< ယောဟနး 6 >
1 တတး ပရံ ယီၑု ရ္ဂာလီလ် ပြဒေၑီယသျ တိဝိရိယာနာမ္နး သိန္ဓေား ပါရံ ဂတဝါန်၊
௧இவைகளுக்குப் பின்பு இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார்.
2 တတော ဝျာဓိမလ္လောကသွာသ္ထျကရဏရူပါဏိ တသျာၑ္စရျျာဏိ ကရ္မ္မာဏိ ဒၖၐ္ဋွာ ဗဟဝေါ ဇနာသ္တတ္ပၑ္စာဒ် အဂစ္ဆန်၊
௨அவர் வியாதியாக இருந்தவர்களுக்கு செய்த அற்புதங்களைத் திரளான மக்கள் பார்த்தபடியால் அவருக்குப் பின் சென்றார்கள்.
3 တတော ယီၑုး ပရွွတမာရုဟျ တတြ ၑိၐျဲး သာကမ်၊
௩இயேசு மலையின்மேல் ஏறி, அங்கே தம்முடைய சீடர்களோடுகூட உட்கார்ந்தார்.
4 တသ္မိန် သမယ နိသ္တာရောတ္သဝနာမ္နိ ယိဟူဒီယာနာမ ဥတ္သဝ ဥပသ္ထိတေ
௪அப்பொழுது யூதர்களுடைய பண்டிகையாகிய பஸ்கா நெருங்கியிருந்தது.
5 ယီၑု ရ္နေတြေ ဥတ္တောလျ ဗဟုလောကာန် သွသမီပါဂတာန် ဝိလောကျ ဖိလိပံ ပၖၐ္ဋဝါန် ဧတေၐာံ ဘောဇနာယ ဘောဇဒြဝျာဏိ ဝယံ ကုတြ ကြေတုံ ၑကြုမး?
௫இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, அநேக மக்கள் தம்மிடத்தில் வருகிறதைப் பார்த்து, பிலிப்புவினிடம்: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே வாங்கலாம் என்று கேட்டார்.
6 ဝါကျမိဒံ တသျ ပရီက္ၐာရ္ထမ် အဝါဒီတ် ကိန္တု ယတ် ကရိၐျတိ တတ် သွယမ် အဇာနာတ်၊
௬தாம் செய்ய போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார்.
7 ဖိလိပး ပြတျဝေါစတ် ဧတေၐာမ် ဧကဲကော ယဒျလ္ပမ် အလ္ပံ ပြာပ္နောတိ တရှိ မုဒြာပါဒဒွိၑတေန ကြီတပူပါ အပိ နျူနာ ဘဝိၐျန္တိ၊
௭பிலிப்பு அவருக்கு மறுமொழியாக: இவர்களில் ஒவ்வொருவரும் கொஞ்சம், எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்திற்கு வாங்கும் அப்பங்களும் இவர்களுக்குப் போதுமானதாக இருக்காதே என்றான்.
8 ၑိမောန် ပိတရသျ ဘြာတာ အာန္ဒြိယာချး ၑိၐျာဏာမေကော ဝျာဟၖတဝါန္
௮அப்பொழுது அவருடைய சீடர்களில் ஒருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரைப் பார்த்து:
9 အတြ ကသျစိဒ် ဗာလကသျ သမီပေ ပဉ္စ ယာဝပူပါး က္ၐုဒြမတ္သျဒွယဉ္စ သန္တိ ကိန္တု လောကာနာံ ဧတာဝါတာံ မဓျေ တဲး ကိံ ဘဝိၐျတိ?
௯இங்கே ஒரு சிறுவன் இருக்கிறான், அவனுடைய கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் இருக்கின்றது, ஆனாலும் அவைகள் இவ்வளவு மக்களுக்கு எப்படிப் போதும் என்றான்.
