិរោធាទ៑ ទប៌ាទ៑ វា កិមបិ មា កុរុត កិន្តុ នម្រតយា ស្វេភ្យោៜបរាន៑ វិឝិឞ្ដាន៑ មន្យធ្វំ។
௩ஒன்றையும் சுயநலத்தினாலோ, வீண்பெருமையினாலோ செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் உங்களைவிட மேன்மையானவர்களாக நினைக்கவேண்டும்.
4 កេវលម៑ អាត្មហិតាយ ន ចេឞ្ដមានាះ បរហិតាយាបិ ចេឞ្ដធ្វំ។
௪அவனவன் தன்னுடைய காரியங்களை மட்டுமல்ல, மற்றவர்களுடைய காரியங்களிலும் உதவிசெய்யவேண்டும்.
5 ខ្រីឞ្ដស្យ យីឝោ រ្យាទ្ឫឝះ ស្វភាវោ យុឞ្មាកម៑ អបិ តាទ្ឫឝោ ភវតុ។
௫கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தையே உங்களுக்கும் இருக்கவேண்டும்;
6 ស ឦឝ្វររូបី សន៑ ស្វកីយាម៑ ឦឝ្វរតុល្យតាំ ឝ្លាឃាស្បទំ នាមន្យត,
௬அவர் தேவனுடைய உருவமாக இருந்தும், தேவனுக்குச் சமமாக இருப்பதைக் கொள்ளையாடின பொருளாக நினைக்காமல்,
7 កិន្តុ ស្វំ ឝូន្យំ ក្ឫត្វា ទាសរូបី ពភូវ នរាក្ឫតិំ លេភេ ច។
௭தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் உருவமெடுத்து, மனிதனின் சாயல் ஆனார்.
8 ឥត្ថំ នរមូត៌្តិម៑ អាឝ្រិត្យ នម្រតាំ ស្វីក្ឫត្យ ម្ឫត្យោរត៌្ហតះ ក្រុឝីយម្ឫត្យោរេវ ភោគាយាជ្ញាគ្រាហី ពភូវ។
௮அவர் மனித உருவமாக வெளிப்பட்டு, மரணம்வரைக்கும், அதாவது சிலுவையின் மரணம்வரைக்கும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
9 តត្ការណាទ៑ ឦឝ្វរោៜបិ តំ សវ៌្វោន្នតំ ចការ យច្ច នាម សវ៌្វេឞាំ នាម្នាំ ឝ្រេឞ្ឋំ តទេវ តស្មៃ ទទៅ,
௯ஆகவே, தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
10 តតស្តស្មៃ យីឝុនាម្នេ ស្វគ៌មត៌្យបាតាលស្ថិតៃះ សវ៌្វៃ រ្ជានុបាតះ កត៌្តវ្យះ,
௧0இயேசுவின் நாமத்தில் வானத்தில் உள்ளவைகளும், பூமியில் உள்ளவைகளும், பூமியின் கீழ் உள்ளவைகளுடைய முழங்கால்கள் எல்லாம் முடங்கும்படிக்கும்,
11 តាតស្ថេឝ្វរស្យ មហិម្នេ ច យីឝុខ្រីឞ្ដះ ប្រភុរិតិ ជិហ្វាភិះ ស្វីកត៌្តវ្យំ។
௧௧பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்துவே கர்த்தர் என்று நாக்குகளெல்லாம் அறிக்கைபண்ணுவதற்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
12 អតោ ហេ ប្រិយតមាះ, យុឞ្មាភិ រ្យទ្វត៑ សវ៌្វទា ក្រិយតេ តទ្វត៑ កេវលេ មមោបស្ថិតិកាលេ តន្នហិ កិន្ត្វិទានីម៑ អនុបស្ថិតេៜបិ មយិ ពហុតរយត្នេនាជ្ញាំ គ្ឫហីត្វា ភយកម្បាភ្យាំ ស្វស្វបរិត្រាណំ សាធ្យតាំ។
௧௨ஆகவே, எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்கு அருகில் இருக்கும்பொழுது மட்டுமில்லை, நான் தூரத்தில் இருக்கும்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்களுடைய இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
13 យត ឦឝ្វរ ឯវ ស្វកីយានុរោធាទ៑ យុឞ្មន្មធ្យេ មនស្កាមនាំ កម៌្មសិទ្ធិញ្ច វិទធាតិ។
௧௩ஏனென்றால், தேவனே தம்முடைய தயவுள்ள விருப்பத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராக இருக்கிறார்.
