< যোহনঃ 9 >
1 ১ ততঃ পৰং যীশুৰ্গচ্ছন্ মাৰ্গমধ্যে জন্মান্ধং নৰম্ অপশ্যৎ|
௧அவர் அப்புறம் போகும்போது பிறவிக் குருடனாகிய ஒரு மனிதனைப் பார்த்தார்.
2 ২ ততঃ শিষ্যাস্তম্ অপৃচ্ছন্ হে গুৰো নৰোযং স্ৱপাপেন ৱা স্ৱপিত্ৰাঃ পাপেনান্ধোঽজাযত?
௨அப்பொழுது அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: ரபீ, இவன் குருடனாக பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.
3 ৩ ততঃ স প্ৰত্যুদিতৱান্ এতস্য ৱাস্য পিত্ৰোঃ পাপাদ্ এতাদৃশোভূদ ইতি নহি কিন্ত্ৱনেন যথেশ্ৱৰস্য কৰ্ম্ম প্ৰকাশ্যতে তদ্ধেতোৰেৱ|
௩இயேசு மறுமொழியாக: அது இவன் செய்த பாவமும் இல்லை, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமும் இல்லை, தேவனுடைய செயல்கள் இவனிடத்தில் வெளிப்படுவதற்கு இப்படிப் பிறந்தான்.
4 ৪ দিনে তিষ্ঠতি মৎপ্ৰেৰযিতুঃ কৰ্ম্ম মযা কৰ্ত্তৱ্যং যদা কিমপি কৰ্ম্ম ন ক্ৰিযতে তাদৃশী নিশাগচ্ছতি|
௪பகலாக இருக்கும்வரை நான் என்னை அனுப்பினவருடைய செயல்களைச் செய்யவேண்டும்; ஒருவனும் செயல்கள் செய்யக்கூடாத இரவு நேரம் வருகிறது.
5 ৫ অহং যাৱৎকালং জগতি তিষ্ঠামি তাৱৎকালং জগতো জ্যোতিঃস্ৱৰূপোস্মি|
௫நான் உலகத்தில் இருக்கும்போது உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன் என்றார்.
6 ৬ ইত্যুক্ত্তা ভূমৌ নিষ্ঠীৱং নিক্ষিপ্য তেন পঙ্কং কৃতৱান্
௬இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே உமிழ்ந்து, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி:
7 ৭ পশ্চাৎ তৎপঙ্কেন তস্যান্ধস্য নেত্ৰে প্ৰলিপ্য তমিত্যাদিশৎ গৎৱা শিলোহে ঽৰ্থাৎ প্ৰেৰিতনাম্নি সৰসি স্নাহি| ততোন্ধো গৎৱা তত্ৰাস্নাৎ ততঃ প্ৰন্নচক্ষু ৰ্ভূৎৱা ৱ্যাঘুট্যাগাৎ|
௭நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தம். அப்படியே அவன்போய்க் கழுவி, பார்வை அடைந்தவனாக திரும்பி வந்தான்.
8 ৮ অপৰঞ্চ সমীপৱাসিনো লোকা যে চ তং পূৰ্ৱ্ৱমন্ধম্ অপশ্যন্ তে বক্ত্তুম্ আৰভন্ত যোন্ধলোকো ৱৰ্ত্মন্যুপৱিশ্যাভিক্ষত স এৱাযং জনঃ কিং ন ভৱতি?
௮அப்பொழுது அருகில் உள்ளவர்களும், அவன் குருடனாக இருக்கும்போது அவனைப் பார்த்திருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவன் அல்லவா என்றார்கள்.
9 ৯ কেচিদৱদন্ স এৱ কেচিদৱোচন্ তাদৃশো ভৱতি কিন্তু স স্ৱযমব্ৰৱীৎ স এৱাহং ভৱামি|
௯சிலர்: அவன்தான் என்றார்கள். வேறுசிலர்: அவனைப்போல இருக்கிறான் என்றார்கள். அவனோ: நான்தான் அவன் என்றான்.
10 ১০ অতএৱ তে ঽপৃচ্ছন্ ৎৱং কথং দৃষ্টিং পাপ্তৱান্?
௧0அப்பொழுது அவர்கள் அவனைப் பார்த்து: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள்.
11 ১১ ততঃ সোৱদদ্ যীশনামক একো জনো মম নযনে পঙ্কেন প্ৰলিপ্য ইত্যাজ্ঞাপযৎ শিলোহকাসাৰং গৎৱা তত্ৰ স্নাহি| ততস্তত্ৰ গৎৱা মযি স্নাতে দৃষ্টিমহং লব্ধৱান্|
௧௧அவன் மறுமொழியாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வை அடைந்தேன் என்றான்.