10 ပၑ္စာဒ် ယီၑုရဝဒတ် လောကာနုပဝေၑယတ တတြ ဗဟုယဝသသတ္တွာတ် ပဉ္စသဟသ္တြေဘျော နျူနာ အဓိကာ ဝါ ပုရုၐာ ဘူမျာမ် ဥပါဝိၑန်၊
௧0இயேசு: மக்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாக இருந்தது. பந்தியிருந்த ஆண்கள் ஏறக்குறைய ஐந்தாயிரம் பேர் இருந்தார்கள்.
11 တတော ယီၑုသ္တာန် ပူပါနာဒါယ ဤၑွရသျ ဂုဏာန် ကီရ္တ္တယိတွာ ၑိၐျေၐု သမာရ္ပယတ် တတသ္တေ တေဘျ ဥပဝိၐ္ဋလောကေဘျး ပူပါန် ယထေၐ္ဋမတ္သျဉ္စ ပြာဒုး၊
௧௧இயேசு அந்த அப்பங்களை எடுத்து, நன்றிசெலுத்தி, சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் பந்தி இருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்குத் தேவையானஅளவு கொடுத்தார்.
12 တေၐု တၖပ္တေၐု သ တာနဝေါစဒ် ဧတေၐာံ ကိဉ္စိဒပိ ယထာ နာပစီယတေ တထာ သရွွာဏျဝၑိၐ္ဋာနိ သံဂၖဟ္လီတ၊
௧௨அவர்கள் திருப்தியடைந்தப்பின்பு, அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒன்றும் வீணாகப் போகாதபடிக்கு மீதியான துண்டுகளைச் சேர்த்துவையுங்கள் என்றார்.
13 တတး သရွွေၐာံ ဘောဇနာတ် ပရံ တေ တေၐာံ ပဉ္စာနာံ ယာဝပူပါနာံ အဝၑိၐ္ဋာနျခိလာနိ သံဂၖဟျ ဒွါဒၑဍလ္လကာန် အပူရယန်၊
௧௩அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஐந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துண்டுகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள்.
14 အပရံ ယီၑောရေတာဒၖၑီမ် အာၑ္စရျျကြိယာံ ဒၖၐ္ဋွာ လောကာ မိထော ဝက္တုမာရေဘိရေ ဇဂတိ ယသျာဂမနံ ဘဝိၐျတိ သ ဧဝါယမ် အဝၑျံ ဘဝိၐျဒွက္တ္တာ၊
௧௪இயேசு செய்த அற்புதத்தை அந்த மனிதர்கள் பார்த்து: உண்மையாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள்.
15 အတဧဝ လောကာ အာဂတျ တမာကြမျ ရာဇာနံ ကရိၐျန္တိ ယီၑုသ္တေၐာမ် ဤဒၖၑံ မာနသံ ဝိဇ္ဉာယ ပုနၑ္စ ပရွွတမ် ဧကာကီ ဂတဝါန်၊
௧௫ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாக இருக்கிறார்கள் என்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.
16 သာယံကာလ ဥပသ္ထိတေ ၑိၐျာ ဇလဓိတဋံ ဝြဇိတွာ နာဝမာရုဟျ နဂရဒိၑိ သိန္ဓော် ဝါဟယိတွာဂမန်၊
௧௬மாலைநேரமானபோது அவருடைய சீடர்கள் கடற்கரைக்குப்போய்,
17 တသ္မိန် သမယေ တိမိရ ဥပါတိၐ္ဌတ် ကိန္တု ယီၐုသ္တေၐာံ သမီပံ နာဂစ္ဆတ်၊
௧௭படகில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராக போனார்கள்; அப்பொழுது இருட்டாக இருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார்.
18 တဒါ ပြဗလပဝနဝဟနာတ် သာဂရေ မဟာတရင်္ဂေါ ဘဝိတုမ် အာရေဘေ၊
௧௮பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.
