< ပြေရိတား 21 >

1 တဲ ရွိသၖၐ္ဋား သန္တော ဝယံ ပေါတံ ဗာဟယိတွာ ၒဇုမာရ္ဂေဏ ကောၐမ် ဥပဒွီပမ် အာဂတျ ပရေ'ဟနိ ရောဒိယောပဒွီပမ် အာဂစ္ဆာမ တတသ္တသ္မာတ် ပါတာရာယာမ် ဥပါတိၐ္ဌာမ၊
நாங்கள் அவர்களைவிட்டுப் பிரிந்து, கப்பல் மூலம் புறப்பட்டு, நேர்திசையில் பயணம் செய்து, கோஸ்தீவைச் சென்றடைந்தோம். மறுநாள் அங்கிருந்து ரோதுவுக்குப் போனோம். பின்பு அங்கிருந்து பத்தாரா பட்டணத்திற்குப் போனோம்.
2 တတြ ဖဲနီကိယာဒေၑဂါမိနမ် ပေါတမေကံ ပြာပျ တမာရုဟျ ဂတဝန္တး၊
அங்கிருந்து பெனிக்கேவுக்கு ஒரு கப்பல் போவதை நாங்கள் கண்டு, அதில் ஏறிப் பயணமானோம்.
3 ကုပြောပဒွီပံ ဒၖၐ္ဋွာ တံ သဝျဒိၑိ သ္ထာပယိတွာ သုရိယာဒေၑံ ဂတွာ ပေါတသ္ထဒြဝျာဏျဝရောဟယိတုံ သောရနဂရေ လာဂိတဝန္တး၊
நாங்கள் சீப்புரு தீவைக் கண்டு, அதன் தெற்குப் பக்கமாக அதைக் கடந்துசென்று, சீரியாவுக்குக் கப்பலில் பயணமானோம். தீரு பட்டணத்தில் கரை இறங்கினோம். ஏனெனில், அந்தக் கப்பல் அங்கே பொருட்களை இறக்க வேண்டியிருந்தது.
4 တတြ ၑိၐျဂဏသျ သာက္ၐာတ္ကရဏာယ ဝယံ တတြ သပ္တဒိနာနိ သ္ထိတဝန္တး ပၑ္စာတ္တေ ပဝိတြေဏာတ္မနာ ပေါ်လံ ဝျာဟရန် တွံ ယိရူၑာလမ္နဂရံ မာ ဂမး၊
அங்கே சீடர்கள் இருப்பதைக் கண்டு, அவர்களுடன் ஏழு நாட்கள் தங்கினோம். அவர்கள் ஆவியானவரின் ஏவுதலினால், எருசலேமுக்குப் போகவேண்டாம் எனப் பவுலைக் கெஞ்சிக் கேட்டார்கள்.
5 တတသ္တေၐု သပ္တသု ဒိနေၐု ယာပိတေၐု သတ္သု ဝယံ တသ္မာတ် သ္ထာနာတ် နိဇဝရ္တ္မနာ ဂတဝန္တး, တသ္မာတ် တေ သဗာလဝၖဒ္ဓဝနိတာ အသ္မာဘိး သဟ နဂရသျ ပရိသရပရျျန္တမ် အာဂတား ပၑ္စာဒွယံ ဇလဓိတဋေ ဇာနုပါတံ ပြာရ္ထယာမဟိ၊
ஆனால் நாங்களோ, அங்கே தங்கவேண்டிய காலம் முடிந்ததும், அவ்விடத்தைவிட்டு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். அப்பொழுது அங்கேயிருந்த சீடர்கள் அனைவரும் தங்கள் மனைவி, பிள்ளைகளுடனும் பட்டணத்தைவிட்டு வெளியே வந்து, எங்களுடனே வந்தார்கள். நாங்கள் அனைவரும் கடற்கரையில் முழங்காற்படியிட்டு மன்றாடினோம்.
