< ပြေရိတား 21 >
1 တဲ ရွိသၖၐ္ဋား သန္တော ဝယံ ပေါတံ ဗာဟယိတွာ ၒဇုမာရ္ဂေဏ ကောၐမ် ဥပဒွီပမ် အာဂတျ ပရေ'ဟနိ ရောဒိယောပဒွီပမ် အာဂစ္ဆာမ တတသ္တသ္မာတ် ပါတာရာယာမ် ဥပါတိၐ္ဌာမ၊
௧நாங்கள் அவர்களைவிட்டுப் பிரிந்து, எபேசு பட்டணத்திலிருந்து கப்பலேறி நேராக கோஸ் தீவையும், மறுநாளில் ரோது தீவையும் அடைந்து, அந்த இடத்தைவிட்டு பத்தாரா பட்டணத்திற்கு வந்து,
2 တတြ ဖဲနီကိယာဒေၑဂါမိနမ် ပေါတမေကံ ပြာပျ တမာရုဟျ ဂတဝန္တး၊
௨அங்கே பெனிக்கே தேசத்திற்குப் போகிற ஒரு கப்பலைப் பார்த்து, அதிலே ஏறிப்போனோம்.
3 ကုပြောပဒွီပံ ဒၖၐ္ဋွာ တံ သဝျဒိၑိ သ္ထာပယိတွာ သုရိယာဒေၑံ ဂတွာ ပေါတသ္ထဒြဝျာဏျဝရောဟယိတုံ သောရနဂရေ လာဂိတဝန္တး၊
௩சீப்புரு தீவைப் பார்த்து, அதற்கு தெற்கே இருக்கிற சீரியா நாட்டிற்குச் சென்று, தீருபட்டணத் துறைமுகத்தில் இறங்கினோம்; அங்கே கப்பலின் சரக்குகளை இறக்கவேண்டியதாக இருந்தது.
4 တတြ ၑိၐျဂဏသျ သာက္ၐာတ္ကရဏာယ ဝယံ တတြ သပ္တဒိနာနိ သ္ထိတဝန္တး ပၑ္စာတ္တေ ပဝိတြေဏာတ္မနာ ပေါ်လံ ဝျာဟရန် တွံ ယိရူၑာလမ္နဂရံ မာ ဂမး၊
௪அந்த இடத்திலே வாழ்ந்துவந்த சீடர்களைக் கண்டுபிடித்து, அங்கே ஏழுநாட்கள் தங்கினோம். அவர்கள் பவுலைப் பார்த்து: நீர் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினாலே சொன்னார்கள்.
5 တတသ္တေၐု သပ္တသု ဒိနေၐု ယာပိတေၐု သတ္သု ဝယံ တသ္မာတ် သ္ထာနာတ် နိဇဝရ္တ္မနာ ဂတဝန္တး, တသ္မာတ် တေ သဗာလဝၖဒ္ဓဝနိတာ အသ္မာဘိး သဟ နဂရသျ ပရိသရပရျျန္တမ် အာဂတား ပၑ္စာဒွယံ ဇလဓိတဋေ ဇာနုပါတံ ပြာရ္ထယာမဟိ၊
௫அந்த நாட்கள் முடிந்து, நாங்கள் புறப்பட்டுப்போகும்போது, அவர்கள் எல்லோரும் மனைவி மற்றும் பிள்ளைகளோடு பட்டணத்திற்கு வெளியே எங்களை வழியனுப்ப வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்கால்படியிட்டு ஜெபம்பண்ணினோம்.
6 တတး ပရသ္ပရံ ဝိသၖၐ္ဋား သန္တော ဝယံ ပေါတံ ဂတာသ္တေ တု သွသွဂၖဟံ ပြတျာဂတဝန္တး၊
௬அவர்களிடத்தில் விடைபெற்றுக்கொண்டபின்பு, நாங்கள் கப்பல் ஏறினோம்; அவர்கள் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பிப்போனார்கள்.
