< တီတး 1 >

1 အနန္တဇီဝနသျာၑာတော ဇာတာယာ ဤၑွရဘက္တေ ရျောဂျသျ သတျမတသျ ယတ် တတွဇ္ဉာနံ ယၑ္စ ဝိၑွာသ ဤၑွရသျာဘိရုစိတလောကဲ ရ္လဘျတေ တဒရ္ထံ (aiōnios g166)
தேவனுடைய ஊழியக்காரனும், இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல், பொதுவான விசுவாசத்தின்படி உத்தம மகனாகிய தீத்துவிற்கு எழுதுகிறதாவது:
2 ယီၑုခြီၐ္ဋသျ ပြေရိတ ဤၑွရသျ ဒါသး ပေါ်လော'ဟံ သာဓာရဏဝိၑွာသာတ် မမ ပြကၖတံ ဓရ္မ္မပုတြံ တီတံ ပြတိ လိခမိ၊
பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராக இருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
3 နိၐ္ကပဋ ဤၑွရ အာဒိကာလာတ် ပူရွွံ တတ် ဇီဝနံ ပြတိဇ္ဉာတဝါန် သွနိရူပိတသမယေ စ ဃောၐဏယာ တတ် ပြကာၑိတဝါန်၊
பொய்யுரையாத தேவன் ஆரம்பகாலமுதல் நித்தியஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம் செய்து அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, (aiōnios g166)
4 မမ တြာတုရီၑွရသျာဇ္ဉယာ စ တသျ ဃောၐဏံ မယိ သမရ္ပိတမ် အဘူတ်၊ အသ္မာကံ တာတ ဤၑွရး ပရိတြာတာ ပြဘု ရျီၑုခြီၐ္ဋၑ္စ တုဘျမ် အနုဂြဟံ ဒယာံ ၑာန္တိဉ္စ ဝိတရတု၊
ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார்.
5 တွံ ယဒ် အသမ္ပူရ္ဏကာရျျာဏိ သမ္ပူရယေ ရ္မဒီယာဒေၑာစ္စ ပြတိနဂရံ ပြာစီနဂဏာန် နိယောဇယေသ္တဒရ္ထမဟံ တွာံ ကြီတျုပဒွီပေ သ္ထာပယိတွာ ဂတဝါန်၊
நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பர்களை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தா தீவிலே விட்டுவந்தேன்.
6 တသ္မာဒ် ယော နရော 'နိန္ဒိတ ဧကသျာ ယောၐိတး သွာမီ ဝိၑွာသိနာမ် အပစယသျာဝါဓျတွသျ ဝါ ဒေါၐေဏာလိပ္တာနာဉ္စ သန္တာနာနာံ ဇနကော ဘဝတိ သ ဧဝ ယောဂျး၊
குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கர்களென்றும் அடங்காதவர்களென்றும் பெயரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவன் இருந்தால் அவனையே மூப்பராக ஏற்படுத்தலாம்.
7 ယတော ဟေတောရဒျက္ၐေဏေၑွရသျ ဂၖဟာဒျက္ၐေဏေဝါနိန္ဒနီယေန ဘဝိတဝျံ၊ တေန သွေစ္ဆာစာရိဏာ ကြောဓိနာ ပါနာသက္တေန ပြဟာရကေဏ လောဘိနာ ဝါ န ဘဝိတဝျံ
ஏனென்றால், கண்காணியானவன் தேவனுடைய மேற்பார்வைக்காரனுக்குரியவிதமாக, குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடிக்காதவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்காதவனும்,
8 ကိန္တွတိထိသေဝကေန သလ္လောကာနုရာဂိဏာ ဝိနီတေန နျာယျေန ဓာရ္မ္မိကေဏ ဇိတေန္ဒြိယေဏ စ ဘဝိတဝျံ,
அந்நியர்களை உபசரிக்கிறவனும், நல்லவைகள்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும்,
9 ဥပဒေၑေ စ ဝိၑွသ္တံ ဝါကျံ တေန ဓာရိတဝျံ ယတး သ ယဒ် ယထာရ္ထေနောပဒေၑေန လောကာန် ဝိနေတုံ ဝိဃ္နကာရိဏၑ္စ နိရုတ္တရာန် ကရ္တ္တုံ ၑက္နုယာတ် တဒ် အာဝၑျကံ၊
ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்த்து பேசுகிறவர்களைக் கடிந்துகொள்ளவும் வல்லவனுமாக இருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாகப் பற்றிக்கொள்ளுகிறவனுமாக இருக்கவேண்டும்.