6 တတး ပရသ္ပရံ ဝိသၖၐ္ဋား သန္တော ဝယံ ပေါတံ ဂတာသ္တေ တု သွသွဂၖဟံ ပြတျာဂတဝန္တး၊
பின்பு ஒருவருக்கொருவர் விடைபெற்று நாங்கள் கப்பலேறினோம். அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
7 ဝယံ သောရနဂရာတ် နာဝါ ပြသ္ထာယ တလိမာယိနဂရမ် ဥပါတိၐ္ဌာမ တတြာသ္မာကံ သမုဒြီယမာရ္ဂသျာန္တော'ဘဝတ် တတြ ဘြာတၖဂဏံ နမသ္ကၖတျ ဒိနမေကံ တဲး သာရ္ဒ္ဓမ် ဥၐတဝန္တး၊
நாங்கள் தீரு பட்டணத்திலிருந்து தொடர்ந்து பயணம் செய்து, பித்தொலோமாய் பட்டணத்தில் கரையிறங்கினோம். அங்கே சகோதரரைச் சந்தித்து அவர்களை வாழ்த்தி, அவர்களுடனே ஒரு நாள் தங்கினோம்.
8 ပရေ 'ဟနိ ပေါ်လသ္တသျ သင်္ဂိနော ဝယဉ္စ ပြတိၐ္ဌမာနား ကဲသရိယာနဂရမ် အာဂတျ သုသံဝါဒပြစာရကာနာံ သပ္တဇနာနာံ ဖိလိပနာမ္န ဧကသျ ဂၖဟံ ပြဝိၑျာဝတိၐ္ဌာမ၊
மறுநாள் நாங்கள் புறப்பட்டு செசரியா பட்டணத்தைப் போய்ச் சேர்ந்தோம். அங்கே நற்செய்தியாளனான பிலிப்புவின் வீட்டில் தங்கினோம். இவன் முன்பு உணவு பரிமாறும் பணிக்குத் தெரிந்தெடுத்த, அந்த ஏழுபேரில் ஒருவன்.
9 တသျ စတသြော ဒုဟိတရော'နူဎာ ဘဝိၐျဒွါဒိနျ အာသန်၊
அவனுக்கு கன்னிகைகளான நான்கு மகள்கள் இருந்தார்கள். அவர்கள் இறைவாக்கு உரைப்பவர்கள்.
10 တတြာသ္မာသု ဗဟုဒိနာနိ ပြောၐိတေၐု ယိဟူဒီယဒေၑာဒ် အာဂတျာဂါဗနာမာ ဘဝိၐျဒွါဒီ သမုပသ္ထိတဝါန်၊
அங்கே சிலநாட்கள் நாங்கள் தங்கியிருக்கையில், அகபு என்னும் பெயருடைய இறைவாக்கினன் யூதேயாவிலிருந்து வந்தான்.
11 သောသ္မာကံ သမီပမေတျ ပေါ်လသျ ကဋိဗန္ဓနံ ဂၖဟီတွာ နိဇဟသ္တာပါဒါန် ဗဒ္ဓွာ ဘာၐိတဝါန် ယသျေဒံ ကဋိဗန္ဓနံ တံ ယိဟူဒီယလောကာ ယိရူၑာလမနဂရ ဣတ္ထံ ဗဒ္ဓွာ ဘိန္နဒေၑီယာနာံ ကရေၐု သမရ္ပယိၐျန္တီတိ ဝါကျံ ပဝိတြ အာတ္မာ ကထယတိ၊
அவன் எங்களிடம் வந்து, பவுலின் இடைக்கச்சையை எடுத்து, அதனால் தனது கைகளையும், கால்களையும் கட்டிக்கொண்டு இறைவாக்குரைத்தான். அவன் சொன்னதாவது: “இந்த இடைக்கச்சைக்குச் சொந்தமானவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டி, அவனை யூதரல்லாத மக்களிடம் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்கிறார்” என்றான்.
12 ဧတာဒၖၑီံ ကထာံ ၑြုတွာ ဝယံ တန္နဂရဝါသိနော ဘြာတရၑ္စ ယိရူၑာလမံ န ယာတုံ ပေါ်လံ ဝျနယာမဟိ;
நாங்கள் இதைக் கேட்டபோது, நாங்களும் அங்கிருந்த மக்களும் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று பவுலைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம்.
