< ယောဟနး 20 >
1 အနန္တရံ သပ္တာဟသျ ပြထမဒိနေ 'တိပြတျူၐေ 'န္ဓကာရေ တိၐ္ဌတိ မဂ္ဒလီနီ မရိယမ် တသျ ၑ္မၑာနသျ နိကဋံ ဂတွာ ၑ္မၑာနသျ မုခါတ် ပြသ္တရမပသာရိတမ် အပၑျတ်၊
௧வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடு, மகதலேனா மரியாள் கல்லறைக்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போடப்பட்டிருப்பதைப் பார்த்தாள்.
2 ပၑ္စာဒ် ဓာဝိတွာ ၑိမောန္ပိတရာယ ယီၑေား ပြိယတမၑိၐျာယ စေဒမ် အကထယတ်, လောကား ၑ္မၑာနာတ် ပြဘုံ နီတွာ ကုတြာသ္ထာပယန် တဒ် ဝက္တုံ န ၑက္နောမိ၊
௨உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவிடமும் இயேசுவிற்கு அன்பாக இருந்த மற்ற சீடனிடமும்போய்: கர்த்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்.
3 အတး ပိတရး သောနျၑိၐျၑ္စ ဗရှိ ရ္ဘုတွာ ၑ္မၑာနသ္ထာနံ ဂန္တုမ် အာရဘေတာံ၊
௩அப்பொழுது பேதுருவும் மற்ற சீடனும் கல்லறைக்குப் போவதற்காகப் புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள்.
4 ဥဘယောရ္ဓာဝတေား သောနျၑိၐျး ပိတရံ ပၑ္စာတ် တျက္တွာ ပူရွွံ ၑ္မၑာနသ္ထာန ဥပသ္ထိတဝါန်၊
௪பேதுருவைவிட மற்ற சீடன் வேகமாக ஓடி, முதலில் கல்லறைக்கு வந்து,
5 တဒါ ပြဟွီဘူယ သ္ထာပိတဝသ္တြာဏိ ဒၖၐ္ဋဝါန် ကိန္တု န ပြာဝိၑတ်၊
௫அதற்குள்ளே குனிந்து பார்த்து, துணிகள் கிடக்கிறதைப் பார்த்தான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை.
6 အပရံ ၑိမောန္ပိတရ အာဂတျ ၑ္မၑာနသ္ထာနံ ပြဝိၑျ
௬சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே நுழைந்து,
7 သ္ထာပိတဝသ္တြာဏိ မသ္တကသျ ဝသ္တြဉ္စ ပၖထက် သ္ထာနာန္တရေ သ္ထာပိတံ ဒၖၐ္ဋဝါန်၊
௭துணிகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த துணி மற்றத் துணிகளோடு வைக்காமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் பார்த்தான்.
8 တတး ၑ္မၑာနသ္ထာနံ ပူရွွမ် အာဂတော ယောနျၑိၐျး သောပိ ပြဝိၑျ တာဒၖၑံ ဒၖၐ္ဋာ ဝျၑွသီတ်၊
௮முதலில் கல்லறைக்கு வந்த மற்ற சீடனும் அப்பொழுது உள்ளே நுழைந்து, பார்த்து விசுவாசித்தான்.
9 ယတး ၑ္မၑာနာတ် သ ဥတ္ထာပယိတဝျ ဧတသျ ဓရ္မ္မပုသ္တကဝစနသျ ဘာဝံ တေ တဒါ ဝေါဒ္ဓုံ နာၑန္ကုဝန်၊
௯அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாமல் இருந்தார்கள்.
10 အနန္တရံ တော် ဒွေါ် ၑိၐျော် သွံ သွံ ဂၖဟံ ပရာဝၖတျာဂစ္ဆတာမ်၊
௧0பின்பு அந்தச் சீடர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
11 တတး ပရံ မရိယမ် ၑ္မၑာနဒွါရသျ ဗဟိး သ္ထိတွာ ရောဒိတုမ် အာရဘတ တတော ရုဒတီ ပြဟွီဘူယ ၑ္မၑာနံ ဝိလောကျ
௧௧மரியாள் கல்லறையின் அருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கும்போது அவள் குனிந்து கல்லறைக்கு உள்ளே பார்த்து,
12 ယီၑေား ၑယနသ္ထာနသျ ၑိရးသ္ထာနေ ပဒတလေ စ ဒွယော ရ္ဒိၑော ဒွေါ် သွရ္ဂီယဒူတာဝုပဝိၐ္ဋော် သမပၑျတ်၊
௧௨இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளை உடை அணிந்தவர்களாக இரண்டு தூதர்கள், தலைபக்கம் ஒருவனும் கால்பக்கம் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாள்.
