< ယောဟနး 4 >

1 ယီၑုး သွယံ နာမဇ္ဇယတ် ကေဝလံ တသျ ၑိၐျာ အမဇ္ဇယတ် ကိန္တု ယောဟနော'ဓိကၑိၐျာန် သ ကရောတိ မဇ္ဇယတိ စ,
யோவானைவிட இயேசு அநேகம்பேரைச் சீடர்களாக்கி ஞானஸ்நானம் கொடுக்கிறார் என்று பரிசேயர்கள் கேள்விப்பட்டதை இயேசு அறிந்தபோது,
2 ဖိရူၑိန ဣမာံ ဝါရ္တ္တာမၑၖဏွန် ဣတိ ပြဘုရဝဂတျ
யூதேயாவைவிட்டு மறுபடியும் கலிலேயாவிற்குப் போனார்.
3 ယိဟူဒီယဒေၑံ ဝိဟာယ ပုန ရ္ဂာလီလမ် အာဂတ်၊
இயேசு ஞானஸ்நானம் கொடுக்கவில்லை, அவருடைய சீடர்கள் கொடுத்தார்கள்.
4 တတး ၑောမိရောဏပြဒေၑသျ မဒျေန တေန ဂန္တဝျေ သတိ
அப்பொழுது அவர் சமாரியா நாட்டின்வழியாகப் போகவேண்டியதாக இருந்தபடியால்,
5 ယာကူဗ် နိဇပုတြာယ ယူၐဖေ ယာံ ဘူမိမ် အဒဒါတ် တတ္သမီပသ္ထာယိ ၑောမိရောဏပြဒေၑသျ သုခါရ် နာမ္နာ ဝိချာတသျ နဂရသျ သန္နိဓာဝုပါသ္ထာတ်၊
யாக்கோபு தன் மகனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்திற்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார்.
6 တတြ ယာကူဗး ပြဟိရာသီတ်; တဒါ ဒွိတီယယာမဝေလာယာံ ဇာတာယာံ သ မာရ္ဂေ ၑြမာပန္နသ္တသျ ပြဟေး ပါရ္ၑွေ ဥပါဝိၑတ်၊
அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பயணத்தின் களைப்பினால் ஏறக்குறைய நண்பகல் நேரத்தில் சற்று ஓய்வெடுக்க அந்தக் கிணற்றின் அருகே உட்கார்ந்திருந்தார்.
7 ဧတရှိ ကာစိတ် ၑောမိရောဏီယာ ယောၐိတ် တောယောတ္တောလနာရ္ထမ် တတြာဂမတ္
அவருடைய சீடர்கள் உணவு வாங்குவதற்கு ஊருக்குள்ளே சென்றிருந்தார்கள்.
8 တဒါ ၑိၐျား ခါဒျဒြဝျာဏိ ကြေတုံ နဂရမ် အဂစ္ဆန်၊
அப்பொழுது சமாரியா தேசத்தாளாகிய ஒரு பெண் தண்ணீர் எடுக்க வந்தாள். இயேசு அவளைப் பார்த்து: தாகத்திற்குத் தா என்றார்.
9 ယီၑုး ၑောမိရောဏီယာံ တာံ ယောၐိတမ် ဝျာဟာရ္ၐီတ် မဟျံ ကိဉ္စိတ် ပါနီယံ ပါတုံ ဒေဟိ၊ ကိန္တု ၑောမိရောဏီယဲး သာကံ ယိဟူဒီယလောကာ န ဝျဝါဟရန် တသ္မာဒ္ဓေတေား သာကထယတ် ၑောမိရောဏီယာ ယောၐိတဒဟံ တွံ ယိဟူဒီယောသိ ကထံ မတ္တး ပါနီယံ ပါတုမ် ဣစ္ဆသိ?
யூதர்கள் சமாரியருடனே எந்தத் தொடர்பும் வைக்காதவர்களானபடியால், சமாரிய பெண் அவரைப் பார்த்து: நீர் யூதனாக இருக்க, சமாரிய பெண்ணாகிய என்னிடத்தில், தாகத்திற்குத் தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்.