7 ဝယံ သောရနဂရာတ် နာဝါ ပြသ္ထာယ တလိမာယိနဂရမ် ဥပါတိၐ္ဌာမ တတြာသ္မာကံ သမုဒြီယမာရ္ဂသျာန္တော'ဘဝတ် တတြ ဘြာတၖဂဏံ နမသ္ကၖတျ ဒိနမေကံ တဲး သာရ္ဒ္ဓမ် ဥၐတဝန္တး၊
௭நாங்கள் கப்பல் பயணத்தை முடித்து, தீரு பட்டணத்தைவிட்டு பித்தொலோமாய் பட்டணத்திற்கு வந்து, சகோதரர்களைச் சந்தித்து, அவர்களை வாழ்த்தி அவர்களோடு ஒருநாள் தங்கினோம்.
8 ပရေ 'ဟနိ ပေါ်လသ္တသျ သင်္ဂိနော ဝယဉ္စ ပြတိၐ္ဌမာနား ကဲသရိယာနဂရမ် အာဂတျ သုသံဝါဒပြစာရကာနာံ သပ္တဇနာနာံ ဖိလိပနာမ္န ဧကသျ ဂၖဟံ ပြဝိၑျာဝတိၐ္ဌာမ၊
௮மறுநாளிலே பவுலைச் சேர்ந்தவர்களாகிய நாங்கள் புறப்பட்டு செசரியா பட்டணத்திற்கு வந்து, ஏழு நபர்களில் ஒருவனாகிய பிலிப்பு என்னும் நற்செய்தியாளர் வீட்டிற்கு சென்று அங்கு தங்கினோம்.
9 တသျ စတသြော ဒုဟိတရော'နူဎာ ဘဝိၐျဒွါဒိနျ အာသန်၊
௯தீர்க்கதரிசனம் சொல்லுகிற கன்னிப் பெண்களாகிய நான்கு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள்.
10 တတြာသ္မာသု ဗဟုဒိနာနိ ပြောၐိတေၐု ယိဟူဒီယဒေၑာဒ် အာဂတျာဂါဗနာမာ ဘဝိၐျဒွါဒီ သမုပသ္ထိတဝါန်၊
௧0நாங்கள் பல நாட்கள் அங்கு தங்கியிருக்கும்போது, அகபு என்ற பெயர் உள்ள ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான்.
11 သောသ္မာကံ သမီပမေတျ ပေါ်လသျ ကဋိဗန္ဓနံ ဂၖဟီတွာ နိဇဟသ္တာပါဒါန် ဗဒ္ဓွာ ဘာၐိတဝါန် ယသျေဒံ ကဋိဗန္ဓနံ တံ ယိဟူဒီယလောကာ ယိရူၑာလမနဂရ ဣတ္ထံ ဗဒ္ဓွာ ဘိန္နဒေၑီယာနာံ ကရေၐု သမရ္ပယိၐျန္တီတိ ဝါကျံ ပဝိတြ အာတ္မာ ကထယတိ၊
௧௧அவன் எங்களிடம் வந்து, பவுலினுடைய இடுப்பில் கட்டியிருந்த கச்சையை உருவி தன் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு: இந்தக் கச்சைக்கு சொந்தமானவனை எருசலேமிலுள்ள யூதர்கள் பிடித்து இதேபோல கட்டி யூதரல்லாதவர்களுடைய கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான்.
12 ဧတာဒၖၑီံ ကထာံ ၑြုတွာ ဝယံ တန္နဂရဝါသိနော ဘြာတရၑ္စ ယိရူၑာလမံ န ယာတုံ ပေါ်လံ ဝျနယာမဟိ;
௧௨இதைக் கேட்டபொழுது, எருசலேமுக்குப் போகவேண்டாமென்று, நாங்களும் அங்கே இருந்தவர்களும் பவுலை வேண்டிக் கேட்டுக்கொண்டோம்.