10 ယတသ္တေ ဗဟဝေါ 'ဝါဓျာ အနရ္ထကဝါကျဝါဒိနး ပြဝဉ္စကာၑ္စ သန္တိ ဝိၑေၐတၑ္ဆိန္နတွစာံ မဓျေ ကေစိတ် တာဒၖၑာ လောကား သန္တိ၊
௧0அநேகர், விசேஷமாக விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண் பேச்சுக்காரர்களும், மனதை மயக்குகிறவர்களுமாக இருக்கிறார்கள்.
11 တေၐာဉ္စ ဝါဂြောဓ အာဝၑျကော ယတသ္တေ ကုတ္သိတလာဘသျာၑယာနုစိတာနိ ဝါကျာနိ ၑိက္ၐယန္တော နိခိလပရိဝါရာဏာံ သုမတိံ နာၑယန္တိ၊
௧௧அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்திற்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
12 တေၐာံ သွဒေၑီယ ဧကော ဘဝိၐျဒွါဒီ ဝစနမိဒမုက္တဝါန်, ယထာ, ကြီတီယမာနဝါး သရွွေ သဒါ ကာပဋျဝါဒိနး၊ ဟိံသြဇန္တုသမာနာသ္တေ 'လသာၑ္စောဒရဘာရတး။
௧௨கிரேத்தா தீவைச்சேர்ந்தவர்கள் ஓயாத பொய்யர்கள், காட்டுமிராண்டிகள், பெருந்தீனிச் சோம்பேறிகள் என்று அவர்களில் ஒருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான்.
13 သာက္ၐျမေတတ် တထျံ, အတော ဟေတောသ္တွံ တာန် ဂါဎံ ဘရ္တ္သယ တေ စ ယထာ ဝိၑွာသေ သွသ္ထာ ဘဝေယု
௧௩இந்தச் சாட்சி உண்மையாக இருக்கிறது; எனவே, அவர்கள் யூதர்களுடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தைவிட்டு விலகுகிற மனிதர்களுடைய கட்டளைகளுக்கும் செவிகொடுக்காமல்,
14 ရျိဟူဒီယောပါချာနေၐု သတျမတဘြၐ္ဋာနာံ မာနဝါနာမ် အာဇ္ဉာသု စ မနာံသိ န နိဝေၑယေယုသ္တထာဒိၑ၊
௧௪விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாக இருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.
15 ၑုစီနာံ ကၖတေ သရွွာဏျေဝ ၑုစီနိ ဘဝန္တိ ကိန္တု ကလင်္ကိတာနာမ် အဝိၑွာသိနာဉ္စ ကၖတေ ၑုစိ ကိမပိ န ဘဝတိ ယတသ္တေၐာံ ဗုဒ္ဓယး သံဝေဒါၑ္စ ကလင်္ကိတား သန္တိ၊
௧௫சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாக இருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாக இருக்காது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாக இருக்கும்.
16 ဤၑွရသျ ဇ္ဉာနံ တေ ပြတိဇာနန္တိ ကိန္တု ကရ္မ္မဘိသ္တဒ် အနင်္ဂီကုရွွတေ ယတသ္တေ ဂရှိတာ အနာဇ္ဉာဂြာဟိဏး သရွွသတ္ကရ္မ္မဏၑ္စာယောဂျား သန္တိ၊
௧௬அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், செயல்களினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நல்ல செயல்களையும் செய்ய தகுதியற்றவர்களுமாக இருக்கிறார்கள்.

< တီတး 1 >