19 တတသ္တေ ဝါဟယိတွာ ဒွိတြာန် ကြောၑာန် ဂတား ပၑ္စာဒ် ယီၑုံ ဇလဓေရုပရိ ပဒ္ဘျာံ ဝြဇန္တံ နော်ကာန္တိကမ် အာဂစ္ဆန္တံ ဝိလောကျ တြာသယုက္တာ အဘဝန္
௧௯அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் படகில் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படகின் அருகில் வருகிறதைப் பார்த்து பயந்தார்கள்.
20 ကိန္တု သ တာနုက္တ္တဝါန် အယမဟံ မာ ဘဲၐ္ဋ၊
௨0அவர்களை அவர் பார்த்து: நான்தான், பயப்படாமலிருங்கள் என்றார்.
21 တဒါ တေ တံ သွဲရံ နာဝိ ဂၖဟီတဝန္တး တဒါ တတ္က္ၐဏာဒ် ဥဒ္ဒိၐ္ဋသ္ထာနေ နော်ရုပါသ္ထာတ်၊
௨௧அப்பொழுது அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விருப்பமானார்கள்; உடனே படகு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.
22 ယယာ နာဝါ ၑိၐျာ အဂစ္ဆန် တဒနျာ ကာပိ နော်ကာ တသ္မိန် သ္ထာနေ နာသီတ် တတော ယီၑုး ၑိၐျဲး သာကံ နာဂမတ် ကေဝလား ၑိၐျာ အဂမန် ဧတတ် ပါရသ္ထာ လောကာ ဇ္ဉာတဝန္တး၊
௨௨மறுநாளில் கடலின் அக்கரையிலே நின்ற மக்கள் அவருடைய சீடர்கள் ஏறின அந்த ஒரே படகைத்தவிர அங்கே வேறொரு படகும் இருந்ததில்லை என்றும், இயேசு தம்முடைய சீடர்களோடுகூடப் படகில் ஏறாமல் அவருடைய சீடர்கள்மட்டும் போனார்கள் என்றும் அறிந்தார்கள்.
23 ကိန္တု တတး ပရံ ပြဘု ရျတြ ဤၑွရသျ ဂုဏာန် အနုကီရ္တ္တျ လောကာန် ပူပါန် အဘောဇယတ် တတ္သ္ထာနသျ သမီပသ္ထတိဝိရိယာယာ အပရာသ္တရဏယ အာဂမန်၊
௨௩கர்த்தர், நன்றி செலுத்தினபின்பு அவர்கள் அப்பம் சாப்பிட்ட இடத்திற்கு அருகில் திபேரியாவிலிருந்து வேறு படகுகள் வந்தது.
24 ယီၑုသ္တတြ နာသ္တိ ၑိၐျာ အပိ တတြ နာ သန္တိ လောကာ ဣတိ ဝိဇ္ဉာယ ယီၑုံ ဂဝေၐယိတုံ တရဏိဘိး ကဖရ္နာဟူမ် ပုရံ ဂတား၊
௨௪அப்பொழுது இயேசுவும் அவருடைய சீடர்களும் அங்கே இல்லாததை மக்கள் பார்த்து, உடனே அந்தப் படகுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக்கொண்டு, கப்பர்நகூமுக்கு வந்தார்கள்.
25 တတသ္တေ သရိတ္ပတေး ပါရေ တံ သာက္ၐာတ် ပြာပျ ပြာဝေါစန် ဟေ ဂုရော ဘဝါန် အတြ သ္ထာနေ ကဒါဂမတ်?
௨௫கடலின் அக்கரையிலே அவர்கள் அவரைப் பார்த்தபோது: ரபீ, நீர் எப்பொழுது இந்த இடத்திற்கு வந்தீர் என்று கேட்டார்கள்.