14 យូយំ កលហវិវាទវ៌ិជតម៑ អាចារំ កុវ៌្វន្តោៜនិន្ទនីយា អកុដិលា
௧௪நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதும் இல்லை என்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,
15 ឦឝ្វរស្យ និឞ្កលង្កាឝ្ច សន្តានាឥវ វក្រភាវានាំ កុដិលាចារិណាញ្ច លោកានាំ មធ្យេ តិឞ្ឋត,
௧௫கோணலும் மாறுபாடுமான வம்சத்தின் நடுவிலே குற்றம் இல்லாதவர்களும் கபடு இல்லாதவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளாக இருப்பதற்கு,
16 យតស្តេឞាំ មធ្យេ យូយំ ជីវនវាក្យំ ធារយន្តោ ជគតោ ទីបកា ឥវ ទីប្យធ្វេ។ យុឞ្មាភិស្តថា ក្ឫតេ មម យត្នះ បរិឝ្រមោ វា ន និឞ្ផលោ ជាត ឥត្យហំ ខ្រីឞ្ដស្យ ទិនេ ឝ្លាឃាំ កត៌្តុំ ឝក្ឞ្យាមិ។
௧௬எல்லாவற்றையும் முறுமுறுப்பு இல்லாமலும் வாக்குவாதம் இல்லாமலும் செய்யுங்கள்.
17 យុឞ្មាកំ វិឝ្វាសាត៌្ហកាយ ពលិទានាយ សេវនាយ ច យទ្យប្យហំ និវេទិតវ្យោ ភវេយំ តថាបិ តេនានន្ទាមិ សវ៌្វេឞាំ យុឞ្មាកម៑ អានន្ទស្យាំឝី ភវាមិ ច។
௧௭மேலும், உங்களுடைய விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் பானபலியாக வார்க்கப்பட்டுப் போனாலும், நான் மகிழ்ந்து, உங்கள் அனைவரோடும் சேர்ந்து சந்தோஷப்படுவேன்.
18 តទ្វទ៑ យូយមប្យានន្ទត មទីយានន្ទស្យាំឝិនោ ភវត ច។
௧௮இதினால் நீங்களும் மகிழ்ந்து, என்னோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள்.
19 យុឞ្មាកម៑ អវស្ថាម៑ អវគត្យាហមបិ យត៑ សាន្ត្វនាំ ប្រាប្នុយាំ តទត៌្ហំ តីមថិយំ ត្វរយា យុឞ្មត្សមីបំ ប្រេឞយិឞ្យាមីតិ ប្រភៅ ប្រត្យាឝាំ កុវ៌្វេ។
௧௯அன்றியும், நானும் உங்களுடைய செய்திகளைத் தெரிந்து மன ஆறுதல் அடைவதற்குச் சீக்கிரமாகத் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பலாம் என்று கர்த்தராகிய இயேசுவிற்குள் நம்பியிருக்கிறேன்.
20 យះ សត្យរូបេណ យុឞ្មាកំ ហិតំ ចិន្តយតិ តាទ្ឫឝ ឯកភាវស្តស្មាទន្យះ កោៜបិ មម សន្និធៅ នាស្តិ។
௨0ஆகவே, உங்களுடைய காரியங்களை உண்மையாகக் கவனிப்பதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனைத்தவிர வேறுயாரும் என்னிடம் இல்லை.
21 យតោៜបរេ សវ៌្វេ យីឝោះ ខ្រីឞ្ដស្យ វិឞយាន៑ ន ចិន្តយន្ត អាត្មវិឞយាន៑ ចិន្តយន្តិ។
௨௧மற்ற எல்லோரும் கிறிஸ்து இயேசுவிற்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்.
22 កិន្តុ តស្យ បរីក្ឞិតត្វំ យុឞ្មាភិ រ្ជ្ញាយតេ យតះ បុត្រោ យាទ្ឫក៑ បិតុះ សហការី ភវតិ តថៃវ សុសំវាទស្យ បរិចយ៌្យាយាំ ស មម សហការី ជាតះ។
௨௨தகப்பனுக்குப் பிள்ளை ஊழியம் செய்வதுபோல, அவன் என்னோடு சேர்ந்து நற்செய்திக்காக ஊழியம் செய்தான் என்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள்.
