< ပြကာၑိတံ 13 >
1 တတး ပရမဟံ သာဂရီယသိကတာယာံ တိၐ္ဌန် သာဂရာဒ် ဥဒ္ဂစ္ဆန္တမ် ဧကံ ပၑုံ ဒၖၐ္ဋဝါန် တသျ ဒၑ ၑၖင်္ဂါဏိ သပ္တ ၑိရာံသိ စ ဒၑ ၑၖင်္ဂေၐု ဒၑ ကိရီဋာနိ ၑိရးသု စေၑွရနိန္ဒာသူစကာနိ နာမာနိ ဝိဒျန္တေ၊
௧பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது கடலிலிருந்து ஒரு மிருகம் எழும்பிவருவதைப் பார்த்தேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து கிரீடங்களும், அதின் தலைகளின்மேல் தேவனை அவமதிக்கும் பெயர்களும் இருந்தன.
2 မယာ ဒၖၐ္ဋး သ ပၑုၑ္စိတြဝျာဃြသဒၖၑး ကိန္တု တသျ စရဏော် ဘလ္လူကသျေဝ ဝဒနဉ္စ သိံဟဝဒနမိဝ၊ နာဂနေ တသ္မဲ သွီယပရာကြမး သွီယံ သိံဟာသနံ မဟာဓိပတျဉ္စာဒါယိ၊
௨நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போல இருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன; இராட்சசப் பாம்பானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.
3 မယိ နိရီက္ၐမာဏေ တသျ ၑိရသာမ် ဧကမ် အန္တကာဃာတေန ဆေဒိတမိဝါဒၖၑျတ, ကိန္တု တသျာန္တကက္ၐတသျ ပြတီကာရော 'ကြိယတ တတး ကၖတ္သ္နော နရလောကသ္တံ ပၑုမဓိ စမတ္ကာရံ ဂတး,
௩அதின் தலைகளில் ஒன்றில் மரணத்திற்குரிய காயமடைந்திருப்பதைப் பார்த்தேன்; ஆனாலும் மரணத்திற்குரிய அந்தக் காயம் குணமாக்கப்பட்டது. பூமியிலுள்ள எல்லோரும் ஆச்சரியத்தோடு அந்த மிருகத்தைப் பின்பற்றி,
4 ယၑ္စ နာဂသ္တသ္မဲ ပၑဝေ သာမရ္ထျံ ဒတ္တဝါန် သရွွေ တံ ပြာဏမန် ပၑုမပိ ပြဏမန္တော 'ကထယန်, ကော ဝိဒျတေ ပၑောသ္တုလျသ္တေန ကော ယောဒ္ဓုမရှတိ၊
௪அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரம் கொடுத்த இராட்சசப் பாம்பை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு நிகரானவன் யார்? அதோடு யுத்தம் செய்பவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்.
5 အနန္တရံ တသ္မဲ ဒရ္ပဝါကျေၑွရနိန္ဒာဝါဒိ ဝဒနံ ဒွိစတွာရိံၑန္မာသာန် ယာဝဒ် အဝသ္ထိတေး သာမရ္ထျဉ္စာဒါယိ၊
௫பெருமையானவைகளையும் அவதூறான வார்த்தைகளையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; மேலும், நாற்பத்திரண்டு மாதங்கள் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
6 တတး သ ဤၑွရနိန္ဒနာရ္ထံ မုခံ ဝျာဒါယ တသျ နာမ တသျာဝါသံ သွရ္ဂနိဝါသိနၑ္စ နိန္ဒိတုမ် အာရဘတ၊
௬அது தேவனை அவமதிப்பதற்காகத் தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய இருப்பிடத்தையும், பரலோகத்தில் வசிக்கிறவர்களையும் அவமதித்து.
7 အပရံ ဓာရ္မ္မိကဲး သဟ ယောဓနသျ တေၐာံ ပရာဇယသျ စာနုမတိး သရွွဇာတီယာနာံ သရွွဝံၑီယာနာံ သရွွဘာၐာဝါဒိနာံ သရွွဒေၑီယာနာဉ္စာဓိပတျမပိ တသ္မာ အဒါယိ၊
௭மேலும், பரிசுத்தவான்களோடு யுத்தம்செய்து அவர்களை ஜெயிக்கும்படி அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது, ஒவ்வொரு கோத்திரம், மொழி, தேசம் மற்றும் மக்களின்மேலும் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
8 တတော ဇဂတး သၖၐ္ဋိကာလာတ် ဆေဒိတသျ မေၐဝတ္သသျ ဇီဝနပုသ္တကေ ယာဝတာံ နာမာနိ လိခိတာနိ န ဝိဒျန္တေ တေ ပၖထိဝီနိဝါသိနး သရွွေ တံ ပၑုံ ပြဏံသျန္တိ၊
௮உலகம் உண்டானதுமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியில் வசிக்கின்ற மக்கள் எல்லோரும் அதை வணங்குவார்கள்.
9 ယသျ ၑြောတြံ ဝိဒျတေ သ ၑၖဏောတု၊
௯காதுள்ளவன் எவனோ அவன் கேட்கவேண்டும்.