26 တဒါ ယီၑုသ္တာန် ပြတျဝါဒီဒ် ယုၐ္မာနဟံ ယထာရ္ထတရံ ဝဒါမိ အာၑ္စရျျကရ္မ္မဒရ္ၑနာဒ္ဓေတော ရ္န ကိန္တု ပူပဘောဇနာတ် တေန တၖပ္တတွာဉ္စ မာံ ဂဝေၐယထ၊
௨௬இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் அற்புதங்களைப் பார்த்ததினால் அல்ல, நீங்கள் அப்பங்கள் புசித்துத் திருப்தியானதினால் தான் என்னைத் தேடுகிறீர்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
27 က္ၐယဏီယဘက္ၐျာရ္ထံ မာ ၑြာမိၐ္ဋ ကိန္တွန္တာယုရ္ဘက္ၐျာရ္ထံ ၑြာမျတ, တသ္မာတ် တာဒၖၑံ ဘက္ၐျံ မနုဇပုတြော ယုၐ္မာဘျံ ဒါသျတိ; တသ္မိန် တာတ ဤၑွရး ပြမာဏံ ပြာဒါတ်၊ (aiōnios )
௨௭அழிந்துபோகிற உணவிற்காக இல்லை, நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற உணவிற்காகவே செயல்களை நடப்பியுங்கள்; அதை மனிதகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் நிச்சயத்திருக்கிறார் என்றார். (aiōnios )
28 တဒါ တေ'ပၖစ္ဆန် ဤၑွရာဘိမတံ ကရ္မ္မ ကရ္တ္တုမ် အသ္မာဘိး ကိံ ကရ္တ္တဝျံ?
௨௮அப்பொழுது அவர்கள் அவரைப் பார்த்து: தேவனுக்குரிய செயல்களை நடப்பிக்கும்படி நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள்.
29 တတော ယီၑုရဝဒဒ် ဤၑွရော ယံ ပြဲရယတ် တသ္မိန် ဝိၑွသနမ် ဤၑွရာဘိမတံ ကရ္မ္မ၊
௨௯இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்குரிய செயல்களாக இருக்கிறது என்றார்.
30 တဒါ တေ ဝျာဟရန် ဘဝတာ ကိံ လက္ၐဏံ ဒရ္ၑိတံ ယဒ္ဒၖၐ္ဋွာ ဘဝတိ ဝိၑွသိၐျာမး? တွယာ ကိံ ကရ္မ္မ ကၖတံ?
௩0அதற்கு அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படி நாங்கள் பார்க்கதக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்ன காரியத்தை நடப்பிக்கிறீர்?
31 အသ္မာကံ ပူရွွပုရုၐာ မဟာပြာန္တရေ မာန္နာံ ဘောက္တ္တုံ ပြာပုး ယထာ လိပိရာသ္တေ၊ သွရ္ဂီယာဏိ တု ဘက္ၐျာဏိ ပြဒဒေါ် ပရမေၑွရး၊
௩௧வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தை சாப்பிடக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய முற்பிதாக்கள் வனாந்திரத்தில் மன்னாவைச் சாப்பிட்டார்களே என்றார்கள்.
32 တဒါ ယီၑုရဝဒဒ် အဟံ ယုၐ္မာနတိယထာရ္ထံ ဝဒါမိ မူသာ ယုၐ္မာဘျံ သွရ္ဂီယံ ဘက္ၐျံ နာဒါတ် ကိန္တု မမ ပိတာ ယုၐ္မာဘျံ သွရ္ဂီယံ ပရမံ ဘက္ၐျံ ဒဒါတိ၊
௩௨இயேசு அவர்களைப் பார்த்து: வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
33 ယး သွရ္ဂာဒဝရုဟျ ဇဂတေ ဇီဝနံ ဒဒါတိ သ ဤၑွရဒတ္တဘက္ၐျရူပး၊
௩௩வானத்தில் இருந்து இறங்கி. உலகத்திற்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே, தேவன் தரும் அப்பம் என்றார்.