12 ১২ তদা তে ঽৱদন্ স পুমান্ কুত্ৰ? তেনোক্ত্তং নাহং জানামি|
௧௨அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என்றான்.
13 ১৩ অপৰং তস্মিন্ পূৰ্ৱ্ৱান্ধে জনে ফিৰূশিনাং নিকটম্ আনীতে সতি ফিৰূশিনোপি তমপৃচ্ছন্ কথং দৃষ্টিং প্ৰাপ্তোসি?
௧௩குருடனாக இருந்த அவனைப் பரிசேயர்களிடத்திற்குக் கொண்டுபோனார்கள்.
14 ১৪ ততঃ স কথিতৱান্ স পঙ্কেন মম নেত্ৰে ঽলিম্পৎ পশ্চাদ্ স্নাৎৱা দৃষ্টিমলভে|
௧௪இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைத் திறந்த நாள் ஓய்வுநாளாக இருந்தது.
15 ১৫ কিন্তু যীশু ৰ্ৱিশ্ৰামৱাৰে কৰ্দ্দমং কৃৎৱা তস্য নযনে প্ৰসন্নেঽকৰোদ্ ইতিকাৰণাৎ কতিপযফিৰূশিনোঽৱদন্
௧௫ஆகவே, பரிசேயர்களும் அவனைப் பார்த்து: நீ எப்படிப் பார்வை அடைந்தாய் என்று மீண்டும் கேட்டார்கள். அதற்கு அவன்: அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், பார்க்கிறேன் என்றான்.
16 ১৬ স পুমান্ ঈশ্ৱৰান্ন যতঃ স ৱিশ্ৰামৱাৰং ন মন্যতে| ততোন্যে কেচিৎ প্ৰত্যৱদন্ পাপী পুমান্ কিম্ এতাদৃশম্ আশ্চৰ্য্যং কৰ্ম্ম কৰ্ত্তুং শক্নোতি?
௧௬அப்பொழுது பரிசேயர்களில் சிலர்: அந்த மனிதன் ஓய்வுநாளைக் கடைபிடிக்காததினால் அவன் தேவனிடத்தில் இருந்து வந்தவன் இல்லை என்றார்கள். வேறுசிலர்: பாவியாக இருக்கிற மனிதன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இந்தவிதமாக அவர்களுக்குள்ளே பிரிவினை ஏற்பட்டது.
17 ১৭ ইত্থং তেষাং পৰস্পৰং ভিন্নৱাক্যৎৱম্ অভৱৎ| পশ্চাৎ তে পুনৰপি তং পূৰ্ৱ্ৱান্ধং মানুষম্ অপ্ৰাক্ষুঃ যো জনস্তৱ চক্ষুষী প্ৰসন্নে কৃতৱান্ তস্মিন্ ৎৱং কিং ৱদসি? স উক্ত্তৱান্ স ভৱিশদ্ৱাদী|
௧௭மீண்டும் அவர்கள் குருடனைப் பார்த்து: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான்.
18 ১৮ স দৃষ্টিম্ আপ্তৱান্ ইতি যিহূদীযাস্তস্য দৃষ্টিং প্ৰাপ্তস্য জনস্য পিত্ৰো ৰ্মুখাদ্ অশ্ৰুৎৱা ন প্ৰত্যযন্|
௧௮அவன் குருடனாக இருந்து பார்வை அடைந்ததை யூதர்கள் நம்பாமல், பார்வை அடைந்தவனுடைய பெற்றோரை அழைத்து,
19 ১৯ অতএৱ তে তাৱপৃচ্ছন্ যুৱযো ৰ্যং পুত্ৰং জন্মান্ধং ৱদথঃ স কিমযং? তৰ্হীদানীং কথং দ্ৰষ্টুং শক্নোতি?
௧௯அவர்களைப் பார்த்து: உங்களுடைய மகன் குருடனாகப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள்.
20 ২০ ততস্তস্য পিতৰৌ প্ৰত্যৱোচতাম্ অযম্ আৱযোঃ পুত্ৰ আ জনেৰন্ধশ্চ তদপ্যাৱাং জানীৱঃ
௨0பெற்றோர் மறுமொழியாக; இவன் எங்களுடைய மகன்தான் என்றும், குருடனாகப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும்.
