< মথিঃ 26 >

1 যীশুৰেতান্ প্ৰস্তাৱান্ সমাপ্য শিষ্যানূচে,
இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லிமுடித்தபின்பு, அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து:
2 যুষ্মাভি ৰ্জ্ঞাতং দিনদ্ৱযাৎ পৰং নিস্তাৰমহ উপস্থাস্যতি, তত্ৰ মনুজসুতঃ ক্ৰুশেন হন্তুং পৰকৰেষু সমৰ্পিষ্যতে|
இரண்டு நாட்களுக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனிதகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்.
3 ততঃ পৰং প্ৰধানযাজকাধ্যাপকপ্ৰাঞ্চঃ কিযফানাম্নো মহাযাজকস্যাট্টালিকাযাং মিলিৎৱা
அப்பொழுது, பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மக்களின் மூப்பர்களும், காய்பா என்னப்பட்ட தலைமை ஆசாரியனுடைய அரண்மனையிலே கூடிவந்து,
4 কেনোপাযেন যীশুং ধৃৎৱা হন্তুং শক্নুযুৰিতি মন্ত্ৰযাঞ্চক্ৰুঃ|
இயேசுவைத் தந்திரமாகப் பிடித்துக் கொலைசெய்யும்படி ஆலோசனை செய்தார்கள்.
5 কিন্তু তৈৰুক্তং মহকালে ন ধৰ্ত্তৱ্যঃ, ধৃতে প্ৰজানাং কলহেন ভৱিতুং শক্যতে|
ஆனாலும் மக்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச் செய்யக்கூடாது என்றார்கள்.
6 ততো বৈথনিযাপুৰে শিমোনাখ্যস্য কুষ্ঠিনো ৱেশ্মনি যীশৌ তিষ্ঠতি
இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டில் இருக்கும்போது,
7 কাচন যোষা শ্ৱেতোপলভাজনেন মহাৰ্ঘ্যং সুগন্ধি তৈলমানীয ভোজনাযোপৱিশতস্তস্য শিৰোভ্যষেচৎ|
ஒரு பெண் விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல் ஜாடியைக் கொண்டுவந்து, அவர் உணவு பந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள்.
8 কিন্তু তদালোক্য তচ্ছিষ্যৈঃ কুপিতৈৰুক্তং, কুত ইত্থমপৱ্যযতে?
அவருடைய சீடர்கள் அதைக் கண்டு கோபமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு?
9 চেদিদং ৱ্যক্ৰেষ্যত, তৰ্হি ভূৰিমূল্যং প্ৰাপ্য দৰিদ্ৰেভ্যো ৱ্যতাৰিষ্যত|
இந்தத் தைலத்தை அதிக விலைக்கு விற்று, தரித்திரர்களுக்குக் கொடுக்கலாமே என்றார்கள்.
10 ১০ যীশুনা তদৱগত্য তে সমুদিতাঃ, যোষামেনাং কুতো দুঃখিনীং কুৰুথ, সা মাং প্ৰতি সাধু কৰ্ম্মাকাৰ্ষীৎ|
௧0இயேசு அதை அறிந்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் இந்தப் பெண்ணை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்செயலைச் செய்திருக்கிறாள்.
11 ১১ যুষ্মাকমং সমীপে দৰিদ্ৰাঃ সততমেৱাসতে, কিন্তু যুষ্মাকমন্তিকেহং নাসে সততং|
௧௧தரித்திரர்கள் எப்போதும் உங்களிடம் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடம் இருக்கமாட்டேன்.
12 ১২ সা মম কাযোপৰি সুগন্ধিতৈলং সিক্ত্ৱা মম শ্মশানদানকৰ্ম্মাকাৰ্ষীৎ|
௧௨இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம் செய்வதற்கு சமமான செய்கையாக இருக்கிறது.