13 ကိန္တု သ ပြတျာဝါဒီတ်, ယူယံ ကိံ ကုရုထ? ကိံ ကြန္ဒနေန မမာန္တးကရဏံ ဝိဒီရ္ဏံ ကရိၐျထ? ပြဘော ရျီၑော ရ္နာမ္နော နိမိတ္တံ ယိရူၑာလမိ ဗဒ္ဓေါ ဘဝိတုံ ကေဝလ တန္န ပြာဏာန် ဒါတုမပိ သသဇ္ဇောသ္မိ၊
௧௩அதற்குப் பவுல்: நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் சோர்ந்து போகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்கு மட்டுமல்ல, இறப்பதற்கும் தயாராக இருக்கிறேன் என்றான்.
14 တေနာသ္မာကံ ကထာယာမ် အဂၖဟီတာယာမ် ဤၑွရသျ ယထေစ္ဆာ တထဲဝ ဘဝတွိတျုက္တွာ ဝယံ နိရသျာမ၊
௧௪அவன் சம்மதிக்காததினாலே, கர்த்தருடைய சித்தம் நடக்கட்டும் என்று விட்டுவிட்டோம்.
15 ပရေ'ဟနိ ပါထေယဒြဝျာဏိ ဂၖဟီတွာ ယိရူၑာလမံ ပြတိ ယာတြာမ် အကုရ္မ္မ၊
௧௫அந்த நாட்களுக்குப்பின்பு நாங்கள் பயணத்திற்கான சாமான்களை ஆயத்தம்பண்ணிக்கொண்டு எருசலேமுக்குப் போனோம்.
16 တတး ကဲသရိယာနဂရနိဝါသိနး ကတိပယား ၑိၐျာ အသ္မာဘိး သာရ္ဒ္ဓမ် ဣတွာ ကၖပြီယေန မ္နာသန္နာမ္နာ ယေန ပြာစီနၑိၐျေန သာရ္ဒ္ဓမ် အသ္မာဘိ ရွသ္တဝျံ တသျ သမီပမ် အသ္မာန် နီတဝန္တး၊
௧௬செசரியா பட்டணத்திலுள்ள சீடர்களில் சிலர் எங்களோடு வந்தார்கள். சீப்புரு தீவைச்சேர்ந்த மினாசோன் என்னும் ஒரு பழைய சீடனிடம் நாங்கள் தங்குவதற்காக அவனையும் அவர்களோடு கூட்டிக்கொண்டுவந்தார்கள்.
17 အသ္မာသု ယိရူၑာလမျုပသ္ထိတေၐု တတြသ္ထဘြာတၖဂဏော'သ္မာန် အာဟ္လာဒေန ဂၖဟီတဝါန်၊
௧௭நாங்கள் எருசலேமுக்கு வந்தபோது, சகோதரர்கள் எங்களை சந்தோஷமாக வரவேற்றார்கள்.
18 ပရသ္မိန် ဒိဝသေ ပေါ်လေ'သ္မာဘိး သဟ ယာကူဗော ဂၖဟံ ပြဝိၐ္ဋေ လောကပြာစီနား သရွွေ တတြ ပရိၐဒိ သံသ္ထိတား၊
௧௮மறுநாளிலே பவுல் எங்களை யாக்கோபிடம் கூட்டிக் கொண்டுபோனான்; மூப்பர்களெல்லோரும் அங்கே கூடிவந்தார்கள்.
19 အနန္တရံ သ တာန် နတွာ သွီယပြစာရဏေန ဘိန္နဒေၑီယာန် ပြတီၑွရော ယာနိ ကရ္မ္မာဏိ သာဓိတဝါန် တဒီယာံ ကထာမ် အနုကြမာတ် ကထိတဝါန်၊
௧௯பவுல் அவர்களை வாழ்த்தி, தன் ஊழியத்தினாலே தேவன் யூதரல்லாதோர்களிடம் செய்தவைகளையெல்லாம் ஒவ்வொன்றாக விளக்கிச்சொன்னான்.