13 ကိန္တု သ ပြတျာဝါဒီတ်, ယူယံ ကိံ ကုရုထ? ကိံ ကြန္ဒနေန မမာန္တးကရဏံ ဝိဒီရ္ဏံ ကရိၐျထ? ပြဘော ရျီၑော ရ္နာမ္နော နိမိတ္တံ ယိရူၑာလမိ ဗဒ္ဓေါ ဘဝိတုံ ကေဝလ တန္န ပြာဏာန် ဒါတုမပိ သသဇ္ဇောသ္မိ၊
அப்பொழுது பவுல் எங்களிடம், “நீங்கள் ஏன் அழுது என் இருதயத்தை கலங்கப் பண்ணுகிறீர்கள்? கர்த்தராகிய இயேசுவின் பெயருக்காக நான் எருசலேமில் கட்டி சிறையிடப்படுவதற்கு மட்டுமல்ல, இறப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்” என்றான்.
14 တေနာသ္မာကံ ကထာယာမ် အဂၖဟီတာယာမ် ဤၑွရသျ ယထေစ္ဆာ တထဲဝ ဘဝတွိတျုက္တွာ ဝယံ နိရသျာမ၊
நாங்கள் சொல்லியும் பவுல் கேட்காததினால், “கர்த்தருடைய சித்தத்தின்படி நடக்கட்டும்” என்று சொல்லி, நாங்கள் பேசாமல் இருந்தோம்.
15 ပရေ'ဟနိ ပါထေယဒြဝျာဏိ ဂၖဟီတွာ ယိရူၑာလမံ ပြတိ ယာတြာမ် အကုရ္မ္မ၊
இதன்பின், நாங்கள் பயணத்திற்கு ஆயத்தமாகி எருசலேமுக்குப் புறப்பட்டோம்.
16 တတး ကဲသရိယာနဂရနိဝါသိနး ကတိပယား ၑိၐျာ အသ္မာဘိး သာရ္ဒ္ဓမ် ဣတွာ ကၖပြီယေန မ္နာသန္နာမ္နာ ယေန ပြာစီနၑိၐျေန သာရ္ဒ္ဓမ် အသ္မာဘိ ရွသ္တဝျံ တသျ သမီပမ် အသ္မာန် နီတဝန္တး၊
செசரியாவிலிருந்து சில சீடர்கள் எங்களுடனேகூட வந்து, நாங்கள் தங்குவதற்கு எங்களை மினாசோனுடைய வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். அவன் சீப்புரு தீவைச் சேர்ந்தவனும், தொடக்கத்திலேயே சீடர்களானவர்களில் ஒருவனுமாய் இருந்தான்.
17 အသ္မာသု ယိရူၑာလမျုပသ္ထိတေၐု တတြသ္ထဘြာတၖဂဏော'သ္မာန် အာဟ္လာဒေန ဂၖဟီတဝါန်၊
நாங்கள் எருசலேமுக்கு வந்து சேர்ந்தபோது, அங்கிருந்த சகோதரர் எங்களை மிக மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.
18 ပရသ္မိန် ဒိဝသေ ပေါ်လေ'သ္မာဘိး သဟ ယာကူဗော ဂၖဟံ ပြဝိၐ္ဋေ လောကပြာစီနား သရွွေ တတြ ပရိၐဒိ သံသ္ထိတား၊
மறுநாள் பவுலும், நாங்களும் யாக்கோபைச் சந்திக்கும்படி போனோம். எருசலேம் திருச்சபையின் தலைவர்கள் அனைவரும் அங்கே இருந்தார்கள்.
19 အနန္တရံ သ တာန် နတွာ သွီယပြစာရဏေန ဘိန္နဒေၑီယာန် ပြတီၑွရော ယာနိ ကရ္မ္မာဏိ သာဓိတဝါန် တဒီယာံ ကထာမ် အနုကြမာတ် ကထိတဝါန်၊
பவுல் அவர்களை வாழ்த்தி, தனது ஊழியத்தின் மூலம் இறைவன் யூதரல்லாதவர் மத்தியில் செய்தவற்றைக் குறித்து விவரமாய் விளக்கிச்சொன்னான்.
