< လူကး 4 >
1 တတး ပရံ ယီၑုး ပဝိတြေဏာတ္မနာ ပူရ္ဏး သန် ယရ္ဒ္ဒနနဒျား ပရာဝၖတျာတ္မနာ ပြာန္တရံ နီတး သန် စတွာရိံၑဒ္ဒိနာနိ ယာဝတ် ၑဲတာနာ ပရီက္ၐိတော'ဘူတ်,
௧இயேசு பரிசுத்த ஆவியானவராலே நிறைந்தவராக யோர்தானைவிட்டுத் திரும்பி, பரிசுத்த ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு,
2 ကိဉ္စ တာနိ သရွွဒိနာနိ ဘောဇနံ ဝိနာ သ္ထိတတွာတ် ကာလေ ပူရ္ဏေ သ က္ၐုဓိတဝါန်၊
௨நாற்பதுநாட்கள் சாத்தானால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் சாப்பிடாமல் இருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசி உண்டானது.
3 တတး ၑဲတာနာဂတျ တမဝဒတ် တွံ စေဒီၑွရသျ ပုတြသ္တရှိ ပြသ္တရာနေတာန် အာဇ္ဉယာ ပူပါန် ကုရု၊
௩அப்பொழுது சாத்தான் அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனென்றால், இந்தக் கல் அப்பமாக மாறும்படிச் சொல்லும் என்றான்.
4 တဒါ ယီၑုရုဝါစ, လိပိရီဒၖၑီ ဝိဒျတေ မနုဇး ကေဝလေန ပူပေန န ဇီဝတိ ကိန္တွီၑွရသျ သရွွာဘိရာဇ္ဉာဘိ ရ္ဇီဝတိ၊
௪இயேசு மறுமொழியாக: மனிதன் அப்பத்தினால்மட்டுமில்லை, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
5 တဒါ ၑဲတာန် တမုစ္စံ ပရွွတံ နီတွာ နိမိၐဲကမဓျေ ဇဂတး သရွွရာဇျာနိ ဒရ္ၑိတဝါန်၊
௫பின்பு சாத்தான் அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:
6 ပၑ္စာတ် တမဝါဒီတ် သရွွမ် ဧတဒ် ဝိဘဝံ ပြတာပဉ္စ တုဘျံ ဒါသျာမိ တန် မယိ သမရ္ပိတမာသ္တေ ယံ ပြတိ မမေစ္ဆာ ဇာယတေ တသ္မဲ ဒါတုံ ၑက္နောမိ,
௬இவைகள் எல்லாவற்றின்மேலும் உமக்கு அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் என்னுடைய பொறுப்பில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுப்பேன்.
7 တွံ စေန္မာံ ဘဇသေ တရှိ သရွွမေတတ် တဝဲဝ ဘဝိၐျတိ၊
௭நீர் என்முன் பணிந்து தொழுதுகொண்டால் இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.
8 တဒါ ယီၑုသ္တံ ပြတျုက္တဝါန် ဒူရီ ဘဝ ၑဲတာန် လိပိရာသ္တေ, နိဇံ ပြဘုံ ပရမေၑွရံ ဘဇသွ ကေဝလံ တမေဝ သေဝသွ စ၊
௮இயேசு அவனுக்கு மறுமொழியாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய யெகோவாவைமட்டும் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்குமட்டும் ஆராதனைசெய் என்று எழுதியிருக்கிறது என்றார்.
9 အထ ၑဲတာန် တံ ယိရူၑာလမံ နီတွာ မန္ဒိရသျ စူဍာယာ ဥပရိ သမုပဝေၑျ ဇဂါဒ တွံ စေဒီၑွရသျ ပုတြသ္တရှိ သ္ထာနာဒိတော လမ္ဖိတွာဓး
௯அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்தின் உச்சியில் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனென்றால், இங்கேயிருந்து கீழே குதியும்.
