< ၁ ယောဟနး 3 >
1 ပၑျတ ဝယမ် ဤၑွရသျ သန္တာနာ ဣတိ နာမ္နာချာမဟေ, ဧတေန ပိတာသ္မဘျံ ကီဒၖက် မဟာပြေမ ပြဒတ္တဝါန်, ကိန္တု သံသာရသ္တံ နာဇာနာတ် တတ္ကာရဏာဒသ္မာန် အပိ န ဇာနာတိ၊
௧நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரியது என்று உணர்ந்து பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.
2 ဟေ ပြိယတမား, ဣဒါနီံ ဝယမ် ဤၑွရသျ သန္တာနာ အာသ္မဟေ ပၑ္စာတ် ကိံ ဘဝိၐျာမသ္တဒ် အဒျာပျပြကာၑိတံ ကိန္တု ပြကာၑံ ဂတေ ဝယံ တသျ သဒၖၑာ ဘဝိၐျာမိ ဣတိ ဇာနီမး, ယတး သ ယာဒၖၑော 'သ္တိ တာဒၖၑော 'သ္မာဘိရ္ဒရ္ၑိၐျတေ၊
௨பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம், இனி எவ்விதமாக இருப்போம் என்று இன்னும் வெளிப்படவில்லை; ஆனாலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற பிரகாரமாகவே நாம் அவரைக் காண்பதினால், அவருடைய சாயலாக இருப்போம் என்று அறிந்திருக்கிறோம்.
3 တသ္မိန် ဧၐာ ပြတျာၑာ ယသျ ကသျစိဒ် ဘဝတိ သ သွံ တထာ ပဝိတြံ ကရောတိ ယထာ သ ပဝိတြော 'သ္တိ၊
௩அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவன் எவனும், அவர் சுத்தமுள்ளவராக இருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.
4 ယး ကၑ္စိတ် ပါပမ် အာစရတိ သ ဝျဝသ္ထာလင်္ဃနံ ကရောတိ ယတး ပါပမေဝ ဝျဝသ္ထာလင်္ဃနံ၊
௪பாவம் செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
5 အပရံ သော 'သ္မာကံ ပါပါနျပဟရ္တ္တုံ ပြာကာၑတဲတဒ် ယူယံ ဇာနီထ, ပါပဉ္စ တသ္မိန် န ဝိဒျတေ၊
௫அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவம் இல்லை.
6 ယး ကၑ္စိတ် တသ္မိန် တိၐ္ဌတိ သ ပါပါစာရံ န ကရောတိ ယး ကၑ္စိတ် ပါပါစာရံ ကရောတိ သ တံ န ဒၖၐ္ဋဝါန် န ဝါဝဂတဝါန်၊
௬அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவம் செய்கிறதில்லை; பாவம் செய்கிற எவனும் அவரைக் காணவும் இல்லை, அவரை அறியவும் இல்லை.
7 ဟေ ပြိယဗာလကား, ကၑ္စိဒ် ယုၐ္မာကံ ဘြမံ န ဇနယေတ်, ယး ကၑ္စိဒ် ဓရ္မ္မာစာရံ ကရောတိ သ တာဒၖဂ် ဓာရ္မ္မိကော ဘဝတိ ယာဒၖက် သ ဓာမ္မိကော 'သ္တိ၊
௭பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் ஏமாற்றப்படாமலிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராக இருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாக இருக்கிறான்.