20 ဣတိ ၑြုတွာ တေ ပြဘုံ ဓနျံ ပြောစျ ဝါကျမိဒမ် အဘာၐန္တ, ဟေ ဘြာတ ရျိဟူဒီယာနာံ မဓျေ ဗဟုသဟသြာဏိ လောကာ ဝိၑွာသိန အာသတေ ကိန္တု တေ သရွွေ ဝျဝသ္ထာမတာစာရိဏ ဧတတ် ပြတျက္ၐံ ပၑျသိ၊
அவர்கள் இதைக் கேட்டபோது, இறைவனைத் துதித்தார்கள். பின்பு அவர்கள் பவுலிடம்: “சகோதரனே, யூதருக்குள் ஆயிரக்கணக்கானோர் விசுவாசித்திருக்கிறார்கள் என்று நீ காண்கிறாயே. அவர்கள் அனைவரும் மோசேயின் சட்டத்தைக்குறித்து ஆர்வம் உள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
21 ၑိၑူနာံ တွက္ဆေဒနာဒျာစရဏံ ပြတိၐိဓျ တွံ ဘိန္နဒေၑနိဝါသိနော ယိဟူဒီယလောကာန် မူသာဝါကျမ် အၑြဒ္ဓါတုမ် ဥပဒိၑသီတိ တဲး ၑြုတမသ္တိ၊
யூதரல்லாதவர்களின் மத்தியில் வாழும் யூதருக்கும், அவர்கள் மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்வதை விட்டுவிட வேண்டும் என்று நீ போதிக்கிறதாக இங்குள்ள யூதருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும், அவர்களுடைய பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்யக்கூடாது என்றும், யூத முறைகளைக் கைக்கொள்ளக்கூடாது என்றும் நீ போதிக்கிறதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
22 တွမတြာဂတောသီတိ ဝါရ္တ္တာံ သမာကရ္ဏျ ဇနနိဝဟော မိလိတွာဝၑျမေဝါဂမိၐျတိ; အတဧဝ ကိံ ကရဏီယမ်? အတြ ဝယံ မန္တြယိတွာ သမုပါယံ တွာံ ဝဒါမသ္တံ တွမာစရ၊
ஆகவே நாம் செய்யக்கூடியது என்ன? நீ இங்கே வந்திருப்பதை அவர்கள் நிச்சயமாய் கேள்விப்படுவார்கள்.
23 ဝြတံ ကရ္တ္တုံ ကၖတသင်္ကလ္ပာ ယေ'သ္မာံက စတွာရော မာနဝါး သန္တိ
எனவே, நாங்கள் உனக்குச் சொல்வதைச் செய். இங்கே நேர்த்திக்கடன் செய்திருக்கிற நான்குபேர் எங்களிடம் இருக்கிறார்கள்.
24 တာန် ဂၖဟီတွာ တဲး သဟိတး သွံ ၑုစိံ ကုရု တထာ တေၐာံ ၑိရောမုဏ္ဍနေ ယော ဝျယော ဘဝတိ တံ တွံ ဒေဟိ၊ တထာ ကၖတေ တွဒီယာစာရေ ယာ ဇနၑြုတိ ရ္ဇာယတေ သာလီကာ ကိန္တု တွံ ဝိဓိံ ပါလယန် ဝျဝသ္ထာနုသာရေဏေဝါစရသီတိ တေ ဘောတ္သန္တေ၊
இவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், இவர்கள் செய்யும் பாரம்பரிய சுத்திகரிப்பு முறைமைகளில் நீயும் சேர்ந்துகொள்; இவர்கள் மொட்டையடிப்பதற்கான செலவை நீ செலுத்து. அப்பொழுது அனைவரும் உன்னைப்பற்றித் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட காரியங்களில் எவ்வித உண்மையும் இல்லையென்றும், நீயும் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்தே வாழ்கிறாய் என்றும் அறிந்துகொள்வார்கள்.