13 တော် ပၖၐ္ဋဝန္တော် ဟေ နာရိ ကုတော ရောဒိၐိ? သာဝဒတ် လောကာ မမ ပြဘုံ နီတွာ ကုတြာသ္ထာပယန် ဣတိ န ဇာနာမိ၊
௧௩அவர்கள் அவளைப் பார்த்து: பெண்ணே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.
14 ဣတျုက္တွာ မုခံ ပရာဝၖတျ ယီၑုံ ဒဏ္ဍာယမာနမ် အပၑျတ် ကိန္တု သ ယီၑုရိတိ သာ ဇ္ဉာတုံ နာၑက္နောတ်၊
௧௪இவைகளைச் சொல்லிப் பின்பக்கம் திரும்பி, இயேசு நிற்கிறதைப் பார்த்தாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாமல் இருந்தாள்.
15 တဒါ ယီၑုသ္တာမ် အပၖစ္ဆတ် ဟေ နာရိ ကုတော ရောဒိၐိ? ကံ ဝါ မၖဂယသေ? တတး သာ တမ် ဥဒျာနသေဝကံ ဇ္ဉာတွာ ဝျာဟရတ်, ဟေ မဟေစ္ဆ တွံ ယဒီတး သ္ထာနာတ် တံ နီတဝါန် တရှိ ကုတြာသ္ထာပယသ္တဒ် ဝဒ တတ္သ္ထာနာတ် တမ် အာနယာမိ၊
௧௫இயேசு அவளைப் பார்த்து: பெண்ணே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரன் என்று நினைத்து: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போயிருந்தால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்வேன் என்றாள்.
16 တဒါ ယီၑုသ္တာမ် အဝဒတ် ဟေ မရိယမ်၊ တတး သာ ပရာဝၖတျ ပြတျဝဒတ် ဟေ ရဗ္ဗူနီ အရ္ထာတ် ဟေ ဂုရော၊
௧௬இயேசு அவளைப் பார்த்து: மரியாளே என்றார். அவள் திரும்பிப்பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தம்.
17 တဒါ ယီၑုရဝဒတ် မာံ မာ ဓရ, ဣဒါနီံ ပိတုး သမီပေ ဦရ္ဒ္ဓွဂမနံ န ကရောမိ ကိန္တု ယော မမ ယုၐ္မာကဉ္စ ပိတာ မမ ယုၐ္မာကဉ္စေၑွရသ္တသျ နိကဋ ဦရ္ဒ္ဓွဂမနံ ကရ္တ္တုမ် ဥဒျတောသ္မိ, ဣမာံ ကထာံ တွံ ဂတွာ မမ ဘြာတၖဂဏံ ဇ္ဉာပယ၊
௧௭இயேசு அவளைப் பார்த்து: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடம் திரும்பிப்போகவில்லை; நீ என் சகோதரர்களிடம்போய், நான் என் பிதாவினிடமும் உங்களுடைய பிதாவினிடமும், என் தேவனிடமும் உங்களுடைய தேவனிடமும் திரும்பிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
18 တတော မဂ္ဒလီနီမရိယမ် တတ္က္ၐဏာဒ် ဂတွာ ပြဘုသ္တသျဲ ဒရ္ၑနံ ဒတ္တွာ ကထာ ဧတာ အကထယဒ် ဣတိ ဝါရ္တ္တာံ ၑိၐျေဘျော'ကထယတ်၊
௧௮மகதலேனா மரியாள் போய், தான் இயேசுவைப் பார்த்ததையும், அவர் தன்னிடம் சொன்னவைகளையும் சீடர்களுக்கு அறிவித்தாள்.
19 တတး ပရံ သပ္တာဟသျ ပြထမဒိနသျ သန္ဓျာသမယေ ၑိၐျာ ဧကတြ မိလိတွာ ယိဟူဒီယေဘျော ဘိယာ ဒွါရရုဒ္ဓမ် အကုရွွန်, ဧတသ္မိန် ကာလေ ယီၑုသ္တေၐာံ မဓျသ္ထာနေ တိၐ္ဌန် အကထယဒ် ယုၐ္မာကံ ကလျာဏံ ဘူယာတ်၊
௧௯வாரத்தின் முதல்நாளாகிய அன்றையதினம் மாலைநேரத்திலே, சீடர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கும்போது, இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
20 ဣတျုက္တွာ နိဇဟသ္တံ ကုက္ၐိဉ္စ ဒရ္ၑိတဝါန်, တတး ၑိၐျား ပြဘုံ ဒၖၐ္ဋွာ ဟၖၐ္ဋာ အဘဝန်၊
௨0அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கரங்களையும் விலாவையும் அவர்களுக்குக் காட்டினார். சீடர்கள் இயேசுவைப் பார்த்து சந்தோஷப்பட்டார்கள்.