8 ယး ပါပါစာရံ ကရောတိ သ ၑယတာနာတ် ဇာတော ယတး ၑယတာန အာဒိတး ပါပါစာရီ ၑယတာနသျ ကရ္မ္မဏာံ လောပါရ္ထမေဝေၑွရသျ ပုတြး ပြာကာၑတ၊
௮பாவம் செய்கிறவன் பிசாசினால் உண்டாயிருக்கிறான்; ஏனென்றால், பிசாசானவன் ஆரம்பமுதல் பாவம் செய்கிறான், பிசாசினுடைய செயல்களை அழிப்பதற்காக தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
9 ယး ကၑ္စိဒ် ဤၑွရာတ် ဇာတး သ ပါပါစာရံ န ကရောတိ ယတသ္တသျ ဝီရျျံ တသ္မိန် တိၐ္ဌတိ ပါပါစာရံ ကရ္တ္တုဉ္စ န ၑက္နောတိ ယတး သ ဤၑွရာတ် ဇာတး၊
௯தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யமாட்டன், ஏனென்றால், அவருடைய வித்து அவனுக்குள் நிலைத்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவம் செய்யமாட்டான்.
10 ဣတျနေနေၑွရသျ သန္တာနား ၑယတာနသျ စ သန္တာနာ ဝျက္တာ ဘဝန္တိ၊ ယး ကၑ္စိဒ် ဓရ္မ္မာစာရံ န ကရောတိ သ ဤၑွရာတ် ဇာတော နဟိ ယၑ္စ သွဘြာတရိ န ပြီယတေ သော 'ပီၑွရာတ် ဇာတော နဟိ၊
௧0இதினாலே தேவனுடைய பிள்ளைகள் யாரென்றும், பிசாசின் பிள்ளைகள் யாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவன் இல்லை.
11 ယတသ္တသျ ယ အာဒေၑ အာဒိတော ယုၐ္မာဘိး ၑြုတး သ ဧၐ ဧဝ ယဒ် အသ္မာဘိး ပရသ္ပရံ ပြေမ ကရ္တ္တဝျံ၊
௧௧நாம் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும் என்பதே நீங்கள் ஆரம்பமுதல் கேள்விப்பட்ட செய்தியாக இருக்கிறது.
12 ပါပါတ္မတော ဇာတော ယး ကာဗိလ် သွဘြာတရံ ဟတဝါန် တတ္သဒၖၑဲရသ္မာဘိ ရ္န ဘဝိတဝျံ၊ သ ကသ္မာတ် ကာရဏာတ် တံ ဟတဝါန်? တသျ ကရ္မ္မာဏိ ဒုၐ္ဋာနိ တဒ္ဘြာတုၑ္စ ကရ္မ္မာဏိ ဓရ္မ္မာဏျာသန် ဣတိ ကာရဏာတ်၊
௧௨சாத்தானால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போல இருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் செய்கைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய செய்கைகள் நீதி உள்ளவைகளுமாக இருந்ததினிமித்தம்தானே.
13 ဟေ မမ ဘြာတရး, သံသာရော ယဒိ ယုၐ္မာန် ဒွေၐ္ဋိ တရှိ တဒ် အာၑ္စရျျံ န မနျဓွံ၊
௧௩என் சகோதர்களே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாமலிருங்கள்.
14 ဝယံ မၖတျုမ် ဥတ္တီရျျ ဇီဝနံ ပြာပ္တဝန္တသ္တဒ် ဘြာတၖၐု ပြေမကရဏာတ် ဇာနီမး၊ ဘြာတရိ ယော န ပြီယတေ သ မၖတျော် တိၐ္ဌတိ၊
௧௪நாம் சகோதரர்களிடம் அன்பு செலுத்துகிறபடியால், மரணத்தைவிட்டு விலகி ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைபெற்றிருக்கிறான்.
15 ယး ကၑ္စိတ် သွဘြာတရံ ဒွေၐ္ဋိ သံ နရဃာတီ ကိဉ္စာနန္တဇီဝနံ နရဃာတိနး ကသျာပျန္တရေ နာဝတိၐ္ဌတေ တဒ် ယူယံ ဇာနီထ၊ (aiōnios )
௧௫தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனித கொலைபாதகனாக இருக்கிறான்; மனித கொலைபாதகன் எவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திருக்காது என்று அறிவீர்கள். (aiōnios )
16 အသ္မာကံ ကၖတေ သ သွပြာဏာံသ္တျက္တဝါန် ဣတျနေန ဝယံ ပြေမ္နသ္တတ္တွမ် အဝဂတား, အပရံ ဘြာတၖဏာံ ကၖတေ 'သ္မာဘိရပိ ပြာဏာသ္တျက္တဝျား၊
௧௬அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரர்களுக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாக இருக்கிறோம்.