10 တတော ယီၑုရဝဒဒ် ဤၑွရသျ ယဒ္ဒါနံ တတ္ကီဒၖက် ပါနီယံ ပါတုံ မဟျံ ဒေဟိ ယ ဣတ္ထံ တွာံ ယာစတေ သ ဝါ က ဣတိ စေဒဇ္ဉာသျထာသ္တရှိ တမယာစိၐျထား သ စ တုဘျမမၖတံ တောယမဒါသျတ်၊
௧0இயேசு அவளுக்கு மறுமொழியாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்திற்குத் தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் யார் என்பதையும் அறிந்திருந்தால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.
11 တဒါ သာ သီမန္တိနီ ဘာၐိတဝတိ, ဟေ မဟေစ္ဆ ပြဟိရ္ဂမ္ဘီရော ဘဝတော နီရောတ္တောလနပါတြံ နာသ္တီ စ တသ္မာတ် တဒမၖတံ ကီလာလံ ကုတး ပြာပ္သျသိ?
௧௧அதற்கு அந்த பெண்: ஆண்டவரே, எடுத்துக்கொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாக இருக்கிறதே, பின்னே எங்கே இருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் கிடைக்கும்.
12 ယောသ္မဘျမ် ဣမမန္ဓူံ ဒဒေါ်, ယသျ စ ပရိဇနာ ဂေါမေၐာဒယၑ္စ သရွွေ'သျ ပြဟေး ပါနီယံ ပပုရေတာဒၖၑော ယောသ္မာကံ ပူရွွပုရုၐော ယာကူဗ် တသ္မာဒပိ ဘဝါန် မဟာန် ကိံ?
௧௨இந்தக் கிணற்றை எங்களுக்குக் கொடுத்த நம்முடைய முற்பிதாவாகிய யாக்கோபைவிட நீர் பெரியவரோ? அவரும் அவருடைய பிள்ளைகளும், அவருடைய மிருகஜீவன்களும் இதிலே குடித்தது என்றாள்.
13 တတော ယီၑုရကထယဒ် ဣဒံ ပါနီယံ သး ပိဝတိ သ ပုနသ္တၖၐာရ္တ္တော ဘဝိၐျတိ,
௧௩இயேசு அவளுக்கு மறுமொழியாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகம் உண்டாகும்.
14 ကိန္တု မယာ ဒတ္တံ ပါနီယံ ယး ပိဝတိ သ ပုနး ကဒါပိ တၖၐာရ္တ္တော န ဘဝိၐျတိ၊ မယာ ဒတ္တမ် ဣဒံ တောယံ တသျာန္တး ပြသြဝဏရူပံ ဘူတွာ အနန္တာယုရျာဝတ် သြောၐျတိ၊ (aiōn g165, aiōnios g166)
௧௪நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருபோதும் தாகம் உண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாக ஊறுகிற நீரூற்றாய் இருக்கும் என்றார். (aiōn g165, aiōnios g166)
15 တဒါ သာ ဝနိတာကထယတ် ဟေ မဟေစ္ဆ တရှိ မမ ပုနး ပီပါသာ ယထာ န ဇာယတေ တောယောတ္တောလနာယ ယထာတြာဂမနံ န ဘဝတိ စ တဒရ္ထံ မဟျံ တတ္တောယံ ဒေဟီ၊
௧௫அந்த பெண் அவரைப் பார்த்து: ஆண்டவரே, எனக்குத் தாகம் உண்டாகாமலும், நான் இங்கே தண்ணீர் எடுக்க வராமலும் இருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்.
16 တတော ယီၑူရဝဒဒျာဟိ တဝ ပတိမာဟူယ သ္ထာနေ'တြာဂစ္ဆ၊
௧௬இயேசு அவளைப் பார்த்து: நீ போய், உன் கணவனை இங்கே அழைத்துக்கொண்டுவா என்றார்.
17 သာ ဝါမာဝဒတ် မမ ပတိရ္နာသ္တိ၊ ယီၑုရဝဒတ် မမ ပတိရ္နာသ္တီတိ ဝါကျံ ဘဒြမဝေါစး၊
௧௭அதற்கு அந்த பெண்: எனக்குப் கணவன் இல்லை என்றாள். இயேசு அவளைப் பார்த்து: எனக்குப் கணவன் இல்லை என்று நீ சொன்னது சரிதான்.