10 ယော ဇနော 'ပရာန် ဝန္ဒီကၖတျ နယတိ သ သွယံ ဝန္ဒီဘူယ သ္ထာနာန္တရံ ဂမိၐျတိ, ယၑ္စ ခင်္ဂေန ဟန္တိ သ သွယံ ခင်္ဂေန ဃာနိၐျတေ၊ အတြ ပဝိတြလောကာနာံ သဟိၐ္ဏုတယာ ဝိၑွာသေန စ ပြကာၑိတဝျံ၊
௧0சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே வெளிப்படும்.
11 အနန္တရံ ပၖထိဝီတ ဥဒ္ဂစ္ဆန် အပရ ဧကး ပၑု ရ္မယာ ဒၖၐ္ဋး သ မေၐၑာဝကဝတ် ၑၖင်္ဂဒွယဝိၑိၐ္ဋ အာသီတ် နာဂဝစ္စာဘာၐတ၊
௧௧பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்புவதைப் பார்த்தேன்; அது ஒரு ஆட்டுக்குட்டியைப்போல இரண்டு கொம்புகளை உடையதாக இருந்து, இராட்சசப் பாம்பைப்போலப் பேசினது.
12 သ ပြထမပၑောရန္တိကေ တသျ သရွွံ ပရာကြမံ ဝျဝဟရတိ ဝိၑေၐတော ယသျ ပြထမပၑောရန္တိကက္ၐတံ ပြတီကာရံ ဂတံ တသျ ပူဇာံ ပၖထိဝီံ တန္နိဝါသိနၑ္စ ကာရယတိ၊
௧௨அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடத்திக்காட்டி, மரணத்திற்குரிய காயத்திலிருந்தும் குணமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதில் வாழும் மக்களையும் வணங்கும்படிச் செய்தது.
13 အပရံ မာနဝါနာံ သာက္ၐာဒ် အာကာၑတော ဘုဝိ ဝဟ္နိဝရ္ၐဏာဒီနိ မဟာစိတြာဏိ ကရောတိ၊
௧௩அன்றியும், அது மனிதர்களுக்கு முன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணும்விதமாகப் பெரிய அற்புதங்களை நடத்திக்காட்டி,
14 တသျ ပၑေား သာက္ၐာဒ် ယေၐာံ စိတြကရ္မ္မဏာံ သာဓနာယ သာမရ္ထျံ တသ္မဲ ဒတ္တံ တဲး သ ပၖထိဝီနိဝါသိနော ဘြာမယတိ, ဝိၑေၐတော ယး ပၑုး ခင်္ဂေန က္ၐတယုက္တော ဘူတွာပျဇီဝတ် တသျ ပြတိမာနိရ္မ္မာဏံ ပၖထိဝီနိဝါသိန အာဒိၑတိ၊
௧௪மிருகத்தின் முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட அடையாளங்களினாலே பூமியின் மக்களை ஏமாற்றி, வாளினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு உருவம் உண்டாக்கவேண்டும் என்று பூமியின் மக்களுக்குச் சொன்னது.
15 အပရံ တသျ ပၑေား ပြတိမာ ယထာ ဘာၐတေ ယာဝန္တၑ္စ မာနဝါသ္တာံ ပၑုပြတိမာံ န ပူဇယန္တိ တေ ယထာ ဟနျန္တေ တထာ ပၑုပြတိမာယား ပြာဏပြတိၐ္ဌာရ္ထံ သာမရ္ထျံ တသ္မာ အဒါယိ၊
௧௫மேலும் அந்த மிருகத்தின் உருவம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் உருவத்தை வணங்காத எல்லோரையும் கொலைசெய்வதற்காகவும், மிருகத்தின் உருவத்திற்கு சுவாசத்தைக் கொடுக்கும்படி அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
16 အပရံ က္ၐုဒြမဟဒ္ဓနိဒရိဒြမုက္တဒါသာန် သရွွာန် ဒက္ၐိဏကရေ ဘာလေ ဝါ ကလင်္ကံ ဂြာဟယတိ၊
௧௬அது சிறியவர்கள், பெரியவர்கள், செல்வந்தர்கள், ஏழைகள், சுதந்திரமானவர்கள், அடிமைகள், இவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் வலது கைகளிலோ அல்லது நெற்றிகளிலோ ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,
17 တသ္မာဒ် ယေ တံ ကလင်္ကမရ္ထတး ပၑော ရ္နာမ တသျ နာမ္နး သံချာင်္ကံ ဝါ ဓာရယန္တိ တာန် ဝိနာ ပရေဏ ကေနာပိ ကြယဝိကြယေ ကရ္တ္တုံ န ၑကျေတေ၊
௧௭அந்த மிருகத்தின் முத்திரையையோ, பெயரையோ, அந்த பெயரின் எண்ணையோ அணிந்துகொள்ளுகிறவனைத்தவிர வேறொருவனும் வாங்கவும் விற்கவும் முடியாதபடிக்கும் செய்தது.
18 အတြ ဇ္ဉာနေန ပြကာၑိတဝျံ၊ ယော ဗုဒ္ဓိဝိၑိၐ္ဋး သ ပၑေား သံချာံ ဂဏယတု ယတး သာ မာနဝသျ သံချာ ဘဝတိ၊ သာ စ သံချာ ၐဋ္ၐၐ္ဋျဓိကၐဋ္ၑတာနိ၊
௧௮இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவை; அந்த மிருகத்தின் எண்ணைப் புத்தியுடையவன் கணக்குப் பார்க்கவேண்டும்; அது மனிதனுடைய எண்ணாக இருக்கிறது; அதினுடைய எண் அறுநூற்று அறுபத்தி ஆறு 666.