21 ယီၑုး ပုနရဝဒဒ် ယုၐ္မာကံ ကလျာဏံ ဘူယာတ် ပိတာ ယထာ မာံ ပြဲၐယတ် တထာဟမပိ ယုၐ္မာန် ပြေၐယာမိ၊
௨௧இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து: உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி,
22 ဣတျုက္တွာ သ တေၐာမုပရိ ဒီရ္ဃပြၑွာသံ ဒတ္တွာ ကထိတဝါန် ပဝိတြမ် အာတ္မာနံ ဂၖဟ္လီတ၊
௨௨அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளுங்கள்;
23 ယူယံ ယေၐာံ ပါပါနိ မောစယိၐျထ တေ မောစယိၐျန္တေ ယေၐာဉ္စ ပါပါတိ န မောစယိၐျထ တေ န မောစယိၐျန္တေ၊
௨௩எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னிக்காமல் இருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாமல் இருக்கும் என்றார்.
24 ဒွါဒၑမဓျေ ဂဏိတော ယမဇော ထောမာနာမာ ၑိၐျော ယီၑောရာဂမနကာလဲ တဲး သာရ္ဒ္ဓံ နာသီတ်၊
௨௪இயேசு வந்திருந்தபோது பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களோடு இருக்கவில்லை.
25 အတော ဝယံ ပြဘူမ် အပၑျာမေတိ ဝါကျေ'နျၑိၐျဲရုက္တေ သောဝဒတ်, တသျ ဟသ္တယော ရ္လော်ဟကီလကာနာံ စိဟ္နံ န ဝိလောကျ တစ္စိဟ္နမ် အင်္ဂုလျာ န သ္ပၖၐ္ဋွာ တသျ ကုက္ၐော် ဟသ္တံ နာရောပျ စာဟံ န ဝိၑွသိၐျာမိ၊
௨௫மற்றச் சீடர்கள்: இயேசுவை பார்த்தோம் என்று அவனிடம் சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினால் உண்டான காயத்தை நான் பார்த்து, அந்தக் காயத்திலே என் விரலைவிட்டு, என் கையை அவருடைய விலாவிலே வைத்துப்பார்க்காமல் விசுவாசிக்கமாட்டேன் என்றான்.
26 အပရမ် အၐ္ဋမေ'ဟ္နိ ဂတေ သတိ ထောမာသဟိတး ၑိၐျဂဏ ဧကတြ မိလိတွာ ဒွါရံ ရုဒ္ဓွာဘျန္တရ အာသီတ်, ဧတရှိ ယီၑုသ္တေၐာံ မဓျသ္ထာနေ တိၐ္ဌန် အကထယတ်, ယုၐ္မာကံ ကုၑလံ ဘူယာတ်၊
௨௬மீண்டும் எட்டு நாட்களுக்குப்பின்பு அவருடைய சீடர்கள் வீட்டிற்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களோடு இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
27 ပၑ္စာတ် ထာမဲ ကထိတဝါန် တွမ် အင်္ဂုလီမ် အတြာရ္ပယိတွာ မမ ကရော် ပၑျ ကရံ ပြသာရျျ မမ ကုက္ၐာဝရ္ပယ နာဝိၑွသျ၊
௨௭பின்பு அவர் தோமாவைப் பார்த்து: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கரங்களைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாக இல்லாமல் விசுவாசியாக இரு என்றார்.
28 တဒါ ထောမာ အဝဒတ်, ဟေ မမ ပြဘော ဟေ မဒီၑွရ၊
௨௮தோமா அவருக்கு மறுமொழியாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.
29 ယီၑုရကထယတ်, ဟေ ထောမာ မာံ နိရီက္ၐျ ဝိၑွသိၐိ ယေ န ဒၖၐ္ဋွာ ဝိၑွသန္တိ တဧဝ ဓနျား၊
௨௯அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைப் பார்த்ததினாலே விசுவாசித்தாய், பார்க்காமல் இருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.
30 ဧတဒနျာနိ ပုသ္တကေ'သ္မိန် အလိခိတာနိ ဗဟူနျာၑ္စရျျကရ္မ္မာဏိ ယီၑုး ၑိၐျာဏာံ ပုရသ္တာဒ် အကရောတ်၊
௩0இந்தப் புத்தகத்தில் எழுதப்படாத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீடர்களுக்கு முன்பாகச் செய்தார்.
31 ကိန္တု ယီၑုရီၑွရသျာဘိၐိက္တး သုတ ဧဝေတိ ယထာ ယူယံ ဝိၑွသိထ ဝိၑွသျ စ တသျ နာမ္နာ ပရမာယုး ပြာပ္နုထ တဒရ္ထမ် ဧတာနိ သရွွာဏျလိချန္တ၊
௩௧இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிப்பதற்காகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்வதற்காகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.