< မထိး 19 >

1 အနန္တရမ် ဧတာသု ကထာသု သမာပ္တာသု ယီၑု ရ္ဂာလီလပြဒေၑာတ် ပြသ္ထာယ ယရ္ဒန္တီရသ္ထံ ယိဟူဒါပြဒေၑံ ပြာပ္တး၊
இயேசு இவற்றைச் சொல்லி முடித்தபின்பு, அவர் கலிலேயாவைவிட்டுப் புறப்பட்டு, யோர்தானின் மறுபக்கத்திலுள்ள யூதேயா பகுதிக்குச் சென்றார்.
2 တဒါ တတ္ပၑ္စာတ် ဇနနိဝဟေ ဂတေ သ တတြ တာန် နိရာမယာန် အကရောတ်၊
மக்கள் பெருங்கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அங்கே அவர், அவர்களில் வியாதியுள்ளோரைக் குணப்படுத்தினார்.
3 တဒနန္တရံ ဖိရူၑိနသ္တတ္သမီပမာဂတျ ပါရီက္ၐိတုံ တံ ပပြစ္ဆုး, ကသ္မာဒပိ ကာရဏာတ် နရေဏ သွဇာယာ ပရိတျာဇျာ န ဝါ?
சில பரிசேயர் இயேசுவைச் சோதிக்கும்படி, அவரிடத்தில் வந்து, “ஒருவன் தன் மனைவியை எந்தவொரு காரணத்திற்காகவும் விவாகரத்து செய்வது மோசேயின் சட்டத்திற்கு உகந்ததோ?” என்று கேட்டார்கள்.
4 သ ပြတျုဝါစ, ပြထမမ် ဤၑွရော နရတွေန နာရီတွေန စ မနုဇာန် သသရ္ဇ, တသ္မာတ် ကထိတဝါန်,
அதற்கு அவர், “தொடக்கத்திலே படைப்பில் இறைவன் அவர்களை ‘ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்’ என்பதை நீங்கள் வாசித்ததில்லையா”
5 မာနုၐး သွပိတရော် ပရိတျဇျ သွပတ္နျာမ် အာသက္ၐျတေ, တော် ဒွေါ် ဇနာဝေကာင်္ဂေါ် ဘဝိၐျတး, ကိမေတဒ် ယုၐ္မာဘိ ရ္န ပဌိတမ်?
இந்தக் காரணத்தினால் ஒருவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்; இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.
6 အတသ္တော် ပုန ရ္န ဒွေါ် တယောရေကာင်္ဂတွံ ဇာတံ, ဤၑွရေဏ ယစ္စ သမယုဇျတ, မနုဇော န တဒ် ဘိန္ဒျာတ်၊
எனவே அவர்கள் இருவராய் இல்லாமல் ஒரே உடலாக இருக்கிறார்கள். ஆகையால் “இறைவன் ஒன்றாய் இணைத்தவர்களை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.
7 တဒါနီံ တေ တံ ပြတျဝဒန်, တထာတွေ တျာဇျပတြံ ဒတ္တွာ သွာံ သွာံ ဇာယာံ တျက္တုံ ဝျဝသ္ထာံ မူသား ကထံ လိလေခ?
அதற்கு அவர்கள், “அப்படியானால் ஒருவன் தனது மனைவிக்கு விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுத்து அவளை அனுப்பிவிடலாம் என்று மோசே கட்டளையிட்டிருப்பது ஏன்?” என்று கேட்டார்கள்.
8 တတး သ ကထိတဝါန်, ယုၐ္မာကံ မနသာံ ကာဌိနျာဒ် ယုၐ္မာန် သွာံ သွာံ ဇာယာံ တျက္တုမ် အနွမနျတ ကိန္တု ပြထမာဒ် ဧၐော ဝိဓိရ္နာသီတ်၊
இயேசு அதற்குப் பதிலாக, “உங்கள் இருதயம் கடினமாய் இருந்ததாலேயே, உங்கள் மனைவியை விவாகரத்து செய்வதற்கு மோசே அனுமதித்தார். ஆனால் இது தொடக்கத்திலிருந்து அப்படியிருக்கவில்லை.