20 ဣတိ ၑြုတွာ တေ ပြဘုံ ဓနျံ ပြောစျ ဝါကျမိဒမ် အဘာၐန္တ, ဟေ ဘြာတ ရျိဟူဒီယာနာံ မဓျေ ဗဟုသဟသြာဏိ လောကာ ဝိၑွာသိန အာသတေ ကိန္တု တေ သရွွေ ဝျဝသ္ထာမတာစာရိဏ ဧတတ် ပြတျက္ၐံ ပၑျသိ၊
௨0யாக்கோபும் அங்கு இருந்தவர்களும் அதைக்கேட்டுக் கர்த்த்தரை மகிமைப்படுத்தினார்கள். பின்பு அவர்கள் பவுலைப் பார்த்து: சகோதரனே, யூதர்களில் ஆயிரக்கணக்கானோர் விசுவாசிகளாக இருப்பது உமக்குத் தெரியும், அவர்கள் எல்லோரும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு கவனமாக கீழ்ப்படிகிறவர்களாக இருக்கிறார்கள்.
21 ၑိၑူနာံ တွက္ဆေဒနာဒျာစရဏံ ပြတိၐိဓျ တွံ ဘိန္နဒေၑနိဝါသိနော ယိဟူဒီယလောကာန် မူသာဝါကျမ် အၑြဒ္ဓါတုမ် ဥပဒိၑသီတိ တဲး ၑြုတမသ္တိ၊
௨௧யூதரல்லாதோர்களோடு இருக்கிற யூதர்களெல்லோரும் தங்களுடைய பிள்ளைகளுக்கு விருத்தசேதனம்பண்ணவும், மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி நடக்கவும் வேண்டியதில்லை என்று நீர் சொல்லி, அவர்கள் மோசேயைவிட்டுப் பிரிந்துபோகும்படி போதனை செய்கிறீர் என்று இவர்கள் உம்மைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்கள்.
22 တွမတြာဂတောသီတိ ဝါရ္တ္တာံ သမာကရ္ဏျ ဇနနိဝဟော မိလိတွာဝၑျမေဝါဂမိၐျတိ; အတဧဝ ကိံ ကရဏီယမ်? အတြ ဝယံ မန္တြယိတွာ သမုပါယံ တွာံ ဝဒါမသ္တံ တွမာစရ၊
௨௨இப்பொழுது செய்யவேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீர் என்று அவர்கள் கேள்விப்பட்டு, நிச்சயமாகக் கோபத்தோடு இங்கு வருவார்கள். எனவே உம்மைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்டது உண்மையில்லை என்பதைக் காட்ட நீ ஏதாவது ஒன்றைச் செய்யவேண்டும்.
23 ဝြတံ ကရ္တ္တုံ ကၖတသင်္ကလ္ပာ ယေ'သ္မာံက စတွာရော မာနဝါး သန္တိ
௨௩ஆகவே, நாங்கள் உமக்குச் சொல்லுகிறதை நீர் செய்யவேண்டும்; அது என்னவென்றால், தேவனிடம் பொருத்தனை செய்துகொண்ட நான்குபேர் எங்களிடம் இருக்கிறார்கள்.
24 တာန် ဂၖဟီတွာ တဲး သဟိတး သွံ ၑုစိံ ကုရု တထာ တေၐာံ ၑိရောမုဏ္ဍနေ ယော ဝျယော ဘဝတိ တံ တွံ ဒေဟိ၊ တထာ ကၖတေ တွဒီယာစာရေ ယာ ဇနၑြုတိ ရ္ဇာယတေ သာလီကာ ကိန္တု တွံ ဝိဓိံ ပါလယန် ဝျဝသ္ထာနုသာရေဏေဝါစရသီတိ တေ ဘောတ္သန္တေ၊
௨௪இவர்களை அழைத்துக்கொண்டு தேவாலயத்திற்கு போய், இவர்களோடு உம்மை சுத்திகரிப்புச் செய்துகொண்டு, இவர்கள் முடி வெட்டிக்கொள்வதற்கு வேண்டிய செலவையெல்லாம் நீரே செய்யும். அப்படிச் செய்தால் அவர்கள் உம்மைப்பற்றிக் கேள்விப்பட்ட விஷயங்கள் பொய் என்றும், நீ மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறவரென்றும் எல்லோரும் தெரிந்துகொள்வார்கள்.