13 ১৩ অতোহং যুষ্মান্ তথ্যং ৱদামি সৰ্ৱ্ৱস্মিন্ জগতি যত্ৰ যত্ৰৈষ সুসমাচাৰঃ প্ৰচাৰিষ্যতে, তত্ৰ তত্ৰৈতস্যা নাৰ্য্যাঃ স্মৰণাৰ্থম্ কৰ্ম্মেদং প্ৰচাৰিষ্যতে|
௧௩இந்த நற்செய்தி உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
14 ১৪ ততো দ্ৱাদশশিষ্যাণাম্ ঈষ্কৰিযোতীযযিহূদানামক একঃ শিষ্যঃ প্ৰধানযাজকানামন্তিকং গৎৱা কথিতৱান্,
௧௪அப்பொழுது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியர்களிடத்திற்குப்போய்:
15 ১৫ যদি যুষ্মাকং কৰেষু যীশুং সমৰ্পযামি, তৰ্হি কিং দাস্যথ? তদানীং তে তস্মৈ ত্ৰিংশন্মুদ্ৰা দাতুং স্থিৰীকৃতৱন্তঃ|
௧௫நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க ஒத்துக்கொண்டார்கள்.
16 ১৬ স তদাৰভ্য তং পৰকৰেষু সমৰ্পযিতুং সুযোগং চেষ্টিতৱান্|
௧௬அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.
17 ১৭ অনন্তৰং কিণ্ৱশূন্যপূপপৰ্ৱ্ৱণঃ প্ৰথমেহ্নি শিষ্যা যীশুম্ উপগত্য পপ্ৰচ্ছুঃ ভৱৎকৃতে কুত্ৰ ৱযং নিস্তাৰমহভোজ্যম্ আযোজযিষ্যামঃ? ভৱতঃ কেচ্ছা?
௧௭புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்செய்ய விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள்.
18 ১৮ তদা স গদিতৱান্, মধ্যেনগৰমমুকপুংসঃ সমীপং ৱ্ৰজিৎৱা ৱদত, গুৰু ৰ্গদিতৱান্, মৎকালঃ সৱিধঃ, সহ শিষ্যৈস্ত্ৱদালযে নিস্তাৰমহভোজ্যং ভোক্ষ্যে|
௧௮அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப்போய்: என் வேளை சமீபமாக இருக்கிறது, உன் வீட்டிலே என் சீடர்களோடுகூட பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார்.
19 ১৯ তদা শিষ্যা যীশোস্তাদৃশনিদেশানুৰূপকৰ্ম্ম ৱিধায তত্ৰ নিস্তাৰমহভোজ্যমাসাদযামাসুঃ|
௧௯இயேசு கற்பித்தபடி சீடர்கள்போய், பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள்.
20 ২০ ততঃ সন্ধ্যাযাং সত্যাং দ্ৱাদশভিঃ শিষ্যৈঃ সাকং স ন্যৱিশৎ|
௨0மாலைநேரமானபோது, பன்னிரண்டுபேரோடும் அவர் பந்தியிருந்தார்.
21 ২১ অপৰং ভুঞ্জান উক্তৱান্ যুষ্মান্ তথ্যং ৱদামি, যুষ্মাকমেকো মাং পৰকৰেষু সমৰ্পযিষ্যতি|
௨௧அவர்கள் உணவு உண்ணும்போது, அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
22 ২২ তদা তেঽতীৱ দুঃখিতা একৈকশো ৱক্তুমাৰেভিৰে, হে প্ৰভো, স কিমহং?
௨௨அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரைப் பார்த்து: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராகக் கேட்கத்தொடங்கினார்கள்.
23 ২৩ ততঃ স জগাদ, মযা সাকং যো জনো ভোজনপাত্ৰে কৰং সংক্ষিপতি, স এৱ মাং পৰকৰেষু সমৰ্পযিষ্যতি|
௨௩அவர் மறுமொழியாக: என்னோடுகூடத் தட்டில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்.
24 ২৪ মনুজসুতমধি যাদৃশং লিখিতমাস্তে, তদনুৰূপা তদ্গতি ৰ্ভৱিষ্যতি; কিন্তু যেন পুংসা স পৰকৰেষু সমৰ্পযিষ্যতে, হা হা চেৎ স নাজনিষ্যত, তদা তস্য ক্ষেমমভৱিষ্যৎ|
௨௪மனிதகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆனாலும், எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனிதனுக்கு ஐயோ; அந்த மனிதன் பிறக்காதிருந்தானானால் அவனுக்கு நலமாக இருக்கும் என்றார்.