34 တဒါ တေ ပြာဝေါစန် ဟေ ပြဘော ဘက္ၐျမိဒံ နိတျမသ္မဘျံ ဒဒါတု၊
௩௪அப்பொழுது அவர்கள் அவரைப் பார்த்து: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்கு கொடுக்கவேண்டும் என்றார்கள்.
35 ယီၑုရဝဒဒ် အဟမေဝ ဇီဝနရူပံ ဘက္ၐျံ ယော ဇနော မမ သန္နိဓိမ် အာဂစ္ဆတိ သ ဇာတု က္ၐုဓာရ္တ္တော န ဘဝိၐျတိ, တထာ ယော ဇနော မာံ ပြတျေတိ သ ဇာတု တၖၐာရ္တ္တော န ဘဝိၐျတိ၊
௩௫இயேசு அவர்களைப் பார்த்து: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருபோதும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் ஒருபோதும், தாகமடையான்.
36 မာံ ဒၖၐ္ဋွာပိ ယူယံ န ဝိၑွသိထ ယုၐ္မာနဟမ် ဣတျဝေါစံ၊
௩௬நீங்கள் என்னைப் பார்த்திருந்தும் விசுவாசியாமல் இருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்.
37 ပိတာ မဟျံ ယာဝတော လောကာနဒဒါတ် တေ သရွွ ဧဝ မမာန္တိကမ် အာဂမိၐျန္တိ ယး ကၑ္စိစ္စ မမ သန္နိဓိမ် အာယာသျတိ တံ ကေနာပိ ပြကာရေဏ န ဒူရီကရိၐျာမိ၊
௩௭பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறதெல்லாம் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் வெளியே தள்ளுவதில்லை.
38 နိဇာဘိမတံ သာဓယိတုံ န ဟိ ကိန္တု ပြေရယိတုရဘိမတံ သာဓယိတုံ သွရ္ဂာဒ် အာဂတောသ္မိ၊
௩௮என் விருப்பத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தின்படி செய்யவே, நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன்.
39 သ ယာန် ယာန် လောကာန် မဟျမဒဒါတ် တေၐာမေကမပိ န ဟာရယိတွာ ၑေၐဒိနေ သရွွာနဟမ် ဥတ္ထာပယာမိ ဣဒံ မတ္ပြေရယိတုး ပိတုရဘိမတံ၊
௩௯அவர் எனக்குக் கொடுத்ததில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் விருப்பமாக இருக்கிறது.
40 ယး ကၑ္စိန် မာနဝသုတံ ဝိလောကျ ဝိၑွသိတိ သ ၑေၐဒိနေ မယောတ္ထာပိတး သန် အနန္တာယုး ပြာပ္သျတိ ဣတိ မတ္ပြေရကသျာဘိမတံ၊ (aiōnios )
௪0குமாரனைப் பார்த்து, அவரிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய விருப்பமாக இருக்கிறது என்றார். (aiōnios )
41 တဒါ သွရ္ဂာဒ် ယဒ် ဘက္ၐျမ် အဝါရောဟတ် တဒ် ဘက္ၐျမ် အဟမေဝ ယိဟူဒီယလောကာသ္တသျဲတဒ် ဝါကျေ ဝိဝဒမာနာ ဝက္တ္တုမာရေဘိရေ
௪௧நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்து:
42 ယူၐဖး ပုတြော ယီၑု ရျသျ မာတာပိတရော် ဝယံ ဇာနီမ ဧၐ ကိံ သဧဝ န? တရှိ သွရ္ဂာဒ် အဝါရောဟမ် ဣတိ ဝါကျံ ကထံ ဝက္တ္တိ?
௪௨இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும், தாயையும் அறிந்திருக்கிறோமே; அப்படி இருக்க, நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள்.
43 တဒါ ယီၑုသ္တာန် ပြတျဝဒတ် ပရသ္ပရံ မာ ဝိဝဒဓွံ
௪௩இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: உங்களுக்குள் முறுமுறுக்க வேண்டாம்.