25 ဘိန္နဒေၑီယာနာံ ဝိၑွာသိလောကာနာံ နိကဋေ ဝယံ ပတြံ လိခိတွေတ္ထံ သ္ထိရီကၖတဝန္တး, ဒေဝပြသာဒဘောဇနံ ရက္တံ ဂလပီဍနမာရိတပြာဏိဘောဇနံ ဝျဘိစာရၑ္စဲတေဘျး သွရက္ၐဏဝျတိရေကေဏ တေၐာမနျဝိဓိပါလနံ ကရဏီယံ န၊
யூதரல்லாத விசுவாசிகளைக் குறித்தோ, நாங்கள் எங்கள் தீர்மானத்தை அவர்களுக்கு எழுதியிருக்கிறோம்; அவர்கள் இறைவன் அல்லாதவைகளுக்குப் பலியிடப்பட்ட உணவையும் இரத்தத்தையும் நெரிக்கப்பட்ட மிருகத்தின் இறைச்சியையும் தவிர்க்கவேண்டும் என்றும், முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடக்கூடாது என்றும் எழுதியிருக்கிறோம்” என்றார்கள்.
26 တတး ပေါ်လသ္တာန် မာနုၐာနာဒါယ ပရသ္မိန် ဒိဝသေ တဲး သဟ ၑုစိ ရ္ဘူတွာ မန္ဒိရံ ဂတွာ ၑော်စကရ္မ္မဏော ဒိနေၐု သမ္ပူရ္ဏေၐု တေၐာမ် ဧကဲကာရ္ထံ နဲဝေဒျာဒျုတ္သရ္ဂော ဘဝိၐျတီတိ ဇ္ဉာပိတဝါန်၊
மறுநாள் பவுல் அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுடனே தானும் பாரம்பரிய முறைப்படி தன்னைச் சுத்திகரித்துக் கொண்டான். பின்பு அவன் சுத்திகரிப்புக்கான நாட்கள் எப்பொழுது முடிவடையும் என்றும், அவர்கள் ஒவ்வொருவருக்குமான காணிக்கை எப்பொழுது செலுத்தப்படும் என்றும் அறிவிப்பதற்கு ஆலயத்திற்குப் போனான்.
27 တေၐု သပ္တသု ဒိနေၐု သမာပ္တကလ္ပေၐု အာၑိယာဒေၑနိဝါသိနော ယိဟူဒီယာသ္တံ မဓျေမန္ဒိရံ ဝိလောကျ ဇနနိဝဟသျ မနးသု ကုပြဝၖတ္တိံ ဇနယိတွာ တံ ဓၖတွာ
அந்த ஏழு நாட்கள் முடியப்போகும் வேளையில், ஆசியா பகுதியைச் சேர்ந்த சில யூதர்கள் பவுலை ஆலயத்தில் கண்டார்கள். அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களைத் தூண்டியெழுப்பி, பவுலைப் பிடித்தார்கள்.
28 ပြောစ္စဲး ပြာဝေါစန်, ဟေ ဣသြာယေလ္လောကား သရွွေ သာဟာယျံ ကုရုတ၊ ယော မနုဇ ဧတေၐာံ လောကာနာံ မူသာဝျဝသ္ထာယာ ဧတသျ သ္ထာနသျာပိ ဝိပရီတံ သရွွတြ သရွွာန် ၑိက္ၐယတိ သ ဧၐး; ဝိၑေၐတး သ ဘိန္နဒေၑီယလောကာန် မန္ဒိရမ် အာနီယ ပဝိတြသ္ထာနမေတဒ် အပဝိတြမကရောတ်၊
அவர்கள் சத்தமிட்டு, “இஸ்ரயேலரே, எங்களுக்கு உதவிசெய்யுங்கள்! நமது மக்களுக்கும், மோசேயின் சட்டத்திற்கும், இந்த இடத்திற்கும் விரோதமாக, எல்லா இடங்களிலும் எல்லா மக்களுக்கும் போதிக்கிறவன் இவன்தான். இவன் ஆலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கொண்டுவந்து, இந்தப் பரிசுத்த இடத்தையும் தூய்மைக் கேடாக்கிவிட்டான்” என்றார்கள்.
