< ၂ ကရိန္ထိနး 8 >
1 ဟေ ဘြာတရး, မာကိဒနိယာဒေၑသ္ထာသု သမိတိၐု ပြကာၑိတော ယ ဤၑွရသျာနုဂြဟသ္တမဟံ ယုၐ္မာန် ဇ္ဉာပယာမိ၊
௧அன்றியும் சகோதர, சகோதரிகளே மக்கெதோனியா நாட்டு சபைகளுக்கு தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
2 ဝသ္တုတော ဗဟုက္လေၑပရီက္ၐာသမယေ တေၐာံ မဟာနန္ဒော'တီဝဒီနတာ စ ဝဒါနျတာယား ပြစုရဖလမ် အဖလယတာံ၊
௨அவர்கள் அதிக உபத்திரவத்தினாலே சோதிக்கப்படும்போது, கொடிய தரித்திரம் உடையவர்களாக இருந்தும், தங்களுடைய பரிபூரண சந்தோஷத்தினாலே அதிக தாராளமாகக் கொடுத்தார்கள்.
3 တေ သွေစ္ဆယာ ယထာၑက္တိ ကိဉ္စာတိၑက္တိ ဒါန ဥဒျုက္တာ အဘဝန် ဣတိ မယာ ပြမာဏီကြိယတေ၊
௩மேலும் அவர்கள் தங்களுடைய தகுதிக்கும், தங்களுடைய தகுதிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே விருப்பம் உள்ளவர்களாக இருந்தார்கள் என்பதற்கு, நான் சாட்சியாக இருக்கிறேன்.
4 ဝယဉ္စ ယတ် ပဝိတြလောကေဘျသ္တေၐာံ ဒါနမ် ဥပကာရာရ္ထကမ် အံၑနဉ္စ ဂၖဟ္လာမသ္တဒ် ဗဟုနုနယေနာသ္မာန် ပြာရ္ထိတဝန္တး၊
௪தங்களுடைய உதவிகளையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை அதிகமாக வேண்டிக்கொண்டார்கள்.
5 ဝယံ ယာဒၖက် ပြတျဲ×က္ၐာမဟိ တာဒၖဂ် အကၖတွာ တေ'ဂြေ ပြဘဝေ တတး ပရမ် ဤၑွရသျေစ္ဆယာသ္မဘျမပိ သွာန် နျဝေဒယန်၊
௫மேலும் நாங்கள் எதிர்பார்த்தபடி கொடுக்காமல், தேவனுடைய விருப்பத்தினாலே தங்களைத்தாமே, முதலில் கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள்.
6 အတော ဟေတောသ္တွံ ယထာရဗ္ဓဝါန် တထဲဝ ကရိန္ထိနာံ မဓျေ'ပိ တဒ် ဒါနဂြဟဏံ သာဓယေတိ ယုၐ္မာန် အဓိ ဝယံ တီတံ ပြာရ္ထယာမဟိ၊
௬எனவே, தீத்து இந்தத் தர்மகாரியத்தை உங்களிடம் தொடங்கினபடியே, அதை முடிக்கவும் வேண்டும் என்று அவனைக் கேட்டுக்கொண்டோம்.
7 အတော ဝိၑွာသော ဝါက္ပဋုတာ ဇ္ဉာနံ သရွွောတ္သာဟော 'သ္မာသု ပြေမ စဲတဲ ရ္ဂုဏဲ ရျူယံ ယထာပရာန် အတိၑေဓွေ တထဲဝဲတေန ဂုဏေနာပျတိၑေဓွံ၊
௭அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பதிலும், அறிவிலும், எல்லாவிதமான எச்சரிக்கையிலும், எங்கள்மேல் உள்ள உங்களுடைய அன்பிலும், மற்ற எல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும்.
8 ဧတဒ် အဟမ် အာဇ္ဉယာ ကထယာမီတိ နဟိ ကိန္တွနျေၐာမ် ဥတ္သာဟကာရဏာဒ် ယုၐ္မာကမပိ ပြေမ္နး သာရလျံ ပရီက္ၐိတုမိစ္ဆတာ မယဲတတ် ကထျတေ၊
௮இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், மற்றவர்களுடைய வாஞ்சையைக் கொண்டு, உங்களுடைய அன்பின் உண்மையைச் சோதிப்பதற்காகவே சொல்லுகிறேன்.
9 ယူယဉ္စာသ္မတ္ပြဘော ရျီၑုခြီၐ္ဋသျာနုဂြဟံ ဇာနီထ ယတသ္တသျ နိရ္ဓနတွေန ယူယံ ယဒ် ဓနိနော ဘဝထ တဒရ္ထံ သ ဓနီ သန္နပိ ယုၐ္မတ္ကၖတေ နိရ္ဓနော'ဘဝတ်၊
௯நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் செல்வந்தராக இருந்தும், நீங்கள் அவருடைய ஏழ்மையினாலே செல்வந்தர்களாவதற்கு, உங்களுக்காக ஏழையானாரே.