25 ২৫ তদা যিহূদানামা যো জনস্তং পৰকৰেষু সমৰ্পযিষ্যতি, স উক্তৱান্, হে গুৰো, স কিমহং? ততঃ স প্ৰত্যুক্তৱান্, ৎৱযা সত্যং গদিতম্|
௨௫அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரைப் பார்த்து: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார்.
26 ২৬ অনন্তৰং তেষামশনকালে যীশুঃ পূপমাদাযেশ্ৱৰীযগুণাননূদ্য ভংক্ত্ৱা শিষ্যেভ্যঃ প্ৰদায জগাদ, মদ্ৱপুঃস্ৱৰূপমিমং গৃহীৎৱা খাদত|
௨௬அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீடர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிச்சாப்பிடுங்கள், இது என்னுடைய சரீரமாக இருக்கிறது என்றார்.
27 ২৭ পশ্চাৎ স কংসং গৃহ্লন্ ঈশ্ৱৰীযগুণাননূদ্য তেভ্যঃ প্ৰদায কথিতৱান্, সৰ্ৱ্ৱৈ ৰ্যুষ্মাভিৰনেন পাতৱ্যং,
௨௭பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, நன்றிசெலுத்தி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லோரும் இதிலே பானம்பண்ணுங்கள்;
28 ২৮ যস্মাদনেকেষাং পাপমৰ্ষণায পাতিতং যন্মন্নূত্ননিযমৰূপশোণিতং তদেতৎ|
௨௮இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புதிய ஒப்பந்தத்திற்குரிய என்னுடைய இரத்தமாக இருக்கிறது.
29 ২৯ অপৰমহং নূত্নগোস্তনীৰসং ন পাস্যামি, তাৱৎ গোস্তনীফলৰসং পুনঃ কদাপি ন পাস্যামি|
௨௯இதுமுதல் இந்தத் திராட்சைப்பழரசத்தை புதிதானதாக உங்களோடுகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரை இதைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
30 ৩০ পশ্চাৎ তে গীতমেকং সংগীয জৈতুনাখ্যগিৰিং গতৱন্তঃ|
௩0அவர்கள் துதிப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.
31 ৩১ তদানীং যীশুস্তানৱোচৎ, অস্যাং ৰজন্যামহং যুষ্মাকং সৰ্ৱ্ৱেষাং ৱিঘ্নৰূপো ভৱিষ্যামি, যতো লিখিতমাস্তে, "মেষাণাং ৰক্ষকো যস্তং প্ৰহৰিষ্যাম্যহং ততঃ| মেষাণাং নিৱহো নূনং প্ৰৱিকীৰ্ণো ভৱিষ্যতি"||
௩௧அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: மேய்ப்பனை வெட்டுவேன்; மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இரவிலே நீங்கள் எல்லோரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.
32 ৩২ কিন্তু শ্মশানাৎ সমুত্থায যুষ্মাকমগ্ৰেঽহং গালীলং গমিষ্যামি|
௩௨ஆனாலும் நான் உயிர்த்தெழுந்தபின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவிற்குப் போவேன் என்றார்.
33 ৩৩ পিতৰস্তং প্ৰোৱাচ, ভৱাংশ্চেৎ সৰ্ৱ্ৱেষাং ৱিঘ্নৰূপো ভৱতি, তথাপি মম ন ভৱিষ্যতি|
௩௩பேதுரு அவருக்கு மறுமொழியாக: உமதுநிமித்தம் எல்லோரும் இடறலடைந்தாலும், நான் ஒருபோதும் இடறலடையமாட்டேன் என்றான்.