17 သာံသာရိကဇီဝိကာပြာပ္တော ယော ဇနး သွဘြာတရံ ဒီနံ ဒၖၐ္ဋွာ တသ္မာတ် သွီယဒယာံ ရုဏဒ္ဓိ တသျာန္တရ ဤၑွရသျ ပြေမ ကထံ တိၐ္ဌေတ်?
௧௭ஒருவன் இந்த உலகத்தின் செல்வம் உடையவனாக இருந்து, தன் சகோதரனுக்கு வறுமை உண்டென்று அறிந்து, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைபெறுகிறது எப்படி?
18 ဟေ မမ ပြိယဗာလကား, ဝါကျေန ဇိဟွယာ ဝါသ္မာဘိး ပြေမ န ကရ္တ္တဝျံ ကိန္တု ကာရျျေဏ သတျတယာ စဲဝ၊
௧௮என் பிள்ளைகளே, வசனத்தினாலும் பேச்சினாலுமல்ல, செயல்களினாலும் உண்மையினாலும் அன்பு செலுத்துவோம்.
19 ဧတေန ဝယံ ယတ် သတျမတသမ္ဗန္ဓီယာသ္တတ် ဇာနီမသ္တသျ သာက္ၐာတ် သွာန္တးကရဏာနိ သာန္တွယိတုံ ၑက္ၐျာမၑ္စ၊
௧௯இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்கள் என்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.
20 ယတော 'သ္မဒန္တးကရဏံ ယဒျသ္မာန် ဒူၐယတိ တရှျသ္မဒန္တး ကရဏာဒ် ဤၑွရော မဟာန် သရွွဇ္ဉၑ္စ၊
௨0நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராக இருந்து எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்.
21 ဟေ ပြိယတမား, အသ္မဒန္တးကရဏံ ယဒျသ္မာန် န ဒူၐယတိ တရှိ ဝယမ် ဤၑွရသျ သာက္ၐာတ် ပြတိဘာနွိတာ ဘဝါမး၊
௨௧பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காமலிருந்தால், நாம் தேவனிடத்தில் நம்பிக்கைக் கொண்டிருந்து,
22 ယစ္စ ပြာရ္ထယာမဟေ တတ် တသ္မာတ် ပြာပ္နုမး, ယတော ဝယံ တသျာဇ္ဉား ပါလယာမသ္တသျ သာက္ၐာတ် တုၐ္ဋိဇနကမ် အာစာရံ ကုရ္မ္မၑ္စ၊
௨௨அவருடைய கட்டளைகளை நாம் கடைபிடித்து அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் கேட்டுக்கொள்ளுகிறது எதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.
23 အပရံ တသျေယမာဇ္ဉာ ယဒ် ဝယံ ပုတြသျ ယီၑုခြီၐ္ဋသျ နာမ္နိ ဝိၑွသိမသ္တသျာဇ္ဉာနုသာရေဏ စ ပရသ္ပရံ ပြေမ ကုရ္မ္မး၊
௨௩நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாக இருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாக இருக்கவேண்டுமென்பதே அவருடைய கட்டளையாக இருக்கிறது.
24 ယၑ္စ တသျာဇ္ဉား ပါလယတိ သ တသ္မိန် တိၐ္ဌတိ တသ္မိန် သော'ပိ တိၐ္ဌတိ; သ စာသ္မာန် ယမ် အာတ္မာနံ ဒတ္တဝါန် တသ္မာတ် သော 'သ္မာသု တိၐ္ဌတီတိ ဇာနီမး၊
௨௪அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியானவராலே அறிந்திருக்கிறோம்.