44 မတ္ပြေရကေဏ ပိတြာ နာကၖၐ္ဋး ကောပိ ဇနော မမာန္တိကမ် အာယာတုံ န ၑက္နောတိ ကိန္တွာဂတံ ဇနံ စရမေ'ဟ္နိ ပြောတ္ထာပယိၐျာမိ၊
௪௪என்னை அனுப்பின பிதா, ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
45 တေ သရွွ ဤၑွရေဏ ၑိက္ၐိတာ ဘဝိၐျန္တိ ဘဝိၐျဒွါဒိနာံ ဂြန္ထေၐု လိပိရိတ္ထမာသ္တေ အတော ယး ကၑ္စိတ် ပိတုး သကာၑာတ် ၑြုတွာ ၑိက္ၐတေ သ ဧဝ မမ သမီပမ် အာဂမိၐျတိ၊
௪௫எல்லோரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே; ஆகவே, பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.
46 ယ ဤၑွရာဒ် အဇာယတ တံ ဝိနာ ကောပိ မနုၐျော ဇနကံ နာဒရ္ၑတ် ကေဝလး သဧဝ တာတမ် အဒြာက္ၐီတ်၊
௪௬தேவனிடத்தில் இருந்து வந்தவரேதவிர வேறு ஒருவரும் பிதாவைப் பார்த்ததில்லை, இவரே பிதாவைப் பார்த்தவர்.
47 အဟံ ယုၐ္မာန် ယထာရ္ထတရံ ဝဒါမိ ယော ဇနော မယိ ဝိၑွာသံ ကရောတိ သောနန္တာယုး ပြာပ္နောတိ၊ (aiōnios )
௪௭என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōnios )
49 ယုၐ္မာကံ ပူရွွပုရုၐာ မဟာပြာန္တရေ မန္နာဘက္ၐျံ ဘူက္တ္တာပိ မၖတား
௪௯உங்களுடைய பிதாக்கள் வனாந்திரத்திலே மன்னாவைச் சாப்பிட்டிருந்தும் மரித்தார்கள்.
50 ကိန္တု ယဒ္ဘက္ၐျံ သွရ္ဂာဒါဂစ္ဆတ် တဒ် ယဒိ ကၑ္စိဒ် ဘုင်္က္တ္တေ တရှိ သ န မြိယတေ၊
௫0இதிலே சாப்பிடுகிறவன் மரிக்காமலும் இருக்கும்படி வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே.
51 ယဇ္ဇီဝနဘက္ၐျံ သွရ္ဂာဒါဂစ္ဆတ် သောဟမေဝ ဣဒံ ဘက္ၐျံ ယော ဇနော ဘုင်္က္တ္တေ သ နိတျဇီဝီ ဘဝိၐျတိ၊ ပုနၑ္စ ဇဂတော ဇီဝနာရ္ထမဟံ ယတ် သွကီယပိၑိတံ ဒါသျာမိ တဒေဝ မယာ ဝိတရိတံ ဘက္ၐျမ်၊ (aiōn )
௫௧நானே வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தை சாப்பிடுகிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம், உலக மக்களின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என்னுடைய சரீரமே என்றார். (aiōn )
52 တသ္မာဒ် ယိဟူဒီယား ပရသ္ပရံ ဝိဝဒမာနာ ဝက္တ္တုမာရေဘိရေ ဧၐ ဘောဇနာရ္ထံ သွီယံ ပလလံ ကထမ် အသ္မဘျံ ဒါသျတိ?
௫௨அப்பொழுது யூதர்கள்: இவன் தன்னுடைய சரீரத்தை எப்படி நமக்கு சாப்பிடக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம் செய்தார்கள்.