34 ৩৪ ততো যীশুনা স উক্তঃ, তুভ্যমহং তথ্যং কথযামি, যামিন্যামস্যাং চৰণাযুধস্য ৰৱাৎ পূৰ্ৱ্ৱং ৎৱং মাং ত্ৰি ৰ্নাঙ্গীকৰিষ্যসি|
௩௪இயேசு அவனைப் பார்த்து: இந்த இரவிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று, உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
35 ৩৫ ততঃ পিতৰ উদিতৱান্, যদ্যপি ৎৱযা সমং মৰ্ত্তৱ্যং, তথাপি কদাপি ৎৱাং ন নাঙ্গীকৰিষ্যামি; তথৈৱ সৰ্ৱ্ৱে শিষ্যাশ্চোচুঃ|
௩௫அதற்குப் பேதுரு: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான்; சீடர்கள் எல்லோரும் அப்படியே சொன்னார்கள்.
36 ৩৬ অনন্তৰং যীশুঃ শিষ্যৈঃ সাকং গেৎশিমানীনামকং স্থানং প্ৰস্থায তেভ্যঃ কথিতৱান্, অদঃ স্থানং গৎৱা যাৱদহং প্ৰাৰ্থযিষ্যে তাৱদ্ যূযমত্ৰোপৱিশত|
௩௬அப்பொழுது, இயேசு அவர்களோடு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீடர்களைப் பார்த்து: நான் அங்கே போய் ஜெபம்செய்யும்வரை நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;
37 ৩৭ পশ্চাৎ স পিতৰং সিৱদিযসুতৌ চ সঙ্গিনঃ কৃৎৱা গতৱান্, শোকাকুলোঽতীৱ ৱ্যথিতশ্চ বভূৱ|
௩௭பேதுருவையும் செபெதேயுவின் குமாரர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.
38 ৩৮ তানৱাদীচ্চ মৃতিযাতনেৱ মৎপ্ৰাণানাং যাতনা জাযতে, যূযমত্ৰ মযা সাৰ্দ্ধং জাগৃত|
௩௮அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்திற்குரிய துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடுகூட விழித்திருங்கள் என்று சொல்லி,
39 ৩৯ ততঃ স কিঞ্চিদ্দূৰং গৎৱাধোমুখঃ পতন্ প্ৰাৰ্থযাঞ্চক্ৰে, হে মৎপিতৰ্যদি ভৱিতুং শক্নোতি, তৰ্হি কংসোঽযং মত্তো দূৰং যাতু; কিন্তু মদিচ্ছাৱৎ ন ভৱতু, ৎৱদিচ্ছাৱদ্ ভৱতু|
௩௯சிறிது விலகிப்போய், முகங்குப்புறவிழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிச் செய்யும்; ஆனாலும் என் விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார்.
40 ৪০ ততঃ স শিষ্যানুপেত্য তান্ নিদ্ৰতো নিৰীক্ষ্য পিতৰায কথযামাস, যূযং মযা সাকং দণ্ডমেকমপি জাগৰিতুং নাশন্কুত?
௪0பின்பு, அவர் சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேதுருவைப் பார்த்து: நீங்கள் ஒருமணி நேரமாவது என்னோடுகூட விழித்திருக்கக்கூடாதா?
41 ৪১ পৰীক্ষাযাং ন পতিতুং জাগৃত প্ৰাৰ্থযধ্ৱঞ্চ; আত্মা সমুদ্যতোস্তি, কিন্তু ৱপু ৰ্দুৰ্ব্বলং|
௪௧நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்செய்யுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.
42 ৪২ স দ্ৱিতীযৱাৰং প্ৰাৰ্থযাঞ্চক্ৰে, হে মত্তাত, ন পীতে যদি কংসমিদং মত্তো দূৰং যাতুং ন শক্নোতি, তৰ্হি ৎৱদিচ্ছাৱদ্ ভৱতু|
௪௨அவர் மறுபடியும் இரண்டாம்முறை போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய விருப்பத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார்.
43 ৪৩ স পুনৰেত্য তান্ নিদ্ৰতো দদৰ্শ, যতস্তেষাং নেত্ৰাণি নিদ্ৰযা পূৰ্ণান্যাসন্|
௪௩அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது.