10 ပတ ယတော လိပိရာသ္တေ, အာဇ္ဉာပယိၐျတိ သွီယာန် ဒူတာန် သ ပရမေၑွရး၊
௧0ஏனென்றால், உம்மைப் பாதுகாக்க தேவன் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார் என்றும்,
11 ရက္ၐိတုံ သရွွမာရ္ဂေ တွာံ တေန တွစ္စရဏေ ယထာ၊ န လဂေတ် ပြသ္တရာဃာတသ္တွာံ ဓရိၐျန္တိ တေ တထာ၊
௧௧உமது பாதம் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மை தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
12 တဒါ ယီၑုနာ ပြတျုက္တမ် ဣဒမပျုက္တမသ္တိ တွံ သွပြဘုံ ပရေၑံ မာ ပရီက္ၐသွ၊
௧௨அதற்கு இயேசு: உன் தேவனாகிய யெகோவாவை சோதித்துப்பார்க்காதிருப்பாயாக என்றும் சொல்லியிருக்கிறதே என்றார்.
13 ပၑ္စာတ် ၑဲတာန် သရွွပရီက္ၐာံ သမာပျ က္ၐဏာတ္တံ တျက္တွာ ယယော်၊
௧௩சாத்தான், இயேசுவை பலவிதங்களில் சோதித்துமுடித்தபின்பு சிலகாலம் அவரைவிட்டு விலகிப்போனான்.
14 တဒါ ယီၑုရာတ္မပြဘာဝါတ် ပုနရ္ဂာလီလ္ပြဒေၑံ ဂတသ္တဒါ တတ္သုချာတိၑ္စတုရ္ဒိၑံ ဝျာနၑေ၊
௧௪பின்பு இயேசு பரிசுத்த ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவிற்குத் திரும்பிப்போனார். அவரைப்பற்றிய செய்தி சுற்றிலும் இருக்கிற தேசங்களெல்லாம் பரவியது.
15 သ တေၐာံ ဘဇနဂၖဟေၐု ဥပဒိၑျ သရွွဲး ပြၑံသိတော ဗဘူဝ၊
௧௫அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லோராலும் புகழப்பட்டார்.
16 အထ သ သွပါလနသ္ထာနံ နာသရတ္ပုရမေတျ ဝိၑြာမဝါရေ သွာစာရာဒ် ဘဇနဂေဟံ ပြဝိၑျ ပဌိတုမုတ္တသ္ထော်၊
௧௬ஒரு நாள் இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்திற்கு வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திற்குச் சென்று, வேதத்தை வாசிக்க எழுந்து நின்றார்.
17 တတော ယိၑယိယဘဝိၐျဒွါဒိနး ပုသ္တကေ တသျ ကရဒတ္တေ သတိ သ တတ် ပုသ္တကံ ဝိသ္တာရျျ ယတြ ဝက္ၐျမာဏာနိ ဝစနာနိ သန္တိ တတ် သ္ထာနံ ပြာပျ ပပါဌ၊
௧௭அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புத்தகத்தை விரித்தபோது:
18 အာတ္မာ တု ပရမေၑသျ မဒီယောပရိ ဝိဒျတေ၊ ဒရိဒြေၐု သုသံဝါဒံ ဝက္တုံ မာံ သောဘိၐိက္တဝါန်၊ ဘဂ္နာန္တး ကရဏာလ္လောကာန် သုသွသ္ထာန် ကရ္တ္တုမေဝ စ၊ ဗန္ဒီကၖတေၐု လောကေၐု မုက္တေ ရ္ဃောၐယိတုံ ဝစး၊ နေတြာဏိ ဒါတုမန္ဓေဘျသ္တြာတုံ ဗဒ္ဓဇနာနပိ၊
௧௮யெகோவாவுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; எளியவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் காயப்பட்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், பார்வை இல்லாதவர்களுக்குப் பார்வையையும், ஒடுக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,
19 ပရေၑာနုဂြဟေ ကာလံ ပြစာရယိတုမေဝ စ၊ သရွွဲတတ္ကရဏာရ္ထာယ မာမေဝ ပြဟိဏောတိ သး။
௧௯இந்த வருடம் யெகோவாவுடைய கிருபையின் வருடம் என்பதைச் சொல்லவும், என்னை அனுப்பினார்,” என்று எழுதியிருக்கிறதை அவர் பார்த்து.
