< ၁ ကရိန္ထိနး 2 >

1 ဟေ ဘြာတရော ယုၐ္မတ္သမီပေ မမာဂမနကာလေ'ဟံ ဝက္တၖတာယာ ဝိဒျာယာ ဝါ နဲပုဏျေနေၑွရသျ သာက္ၐျံ ပြစာရိတဝါန် တန္နဟိ;
சகோதரர்களே, நான் உங்களிடம் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த பேச்சுத் திறமையோடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை.
2 ယတော ယီၑုခြီၐ္ဋံ တသျ ကြုၑေ ဟတတွဉ္စ ဝိနာ နာနျတ် ကိမပိ ယုၐ္မန္မဓျေ ဇ္ဉာပယိတုံ ဝိဟိတံ ဗုဒ္ဓဝါန်၊
நான் உங்களோடு இருக்கும்போது சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவைத்தவிர, வேறொன்றையும் அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.
3 အပရဉ္စာတီဝ ဒေါ်ရ္ဗ္ဗလျဘီတိကမ္ပယုက္တော ယုၐ္မာဘိး သာရ္ဒ္ဓမာသံ၊
அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடம் இருந்தேன்.
4 အပရံ ယုၐ္မာကံ ဝိၑွာသော ယတ် မာနုၐိကဇ္ဉာနသျ ဖလံ န ဘဝေတ် ကိန္တွီၑွရီယၑက္တေး ဖလံ ဘဝေတ်,
உங்களுடைய விசுவாசம் மனிதர்களுடைய ஞானத்தில் அல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு,
5 တဒရ္ထံ မမ ဝက္တၖတာ မဒီယပြစာရၑ္စ မာနုၐိကဇ္ဉာနသျ မဓုရဝါကျသမ္ဗလိတော် နာသ္တာံ ကိန္တွာတ္မနး ၑက္တေၑ္စ ပြမာဏယုက္တာဝါသ္တာံ၊
என் பேச்சும் என் பிரசங்கமும் மனித ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாக இல்லாமல், பரிசுத்த ஆவியானவராலும், பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாக இருந்தது.
6 ဝယံ ဇ္ဉာနံ ဘာၐာမဟေ တစ္စ သိဒ္ဓလောကဲ ရ္ဇ္ဉာနမိဝ မနျတေ, တဒိဟလောကသျ ဇ္ဉာနံ နဟိ, ဣဟလောကသျ နၑွရာဏာမ် အဓိပတီနာံ ဝါ ဇ္ဉာနံ နဟိ; (aiōn g165)
அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இந்த உலகத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இந்த உலகத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, (aiōn g165)
7 ကိန္တု ကာလာဝသ္ထာယား ပူရွွသ္မာဒ် ယတ် ဇ္ဉာနမ် အသ္မာကံ ဝိဘဝါရ္ထမ် ဤၑွရေဏ နိၑ္စိတျ ပြစ္ဆန္နံ တန္နိဂူဎမ် ဤၑွရီယဇ္ဉာနံ ပြဘာၐာမဟေ၊ (aiōn g165)
உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாக இருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (aiōn g165)
8 ဣဟလောကသျာဓိပတီနာံ ကေနာပိ တတ် ဇ္ဉာနံ န လဗ္ဓံ, လဗ္ဓေ သတိ တေ ပြဘာဝဝိၑိၐ္ဋံ ပြဘုံ ကြုၑေ နာဟနိၐျန်၊ (aiōn g165)
அதை இந்த உலகத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. (aiōn g165)
9 တဒွလ္လိခိတမာသ္တေ, နေတြေဏ က္ကာပိ နော ဒၖၐ္ဋံ ကရ္ဏေနာပိ စ န ၑြုတံ၊ မနောမဓျေ တု ကသျာပိ န ပြဝိၐ္ဋံ ကဒါပိ ယတ်၊ ဤၑွရေ ပြီယမာဏာနာံ ကၖတေ တတ် တေန သဉ္စိတံ၊
எழுதியிருக்கிறபடி: “தேவன் தம்மேல் அன்பு செலுத்துகிறவர்களுக்கு ஆயத்தம் செய்தவைகளைக் கண் காணவும் இல்லை, காது கேட்கவும் இல்லை, அவைகள் மனிதனுடைய இருதயத்தில் தோன்றவும் இல்லை;
10 အပရမီၑွရး သွာတ္မနာ တဒသ္မာကံ သာက္ၐာတ် ပြာကာၑယတ်; ယတ အာတ္မာ သရွွမေဝါနုသန္ဓတ္တေ တေန စေၑွရသျ မရ္မ္မတတ္တွမပိ ဗုဓျတေ၊
௧0நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியானவராலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழமான காரியங்களையும் ஆராய்ந்திருக்கிறார்.
11 မနုဇသျာန္တးသ္ထမာတ္မာနံ ဝိနာ ကေန မနုဇေန တသျ မနုဇသျ တတ္တွံ ဗုဓျတေ? တဒွဒီၑွရသျာတ္မာနံ ဝိနာ ကေနာပီၑွရသျ တတ္တွံ န ဗုဓျတေ၊
௧௧மனிதனிலுள்ள ஆவியேதவிர மனிதர்களில் எவன் மனிதனுக்குரியவைகளை அறிவான்? அதைப்போல, தேவ ஆவியானவரைத்தவிர, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.
12 ဝယဉ္စေဟလောကသျာတ္မာနံ လဗ္ဓဝန္တသ္တန္နဟိ ကိန္တွီၑွရသျဲဝါတ္မာနံ လဗ္ဓဝန္တး, တတော ဟေတောရီၑွရေဏ သွပြသာဒါဒ် အသ္မဘျံ ယဒ် ယဒ် ဒတ္တံ တတ္သရွွမ် အသ္မာဘိ ရ္ဇ္ဉာတုံ ၑကျတေ၊
௧௨நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியானவரையே பெற்றோம்.
13 တစ္စာသ္မာဘိ ရ္မာနုၐိကဇ္ဉာနသျ ဝါကျာနိ ၑိက္ၐိတွာ ကထျတ ဣတိ နဟိ ကိန္တွာတ္မတော ဝါကျာနိ ၑိက္ၐိတွာတ္မိကဲ ရွာကျဲရာတ္မိကံ ဘာဝံ ပြကာၑယဒ္ဘိး ကထျတေ၊
௧௩அவைகளை நாங்கள் மனிதஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவியானவர் போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவியானவருக்குரியவைகளை ஆவியானவருக்குரியவைகளோடு சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்.
14 ပြာဏီ မနုၐျ ဤၑွရီယာတ္မနး ၑိက္ၐာံ န ဂၖဟ္လာတိ ယတ အာတ္မိကဝိစာရေဏ သာ ဝိစာရျျေတိ ဟေတေား သ တာံ ပြလာပမိဝ မနျတေ ဗောဒ္ဓုဉ္စ န ၑက္နောတိ၊
௧௪ஜென்ம சுபாவமான மனிதனோ தேவ ஆவியானவருக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபடி ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவும் மாட்டான்.
15 အာတ္မိကော မာနဝး သရွွာဏိ ဝိစာရယတိ ကိန္တု သွယံ ကေနာပိ န ဝိစာရျျတေ၊
௧௫ஆவியானவருக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
16 ယတ ဤၑွရသျ မနော ဇ္ဉာတွာ တမုပဒေၐ္ဋုံ ကး ၑက္နောတိ? ကိန္တု ခြီၐ္ဋသျ မနော'သ္မာဘိ ရ္လဗ္ဓံ၊
௧௬“கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்?” எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.

< ၁ ကရိန္ထိနး 2 >