10 ဧတသ္မိန် အဟံ ယုၐ္မာန် သွဝိစာရံ ဇ္ဉာပယာမိ၊ ဂတံ သံဝတ္သရမ် အာရဘျ ယူယံ ကေဝလံ ကရ္မ္မ ကရ္တ္တံ တန္နဟိ ကိန္တွိစ္ဆုကတာံ ပြကာၑယိတုမပျုပါကြာဘျဓွံ တတော ဟေတော ရျုၐ္မတ္ကၖတေ မမ မန္တြဏာ ဘဒြာ၊
௧0இதைக்குறித்து என் யோசனையை உங்களுக்கு அறிவிக்கிறேன்; இதைச் செய்கிறதற்கு மட்டுமில்லை, செய்யவேண்டும் என்று விருப்பப்பட்டு கடந்த வருடத்தில் ஆரம்பம்பண்ணின உங்களுக்கு இது தகுதியாக இருக்கும்.
11 အတော 'ဓုနာ တတ္ကရ္မ္မသာဓနံ ယုၐ္မာဘိး ကြိယတာံ တေန ယဒွဒ် ဣစ္ဆုကတာယာမ် ဥတ္သာဟသ္တဒွဒ် ဧကဲကသျ သမ္ပဒနုသာရေဏ ကရ္မ္မသာဓနမ် အပိ ဇနိၐျတေ၊
௧௧எனவே, அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பம் உண்டாயிருந்ததுபோல, உங்களிடம் இருக்கிறவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக.
12 ယသ္မိန် ဣစ္ဆုကတာ ဝိဒျတေ တေန ယန္န ဓာရျျတေ တသ္မာတ် သော'နုဂၖဟျတ ဣတိ နဟိ ကိန္တု ယဒ် ဓာရျျတေ တသ္မာဒေဝ၊
௧௨ஒருவனுக்கு மனவிருப்பம் இருந்தால், அவனுக்கு இல்லாதவைகளின்படியல்ல, அவனுக்கு இருக்கிறவைகளின்படியே அங்கீகரிக்கப்படும்.
13 ယတ ဣတရေၐာံ ဝိရာမေဏ ယုၐ္မာကဉ္စ က္လေၑေန ဘဝိတဝျံ တန္နဟိ ကိန္တု သမတယဲဝ၊
௧௩மற்றவர்களுக்கு உதவியும், உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, ஏற்றத்தாழ்வில்லாமல் இருக்கும்படியாகவே சொல்லுகிறேன்.
14 ဝရ္တ္တမာနသမယေ ယုၐ္မာကံ ဓနာဓိကျေန တေၐာံ ဓနနျူနတာ ပူရယိတဝျာ တသ္မာတ် တေၐာမပျာဓိကျေန ယုၐ္မာကံ နျူနတာ ပူရယိၐျတေ တေန သမတာ ဇနိၐျတေ၊
௧௪எப்படியென்றால், அதிகமாகச் சேர்த்தவனுக்கு அதிகமானதும் இல்லை, கொஞ்சமாகச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை என்று எழுதியிருக்கிறபடி,
15 တဒေဝ ၑာသ္တြေ'ပိ လိခိတမ် အာသ္တေ ယထာ, ယေနာဓိကံ သံဂၖဟီတံ တသျာဓိကံ နာဘဝတ် ယေန စာလ္ပံ သံဂၖဟီတံ တသျာလ္ပံ နာဘဝတ်၊
௧௫ஏற்றத்தாழ்வற்றப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்களுடைய வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.
16 ယုၐ္မာကံ ဟိတာယ တီတသျ မနသိ ယ ဤၑွရ ဣမမ် ဥဒျောဂံ ဇနိတဝါန် သ ဓနျော ဘဝတု၊
௧௬அன்றியும் உங்களுக்காக இப்படிப்பட்ட வாஞ்சை உண்டாயிருக்கும்படி தீத்துவின் இருதயத்தில் அருளின தேவனுக்கு ஸ்தோத்திரம்.
17 တီတော'သ္မာကံ ပြာရ္ထနာံ ဂၖဟီတဝါန် ကိဉ္စ သွယမ် ဥဒျုက္တး သန် သွေစ္ဆယာ ယုၐ္မတ္သမီပံ ဂတဝါန်၊
௧௭நாங்கள் கேட்டுக்கொண்டதை அவன் அங்கீகரித்ததோடு, அவன் அதிக வாஞ்சையாக இருந்து, தன் மனவிருப்பத்தின்படியே உங்களிடம் வருவதற்காகப் புறப்பட்டான்.