20 တတး ပုသ္တကံ ဗဒွွာ ပရိစာရကသျ ဟသ္တေ သမရ္ပျ စာသနေ သမုပဝိၐ္ဋး, တတော ဘဇနဂၖဟေ ယာဝန္တော လောကာ အာသန် တေ သရွွေ'နနျဒၖၐ္ဋျာ တံ ဝိလုလောကိရေ၊
௨0அதை வாசித்து, பின்பு புத்தகத்தைச் சுருட்டி, பணிவிடை செய்பவனிடம் கொடுத்து உட்கார்ந்தார். ஜெப ஆலயத்திலுள்ள எல்லோரும் அவரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
21 အနန္တရမ် အဒျဲတာနိ သရွွာဏိ လိခိတဝစနာနိ ယုၐ္မာကံ မဓျေ သိဒ္ဓါနိ သ ဣမာံ ကထာံ တေဘျး ကထယိတုမာရေဘေ၊
௨௧அப்பொழுது அவர் அவர்களோடு பேசத்தொடங்கி: “நீங்கள் கேட்ட இந்த வேதவாக்கியம் இன்று நிறைவேறியது” என்றார்.
22 တတး သရွွေ တသ္မိန် အနွရဇျန္တ, ကိဉ္စ တသျ မုခါန္နိရ္ဂတာဘိရနုဂြဟသျ ကထာဘိၑ္စမတ္ကၖတျ ကထယာမာသုး ကိမယံ ယူၐဖး ပုတြော န?
௨௨எல்லோரும் அவருக்கு நற்சாட்சிக் கொடுத்து, அவர் பேசின கிருபையுள்ள வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்: ஆனால், அவர்களில் சிலர்: “இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா” என்றார்கள்.
23 တဒါ သော'ဝါဒီဒ် ဟေ စိကိတ္သက သွမေဝ သွသ္ထံ ကုရု ကဖရ္နာဟူမိ ယဒျတ် ကၖတဝါန် တဒၑြော်ၐ္မ တား သရွား ကြိယာ အတြ သွဒေၑေ ကုရု ကထာမေတာံ ယူယမေဝါဝၑျံ မာံ ဝဒိၐျထ၊
௨௩அவர் அவர்களை நோக்கி: “நீங்கள் என்னிடம், வைத்தியனே, உன்னைநீயே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமில் நீ செய்த செயல்களையெல்லாம் உன் சொந்த ஊராகிய இங்கேயும் செய் என்று சொல்லுவீர்கள் என்பது நிச்சயம்.
24 ပုနး သောဝါဒီဒ် ယုၐ္မာနဟံ ယထာရ္ထံ ဝဒါမိ, ကောပိ ဘဝိၐျဒွါဒီ သွဒေၑေ သတ္ကာရံ န ပြာပ္နောတိ၊
௨௪ஆனாலும் ஒரு தீர்க்கதரிசியை அவனுடைய சொந்த ஊரிலே ஒருவனும் அங்கீகரிக்கமாட்டான் என்று நிச்சயமாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
25 အပရဉ္စ ယထာရ္ထံ ဝစ္မိ, ဧလိယသျ ဇီဝနကာလေ ယဒါ သာရ္ဒ္ဓတြိတယဝရ္ၐာဏိ ယာဝတ် ဇလဒပြတိဗန္ဓာတ် သရွွသ္မိန် ဒေၑေ မဟာဒုရ္ဘိက္ၐမ် အဇနိၐ္ဋ တဒါနီမ် ဣသြာယေလော ဒေၑသျ မဓျေ ဗဟွျော ဝိဓဝါ အာသန်,
௨௫அன்றியும் எலியா தீர்க்கதரிசி வாழ்ந்த நாட்களிலே மூன்று வருடங்களும் ஆறு மாதங்களும் வானம் அடைக்கப்பட்டு மழை இல்லாமல், தேசமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலில் அநேக விதவைகள் இருந்தார்கள்.
26 ကိန္တု သီဒေါန္ပြဒေၑီယသာရိဖတ္ပုရနိဝါသိနီမ် ဧကာံ ဝိဓဝါံ ဝိနာ ကသျာၑ္စိဒပိ သမီပေ ဧလိယး ပြေရိတော နာဘူတ်၊
௨௬இருந்தாலும், எலியா தீர்க்கதரிசி, இவர்களில் எந்தவொரு யூதவிதவையிடமும் அனுப்பப்படாமல், சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா என்னும் ஊரில் இருந்த ஒரு விதவையிடம் அனுப்பப்பட்டான்.
