< ပြေရိတား 26 >

1 တတ အာဂြိပ္ပး ပေါ်လမ် အဝါဒီတ်, နိဇာံ ကထာံ ကထယိတုံ တုဘျမ် အနုမတိ ရ္ဒီယတေ၊ တသ္မာတ် ပေါ်လး ကရံ ပြသာရျျ သွသ္မိန် ဥတ္တရမ် အဝါဒီတ်၊
அகிரிப்பா பவுலைப் பார்த்து: நீ உனக்காகப் பேச உன்னை அனுமதிக்கிறேன் என்றான். அப்பொழுது பவுல் கையை நீட்டி, தனக்காக பதில் சொல்லத்தொடங்கினான்.
2 ဟေ အာဂြိပ္ပရာဇ ယတ္ကာရဏာဒဟံ ယိဟူဒီယဲရပဝါဒိတော 'ဘဝံ တသျ ဝၖတ္တာန္တမ် အဒျ ဘဝတး သာက္ၐာန် နိဝေဒယိတုမနုမတောဟမ် ဣဒံ သွီယံ ပရမံ ဘာဂျံ မနျေ;
அகிரிப்பா ராஜாவே, யூதர்கள் என்மேல் சுமத்துகிற எல்லாக் காரியங்களைக்குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பாக பதில் சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன்.
3 ယတော ယိဟူဒီယလောကာနာံ မဓျေ ယာ ယာ ရီတိး သူက္ၐ္မဝိစာရာၑ္စ သန္တိ တေၐု ဘဝါန် ဝိဇ္ဉတမး; အတဧဝ ပြာရ္ထယေ ဓဲရျျမဝလမ္ဗျ မမ နိဝေဒနံ ၑၖဏောတု၊
விசேஷமாக நீர் யூதர்களுடைய எல்லாமுறைமைகளையும் விவாதங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்; ஆகவே, நான் சொல்வதைப் பொறுமையோடு கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.
4 အဟံ ယိရူၑာလမ္နဂရေ သွဒေၑီယလောကာနာံ မဓျေ တိၐ္ဌန် အာ ယော်ဝနကာလာဒ် ယဒြူပမ် အာစရိတဝါန် တဒ် ယိဟူဒီယလောကား သရွွေ ဝိဒန္တိ၊
நான் என் சிறுவயது முதற்கொண்டு, எருசலேமிலே என் மக்களுக்குள்ளே இருந்தபடியால், ஆரம்பமுதல் நான் நடந்த நடக்கையை யூதரெல்லோரும் அறிந்திருக்கிறார்கள்.
5 အသ္မာကံ သရွွေဘျး ၑုဒ္ဓတမံ ယတ် ဖိရူၑီယမတံ တဒဝလမ္ဗီ ဘူတွာဟံ ကာလံ ယာပိတဝါန် ယေ ဇနာ အာ ဗာလျကာလာန် မာံ ဇာနာန္တိ တေ ဧတာဒၖၑံ သာက္ၐျံ ယဒိ ဒဒါတိ တရှိ ဒါတုံ ၑက္နုဝန္တိ၊
நம்முடைய மார்க்கத்திலுள்ள மதவேறுபாடுகளில் மிகவும் கண்டிப்பான நேரத்திற்கு ஏற்றபடி பரிசேயனாக நடந்தேனென்று சாட்சிசொல்ல அவர்களுக்கு விருப்பமிருந்தால் சொல்லலாம்.
6 ကိန္တု ဟေ အာဂြိပ္ပရာဇ ဤၑွရော'သ္မာကံ ပူရွွပုရုၐာဏာံ နိကဋေ ယဒ် အင်္ဂီကၖတဝါန် တသျ ပြတျာၑာဟေတောရဟမ် ဣဒါနီံ ဝိစာရသ္ထာနေ ဒဏ္ဍာယမာနောသ္မိ၊
தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்கிற நம்பிக்கைக்காகவே நான் இப்பொழுது நியாயம் விசாரிக்கப்படுகிறவனாக நிற்கிறேன்.
7 တသျာင်္ဂီကာရသျ ဖလံ ပြာပ္တုမ် အသ္မာကံ ဒွါဒၑဝံၑာ ဒိဝါနိၑံ မဟာယတ္နာဒ် ဤၑွရသေဝနံ ကၖတွာ ယာံ ပြတျာၑာံ ကုရွွန္တိ တသျား ပြတျာၑာယာ ဟေတောရဟံ ယိဟူဒီယဲရပဝါဒိတော'ဘဝမ်၊
இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்துவருகிற நம்முடைய பன்னிரண்டு கோத்திரத்தார்களும் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்று நம்பியிருக்கிறார்கள். அகிரிப்பா ராஜாவே, அந்த நம்பிக்கையினிமித்தமே யூதர்கள் என்மேல் குற்றஞ்சுமத்துகிறார்கள்.