25 ဘိန္နဒေၑီယာနာံ ဝိၑွာသိလောကာနာံ နိကဋေ ဝယံ ပတြံ လိခိတွေတ္ထံ သ္ထိရီကၖတဝန္တး, ဒေဝပြသာဒဘောဇနံ ရက္တံ ဂလပီဍနမာရိတပြာဏိဘောဇနံ ဝျဘိစာရၑ္စဲတေဘျး သွရက္ၐဏဝျတိရေကေဏ တေၐာမနျဝိဓိပါလနံ ကရဏီယံ န၊
௨௫விசுவாசிகளான யூதரல்லாதவர்கள் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்த அசுத்தமானவைகளை சாப்பிடாமலும், கழுத்தை நசுக்கி கொல்லப்பட்ட மிருகம் மற்றும் இரத்தம் ஆகியவற்றை சாப்பிடாமலும், தகாத உறவு கொள்ளாமலும் இருக்கவேண்டும் என்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்குக் கடிதம் எழுதி அனுப்பினோம் என்றார்கள்.
26 တတး ပေါ်လသ္တာန် မာနုၐာနာဒါယ ပရသ္မိန် ဒိဝသေ တဲး သဟ ၑုစိ ရ္ဘူတွာ မန္ဒိရံ ဂတွာ ၑော်စကရ္မ္မဏော ဒိနေၐု သမ္ပူရ္ဏေၐု တေၐာမ် ဧကဲကာရ္ထံ နဲဝေဒျာဒျုတ္သရ္ဂော ဘဝိၐျတီတိ ဇ္ဉာပိတဝါန်၊
௨௬மறுநாளிலே பவுல் அந்த நான்கு மனிதர்களோடு சேர்ந்து தானும் சுத்திகரிப்புச் செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காகவும் வேண்டிய பலியை செலுத்தி முடிக்கும்வரைக்கும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேன் என்று அறிவித்தான்.
27 တေၐု သပ္တသု ဒိနေၐု သမာပ္တကလ္ပေၐု အာၑိယာဒေၑနိဝါသိနော ယိဟူဒီယာသ္တံ မဓျေမန္ဒိရံ ဝိလောကျ ဇနနိဝဟသျ မနးသု ကုပြဝၖတ္တိံ ဇနယိတွာ တံ ဓၖတွာ
௨௭அந்த ஏழு நாட்களும் நிறைவேறும்பொழுது ஆசியா நாட்டிலிருந்து வந்த யூதர்கள் அவனை தேவாலயத்திலே கண்டு, மக்களெல்லோரையும் தூண்டிவிட்டு, அவனைப் பிடித்து:
28 ပြောစ္စဲး ပြာဝေါစန်, ဟေ ဣသြာယေလ္လောကား သရွွေ သာဟာယျံ ကုရုတ၊ ယော မနုဇ ဧတေၐာံ လောကာနာံ မူသာဝျဝသ္ထာယာ ဧတသျ သ္ထာနသျာပိ ဝိပရီတံ သရွွတြ သရွွာန် ၑိက္ၐယတိ သ ဧၐး; ဝိၑေၐတး သ ဘိန္နဒေၑီယလောကာန် မန္ဒိရမ် အာနီယ ပဝိတြသ္ထာနမေတဒ် အပဝိတြမကရောတ်၊
௨௮இஸ்ரவேலர்களே, உதவிசெய்யுங்கள். நம்முடைய மக்களுக்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த இடத்திற்கும் எதிராக எல்லா இடத்திலும் எல்லோருக்கும் போதித்துவருகிறவன் இவன்தான்; இந்த தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்து, இந்த பரிசுத்த இடத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள்.