21 ২১ কিন্ত্ৱধুনা কথং দৃষ্টিং প্ৰাপ্তৱান্ তদাৱাং ন্ জানীৱঃ কোস্য চক্ষুষী প্ৰসন্নে কৃতৱান্ তদপি ন জানীৱ এষ ৱযঃপ্ৰাপ্ত এনং পৃচ্ছত স্ৱকথাং স্ৱযং ৱক্ষ্যতি|
௨௧இப்பொழுது இவன் பார்வை அடைந்தது எப்படி என்று எங்களுக்குத் தெரியாது; இவனுடைய கண்களைத் திறந்தவன் யார் என்பதும் எங்களுக்குத் தெரியாது; இவன் வாலிபனாக இருக்கிறான், இவனையே கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள்.
22 ২২ যিহূদীযানাং ভযাৎ তস্য পিতৰৌ ৱাক্যমিদম্ অৱদতাং যতঃ কোপি মনুষ্যো যদি যীশুম্ অভিষিক্তং ৱদতি তৰ্হি স ভজনগৃহাদ্ দূৰীকাৰিষ্যতে যিহূদীযা ইতি মন্ত্ৰণাম্ অকুৰ্ৱ্ৱন্
௨௨அவனுடைய பெற்றோர்கள் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனென்றால், இயேசுவைக் கிறிஸ்து என்று யாராவது அறிக்கை செய்தால் அவனை ஜெப ஆலயத்திற்குப் வெளியாக்க வேண்டும் என்று யூதர்கள் அதற்கு ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள்.
23 ২৩ অতস্তস্য পিতৰৌ ৱ্যাহৰতাম্ এষ ৱযঃপ্ৰাপ্ত এনং পৃচ্ছত|
௨௩அதினிமித்தம்: இவன் வாலிபனாக இருக்கிறான், இவனையே கேளுங்கள் என்று அவனுடைய பெற்றோர்கள் சொன்னார்கள்.
24 ২৪ তদা তে পুনশ্চ তং পূৰ্ৱ্ৱান্ধম্ আহূয ৱ্যাহৰন্ ঈশ্ৱৰস্য গুণান্ ৱদ এষ মনুষ্যঃ পাপীতি ৱযং জানীমঃ|
௨௪ஆதலால் அவர்கள் குருடனாக இருந்த மனிதனை இரண்டாம்முறை அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனிதன் பாவி என்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள்.
25 ২৫ তদা স উক্ত্তৱান্ স পাপী ন ৱেতি নাহং জানে পূৰ্ৱামন্ধ আসমহম্ অধুনা পশ্যামীতি মাত্ৰং জানামি|
௨௫அவன் மறுமொழியாக: அவர் பாவியா இல்லையா என்று எனக்குத் தெரியாது; நான் குருடனாக இருந்தேன், இப்பொழுது பார்க்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான்.
26 ২৬ তে পুনৰপৃচ্ছন্ স ৎৱাং প্ৰতি কিমকৰোৎ? কথং নেত্ৰে প্ৰসন্নে ঽকৰোৎ?
௨௬அவர்கள் மறுபடியும் அவனைப் பார்த்து: உனக்கு என்ன செய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள்.
27 ২৭ ততঃ সোৱাদীদ্ এককৃৎৱোকথযং যূযং ন শৃণুথ তৰ্হি কুতঃ পুনঃ শ্ৰোতুম্ ইচ্ছথ? যূযমপি কিং তস্য শিষ্যা ভৱিতুম্ ইচ্ছথ?
௨௭அவன் மறுமொழியாக: ஏற்கனவே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேட்காமல் போனீர்கள்; மறுபடியும் ஏன் கேட்கிறீர்கள்? அவருக்குச் சீடராக உங்களுக்கும் விருப்பம் இருக்கிறதா என்றான்.
28 ২৮ তদা তে তং তিৰস্কৃত্য ৱ্যাহৰন্ ৎৱং তস্য শিষ্যো ৱযং মূসাঃ শিষ্যাঃ|
௨௮அப்பொழுது அவர்கள் அவனைத் திட்டி: நீ அவனுடைய சீடன், நாங்கள் மோசேயினுடைய சீடர்.
29 ২৯ মূসাৱক্ত্ৰেণেশ্ৱৰো জগাদ তজ্জানীমঃ কিন্ত্ৱেষ কুত্ৰত্যলোক ইতি ন জানীমঃ|
௨௯மோசேயுடனே தேவன் பேசினார் என்று தெரியும், இவன் எங்கே இருந்து வந்தவன் என்று எங்களுக்குத் தெரியாது என்றார்கள்.