44 ৪৪ পশ্চাৎ স তান্ ৱিহায ৱ্ৰজিৎৱা তৃতীযৱাৰং পূৰ্ৱ্ৱৱৎ কথযন্ প্ৰাৰ্থিতৱান্|
௪௪அவர் மறுபடியும் அவர்களைவிட்டுப்போய், மூன்றாம்முறையும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்செய்தார்.
45 ৪৫ ততঃ শিষ্যানুপাগত্য গদিতৱান্, সাম্প্ৰতং শযানাঃ কিং ৱিশ্ৰাম্যথ? পশ্যত, সময উপাস্থাৎ, মনুজসুতঃ পাপিনাং কৰেষু সমৰ্প্যতে|
௪௫பின்பு அவர் தம்முடைய சீடர்களிடத்தில் வந்து: இன்னும் நித்திரைபண்ணி இளைப்பாறுகிறீர்களா? இதோ, மனிதகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற நேரம்வந்தது.
46 ৪৬ উত্তিষ্ঠত, ৱযং যামঃ, যো মাং পৰকৰেষু মসৰ্পযিষ্যতি, পশ্যত, স সমীপমাযাতি|
௪௬என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார்.
47 ৪৭ এতৎকথাকথনকালে দ্ৱাদশশিষ্যাণামেকো যিহূদানামকো মুখ্যযাজকলোকপ্ৰাচীনৈঃ প্ৰহিতান্ অসিধাৰিযষ্টিধাৰিণো মনুজান্ গৃহীৎৱা তৎসমীপমুপতস্থৌ|
௪௭அவர் இப்படிப் பேசும்போது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடுகூட பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பின திரளான மக்கள் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள்.
48 ৪৮ অসৌ পৰকৰেষ্ৱৰ্পযিতা পূৰ্ৱ্ৱং তান্ ইত্থং সঙ্কেতযামাস, যমহং চুম্বিষ্যে, সোঽসৌ মনুজঃ, সএৱ যুষ্মাভি ৰ্ধাৰ্য্যতাং|
௪௮அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தம்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.
49 ৪৯ তদা স সপদি যীশুমুপাগত্য হে গুৰো, প্ৰণমামীত্যুক্ত্ৱা তং চুচুম্বে|
௪௯உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தம்செய்தான்.
50 ৫০ তদা যীশুস্তমুৱাচ, হে মিত্ৰং কিমৰ্থমাগতোসি? তদা তৈৰাগত্য যীশুৰাক্ৰম্য দঘ্ৰে|
௫0இயேசு அவனைப் பார்த்து; நண்பனே, எதற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவைப் பிடித்தார்கள்.
51 ৫১ ততো যীশোঃ সঙ্গিনামেকঃ কৰং প্ৰসাৰ্য্য কোষাদসিং বহিষ্কৃত্য মহাযাজকস্য দাসমেকমাহত্য তস্য কৰ্ণং চিচ্ছেদ|
௫௧அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கையை நீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காது அறுந்துபோக வெட்டினான்.
52 ৫২ ততো যীশুস্তং জগাদ, খড্গং স্ৱস্থানে নিধেহি যতো যে যে জনা অসিং ধাৰযন্তি, তএৱাসিনা ৱিনশ্যন্তি|
௫௨அப்பொழுது, இயேசு அவனைப் பார்த்து: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற அனைவரும் பட்டயத்தால் அழிந்துபோவார்கள்.
53 ৫৩ অপৰং পিতা যথা মদন্তিকং স্ৱৰ্গীযদূতানাং দ্ৱাদশৱাহিনীতোঽধিকং প্ৰহিণুযাৎ মযা তমুদ্দিশ্যেদানীমেৱ তথা প্ৰাৰ্থযিতুং ন শক্যতে, ৎৱযা কিমিত্থং জ্ঞাযতে?
௫௩நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்களை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?
54 ৫৪ তথা সতীত্থং ঘটিষ্যতে ধৰ্ম্মপুস্তকস্য যদিদং ৱাক্যং তৎ কথং সিধ্যেৎ?
௫௪அப்படிச் செய்வேனானால், இவ்விதமாக நடைபெறவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்.