18 ယတသ္တဝ ပဉ္စ ပတယောဘဝန် အဓုနာ တု တွယာ သာရ္ဒ္ဓံ ယသ္တိၐ္ဌတိ သ တဝ ဘရ္တ္တာ န ဝါကျမိဒံ သတျမဝါဒိး၊
௧௮எப்படியென்றால், ஐந்து கணவர்கள் உனக்கு இருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்கு கணவன் இல்லை, இதை உள்ளபடி சொன்னாய் என்றார்.
19 တဒါ သာ မဟိလာ ဂဒိတဝတိ ဟေ မဟေစ္ဆ ဘဝါန် ဧကော ဘဝိၐျဒွါဒီတိ ဗုဒ္ဓံ မယာ၊
௧௯அப்பொழுது அந்த பெண் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று பார்க்கிறேன்.
20 အသ္မာကံ ပိတၖလောကာ ဧတသ္မိန် ၑိလောစ္စယေ'ဘဇန္တ, ကိန္တု ဘဝဒ္ဘိရုစျတေ ယိရူၑာလမ် နဂရေ ဘဇနယောဂျံ သ္ထာနမာသ္တေ၊
௨0எங்களுடைய முற்பிதாக்கள் இந்த மலையிலே ஆராதித்துவந்தார்கள்; நீங்கள் எருசலேமில்தான் ஆராதிக்கவேண்டும் என்கிறீர்களே என்றாள்.
21 ယီၑုရဝေါစတ် ဟေ ယောၐိတ် မမ ဝါကျေ ဝိၑွသိဟိ ယဒါ ယူယံ ကေဝလၑဲလေ'သ္မိန် ဝါ ယိရူၑာလမ် နဂရေ ပိတုရ္ဘဇနံ န ကရိၐျဓွေ ကာလ ဧတာဒၖၑ အာယာတိ၊
௨௧அதற்கு இயேசு: பெண்ணே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவை ஆராதிக்கும்காலம் வருகிறது.
22 ယူယံ ယံ ဘဇဓွေ တံ န ဇာနီထ, ကိန္တု ဝယံ ယံ ဘဇာမဟေ တံ ဇာနီမဟေ, ယတော ယိဟူဒီယလောကာနာံ မဓျာတ် ပရိတြာဏံ ဇာယတေ၊
௨௨நீங்கள் அறியாததை ஆராதிக்கிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதை ஆராதிக்கிறோம்; ஏனென்றால், இரட்சிப்பு யூதர்கள்வழியாக வருகிறது.
23 ကိန္တု ယဒါ သတျဘက္တာ အာတ္မနာ သတျရူပေဏ စ ပိတုရ္ဘဇနံ ကရိၐျန္တေ သမယ ဧတာဒၖၑ အာယာတိ, ဝရမ် ဣဒါနီမပိ ဝိဒျတေ; ယတ ဧတာဒၖၑော ဘတ္ကာန် ပိတာ စေၐ္ဋတေ၊
௨௩உண்மையாக ஆராதிக்கிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கும்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் ஆராதிக்கிறவர்கள் இப்படிப்பட்டவர்களாக இருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
24 ဤၑွရ အာတ္မာ; တတသ္တသျ ယေ ဘက္တာသ္တဲး သ အာတ္မနာ သတျရူပေဏ စ ဘဇနီယး၊
௨௪தேவன் ஆவியாக இருக்கிறார், அவரை ஆராதிக்கிறவர்கள் ஆவியோடும், உண்மையோடும் அவரை ஆராதிக்க வேண்டும் என்றார்.
25 တဒါ သာ မဟိလာဝါဒီတ် ခြီၐ္ဋနာမ္နာ ဝိချာတော'ဘိၐိက္တး ပုရုၐ အာဂမိၐျတီတိ ဇာနာမိ သ စ သရွွား ကထာ အသ္မာန် ဇ္ဉာပယိၐျတိ၊
௨௫அந்த பெண் அவரைப் பார்த்து: கிறிஸ்து எனப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.
26 တတော ယီၑုရဝဒတ် တွယာ သာရ္ဒ္ဓံ ကထနံ ကရောမိ ယော'ဟမ် အဟမေဝ သ ပုရုၐး၊
௨௬அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.