9 အတော ယုၐ္မာနဟံ ဝဒါမိ, ဝျဘိစာရံ ဝိနာ ယော နိဇဇာယာံ တျဇေတ် အနျာဉ္စ ဝိဝဟေတ်, သ ပရဒါရာန် ဂစ္ဆတိ; ယၑ္စ တျက္တာံ နာရီံ ဝိဝဟတိ သောပိ ပရဒါရေၐု ရမတေ၊
நான் உங்களுக்குச் சொல்கிறேன், தன் மனைவி விபசாரம் செய்ததினாலன்றி, வேறெந்த காரணத்திற்காகவும் ஒருவன் அவளை விவாகரத்து செய்துவிட்டு, அதற்குப் பின்பு வேறு ஒருத்தியைத் திருமணம் செய்தால், அவனும் விபசாரம் செய்கிறான்” என்றார்.
10 တဒါ တသျ ၑိၐျာသ္တံ ဗဘာၐိရေ, ယဒိ သွဇာယယာ သာကံ ပုံသ ဧတာဒၖက် သမ္ဗန္ဓော ဇာယတေ, တရှိ ဝိဝဟနမေဝ န ဘဒြံ၊
சீடர்கள் அவரிடம், “கணவனுக்கும் மனைவிக்கும் இருக்கும் உறவுநிலை இப்படியானால், திருமணம் செய்யாமல் இருப்பதே நல்லது” என்றார்கள்.
11 တတး သ ဥက္တဝါန်, ယေဘျသ္တတ္သာမရ္ထျံ အာဒါယိ, တာန် ဝိနာနျး ကောပိ မနုဇ ဧတန္မတံ ဂြဟီတုံ န ၑက္နောတိ၊
இயேசு அதற்குப் பதிலாக, “இந்த வார்த்தையை எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கான வரம் பெற்றவர்கள் மட்டுமே இதை ஏற்றுக்கொள்வார்கள்.
12 ကတိပယာ ဇနနက္လီဗး ကတိပယာ နရကၖတက္လီဗး သွရ္ဂရာဇျာယ ကတိပယား သွကၖတက္လီဗာၑ္စ သန္တိ, ယေ ဂြဟီတုံ ၑက္နုဝန္တိ တေ ဂၖဟ္လန္တု၊
சிலர் பிறவியிலேயே திருமண உறவுகொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள்; சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்; சிலர் பரலோக அரசுக்காகத் திருமணத்தைக் கைவிட்டுத் தங்களைத் தாங்களே அப்படி ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்ளக் கூடியவன் ஏற்றுக்கொள்ளட்டும்” என்றார்.
13 အပရမ် ယထာ သ ၑိၑူနာံ ဂါတြေၐု ဟသ္တံ ဒတွာ ပြာရ္ထယတေ, တဒရ္ထံ တတ္သမီံပံ ၑိၑဝ အာနီယန္တ, တတ အာနယိတၖန် ၑိၐျာသ္တိရသ္ကၖတဝန္တး၊
அதற்குப் பின்பு சிறுபிள்ளைகளின்மேல் இயேசு கைகளை வைத்து ஜெபிக்க வேண்டும் என்று, அவர்கள் சிறுபிள்ளைகளை அவரிடம் கொண்டுவந்தார்கள். ஆனால் சீடர்களோ, அவர்களைக் கொண்டுவந்தவர்களைக் கண்டித்தார்கள்.
14 ကိန္တု ယီၑုရုဝါစ, ၑိၑဝေါ မဒန္တိကမ် အာဂစ္ဆန္တု, တာန် မာ ဝါရယတ, ဧတာဒၖၑာံ ၑိၑူနာမေဝ သွရ္ဂရာဇျံ၊
இயேசு அவர்களிடம், “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்கவேண்டாம். ஏனெனில் பரலோக அரசு இப்படிப்பட்டவர்களுக்கே உரியது” என்றார்.
15 တတး သ တေၐာံ ဂါတြေၐု ဟသ္တံ ဒတွာ တသ္မာတ် သ္ထာနာတ် ပြတသ္ထေ၊
அவர் பிள்ளைகள்மேல் தமது கைகளை வைத்து ஆசீர்வதித்த பின்பு, அந்த இடத்தைவிட்டுச் சென்றார்.