29 ပူရွွံ တေ မဓျေနဂရမ် ဣဖိၐနဂရီယံ တြဖိမံ ပေါ်လေန သဟိတံ ဒၖၐ္ဋဝန္တ ဧတသ္မာတ် ပေါ်လသ္တံ မန္ဒိရမဓျမ် အာနယဒ် ဣတျနွမိမတ၊
ஏனெனில் அவர்கள் எபேசியனான துரோப்பீமும், பவுலுடனே பட்டணத்தில் இருந்ததை முன்பு கண்டிருந்தார்கள். இதனால் பவுல், அவனையும் ஆலயத்திற்குள் கூட்டிக்கொண்டு வந்திருப்பான் என்று அவர்கள் நினைத்தார்கள்.
30 အတဧဝ သရွွသ္မိန် နဂရေ ကလဟောတ္ပန္နတွာတ် ဓာဝန္တော လောကာ အာဂတျ ပေါ်လံ ဓၖတွာ မန္ဒိရသျ ဗဟိရာကၖၐျာနယန် တတ္က္ၐဏာဒ် ဒွါရာဏိ သရွွာဏိ စ ရုဒ္ဓါနိ၊
முழுப்பட்டணமும் குழப்பமடைந்தது, எல்லாப் பகுதிகளிலும் இருந்த மக்கள் அங்கு ஓடிவந்தார்கள். அவர்கள் பவுலைப் பிடித்து, ஆலயத்திலிருந்து இழுத்துக்கொண்டு சென்றார்கள். உடனே ஆலயத்தின் கதவுகள் பூட்டப்பட்டன.
31 တေၐု တံ ဟန္တုမုဒျတေၐု ယိရူၑာလမ္နဂရေ မဟာနုပဒြဝေါ ဇာတ ဣတိ ဝါရ္တ္တာယာံ သဟသြသေနာပတေး ကရ္ဏဂေါစရီဘူတာယာံ သတျာံ သ တတ္က္ၐဏာတ် သဲနျာနိ သေနာပတိဂဏဉ္စ ဂၖဟီတွာ ဇဝေနာဂတဝါန်၊
அவர்கள் அவனைக் கொலைசெய்ய முயற்சிக்கையில் எருசலேம் நகரம் முழுவதும் குழப்பம் அடைந்திருக்கிறது என்ற செய்தி ரோமப் படைத்தளபதிக்கு எட்டியது.
32 တတော လောကား သေနာဂဏေန သဟ သဟသြသေနာပတိမ် အာဂစ္ဆန္တံ ဒၖၐ္ဋွာ ပေါ်လတာဍနာတော နျဝရ္တ္တန္တ၊
அவன் உடனடியாகச் சில அதிகாரிகளையும், படைவீரரையும் கூட்டிக்கொண்டு மக்கள் கூட்டத்தை நோக்கி ஓடிவந்தான். குழப்பம் விளைவித்தவர்கள் படைத்தளபதியையும் படைவீரர்களையும் கண்டபோது, பவுலை அடிப்பதை நிறுத்திவிட்டார்கள்.
33 သ သဟသြသေနာပတိး သန္နိဓာဝါဂမျ ပေါ်လံ ဓၖတွာ ၑၖင်္ခလဒွယေန ဗဒ္ဓမ် အာဒိၑျ တာန် ပၖၐ္ဋဝါန် ဧၐ ကး? ကိံ ကရ္မ္မ စာယံ ကၖတဝါန်?
படைத்தளபதி வந்து அவனைக் கைதுசெய்து, அவனை இரண்டு சங்கிலிகளினால் கட்டும்படி உத்தரவிட்டான். பின்பு அவன், இவன் யார் என்றும், என்ன செய்தான் என்றும் விசாரித்தான்.
34 တတော ဇနသမူဟသျ ကၑ္စိဒ် ဧကပြကာရံ ကၑ္စိဒ် အနျပြကာရံ ဝါကျမ် အရော်တ် သ တတြ သတျံ ဇ္ဉာတုမ် ကလဟကာရဏာဒ် အၑက္တး သန် တံ ဒုရ္ဂံ နေတုမ် အာဇ္ဉာပယတ်၊
மக்கள் கூட்டத்திலிருந்த சிலர் சத்தமிட்டு ஏதோ ஒன்றைச் சொன்னார்கள். மற்றவர்கள் வேறு எதையோ சொன்னார்கள். ஏற்பட்டிருந்த குழப்பத்தினால், படைத்தளபதிக்கு உண்மையை அறியமுடியவில்லை. எனவே அவன் பவுலைப் படையினரின் முகாமுக்குக் கொண்டுசெல்லும்படி உத்தரவிட்டான்.