27 ဧတသ္မိန် သမယေ ၑိၐျာ အာဂတျ တထာ သ္တြိယာ သာရ္ဒ္ဓံ တသျ ကထောပကထနေ မဟာၑ္စရျျမ် အမနျန္တ တထာပိ ဘဝါန် ကိမိစ္ဆတိ? ယဒွါ ကိမရ္ထမ် ဧတယာ သာရ္ဒ္ဓံ ကထာံ ကထယတိ? ဣတိ ကောပိ နာပၖစ္ဆတ်၊
௨௭அந்தநேரத்தில் அவருடைய சீடர்கள் வந்து, அவர் பெண்ணுடனே பேசுகிறதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். ஆனாலும் என்ன வேண்டும் என்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீர் என்றாவது, ஒருவனும் கேட்கவில்லை.
28 တတး ပရံ သာ နာရီ ကလၑံ သ္ထာပယိတွာ နဂရမဓျံ ဂတွာ လောကေဘျောကထာယဒ္
௨௮அப்பொழுது அந்த பெண், தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளேப்போய், மக்களைப் பார்த்து:
29 အဟံ ယဒျတ် ကရ္မ္မာကရဝံ တတ္သရွွံ မဟျမကထယဒ် ဧတာဒၖၑံ မာနဝမေကမ် အာဂတျ ပၑျတ ရု ကိမ် အဘိၐိက္တော န ဘဝတိ?
௨௯நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனிதன் எனக்குச் சொன்னார்; அவரை வந்துபாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்.
30 တတသ္တေ နဂရာဒ် ဗဟိရာဂတျ တာတသျ သမီပမ် အာယန်၊
௩0அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள்.
31 ဧတရှိ ၑိၐျား သာဓယိတွာ တံ ဝျာဟာရ္ၐုး ဟေ ဂုရော ဘဝါန် ကိဉ္စိဒ် ဘူက္တာံ၊
௩௧இப்படி நடக்கும்போது சீடர்கள் அவரைப் பார்த்து: ரபீ, சாப்பிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள்.
32 တတး သောဝဒဒ် ယုၐ္မာဘိရျန္န ဇ္ဉာယတေ တာဒၖၑံ ဘက္ၐျံ မမာသ္တေ၊
௩௨அதற்கு அவர்: நான் சாப்பிடுவதற்கு நீங்கள் அறியாத ஒரு உணவு எனக்கு இருக்கிறது என்றார்.
33 တဒါ ၑိၐျား ပရသ္ပရံ ပြၐ္ဋုမ် အာရမ္ဘန္တ, ကိမသ္မဲ ကောပိ ကိမပိ ဘက္ၐျမာနီယ ဒတ္တဝါန်?
௩௩அப்பொழுது சீடர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்கு உணவுகொண்டுவந்திருப்பானோ என்றார்கள்.
34 ယီၑုရဝေါစတ် မတ္ပြေရကသျာဘိမတာနုရူပကရဏံ တသျဲဝ ကရ္မ္မသိဒ္ဓိကာရဏဉ္စ မမ ဘက္ၐျံ၊
௩௪இயேசு அவர்களைப் பார்த்து: நான் என்னை அனுப்பினவருடைய விருப்பத்தின்படிசெய்து அவருடைய செயல்களை முடிப்பதே என்னுடைய உணவாக இருக்கிறது.
35 မာသစတုၐ္ဋယေ ဇာတေ ၑသျကရ္တ္တနသမယော ဘဝိၐျတီတိ ဝါကျံ ယုၐ္မာဘိး ကိံ နောဒျတေ? ကိန္တွဟံ ဝဒါမိ, ၑိရ ဥတ္တောလျ က္ၐေတြာဏိ ပြတိ နိရီက္ၐျ ပၑျတ, ဣဒါနီံ ကရ္တ္တနယောဂျာနိ ၑုက္လဝရ္ဏာနျဘဝန်၊
௩௫அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றது என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறது என்று உங்களுடைய கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
36 ယၑ္ဆိနတ္တိ သ ဝေတနံ လဘတေ အနန္တာယုးသွရူပံ ၑသျံ သ ဂၖဟ္လာတိ စ, တေနဲဝ ဝပ္တာ ဆေတ္တာ စ ယုဂပဒ် အာနန္ဒတး၊ (aiōnios g166)
௩௬விதைக்கிறவனும், அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் சம்பளத்தை வாங்கி, நித்தியஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். (aiōnios g166)
37 ဣတ္ထံ သတိ ဝပတျေကၑ္ဆိနတျနျ ဣတိ ဝစနံ သိဒ္ဓျတိ၊
௩௭விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற உண்மையான வழக்கச்சொல் இதினாலே வெளிப்படுகிறது.