8 ဤၑွရော မၖတာန် ဥတ္ထာပယိၐျတီတိ ဝါကျံ ယုၐ္မာကံ နိကဋေ'သမ္ဘဝံ ကုတော ဘဝေတ်?
தேவன் மரித்தவர்களை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் நினைக்கிறதென்ன?
9 နာသရတီယယီၑော ရ္နာမ္နော ဝိရုဒ္ဓံ နာနာပြကာရပြတိကူလာစရဏမ် ဥစိတမ် ဣတျဟံ မနသိ ယထာရ္ထံ ဝိဇ္ဉာယ
முன்னே நானும் நசரேயனாகிய இயேசுவின் நாமத்திற்கு எதிராக அநேக காரியங்களைச் செய்யவேண்டுமென்று நினைத்திருந்தேன்.
10 ယိရူၑာလမနဂရေ တဒကရဝံ ဖလတး ပြဓာနယာဇကသျ နိကဋာတ် က္ၐမတာံ ပြာပျ ဗဟူန် ပဝိတြလောကာန် ကာရာယာံ ဗဒ္ဓဝါန် ဝိၑေၐတသ္တေၐာံ ဟနနသမယေ တေၐာံ ဝိရုဒ္ဓါံ နိဇာံ သမ္မတိံ ပြကာၑိတဝါန်၊
௧0அப்படியே நான் எருசலேமிலும் செய்தேன். நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அனுமதிபெற்று, பரிசுத்தவான்களில் அநேகரைச் சிறைச்சாலைகளில் அடைத்தேன்; அவர்கள் கொலைசெய்யப்படும்போது நானும் சம்மதித்திருந்தேன்.
11 ဝါရံ ဝါရံ ဘဇနဘဝနေၐု တေဘျော ဒဏ္ဍံ ပြဒတ္တဝါန် ဗလာတ် တံ ဓရ္မ္မံ နိန္ဒယိတဝါံၑ္စ ပုနၑ္စ တာန် ပြတိ မဟာကြောဓာဒ် ဥန္မတ္တး သန် ဝိဒေၑီယနဂရာဏိ ယာဝတ် တာန် တာဍိတဝါန်၊
௧௧எல்லா ஜெபஆலயங்களிலும் நான் அவர்களை பலமுறைத் தண்டித்து அவதூறு சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள் பேரில் கோபவெறிகொண்டவனாக அந்நியப் பட்டணங்கள்வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன்.
12 ဣတ္ထံ ပြဓာနယာဇကသျ သမီပါတ် ၑက္တိမ် အာဇ္ဉာပတြဉ္စ လဗ္ဓွာ ဒမ္မေၐက္နဂရံ ဂတဝါန်၊
௧௨இப்படிச் செய்துவரும்போது, நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் அனுமதியும் பெற்று, தமஸ்குவிற்குப் போகும்போது,
13 တဒါဟံ ဟေ ရာဇန် မာရ္ဂမဓျေ မဓျာဟ္နကာလေ မမ မဒီယသင်္ဂိနာံ လောကာနာဉ္စ စတသၖၐု ဒိက္ၐု ဂဂဏာတ် ပြကာၑမာနာံ ဘာသ္ကရတောပိ တေဇသွတီံ ဒီပ္တိံ ဒၖၐ္ဋဝါန်၊
௧௩மத்தியான நேரத்தில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பயணம் செய்தவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன்.
14 တသ္မာဒ် အသ္မာသု သရွွေၐု ဘူမော် ပတိတေၐု သတ္သု ဟေ ၑော်လ ဟဲ ၑော်လ ကုတော မာံ တာဍယသိ? ကဏ္ဋကာနာံ မုခေ ပါဒါဟနနံ တဝ ဒုးသာဓျမ် ဣဗြီယဘာၐယာ ဂဒိတ ဧတာဒၖၑ ဧကး ၑဗ္ဒော မယာ ၑြုတး၊
௧௪நாங்களெல்லோரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினம் என்று எபிரெயு மொழியிலே என்னுடனே பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
15 တဒါဟံ ပၖၐ္ဋဝါန် ဟေ ပြဘော ကော ဘဝါန်? တတး သ ကထိတဝါန် ယံ ယီၑုံ တွံ တာဍယသိ သောဟံ,
௧௫அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார்? என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே.