27 အပရဉ္စ ဣလီၑာယဘဝိၐျဒွါဒိဝိဒျမာနတာကာလေ ဣသြာယေလ္ဒေၑေ ဗဟဝး ကုၐ္ဌိန အာသန် ကိန္တု သုရီယဒေၑီယံ နာမာန္ကုၐ္ဌိနံ ဝိနာ ကောပျနျး ပရိၐ္ကၖတော နာဘူတ်၊
௨௭அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலில் அநேக குஷ்டரோகிகள் இருந்தார்கள்; இருந்தாலும் சீரியா தேசத்தைச் சேர்ந்த நாகமானைத்தவிர அவர்களில் வேறு ஒருவனையும் எலிசா சுத்தமாக்கவில்லை என்று சத்தியத்தின்படி உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார்.
28 ဣမာံ ကထာံ ၑြုတွာ ဘဇနဂေဟသ္ထိတာ လောကား သကြောဓမ် ဥတ္ထာယ
௨௮ஜெப ஆலயத்திலிருந்த எல்லோரும், இவைகளைக் கேட்டபொழுது, கடும்கோபமடைந்து,
29 နဂရာတ္တံ ဗဟိၐ္ကၖတျ ယသျ ၑိခရိဏ ဥပရိ တေၐာံ နဂရံ သ္ထာပိတမာသ္တေ တသ္မာန္နိက္ၐေပ္တုံ တသျ ၑိခရံ တံ နိနျုး
௨௯எழுந்திருந்து, அவரை ஊருக்கு வெளியே தள்ளி, தங்களுடைய ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் உச்சியிலிருந்து அவரைத் தலைகீழாகத் தள்ளிவிடுவதற்காக அந்த இடத்திற்குக் கொண்டுபோனார்கள்.
30 ကိန္တု သ တေၐာံ မဓျာဒပသၖတျ သ္ထာနာန္တရံ ဇဂါမ၊
௩0ஆனால், அவர் அவர்கள் நடுவில் இருந்து கடந்துபோய்விட்டார்.
31 တတး ပရံ ယီၑုရ္ဂာလီလ္ပြဒေၑီယကဖရ္နာဟူမ္နဂရ ဥပသ္ထာယ ဝိၑြာမဝါရေ လောကာနုပဒေၐ္ဋုမ် အာရဗ္ဓဝါန်၊
௩௧பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் என்னும் பட்டணத்திற்கு வந்து, ஓய்வுநாட்களில் மக்களுக்குப் போதனை பண்ணினார்.
32 တဒုပဒေၑာတ် သရွွေ စမစ္စကြု ရျတသ္တသျ ကထာ ဂုရုတရာ အာသန်၊
௩௨அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாக இருந்தபடியால் அவருடைய போதனையைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
33 တဒါနီံ တဒ္ဘဇနဂေဟသ္ထိတော'မေဓျဘူတဂြသ္တ ဧကော ဇန ဥစ္စဲး ကထယာမာသ,
௩௩ஜெப ஆலயத்திலே அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் இருந்தான்.
34 ဟေ နာသရတီယယီၑော'သ္မာန် တျဇ, တွယာ သဟာသ္မာကံ ကး သမ္ဗန္ဓး? ကိမသ္မာန် ဝိနာၑယိတုမာယာသိ? တွမီၑွရသျ ပဝိတြော ဇန ဧတဒဟံ ဇာနာမိ၊
௩௪அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? நீர் யார் என்று நான் அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான்.
35 တဒါ ယီၑုသ္တံ တရ္ဇယိတွာဝဒတ် မော်နီ ဘဝ ဣတော ဗဟိရ္ဘဝ; တတး သောမေဓျဘူတသ္တံ မဓျသ္ထာနေ ပါတယိတွာ ကိဉ္စိဒပျဟိံသိတွာ တသ္မာဒ် ဗဟိရ္ဂတဝါန်၊
௩௫அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டு வெளியே போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை மக்களின் நடுவே கீழேத் தள்ளி, அவனுக்கு ஒரு தீங்கும் செய்யாமல், அவனைவிட்டுப் போய்விட்டது.
36 တတး သရွွေ လောကာၑ္စမတ္ကၖတျ ပရသ္ပရံ ဝက္တုမာရေဘိရေ ကောယံ စမတ္ကာရး၊ ဧၐ ပြဘာဝေဏ ပရာကြမေဏ စာမေဓျဘူတာန် အာဇ္ဉာပယတိ တေနဲဝ တေ ဗဟိရ္ဂစ္ဆန္တိ၊
௩௬எல்லோரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்தஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப் போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
37 အနန္တရံ စတုရ္ဒိက္သ္ထဒေၑာန် တသျ သုချာတိရွျာပ္နောတ်၊
௩௭அவரைப்பற்றின புகழ் சுற்றிலுமிருந்த இடங்களிலெல்லாம் பரவியது.