38 ယတြ ယူယံ န ပရျျၑြာမျတ တာဒၖၑံ ၑသျံ ဆေတ္တုံ ယုၐ္မာန် ပြဲရယမ် အနျေ ဇနားပရျျၑြာမျန် ယူယံ တေၐာံ ၑြဂသျ ဖလမ် အလဘဓွမ်၊
௩௮நீங்கள் பாடுபட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பாடுபட்டார்கள், அவர்கள் பாடுபட்டத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார்.
39 ယသ္မိန် ကာလေ ယဒျတ် ကရ္မ္မာကာရ္ၐံ တတ္သရွွံ သ မဟျမ် အကထယတ် တသျာ ဝနိတာယာ ဣဒံ သာက္ၐျဝါကျံ ၑြုတွာ တန္နဂရနိဝါသိနော ဗဟဝး ၑောမိရောဏီယလောကာ ဝျၑွသန်၊
௩௯நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த பெண்ணின் வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசம் உள்ளவர்களானார்கள்.
40 တထာ စ တသျာန္တိကေ သမုပသ္ထာယ သွေၐာံ သန္နိဓော် ကတိစိဒ် ဒိနာနိ သ္ထာတုံ တသ္မိန် ဝိနယမ် အကုရွွာန တသ္မာတ် သ ဒိနဒွယံ တတ္သ္ထာနေ နျဝၐ္ဋတ္
௪0சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டு நாட்கள் அங்கே தங்கினார்.
41 တတသ္တသျောပဒေၑေန ဗဟဝေါ'ပရေ ဝိၑွသျ
௪௧அப்பொழுது அவருடைய உபதேசத்தின் மூலம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து,
42 တာံ ယောၐာမဝဒန် ကေဝလံ တဝ ဝါကျေန ပြတီမ ဣတိ န, ကိန္တု သ ဇဂတော'ဘိၐိက္တသ္တြာတေတိ တသျ ကထာံ ၑြုတွာ ဝယံ သွယမေဝါဇ္ဉာသမဟိ၊
௪௨அந்த பெண்ணைப் பார்த்து: உன் வார்த்தையினாலே இல்லை, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் உண்மையாகவே கிறிஸ்துவாகிய உலக இரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.
43 သွဒေၑေ ဘဝိၐျဒွက္တုး သတ္ကာရော နာသ္တီတိ ယဒျပိ ယီၑုး ပြမာဏံ ဒတွာကထယတ္
௪௩இரண்டு நாட்களுக்குப்பின்பு அவர் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாவிற்குப் போனார்.
44 တထာပိ ဒိဝသဒွယာတ် ပရံ သ တသ္မာတ် သ္ထာနာဒ် ဂါလီလံ ဂတဝါန်၊
௪௪ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே மரியாதை இல்லை என்று இயேசு தாமே சொல்லியிருந்தார்.
45 အနန္တရံ ယေ ဂါလီလီ လိယလောကာ ဥတ္သဝေ ဂတာ ဥတ္သဝသမယေ ယိရူၑလမ် နဂရေ တသျ သရွွား ကြိယာ အပၑျန် တေ ဂါလီလမ် အာဂတံ တမ် အာဂၖဟ္လန်၊
௪௫அவர் கலிலேயாவில் வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த கலிலேயர் அவரை ஏற்றுக்கொண்டார்கள்; அவர்களும் பண்டிகைக்குச் சென்றிருந்தார்கள்.