35 တေၐု သောပါနသျောပရိ ပြာပ္တေၐု လောကာနာံ သာဟသကာရဏာတ် သေနာဂဏး ပေါ်လမုတ္တောလျ နီတဝါန်၊
பவுல் படிக்கட்டுகளை அடைந்தபோது, கலகக்காரரை அடக்க முடியாதிருந்ததால், பவுலை படைவீரர் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது.
36 တတး သရွွေ လောကား ပၑ္စာဒ္ဂါမိနး သန္တ ဧနံ ဒုရီကုရုတေတိ ဝါကျမ် ဥစ္စဲရဝဒန်၊
பின்னாலே சென்ற மக்கள் கூட்டம், “அவனைக் கொல்லுங்கள்” என்று சத்தமிட்டார்கள்.
37 ပေါ်လသျ ဒုရ္ဂာနယနသမယေ သ တသ္မဲ သဟသြသေနာပတယေ ကထိတဝါန်, ဘဝတး ပုရသ္တာတ် ကထာံ ကထယိတုံ ကိမ် အနုမနျတေ? သ တမပၖစ္ဆတ် တွံ ကိံ ယူနာနီယာံ ဘာၐာံ ဇာနာသိ?
படைவீரர் பவுலை முகாமுக்குள் கொண்டுசெல்ல முயலுகையில், அவன் படைத்தளபதியிடம், “நான் உம்முடன் கொஞ்சம் பேசலாமா?” என்று கேட்டான். அதற்கு அவன், “உனக்கு கிரேக்க மொழி தெரியுமா?
38 ယော မိသရီယော ဇနး ပူရွွံ ဝိရောဓံ ကၖတွာ စတွာရိ သဟသြာဏိ ဃာတကာန် သင်္ဂိနး ကၖတွာ ဝိပိနံ ဂတဝါန် တွံ ကိံ သဧဝ န ဘဝသိ?
சிறிது காலத்துக்குமுன் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி, நாலாயிரம் பயங்கரவாதிகளை பாலைவனத்திற்கு வழிநடத்திப்போன எகிப்தியன் நீ தானா?” என்று கேட்டான்.
39 တဒါ ပေါ်လော'ကထယတ် အဟံ ကိလိကိယာဒေၑသျ တာရ္ၐနဂရီယော ယိဟူဒီယော, နာဟံ သာမာနျနဂရီယော မာနဝး; အတဧဝ ဝိနယေ'ဟံ လာကာနာံ သမက္ၐံ ကထာံ ကထယိတုံ မာမနုဇာနီၐွ၊
அதற்குப் பவுல், “நான் ஒரு யூதன், சிலிசியா நாட்டைச் சேர்ந்த தர்சு பட்டணத்தைச் சேர்ந்தவன். ஒரு பிரபலமான பட்டணத்தின் குடிமகன். தயவுசெய்து இந்த மக்களுடன் நான் பேச என்னை அனுமதியும்” என்றான்.
40 တေနာနုဇ္ဉာတး ပေါ်လး သောပါနောပရိ တိၐ္ဌန် ဟသ္တေနေင်္ဂိတံ ကၖတဝါန်, တသ္မာတ် သရွွေ သုသ္ထိရာ အဘဝန်၊ တဒါ ပေါ်လ ဣဗြီယဘာၐယာ ကထယိတုမ် အာရဘတ,
படைத்தளபதியின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு, பவுல் படிக்கட்டுகளில் நின்று கூடியிருந்த மக்களுக்கு சைகை காட்டினான். அவர்கள் அனைவரும் அமைதியடைந்தபோது, அவன் எபிரெய மொழியில் அவர்களுடன் பேசத் தொடங்கினான்.

< ပြေရိတား 21 >