53 တဒါ ယီၑုသ္တာန် အာဝေါစဒ် ယုၐ္မာနဟံ ယထာရ္ထတရံ ဝဒါမိ မနုၐျပုတြသျာမိၐေ ယုၐ္မာဘိ ရ္န ဘုက္တ္တေ တသျ ရုဓိရေ စ န ပီတေ ဇီဝနေန သာရ္ဒ္ဓံ ယုၐ္မာကံ သမ္ဗန္ဓော နာသ္တိ၊
௫௩அதற்கு இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் மனிதகுமாரனுடைய சரீரத்தைச் சாப்பிடாமலும், அவருடைய இரத்தத்தைக் குடிக்காமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவன் இல்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
54 ယော မမာမိၐံ သွာဒတိ မမ သုဓိရဉ္စ ပိဝတိ သောနန္တာယုး ပြာပ္နောတိ တတး ၑေၐေ'ဟ္နိ တမဟမ် ဥတ္ထာပယိၐျာမိ၊ (aiōnios )
௫௪என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். (aiōnios )
55 ယတော မဒီယမာမိၐံ ပရမံ ဘက္ၐျံ တထာ မဒီယံ ၑောဏိတံ ပရမံ ပေယံ၊
௫௫என் சரீரம் உண்மையான உணவாக இருக்கிறது, என் இரத்தம் உண்மையான பானமாக இருக்கிறது.
56 ယော ဇနော မဒီယံ ပလလံ သွာဒတိ မဒီယံ ရုဓိရဉ္စ ပိဝတိ သ မယိ ဝသတိ တသ္မိန္နဟဉ္စ ဝသာမိ၊
௫௬என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.
57 မတ္ပြေရယိတြာ ဇီဝတာ တာတေန ယထာဟံ ဇီဝါမိ တဒွဒ် ယး ကၑ္စိန် မာမတ္တိ သောပိ မယာ ဇီဝိၐျတိ၊
௫௭ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.
58 ယဒ္ဘက္ၐျံ သွရ္ဂာဒါဂစ္ဆတ် တဒိဒံ ယန္မာန္နာံ သွာဒိတွာ ယုၐ္မာကံ ပိတရော'မြိယန္တ တာဒၖၑမ် ဣဒံ ဘက္ၐျံ န ဘဝတိ ဣဒံ ဘက္ၐျံ ယော ဘက္ၐတိ သ နိတျံ ဇီဝိၐျတိ၊ (aiōn )
௫௮வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே; இது உங்களுடைய தகப்பன்மார்கள் புசித்த மன்னாவைப்போல அல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். (aiōn )
59 ယဒါ ကဖရ္နာဟူမ် ပုရျျာံ ဘဇနဂေဟေ ဥပါဒိၑတ် တဒါ ကထာ ဧတာ အကထယတ်၊
௫௯கப்பர்நகூமிலுள்ள ஜெப ஆலயத்திலே அவர் உபதேசிக்கும்போது இவைகளைச் சொன்னார்.
60 တဒေတ္ထံ ၑြုတွာ တသျ ၑိၐျာဏာမ် အနေကေ ပရသ္ပရမ် အကထယန် ဣဒံ ဂါဎံ ဝါကျံ ဝါကျမီဒၖၑံ ကး ၑြောတုံ ၑကြုယာတ်?
௬0அவருடைய சீடர்களில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்றார்கள்.
61 ကိန္တု ယီၑုး ၑိၐျာဏာမ် ဣတ္ထံ ဝိဝါဒံ သွစိတ္တေ ဝိဇ္ဉာယ ကထိတဝါန် ဣဒံ ဝါကျံ ကိံ ယုၐ္မာကံ ဝိဃ္နံ ဇနယတိ?
௬௧சீடர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்கள் என்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களைப் பார்த்து: இது உங்களுக்கு இடறலாக இருக்கிறதோ?
62 ယဒိ မနုဇသုတံ ပူရွွဝါသသ္ထာနမ် ဦရ္ဒွွံ ဂစ္ဆန္တံ ပၑျထ တရှိ ကိံ ဘဝိၐျတိ?
௬௨மனிதகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் பார்ப்பீர்களானால் எப்படி இருக்கும்?