29 ပူရွွံ တေ မဓျေနဂရမ် ဣဖိၐနဂရီယံ တြဖိမံ ပေါ်လေန သဟိတံ ဒၖၐ္ဋဝန္တ ဧတသ္မာတ် ပေါ်လသ္တံ မန္ဒိရမဓျမ် အာနယဒ် ဣတျနွမိမတ၊
௨௯எபேசு பட்டணத்தைச் சேர்ந்த துரோப்பீமு என்பவன் நகரத்தில் பவுலோடு இருக்கிறதை ஏற்கனவே பார்த்திருந்தபடியால், பவுல் அவனைத் தேவாலயத்திற்கு உள்ளேயும் கூட்டிக்கொண்டு வந்திருப்பான் என்று நினைத்தார்கள்.
30 အတဧဝ သရွွသ္မိန် နဂရေ ကလဟောတ္ပန္နတွာတ် ဓာဝန္တော လောကာ အာဂတျ ပေါ်လံ ဓၖတွာ မန္ဒိရသျ ဗဟိရာကၖၐျာနယန် တတ္က္ၐဏာဒ် ဒွါရာဏိ သရွွာဏိ စ ရုဒ္ဓါနိ၊
௩0அப்பொழுது நகரம் முழுவதும் கலக்கம் உண்டானது; மக்கள் கூட்டமாக ஓடிவந்து, பவுலைப் பிடித்து, அவனை தேவாலயத்திற்கு வெளியே இழுத்துக்கொண்டுபோனார்கள்; உடனே கதவுகள் பூட்டப்பட்டது.
31 တေၐု တံ ဟန္တုမုဒျတေၐု ယိရူၑာလမ္နဂရေ မဟာနုပဒြဝေါ ဇာတ ဣတိ ဝါရ္တ္တာယာံ သဟသြသေနာပတေး ကရ္ဏဂေါစရီဘူတာယာံ သတျာံ သ တတ္က္ၐဏာတ် သဲနျာနိ သေနာပတိဂဏဉ္စ ဂၖဟီတွာ ဇဝေနာဂတဝါန်၊
௩௧அவர்கள் அவனைக் கொலைசெய்ய முயற்சி செய்யும்போது, எருசலேம் முழுவதும் கலக்கமாக இருக்கிறது என்று ரோம இராணுவ அதிபதிக்குச் செய்தி வந்தது.
32 တတော လောကား သေနာဂဏေန သဟ သဟသြသေနာပတိမ် အာဂစ္ဆန္တံ ဒၖၐ္ဋွာ ပေါ်လတာဍနာတော နျဝရ္တ္တန္တ၊
௩௨உடனே அவன் போர்வீரர்களையும் அவர்களுடைய அதிபதிகளையும் கூட்டிக்கொண்டு, அங்கே ஓடினான்; ரோம அதிபதியையும் போர்வீரர்களையும் அவர்கள் பார்த்தவுடனே பவுலை அடிக்கிறதை நிறுத்திவிட்டார்கள்.
33 သ သဟသြသေနာပတိး သန္နိဓာဝါဂမျ ပေါ်လံ ဓၖတွာ ၑၖင်္ခလဒွယေန ဗဒ္ဓမ် အာဒိၑျ တာန် ပၖၐ္ဋဝါန် ဧၐ ကး? ကိံ ကရ္မ္မ စာယံ ကၖတဝါန်?
௩௩அப்பொழுது ரோம அதிபதி அருகில் வந்து அவனைப் பிடித்து, இரண்டு சங்கிலிகளினாலே அவனைக் கட்டும்படி சொல்லி: இவன் யார் என்றும், என்ன செய்தான் என்றும் விசாரித்தான்.
34 တတော ဇနသမူဟသျ ကၑ္စိဒ် ဧကပြကာရံ ကၑ္စိဒ် အနျပြကာရံ ဝါကျမ် အရော်တ် သ တတြ သတျံ ဇ္ဉာတုမ် ကလဟကာရဏာဒ် အၑက္တး သန် တံ ဒုရ္ဂံ နေတုမ် အာဇ္ဉာပယတ်၊
௩௪அதற்கு மக்கள் பல காரியங்களைச் சொல்லி அதிகமாகக் கூச்சல் போட்டார்கள்; அதிக சத்தத்தினாலே அதிபதிக்கு ஒன்றும் புரியாமல், அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகும்படி கட்டளையிட்டான்.