16 အပရမ် ဧက အာဂတျ တံ ပပြစ္ဆ, ဟေ ပရမဂုရော, အနန္တာယုး ပြာပ္တုံ မယာ ကိံ ကိံ သတ္ကရ္မ္မ ကရ္တ္တဝျံ? (aiōnios g166)
அப்பொழுது ஒருவன் இயேசுவிடம் வந்து, “போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு நான் செய்யவேண்டிய நல்ல செயல் என்ன?” எனக் கேட்டான். (aiōnios g166)
17 တတး သ ဥဝါစ, မာံ ပရမံ ကုတော ဝဒသိ? ဝိနေၑ္စရံ န ကောပိ ပရမး, ကိန္တု ယဒျနန္တာယုး ပြာပ္တုံ ဝါဉ္ဆသိ, တရှျာဇ္ဉား ပါလယ၊
“நல்லது என்ன என்பதைப்பற்றி நீ ஏன் என்னிடம் கேட்கிறாய்? நல்லவர் ஒருவரே இருக்கிறார். நீ வாழ்விற்குள் செல்லவேண்டுமானால் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி” என்றார்.
18 တဒါ သ ပၖၐ္ဋဝါန်, ကား ကာ အာဇ္ဉား? တတော ယီၑုး ကထိတဝါန်, နရံ မာ ဟနျား, ပရဒါရာန် မာ ဂစ္ဆေး, မာ စောရယေး, မၖၐာသာက္ၐျံ မာ ဒဒျား,
“எந்தக் கட்டளைகள்?” என அவன் விசாரித்தான். இயேசு அதற்குப் பதிலாக, “கொலை செய்யாதே, விபசாரம் செய்யாதே, களவு செய்யாதே, பொய்சாட்சி சொல்லாதே,
19 နိဇပိတရော် သံမနျသွ, သွသမီပဝါသိနိ သွဝတ် ပြေမ ကုရု၊
உன் தகப்பனையும் தாயையும் மதித்து நட, உன்னில் அன்பாய் இருப்பதுபோல், உன் அயலானிடம் அன்பாய் இரு என்பவைகளே” என்றார்.
20 သ ယုဝါ ကထိတဝါန်, အာ ဗာလျာဒ် ဧတား ပါလယာမိ, ဣဒါနီံ ကိံ နျူနမာသ္တေ?
அதற்கு அந்த வாலிபன், “இவற்றையெல்லாம் செய்துகொண்டு இருக்கிறேன், இன்னும் எனக்கு என்ன குறைபாடு?” என்றான்.
21 တတော ယီၑုရဝဒတ်, ယဒိ သိဒ္ဓေါ ဘဝိတုံ ဝါဉ္ဆသိ, တရှိ ဂတွာ နိဇသရွွသွံ ဝိကြီယ ဒရိဒြေဘျော ဝိတရ, တတး သွရ္ဂေ ဝိတ္တံ လပ္သျသေ; အာဂစ္ဆ, မတ္ပၑ္စာဒွရ္တ္တီ စ ဘဝ၊
இயேசு அதற்கு பதிலாக, “நீ குறைபாடற்றவனாய் இருக்க விரும்பினால், போய் உனது உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்பொழுது, பரலோகத்தில் உனக்கு செல்வம் இருக்கும். பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார்.
22 ဧတာံ ဝါစံ ၑြုတွာ သ ယုဝါ သွီယဗဟုသမ္ပတ္တေ ရွိၐဏး သန် စလိတဝါန်၊
இதை அந்த வாலிபன் கேட்டபோது, துக்கத்துடன் திரும்பிப்போனான். ஏனெனில் அவன் பெரிய செல்வந்தனாய் இருந்தான்.
23 တဒါ ယီၑုး သွၑိၐျာန် အဝဒတ်, ဓနိနာံ သွရ္ဂရာဇျပြဝေၑော မဟာဒုၐ္ကရ ဣတိ ယုၐ္မာနဟံ တထျံ ဝဒါမိ၊
அப்பொழுது இயேசு தமது சீடர்களிடம், “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு செல்வந்தன் பரலோக அரசிற்குள் செல்வது மிகக் கடினமானது.