16 ကိန္တု သမုတ္တိၐ္ဌ တွံ ယဒ် ဒၖၐ္ဋဝါန် ဣတး ပုနဉ္စ ယဒျတ် တွာံ ဒရ္ၑယိၐျာမိ တေၐာံ သရွွေၐာံ ကာရျျာဏာံ တွာံ သာက္ၐိဏံ မမ သေဝကဉ္စ ကရ္တ္တုမ် ဒရ္ၑနမ် အဒါမ်၊
௧௬இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ பார்த்தவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும்குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குக் காட்சியளித்தேன்.
17 ဝိၑေၐတော ယိဟူဒီယလောကေဘျော ဘိန္နဇာတီယေဘျၑ္စ တွာံ မနောနီတံ ကၖတွာ တေၐာံ ယထာ ပါပမောစနံ ဘဝတိ
௧௭உன் சொந்த மக்களிடத்திலிருந்தும் அந்நிய மக்களிடத்திலிருந்தும் உன்னை விடுதலையாக்கி,
18 ယထာ တေ မယိ ဝိၑွသျ ပဝိတြီကၖတာနာံ မဓျေ ဘာဂံ ပြာပ္နုဝန္တိ တဒဘိပြာယေဏ တေၐာံ ဇ္ဉာနစက္ၐူံၐိ ပြသန္နာနိ ကရ္တ္တုံ တထာန္ဓကာရာဒ် ဒီပ္တိံ ပြတိ ၑဲတာနာဓိကာရာစ္စ ဤၑွရံ ပြတိ မတီး ပရာဝရ္တ္တယိတုံ တေၐာံ သမီပံ တွာံ ပြေၐျာမိ၊
௧௮அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய உரிமைப்பங்கையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறப்பதற்காக, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.
19 ဟေ အာဂြိပ္ပရာဇ ဧတာဒၖၑံ သွရ္ဂီယပြတျာဒေၑံ အဂြာဟျမ် အကၖတွာဟံ
௧௯ஆகவே, அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்திற்குக் கீழப்படியாதவனாக இருக்கவில்லை.
20 ပြထမတော ဒမ္မေၐက္နဂရေ တတော ယိရူၑာလမိ သရွွသ္မိန် ယိဟူဒီယဒေၑေ အနျေၐု ဒေၑေၐု စ ယေန လောကာ မတိံ ပရာဝရ္တ္တျ ဤၑွရံ ပြတိ ပရာဝရ္တ္တယန္တေ, မနးပရာဝရ္တ္တနယောဂျာနိ ကရ္မ္မာဏိ စ ကုရွွန္တိ တာဒၖၑမ် ဥပဒေၑံ ပြစာရိတဝါန်၊
௨0முன்பு தமஸ்குவிலும் எருசலேமிலும் யூதேயா நாடெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு யூதரல்லாதோர்களிடத்திலும் நான் போய், அவர்கள் தேவனிடத்திற்கு மனம்திரும்பி குணப்படவும், மனம்திரும்புவதற்கேற்ற செயல்களைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன்.
21 ဧတတ္ကာရဏာဒ် ယိဟူဒီယာ မဓျေမန္ဒိရံ မာံ ဓၖတွာ ဟန္တုမ် ဥဒျတား၊
௨௧இதினிமித்தமே யூதர்கள் தேவாலயத்திலே என்னைப் பிடித்துக் கொலைசெய்ய முயற்சிசெய்தார்கள்.
22 တထာပိ ခြီၐ္ဋော ဒုးခံ ဘုက္တွာ သရွွေၐာံ ပူရွွံ ၑ္မၑာနာဒ် ဥတ္ထာယ နိဇဒေၑီယာနာံ ဘိန္နဒေၑီယာနာဉ္စ သမီပေ ဒီပ္တိံ ပြကာၑယိၐျတိ
௨௨ஆனாலும் தேவ உதவியைப் பெற்று, நான் இந்த நாள்வரை சிறியோர்களுக்கும் பெரியோர்களுக்கும் சாட்சி சொல்லிவருகிறேன்.
23 ဘဝိၐျဒွါဒိဂဏော မူသာၑ္စ ဘာဝိကာရျျသျ ယဒိဒံ ပြမာဏမ် အဒဒုရေတဒ် ဝိနာနျာံ ကထာံ န ကထယိတွာ ဤၑွရာဒ် အနုဂြဟံ လဗ္ဓွာ မဟတာံ က္ၐုဒြာဏာဉ္စ သရွွေၐာံ သမီပေ ပြမာဏံ ဒတ္တွာဒျ ယာဝတ် တိၐ္ဌာမိ၊
௨௩தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சொந்த மக்களுக்கும் அந்நிய மக்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான்.