23 អតឯវ មម ភាវិទឝាំ ជ្ញាត្វា តត្ក្ឞណាត៑ តមេវ ប្រេឞយិតុំ ប្រត្យាឝាំ កុវ៌្វេ
௨௩ஆகவே, என் காரியங்கள் எப்படி நடக்கும் என்று நான் அறிந்தவுடனே அவனை அனுப்பலாம் என்று நினைத்திருக்கிறேன்.
24 ស្វយម៑ អហមបិ តូណ៌ំ យុឞ្មត្សមីបំ គមិឞ្យាមីត្យាឝាំ ប្រភុនា កុវ៌្វេ។
௨௪அன்றியும் நானே சீக்கிரத்தில் வருவேன் என்று கர்த்தருக்குள் விசுவாசமாக இருக்கிறேன்.
25 អបរំ យ ឥបាផ្រទីតោ មម ភ្រាតា កម៌្មយុទ្ធាភ្យាំ មម សហាយឝ្ច យុឞ្មាកំ ទូតោ មទីយោបការាយ ប្រតិនិធិឝ្ចាស្តិ យុឞ្មត្សមីបេ តស្យ ប្រេឞណម៑ អាវឝ្យកម៑ អមន្យេ។
௨௫மேலும், என் சகோதரனும், உடன்வேலைக்காரனும், கிறிஸ்துவின் படைவீரனும், உங்களுடைய தூதுவனாகவும், என்னுடைய குறைவில் உதவி செய்தவனுமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடம் அனுப்பவேண்டும் என்று நினைத்தேன்.
26 យតះ ស យុឞ្មាន៑ សវ៌្វាន៑ អកាង្ក្ឞត យុឞ្មាភិស្តស្យ រោគស្យ វាត៌្តាឝ្រាវីតិ ពុទ្ធ្វា បយ៌្យឝោចច្ច។
௨௬அவன் உங்கள் எல்லோர்மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே அதிக மனச்சோர்வு அடைந்தவனாகவும் இருக்கிறான்.
27 ស បីឌយា ម្ឫតកល្បោៜភវទិតិ សត្យំ កិន្ត្វីឝ្វរស្តំ ទយិតវាន៑ មម ច ទុះខាត៑ បរំ បុនទ៌ុះខំ យន្ន ភវេត៑ តទត៌្ហំ កេវលំ តំ ន ទយិត្វា មាមបិ ទយិតវាន៑។
௨௭அவன் வியாதிப்பட்டு மரணத்திற்கு அருகில் இருந்தது உண்மைதான். ஆனாலும், தேவன் அவனுக்கு இரங்கினார்; அவனுக்கு இரங்கினதுமட்டுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடி, எனக்கும் இரங்கினார்.
28 អតឯវ យូយំ តំ វិលោក្យ យត៑ បុនរានន្ទេត មមាបិ ទុះខស្យ ហ្រាសោ យទ៑ ភវេត៑ តទត៌្ហម៑ អហំ ត្វរយា តម៑ អប្រេឞយំ។
௨௮ஆகவே, நீங்கள் அவனை மீண்டும் பார்த்து சந்தோஷப்படவும், என் துக்கம் குறையவும், அவனை சீக்கிரமாக அனுப்பினேன்.
29 អតោ យូយំ ប្រភោះ ក្ឫតេ សម្បូណ៌េនានន្ទេន តំ គ្ឫហ្លីត តាទ្ឫឝាន៑ លោកាំឝ្ចាទរណីយាន៑ មន្យធ្វំ។
௨௯ஆனபடியால் நீங்கள் கர்த்தருக்குள் அதிகமான சந்தோஷத்தோடு அவனை ஏற்றுக்கொண்டு, இப்படிப்பட்டவர்களைக் கனம்பண்ணுங்கள்.
30 យតោ មម សេវនេ យុឞ្មាកំ ត្រុដិំ បូរយិតុំ ស ប្រាណាន៑ បណីក្ឫត្យ ខ្រីឞ្ដស្យ កាយ៌្យាត៌្ហំ ម្ឫតប្រាយេៜភវត៑។
௩0ஏனென்றால், நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்களுடைய குறைவை நிறைவாக்குவதற்கு, அவன் தன் உயிரையும் பெரிதாக நினைக்காமல், கிறிஸ்துவின் ஊழியத்திற்காக மரணத்திற்கு அருகில் இருந்தான்.