55 ৫৫ তদানীং যীশু ৰ্জননিৱহং জগাদ, যূযং খড্গযষ্টীন্ আদায মাং কিং চৌৰং ধৰ্ত্তুমাযাতাঃ? অহং প্ৰত্যহং যুষ্মাভিঃ সাকমুপৱিশ্য সমুপাদিশং, তদা মাং নাধৰত;
௫௫அந்த நேரத்திலே இயேசு மக்களைப் பார்த்து: திருடனைப்பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம் செய்துகொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே.
56 ৫৬ কিন্তু ভৱিষ্যদ্ৱাদিনাং ৱাক্যানাং সংসিদ্ধযে সৰ্ৱ্ৱমেতদভূৎ| তদা সৰ্ৱ্ৱে শিষ্যাস্তং ৱিহায পলাযন্ত|
௫௬ஆனாலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் நடைபெறுகிறது என்றார். அப்பொழுது, சீடர்களெல்லோரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.
57 ৫৭ অনন্তৰং তে মনুজা যীশুং ধৃৎৱা যত্ৰাধ্যাপকপ্ৰাঞ্চঃ পৰিষদং কুৰ্ৱ্ৱন্ত উপাৱিশন্ তত্ৰ কিযফানামকমহাযাজকস্যান্তিকং নিন্যুঃ|
௫௭இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கூடிவந்திருந்தார்கள்.
58 ৫৮ কিন্তু শেষে কিং ভৱিষ্যতীতি ৱেত্তুং পিতৰো দূৰে তৎপশ্চাদ্ ৱ্ৰজিৎৱা মহাযাজকস্যাট্টালিকাং প্ৰৱিশ্য দাসৈঃ সহিত উপাৱিশৎ|
௫௮பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனை வரைக்கும் வந்து, உள்ளே நுழைந்து, முடிவைப் பார்க்கும்படி காவலாளிகளோடு உட்கார்ந்தான்.
59 ৫৯ তদানীং প্ৰধানযাজকপ্ৰাচীনমন্ত্ৰিণঃ সৰ্ৱ্ৱে যীশুং হন্তুং মৃষাসাক্ষ্যম্ অলিপ্সন্ত,
௫௯பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி தேடினார்கள்;
60 ৬০ কিন্তু ন লেভিৰে| অনেকেষু মৃষাসাক্ষিষ্ৱাগতেষ্ৱপি তন্ন প্ৰাপুঃ|
௬0ஒருவரும் கிடைக்கவில்லை; அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஏற்புடையதாயில்லை; கடைசியிலே இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து:
61 ৬১ শেষে দ্ৱৌ মৃষাসাক্ষিণাৱাগত্য জগদতুঃ, পুমানযমকথযৎ, অহমীশ্ৱৰমন্দিৰং ভংক্ত্ৱা দিনত্ৰযমধ্যে তন্নিৰ্ম্মাতুং শক্নোমি|
௬௧தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாட்களுக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள்.
62 ৬২ তদা মহাযাজক উত্থায যীশুম্ অৱাদীৎ| ৎৱং কিমপি ন প্ৰতিৱদসি? ৎৱামধি কিমেতে সাক্ষ্যং ৱদন্তি?
௬௨அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரைப் பார்த்து: இவர்கள் உனக்கு விரோதமாக சாட்சி சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான்.
63 ৬৩ কিন্তু যীশু ৰ্মৌনীভূয তস্যৌ| ততো মহাযাজক উক্তৱান্, ৎৱাম্ অমৰেশ্ৱৰনাম্না শপযামি, ৎৱমীশ্ৱৰস্য পুত্ৰোঽভিষিক্তো ভৱসি নৱেতি ৱদ|
௬௩இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.