24 တသျမာံ ကထာံ နိၑမျ ဖီၐ္ဋ ဥစ္စဲး သွရေဏ ကထိတဝါန် ဟေ ပေါ်လ တွမ် ဥန္မတ္တောသိ ဗဟုဝိဒျာဘျာသေန တွံ ဟတဇ္ဉာနော ဇာတး၊
௨௪இவ்விதமாக அவன் தனக்காக பதில்சொல்லும்போது, பெஸ்து மிகவும் சத்தமாக: பவுலே, நீ உலறுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான்.
25 သ ဥက္တဝါန် ဟေ မဟာမဟိမ ဖီၐ္ဋ နာဟမ် ဥန္မတ္တး ကိန္တု သတျံ ဝိဝေစနီယဉ္စ ဝါကျံ ပြသ္တော်မိ၊
௨௫அதற்கு அவன்: கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சுயபுத்தியோடு வார்த்தைகளைப் பேசுகிறேன்.
26 ယသျ သာက္ၐာဒ် အက္ၐောဘး သန် ကထာံ ကထယာမိ သ ရာဇာ တဒွၖတ္တာန္တံ ဇာနာတိ တသျ သမီပေ ကိမပိ ဂုပ္တံ နေတိ မယာ နိၑ္စိတံ ဗုဓျတေ ယတသ္တဒ် ဝိဇနေ န ကၖတံ၊
௨௬இந்தச் செய்திகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகவே, தைரியமாக அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று நினைக்கிறேன்; இது ஒரு பக்கம் நடந்த காரியமல்ல.
27 ဟေ အာဂြိပ္ပရာဇ ဘဝါန် ကိံ ဘဝိၐျဒွါဒိဂဏောက္တာနိ ဝါကျာနိ ပြတျေတိ? ဘဝါန် ပြတျေတိ တဒဟံ ဇာနာမိ၊
௨௭அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை நம்புகிறீரா? நம்புகிறீர் என்று அறிவேன் என்றான்.
28 တတ အာဂြိပ္ပး ပေါ်လမ် အဘိဟိတဝါန် တွံ ပြဝၖတ္တိံ ဇနယိတွာ ပြာယေဏ မာမပိ ခြီၐ္ဋီယံ ကရောၐိ၊
௨௮அப்பொழுது அகிரிப்பா பவுலைப் பார்த்து: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கச் செய்கிறாய் என்றான்.
29 တတး သော'ဝါဒီတ် ဘဝါန် ယေ ယေ လောကာၑ္စ မမ ကထာမ် အဒျ ၑၖဏွန္တိ ပြာယေဏ ဣတိ နဟိ ကိန္တွေတတ် ၑၖင်္ခလဗန္ဓနံ ဝိနာ သရွွထာ တေ သရွွေ မာဒၖၑာ ဘဝန္တွိတီၑွသျ သမီပေ ပြာရ္ထယေ'ဟမ်၊
௨௯அதற்குப் பவுல்: நீர் மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற அனைவரும், கொஞ்சங்குறையமட்டும் அல்ல, இந்தக் கட்டுகள்தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
30 ဧတသျာံ ကထာယာံ ကထိတာယာံ သ ရာဇာ သော'ဓိပတိ ရ္ဗရ္ဏီကီ သဘာသ္ထာ လောကာၑ္စ တသ္မာဒ် ဥတ္ထာယ
௩0இவைகளை அவன் சொன்னபோது, ராஜாவும் தேசாதிபதியும் பெர்னீக்கேயாளும் அவர்களோடு உட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து,
31 ဂေါပနေ ပရသ္ပရံ ဝိဝိစျ ကထိတဝန္တ ဧၐ ဇနော ဗန္ဓနာရှံ ပြာဏဟနနာရှံ ဝါ ကိမပိ ကရ္မ္မ နာကရောတ်၊
௩௧தனியேபோய்: இந்த மனிதன் மரணத்திற்காவது கட்டுகளுக்காவது தகுதியானது எதையும் செய்யவில்லை என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
32 တတ အာဂြိပ္ပး ဖီၐ္ဋမ် အဝဒတ်, ယဒျေၐ မာနုၐး ကဲသရသျ နိကဋေ ဝိစာရိတော ဘဝိတုံ န ပြာရ္ထယိၐျတ် တရှိ မုက္တော ဘဝိတုမ် အၑက္ၐျတ်၊
௩௨அகிரிப்பா பெஸ்துவைப் பார்த்து: இந்த மனிதன் இராயனுக்கு மேல்முறையீடு செய்யாதிருந்தானானால், இவனை விடுதலை செய்யமுடியும் என்றான்.

< ပြေရိတား 26 >