46 တတး ပရမ် ယီၑု ရျသ္မိန် ကာန္နာနဂရေ ဇလံ ဒြာက္ၐာရသမ် အာကရောတ် တတ် သ္ထာနံ ပုနရဂါတ်၊ တသ္မိန္နေဝ သမယေ ကသျစိဒ် ရာဇသဘာသ္တာရသျ ပုတြး ကဖရ္နာဟူမပုရီ ရောဂဂြသ္တ အာသီတ်၊
௪௬பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சைரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்; அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் அதிகாரிகளில் ஒருவனுடைய மகன் வியாதியாக இருந்தான்.
47 သ ယေဟူဒီယဒေၑာဒ် ယီၑော ရ္ဂာလီလာဂမနဝါရ္တ္တာံ နိၑမျ တသျ သမီပံ ဂတွာ ပြာရ္ထျ ဝျာဟၖတဝါန် မမ ပုတြသျ ပြာယေဏ ကာလ အာသန္နး ဘဝါန် အာဂတျ တံ သွသ္ထံ ကရောတု၊
௪௭இயேசு யூதேயாவிலிருந்து, கலிலேயாவிற்கு வந்தார் என்று அந்த மனிதன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப்போய், தன் மகன் மரணவேதனையில் இருக்கிறதினால், அவனைக் குணமாக்குவதற்கு வரவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
48 တဒါ ယီၑုရကထယဒ် အာၑ္စရျျံ ကရ္မ္မ စိတြံ စိဟ္နံ စ န ဒၖၐ္ဋာ ယူယံ န ပြတျေၐျထ၊
௪௮அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து: நீங்கள் அடையாளங்களையும், அற்புதங்களையும் பார்க்காவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார்.
49 တတး သ သဘာသဒဝဒတ် ဟေ မဟေစ္ဆ မမ ပုတြေ န မၖတေ ဘဝါနာဂစ္ဆတု၊
௪௯அதற்கு ராஜாவின் அதிகாரி: ஆண்டவரே, என் பிள்ளை இறப்பதற்குமுன்னே வரவேண்டும் என்றான்.
50 ယီၑုသ္တမဝဒဒ် ဂစ္ဆ တဝ ပုတြော'ဇီဝီတ် တဒါ ယီၑုနောက္တဝါကျေ သ ဝိၑွသျ ဂတဝါန်၊
௫0இயேசு அவனைப் பார்த்து: நீ போகலாம், உன் மகன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனிதன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப்போனான்.
51 ဂမနကာလေ မာရ္ဂမဓျေ ဒါသာသ္တံ သာက္ၐာတ္ပြာပျာဝဒန် ဘဝတး ပုတြော'ဇီဝီတ်၊
௫௧அவன் போகும்போது, அவனுடைய வேலைக்காரர்கள் அவனுக்கு எதிர்கொண்டுவந்து, உம்முடைய மகன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள்.
52 တတး ကံ ကာလမာရဘျ ရောဂပြတီကာရာရမ္ဘော ဇာတာ ဣတိ ပၖၐ္ဋေ တဲရုက္တံ ဟျး သာရ္ဒ္ဓဒဏ္ဍဒွယာဓိကဒွိတီယယာမေ တသျ ဇွရတျာဂေါ'ဘဝတ်၊
௫௨அப்பொழுது: எத்தனை மணிக்கு அவனுக்கு சுகம் உண்டானது என்று அவர்களிடத்தில் விசாரித்தான் அவர்கள்: நேற்று பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் அவனை விட்டது என்றார்கள்.
53 တဒါ ယီၑုသ္တသ္မိန် က္ၐဏေ ပြောက္တဝါန် တဝ ပုတြော'ဇီဝီတ် ပိတာ တဒ္ဗုဒ္ဓွာ သပရိဝါရော ဝျၑွသီတ်၊
௫௩உன் மகன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்னதும் அதே நேரம் என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் குடும்பத்தார் அனைவரும் விசுவாசித்தார்கள்.
54 ယိဟူဒီယဒေၑာဒ် အာဂတျ ဂါလီလိ ယီၑုရေတဒ် ဒွိတီယမ် အာၑ္စရျျကရ္မ္မာကရောတ်၊
௫௪இயேசு யூதேயாவில் இருந்து கலிலேயாவிற்குத் திரும்பிவந்தபின்பு, இது அவர் செய்த இரண்டாவது அற்புதம்.

< ယောဟနး 4 >