63 အာတ္မဲဝ ဇီဝနဒါယကး ဝပု ရ္နိၐ္ဖလံ ယုၐ္မဘျမဟံ ယာနိ ဝစာံသိ ကထယာမိ တာနျာတ္မာ ဇီဝနဉ္စ၊
௬௩ஆவியே உயிர்ப்பிக்கிறது, சரீரமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாகவும், ஜீவனாகவும் இருக்கிறது.
64 ကိန္တု ယုၐ္မာကံ မဓျေ ကေစန အဝိၑွာသိနး သန္တိ ကေ ကေ န ဝိၑွသန္တိ ကော ဝါ တံ ပရကရေၐု သမရ္ပယိၐျတိ တာန် ယီၑုရာပြထမာဒ် ဝေတ္တိ၊
௬௪ஆனாலும் உங்களில் விசுவாசிக்காதவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்றார்; விசுவாசிக்காதவர்கள் இவர்கள் என்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இவன்தான் என்றும் ஆரம்பமுதல் இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்:
65 အပရမပိ ကထိတဝါန် အသ္မာတ် ကာရဏာဒ် အကထယံ ပိတုး သကာၑာတ် ၑက္တ္တိမပြာပျ ကောပိ မမာန္တိကမ် အာဂန္တုံ န ၑက္နောတိ၊
௬௫ஒருவன் என் பிதாவின் அனுமதி பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதற்காகவே உங்களுக்குச் சொன்னேன் என்றார்.
66 တတ္ကာလေ'နေကေ ၑိၐျာ ဝျာဃုဋျ တေန သာရ္ဒ္ဓံ ပုန ရ္နာဂစ္ဆန်၊
௬௬அதுமுதல் அவருடைய சீடர்களில் அநேகர் அவருடனேகூட நடக்காமல் பின்வாங்கிப்போனார்கள்.
67 တဒါ ယီၑု ရ္ဒွါဒၑၑိၐျာန် ဥက္တ္တဝါန် ယူယမပိ ကိံ ယာသျထ?
௬௭அப்பொழுது இயேசு பன்னிரண்டுபேரையும் பார்த்து: நீங்களும் போய்விட விருப்பமாக இருக்கிறீர்களோ என்றார்.
68 တတး ၑိမောန် ပိတရး ပြတျဝေါစတ် ဟေ ပြဘော ကသျာဘျရ္ဏံ ဂမိၐျာမး? (aiōnios )
௬௮சீமோன்பேதுரு அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வார்த்தைகள் உம்மிடத்தில் இருக்கிறது. (aiōnios )
69 အနန္တဇီဝနဒါယိနျော ယား ကထာသ္တာသ္တဝဲဝ၊ ဘဝါန် အမရေၑွရသျာဘိၐိက္တ္တပုတြ ဣတိ ဝိၑွသျ နိၑ္စိတံ ဇာနီမး၊
௬௯நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்.
70 တဒါ ယီၑုရဝဒတ် ကိမဟံ ယုၐ္မာကံ ဒွါဒၑဇနာန် မနောနီတာန် န ကၖတဝါန်? ကိန္တု ယုၐ္မာကံ မဓျေပိ ကၑ္စိဒေကော ဝိဃ္နကာရီ ဝိဒျတေ၊
௭0இயேசு அவர்களைப் பார்த்து: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாக இருக்கிறான் என்றார்.
71 ဣမာံ ကထံ သ ၑိမောနး ပုတြမ် ဤၐ္ကရီယောတီယံ ယိဟူဒါမ် ဥဒ္ဒိၑျ ကထိတဝါန် ယတော ဒွါဒၑာနာံ မဓျေ ဂဏိတး သ တံ ပရကရေၐု သမရ္ပယိၐျတိ၊
௭௧சீமோனின் மகனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிருவரில் ஒருவனாக இருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனாக இருந்தபடியினால் அவனைக்குறித்து இப்படிச் சொன்னார்.