38 တဒနန္တရံ သ ဘဇနဂေဟာဒ် ဗဟိရာဂတျ ၑိမောနော နိဝေၑနံ ပြဝိဝေၑ တဒါ တသျ ၑွၑြူရ္ဇွရေဏာတျန္တံ ပီဍိတာသီတ် ၑိၐျာသ္တဒရ္ထံ တသ္မိန် ဝိနယံ စကြုး၊
௩௮பின்பு அவர் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, சீமோன் வீட்டிற்குப் போனார். அங்கு சீமோனுடைய மாமியார் கடும் ஜூரத்தோடு படுத்திருந்தாள். அவளை குணமாக்கவேண்டுமென்று அவளுக்காக அவரை வேண்டிக்கொண்டார்கள்.
39 တတး သ တသျား သမီပေ သ္ထိတွာ ဇွရံ တရ္ဇယာမာသ တေနဲဝ တာံ ဇွရော'တျာက္ၐီတ် တတး သာ တတ္က္ၐဏမ် ဥတ္ထာယ တာန် သိၐေဝေ၊
௩௯அவர் அவளிடம் குனிந்து நின்று, ஜூரம் நீங்கும்படி கட்டளையிட்டார், உடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது, அவள் எழுந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
40 အထ သူရျျာသ္တကာလေ သွေၐာံ ယေ ယေ ဇနာ နာနာရောဂဲး ပီဍိတာ အာသန် လောကာသ္တာန် ယီၑေား သမီပမ် အာနိနျုး, တဒါ သ ဧကဲကသျ ဂါတြေ ကရမရ္ပယိတွာ တာနရောဂါန် စကာရ၊
௪0சூரியன் அஸ்தமித்தபோது, மக்களெல்லோரும் பலவிதமான வியாதிகளால் கஷ்டப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கரங்களை வைத்து, அவர்களை சுகமாக்கினார்.
41 တတော ဘူတာ ဗဟုဘျော နိရ္ဂတျ စီတ္ၑဗ္ဒံ ကၖတွာ စ ဗဘာၐိရေ တွမီၑွရသျ ပုတြော'ဘိၐိက္တတြာတာ; ကိန္တု သောဘိၐိက္တတြာတေတိ တေ ဝိဝိဒုရေတသ္မာတ် ကာရဏာတ် တာန် တရ္ဇယိတွာ တဒွက္တုံ နိၐိၐေဓ၊
௪௧பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு அநேகரைவிட்டுப் புறப்பட்டுப்போனது. அவர் கிறிஸ்து என்று பிசாசுகளுக்கு தெரிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவிடாமல் அதட்டினார்.
42 အပရဉ္စ ပြဘာတေ သတိ သ ဝိဇနသ္ထာနံ ပြတသ္ထေ ပၑ္စာတ် ဇနာသ္တမနွိစ္ဆန္တသ္တန္နိကဋံ ဂတွာ သ္ထာနာန္တရဂမနာရ္ထံ တမနွရုန္ဓန်၊
௪௨சூரியன் உதயமானபோது அவர் புறப்பட்டு, வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார். அநேக மக்கள் அவரைத் தேடி அவரிடம் வந்து, அவர்களைவிட்டுப் போகவேண்டாம் என்று அவரைத் தடுத்து நிறுத்தப்பார்த்தனர்.
43 ကိန္တု သ တာန် ဇဂါဒ, ဤၑွရီယရာဇျသျ သုသံဝါဒံ ပြစာရယိတုမ် အနျာနိ ပုရာဏျပိ မယာ ယာတဝျာနိ ယတသ္တဒရ္ထမေဝ ပြေရိတောဟံ၊
௪௩அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கம் பண்ணவேண்டும், இதற்காகத்தான் அனுப்பப்பட்டேன் என்றார்.
44 အထ ဂါလီလော ဘဇနဂေဟေၐု သ ဥပဒိဒေၑ၊
௪௪அப்படியே கலிலேயா நாட்டிலுள்ள ஜெப ஆலயங்களில் பிரசங்கம்பண்ணிக்கொண்டுவந்தார்.