24 ပုနရပိ ယုၐ္မာနဟံ ဝဒါမိ, ဓနိနာံ သွရ္ဂရာဇျပြဝေၑာတ် သူစီဆိဒြေဏ မဟာင်္ဂဂမနံ သုကရံ၊
மறுபடியும் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு செல்வந்தன் இறைவனின் அரசிற்குள் செல்வதைப் பார்க்கிலும், ஒரு ஒட்டகம் ஊசியின் காதிற்குள் நுழைவது சுலபமாக இருக்கும்” என்றார்.
25 ဣတိ ဝါကျံ နိၑမျ ၑိၐျာ အတိစမတ္ကၖတျ ကထယာမာသုး; တရှိ ကသျ ပရိတြာဏံ ဘဝိတုံ ၑက္နောတိ?
இதைச் சீடர்கள் கேட்டபோது, மிகவும் வியப்புற்று, “அப்படியானால் யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?” எனக் கேட்டார்கள்.
26 တဒါ သ တာန် ဒၖၐ္ဒွါ ကထယာမာသ, တတ် မာနုၐာဏာမၑကျံ ဘဝတိ, ကိန္တွီၑွရသျ သရွွံ ၑကျမ်၊
இயேசு அவர்களை நோக்கிப்பார்த்து, “மனிதனால் இது முடியாது. ஆனால் இறைவனால் எல்லாவற்றையும் செய்யமுடியும்” என்றார்.
27 တဒါ ပိတရသ္တံ ဂဒိတဝါန်, ပၑျ, ဝယံ သရွွံ ပရိတျဇျ ဘဝတး ပၑ္စာဒွရ္တ္တိနော 'ဘဝါမ; ဝယံ ကိံ ပြာပ္သျာမး?
பேதுரு அவரிடம் மறுமொழியாக, “உம்மைப் பின்பற்றுவதற்காக நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டோமே! அப்படியானால், எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்றான்.
28 တတော ယီၑုး ကထိတဝါန်, ယုၐ္မာနဟံ တထျံ ဝဒါမိ, ယူယံ မမ ပၑ္စာဒွရ္တ္တိနော ဇာတာ ဣတိ ကာရဏာတ် နဝီနသၖၐ္ဋိကာလေ ယဒါ မနုဇသုတး သွီယဲၑ္စရျျသိံဟာသန ဥပဝေက္ၐျတိ, တဒါ ယူယမပိ ဒွါဒၑသိံဟာသနေၐူပဝိၑျ ဣသြာယေလီယဒွါဒၑဝံၑာနာံ ဝိစာရံ ကရိၐျထ၊
இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், எல்லாக் காரியங்களும் புதுப்பிக்கப்படும் நாளில், மானிடமகனாகிய நான் எனது மகிமையின் அரியணையில் உட்கார்ந்திருப்பேன். என்னைப் பின்பற்றிய நீங்களும் பன்னிரண்டு அரியணைகளில் உட்கார்ந்து, இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்ப்பீர்கள்.
29 အနျစ္စ ယး ကၑ္စိတ် မမ နာမကာရဏာတ် ဂၖဟံ ဝါ ဘြာတရံ ဝါ ဘဂိနီံ ဝါ ပိတရံ ဝါ မာတရံ ဝါ ဇာယာံ ဝါ ဗာလကံ ဝါ ဘူမိံ ပရိတျဇတိ, သ တေၐာံ ၑတဂုဏံ လပ္သျတေ, အနန္တာယုမော'ဓိကာရိတွဉ္စ ပြာပ္သျတိ၊ (aiōnios g166)
என் நிமித்தம் வீடுகளையோ, சகோதரர்களையோ சகோதரிகளையோ, தகப்பனையோ, தாயையோ, மனைவியையோ பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டுவந்த ஒவ்வொருவனும், அதற்கு நூறுமடங்காகப் பெறுவான்; நித்திய வாழ்வையும் உரிமையாக்கிக்கொள்வான். (aiōnios g166)
30 ကိန္တု အဂြီယာ အနေကေ ဇနား ပၑ္စာတ်, ပၑ္စာတီယာၑ္စာနေကေ လောကာ အဂြေ ဘဝိၐျန္တိ၊
ஆனால் முதலாவதாய் இருக்கும் அநேகர் கடைசியாகவும், கடைசியாய் இருக்கும் அநேகர் முதலாவதாய் இருப்பார்கள்” என்றார்.

< မထိး 19 >