18 တေန သဟ ယော'ပရ ဧကော ဘြာတာသ္မာဘိး ပြေၐိတး သုသံဝါဒါတ် တသျ သုချာတျာ သရွွား သမိတယော ဝျာပ္တား၊
௧௮நற்செய்தி ஊழியத்தில் எல்லா சபைகளிலும் புகழ்ச்சிபெற்ற ஒரு சகோதரனை அவனோடுகூட அனுப்பியிருக்கிறோம்.
19 ပြဘော ရ္ဂော်ရဝါယ ယုၐ္မာကမ် ဣစ္ဆုကတာယဲ စ သ သမိတိဘိရေတသျဲ ဒါနသေဝါယဲ အသ္မာကံ သင်္ဂိတွေ နျယောဇျတ၊
௧௯அதுமட்டும் இல்லை, கர்த்தருக்கு மகிமை உண்டாகவும், உங்களுடைய மனவிருப்பம் விளங்கவும், எங்களுடைய ஊழியத்தினாலே சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக் கொண்டுபோகும்போது, எங்களுடைய பயணத்தில் துணையாக இருப்பதற்காக, அவன் சபைகளால் தெரிந்து நியமிக்கப்பட்டவனாகவும் இருக்கிறான்.
20 ယတော ယာ မဟောပါယနသေဝါသ္မာဘိ ရွိဓီယတေ တာမဓိ ဝယံ ယတ် ကေနာပိ န နိန္ဒျာမဟေ တဒရ္ထံ ယတာမဟေ၊
௨0எங்களுடைய ஊழியத்தினாலே சேர்க்கப்படும் இந்த அதிகமான தர்மப்பணத்தைக்குறித்து யாரும் எங்களைக் குற்றப்படுத்தாதபடி நாங்கள் எச்சரிக்கையாக இருந்து,
21 ယတး ကေဝလံ ပြဘေား သာက္ၐာတ် တန္နဟိ ကိန္တု မာနဝါနာမပိ သာက္ၐာတ် သဒါစာရံ ကရ္တ္တုမ် အာလောစာမဟေ၊
௨௧கர்த்தருக்கு முன்பாகமட்டும் இல்லை, மனிதர்களுக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய விரும்புகிறோம்.
22 တာဘျာံ သဟာပရ ဧကော ယော ဘြာတာသ္မာဘိး ပြေၐိတး သော'သ္မာဘိ ရ္ဗဟုဝိၐယေၐု ဗဟဝါရာန် ပရီက္ၐိတ ဥဒျောဂီဝ ပြကာၑိတၑ္စ ကိန္တွဓုနာ ယုၐ္မာသု ဒၖဎဝိၑွာသာတ် တသျောတ္သာဟော ဗဟု ဝဝၖဓေ၊
௨௨மேலும், அநேக காரியங்களில் ஜாக்கிரதையுள்ளவன் என்று நாங்கள் பலமுறை பார்த்து அறிந்தவனும், இப்பொழுது உங்கள்மேல் உள்ள அதிக நம்பிக்கையினாலே அதிக எச்சரிக்கையுள்ளவனுமாகிய நம்முடைய சகோதரனையும் இவர்களோடு அனுப்பியிருக்கிறோம்.
23 ယဒိ ကၑ္စိတ် တီတသျ တတ္တွံ ဇိဇ္ဉာသတေ တရှိ သ မမ သဟဘာဂီ ယုၐ္မန္မဓျေ သဟကာရီ စ, အပရယော ရ္ဘြာတြောသ္တတ္တွံ ဝါ ယဒိ ဇိဇ္ဉာသတေ တရှိ တော် သမိတီနာံ ဒူတော် ခြီၐ္ဋသျ ပြတိဗိမ္ဗော် စေတိ တေန ဇ္ဉာယတာံ၊
௨௩தீத்துவைக்குறித்து யாராவது விசாரித்தால், அவன் எனக்குக் கூட்டாளியும், உங்களுக்காக என் உடன்வேலையாளுமாக இருக்கிறான் என்றும்; எங்களுடைய சகோதரர்களைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவர்கள் சபைகளில் இருந்து அனுப்பப்பட்ட பிரதிநிதிகளும், கிறிஸ்துவிற்கு மகிமையுமாக இருக்கிறார்கள் என்றும் அறியவேண்டும்.
24 အတော ဟေတေား သမိတီနာံ သမက္ၐံ ယုၐ္မတ္ပြေမ္နော'သ္မာကံ ၑ္လာဃာယာၑ္စ ပြာမာဏျံ တာန် ပြတိ ယုၐ္မာဘိး ပြကာၑယိတဝျံ၊
௨௪எனவே, உங்களுடைய அன்பையும், நாங்கள் உங்களைக்குறித்துச் சொன்ன புகழ்ச்சியையும், சபைகளுக்கு முன்பாக அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.