30 ৩০ সোৱদদ্ এষ মম লোচনে প্ৰসন্নে ঽকৰোৎ তথাপি কুত্ৰত্যলোক ইতি যূযং ন জানীথ এতদ্ আশ্চৰ্য্যং ভৱতি|
௩0அதற்கு அந்த மனிதன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கிருந்து வந்தவர் என்று நீங்கள் தெரியாமல் இருப்பது ஆச்சரியமான காரியம்.
31 ৩১ ঈশ্ৱৰঃ পাপিনাং কথাং ন শৃণোতি কিন্তু যো জনস্তস্মিন্ ভক্তিং কৃৎৱা তদিষ্টক্ৰিযাং কৰোতি তস্যৈৱ কথাং শৃণোতি এতদ্ ৱযং জানীমঃ|
௩௧பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறது இல்லை என்று தெரிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தி உள்ளவனாக இருந்து அவருக்கு பிரியமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.
32 ৩২ কোপি মনুষ্যো জন্মান্ধায চক্ষুষী অদদাৎ জগদাৰম্ভাদ্ এতাদৃশীং কথাং কোপি কদাপি নাশৃণোৎ| (aiōn )
௩௨பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானதுமுதல் கேள்விப்பட்டது இல்லையே. (aiōn )
33 ৩৩ অস্মাদ্ এষ মনুষ্যো যদীশ্ৱৰান্নাজাযত তৰ্হি কিঞ্চিদপীদৃশং কৰ্ম্ম কৰ্ত্তুং নাশক্নোৎ|
௩௩அவர் தேவனிடத்தில் இருந்து வராமல் இருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்.
34 ৩৪ তে ৱ্যাহৰন্ ৎৱং পাপাদ্ অজাযথাঃ কিমস্মান্ ৎৱং শিক্ষযসি? পশ্চাত্তে তং বহিৰকুৰ্ৱ্ৱন্|
௩௪அவர்கள் அவனுக்கு மறுமொழியாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் வெளியே தள்ளிவிட்டார்கள்.
35 ৩৫ তদনন্তৰং যিহূদীযৈঃ স বহিৰক্ৰিযত যীশুৰিতি ৱাৰ্ত্তাং শ্ৰুৎৱা তং সাক্ষাৎ প্ৰাপ্য পৃষ্টৱান্ ঈশ্ৱৰস্য পুত্ৰে ৎৱং ৱিশ্ৱসিষি?
௩௫அவனை அவர்கள் வெளியே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைப் பார்த்தபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறாயா என்றார்.
36 ৩৬ তদা স প্ৰত্যৱোচৎ হে প্ৰভো স কো যৎ তস্মিন্নহং ৱিশ্ৱসিমি?
௩௬அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாக இருக்கும்படிக்கு அவர் யார் என்றான்.
37 ৩৭ ততো যীশুঃ কথিতৱান্ ৎৱং তং দৃষ্টৱান্ ৎৱযা সাকং যঃ কথং কথযতি সএৱ সঃ|
௩௭இயேசு அவனைப் பார்த்து: நீ அவரைப் பார்த்திருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார்.
38 ৩৮ তদা হে প্ৰভো ৱিশ্ৱসিমীত্যুক্ত্ৱা স তং প্ৰণামৎ|
௩௮உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.
39 ৩৯ পশ্চাদ্ যীশুঃ কথিতৱান্ নযনহীনা নযনানি প্ৰাপ্নুৱন্তি নযনৱন্তশ্চান্ধা ভৱন্তীত্যভিপ্ৰাযেণ জগদাহম্ আগচ্ছম্|
௩௯அப்பொழுது இயேசு: பார்க்காதவர்கள் பார்க்கும்படியாகவும், பார்க்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார்.
40 ৪০ এতৎ শ্ৰুৎৱা নিকটস্থাঃ কতিপযাঃ ফিৰূশিনো ৱ্যাহৰন্ ৱযমপি কিমন্ধাঃ?
௪0அவரோடு இருந்த பரிசேயர்களில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள்.
41 ৪১ তদা যীশুৰৱাদীদ্ যদ্যন্ধা অভৱত তৰ্হি পাপানি নাতিষ্ঠন্ কিন্তু পশ্যামীতি ৱাক্যৱদনাদ্ যুষ্মাকং পাপানি তিষ্ঠন্তি|
௪௧இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் குருடராக இருந்தால் உங்களுக்குப் பாவம் இருக்காது; நீங்கள் பார்க்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்களுடைய பாவம் நிலைநிற்கிறது என்றார்.