35 တေၐု သောပါနသျောပရိ ပြာပ္တေၐု လောကာနာံ သာဟသကာရဏာတ် သေနာဂဏး ပေါ်လမုတ္တောလျ နီတဝါန်၊
௩௫அவன் படிகள்மேல் ஏறினபோது மக்கள்கூட்டம் அவனுக்கு பின்னேசென்று,
36 တတး သရွွေ လောကား ပၑ္စာဒ္ဂါမိနး သန္တ ဧနံ ဒုရီကုရုတေတိ ဝါကျမ် ဥစ္စဲရဝဒန်၊
௩௬இவனைக் கொல்லவேண்டும் என்று மிகுந்த கோபமாக சத்தம் போட்டதினாலே, போர்வீரர்கள் அவனைத் தூக்கிக்கொண்டு போகவேண்டியதாக இருந்தது.
37 ပေါ်လသျ ဒုရ္ဂာနယနသမယေ သ တသ္မဲ သဟသြသေနာပတယေ ကထိတဝါန်, ဘဝတး ပုရသ္တာတ် ကထာံ ကထယိတုံ ကိမ် အနုမနျတေ? သ တမပၖစ္ဆတ် တွံ ကိံ ယူနာနီယာံ ဘာၐာံ ဇာနာသိ?
௩௭அவர்கள் பவுலைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகிற நேரத்தில், அவன் ரோம அதிபதியை நோக்கி: நான் உம்முடனே ஒரு வார்த்தை பேசலாமா என்றான். அதற்கு அவன்: உனக்கு கிரேக்க மொழி தெரியுமா?
38 ယော မိသရီယော ဇနး ပူရွွံ ဝိရောဓံ ကၖတွာ စတွာရိ သဟသြာဏိ ဃာတကာန် သင်္ဂိနး ကၖတွာ ဝိပိနံ ဂတဝါန် တွံ ကိံ သဧဝ န ဘဝသိ?
௩௮பல நாட்களுக்கு முன்னே கலகம் உண்டாக்கி, நான்கு ஆயிரம் கொலைபாதகர்களை வனாந்திரத்திற்குக் கொண்டுபோன எகிப்தியன் நீதானே என்றான்.
39 တဒါ ပေါ်လော'ကထယတ် အဟံ ကိလိကိယာဒေၑသျ တာရ္ၐနဂရီယော ယိဟူဒီယော, နာဟံ သာမာနျနဂရီယော မာနဝး; အတဧဝ ဝိနယေ'ဟံ လာကာနာံ သမက္ၐံ ကထာံ ကထယိတုံ မာမနုဇာနီၐွ၊
௩௯அதற்குப் பவுல்: நான் சிலிசியா நாட்டிலுள்ள புகழ்பெற்ற தர்சு பட்டணத்தைச் சேர்ந்த யூதன்; மக்களுடனே பேசுவதற்கு எனக்கு அனுமதி தரவேண்டும் என்று உம்மை கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.
40 တေနာနုဇ္ဉာတး ပေါ်လး သောပါနောပရိ တိၐ္ဌန် ဟသ္တေနေင်္ဂိတံ ကၖတဝါန်, တသ္မာတ် သရွွေ သုသ္ထိရာ အဘဝန်၊ တဒါ ပေါ်လ ဣဗြီယဘာၐယာ ကထယိတုမ် အာရဘတ,
௪0அவன் அனுமதி அளித்தபோது, பவுல் படிகளின்மேல் நின்று மக்களைப் பார்த்து அமைதியாக இருக்கச்சொல்லி கையை அசைத்தான்; மிகுந்த அமைதி உண்டானது; அப்பொழுது அவன் எபிரெய மொழியிலே பேசத்தொடங்கினான்.