64 ৬৪ যীশুঃ প্ৰত্যৱদৎ, ৎৱং সত্যমুক্তৱান্; অহং যুষ্মান্ তথ্যং ৱদামি, ইতঃপৰং মনুজসুতং সৰ্ৱ্ৱশক্তিমতো দক্ষিণপাৰ্শ্ৱে স্থাতুং গগণস্থং জলধৰানাৰুহ্যাযান্তং ৱীক্ষধ্ৱে|
௬௪அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனிதகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபக்கத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
65 ৬৫ তদা মহাযাজকো নিজৱসনং ছিত্ত্ৱা জগাদ, এষ ঈশ্ৱৰং নিন্দিতৱান্, অস্মাকমপৰসাক্ষ্যেণ কিং প্ৰযোজনং? পশ্যত, যূযমেৱাস্যাস্যাদ্ ঈশ্ৱৰনিন্দাং শ্ৰুতৱন্তঃ,
௬௫அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவனை நிந்தித்தான்; இனி சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் நிந்தித்ததை இப்பொழுது கேட்டீர்களே.
66 ৬৬ যুষ্মাভিঃ কিং ৱিৱিচ্যতে? তে প্ৰত্যূচুঃ, ৱধাৰ্হোঽযং|
௬௬உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்திற்குப் பாத்திரனாக இருக்கிறான் என்றார்கள்.
67 ৬৭ ততো লোকৈস্তদাস্যে নিষ্ঠীৱিতং কেচিৎ প্ৰতলমাহত্য কেচিচ্চ চপেটমাহত্য বভাষিৰে,
௬௭அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து:
68 ৬৮ হে খ্ৰীষ্ট ৎৱাং কশ্চপেটমাহতৱান্? ইতি গণযিৎৱা ৱদাস্মান্|
௬௮கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞான தரிசனத்தினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.
69 ৬৯ পিতৰো বহিৰঙ্গন উপৱিশতি, তদানীমেকা দাসী তমুপাগত্য বভাষে, ৎৱং গালীলীযযীশোঃ সহচৰএকঃ|
௬௯அந்தநேரத்தில் பேதுரு வெளியே வந்து அரண்மனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடுகூட இருந்தாய் என்றாள்.
70 ৭০ কিন্তু স সৰ্ৱ্ৱেষাং সমক্ষম্ অনঙ্গীকৃত্যাৱাদীৎ, ৎৱযা যদুচ্যতে, তদৰ্থমহং ন ৱেদ্মি|
௭0அதற்கு அவன்: நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று எல்லோருக்கும் முன்பாக மறுதலித்தான்.
71 ৭১ তদা তস্মিন্ বহিৰ্দ্ৱাৰং গতে ঽন্যা দাসী তং নিৰীক্ষ্য তত্ৰত্যজনানৱদৎ, অযমপি নাসৰতীযযীশুনা সাৰ্দ্ধম্ আসীৎ|
௭௧அவன், வாசல் மண்டபத்திற்குப்போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேயனாகிய இயேசுவோடுகூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள்.
72 ৭২ ততঃ স শপথেন পুনৰনঙ্গীকৃত্য কথিতৱান্, তং নৰং ন পৰিচিনোমি|
௭௨அவனோ: அந்த மனிதனை நான் அறியேன் என்று சத்தியம் செய்து, மறுபடியும் மறுதலித்தான்.
73 ৭৩ ক্ষণাৎ পৰং তিষ্ঠন্তো জনা এত্য পিতৰম্ অৱদন্, ৎৱমৱশ্যং তেষামেক ইতি ৎৱদুচ্চাৰণমেৱ দ্যোতযতি|
௭௩சிறிதுநேரத்திற்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உண்மையாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை காட்டிக்கொடுக்கிறது என்றார்கள்.
74 ৭৪ কিন্তু সোঽভিশপ্য কথিতৱান্, তং জনং নাহং পৰিচিনোমি, তদা সপদি কুক্কুটো ৰুৰাৱ|
௭௪அப்பொழுது அவன்: அந்த மனிதனைத் தெரியாது என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான். உடனே சேவல் கூவியது.
75 ৭৫ কুক্কুটৰৱাৎ প্ৰাক্ ৎৱং মাং ত্ৰিৰপাহ্নোষ্যসে, যৈষা ৱাগ্ যীশুনাৱাদি তাং পিতৰঃ সংস্মৃত্য বহিৰিৎৱা খেদাদ্ ভৃশং চক্ৰন্দ|
௭௫அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொண்டு, வெளியேபோய், மனங்கசந்து அழுதான்.

< মথিঃ 26 >