< ১ তীমথিযঃ 6 >

1 যাৱন্তো লোকা যুগধাৰিণো দাসাঃ সন্তি তে স্ৱস্ৱস্ৱামিনং পূৰ্ণসমাদৰযোগ্যং মন্যন্তাং নো চেদ্ ঈশ্ৱৰস্য নাম্ন উপদেশস্য চ নিন্দা সম্ভৱিষ্যতি|
தேவனுடைய நாமமும் உபதேசமும் அவமதிக்கப்படாதபடிக்கு, அடிமைத்தனத்திற்கு உட்பட்டிருக்கிற வேலைக்காரர்கள் அனைவரும் தங்களுடைய எஜமான்களை எல்லாக் கனத்திற்கும் தகுதியுள்ளவர்கள் என்று நினைத்துக்கொள்ளவேண்டும்.
2 যেষাঞ্চ স্ৱামিনো ৱিশ্ৱাসিনঃ ভৱন্তি তৈস্তে ভ্ৰাতৃৎৱাৎ নাৱজ্ঞেযাঃ কিন্তু তে কৰ্ম্মফলভোগিনো ৱিশ্ৱাসিনঃ প্ৰিযাশ্চ ভৱন্তীতি হেতোঃ সেৱনীযা এৱ, ৎৱম্ এতানি শিক্ষয সমুপদিশ চ|
விசுவாசிகளாகிய எஜமான்களை உடையவர்கள், தங்களுடைய எஜமான்கள் சகோதரர்களாக இருப்பதினால் அவர்களை அசட்டைபண்ணாமல், நல்ல வேலையின் பலனைப் பெற்றுக்கொள்ளுகிறவர்கள் விசுவாசிகளும், பிரியமுள்ளவர்களுமாக இருப்பதினால் அவர்களுக்கு அதிகமாக ஊழியம் செய்யுங்கள்; இந்தப்படியே போதித்துப் புத்திசொல்லு.
3 যঃ কশ্চিদ্ ইতৰশিক্ষাং কৰোতি, অস্মাকং প্ৰভো ৰ্যীশুখ্ৰীষ্টস্য হিতৱাক্যানীশ্ৱৰভক্তে ৰ্যোগ্যাং শিক্ষাঞ্চ ন স্ৱীকৰোতি
ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வார்த்தைகளையும், தேவபக்திக்குரிய உபதேசங்களையும் ஏற்றுக்கொள்ளாமல், மாறுபாடான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்,
4 স দৰ্পধ্মাতঃ সৰ্ৱ্ৱথা জ্ঞানহীনশ্চ ৱিৱাদৈ ৰ্ৱাগ্যুদ্ধৈশ্চ ৰোগযুক্তশ্চ ভৱতি|
அவன் பெருமை உள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கமும், வாக்குவாதமும் பண்ணுகிற நோய்கொண்டவனுமாக இருக்கிறான்; அவைகளினாலே பொறாமையும், சண்டையும், அவதூறுகளும், பொல்லாத சந்தேகங்களும் உண்டாகி,
5 তাদৃশাদ্ ভাৱাদ্ ঈৰ্ষ্যাৱিৰোধাপৱাদদুষ্টাসূযা ভ্ৰষ্টমনসাং সত্যজ্ঞানহীনানাম্ ঈশ্ৱৰভক্তিং লাভোপাযম্ ইৱ মন্যমানানাং লোকানাং ৱিৱাদাশ্চ জাযন্তে তাদৃশেভ্যো লোকেভ্যস্ত্ৱং পৃথক্ তিষ্ঠ|
கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழில் என்று நினைக்கிறவர்களுமாக இருக்கிற மனிதர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களைவிட்டு விலகி இரு.
6 সংযতেচ্ছযা যুক্তা যেশ্ৱৰভক্তিঃ সা মহালাভোপাযো ভৱতীতি সত্যং|
போதும் என்கிற மனதோடுகூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
7 এতজ্জগৎপ্ৰৱেশনকালেঽস্মাভিঃ কিমপি নানাযি তত্তযজনকালেঽপি কিমপি নেতুং ন শক্ষ্যত ইতি নিশ্চিতং|
உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததும் இல்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.
8 অতএৱ খাদ্যান্যাচ্ছাদনানি চ প্ৰাপ্যাস্মাভিঃ সন্তুষ্টৈ ৰ্ভৱিতৱ্যং|
உண்பதற்கும் உடுத்துவதற்கும் நமக்கு இருந்தால் அது போதும் என்று இருக்கவேண்டும்.
9 যে তু ধনিনো ভৱিতুং চেষ্টন্তে তে পৰীক্ষাযাম্ উন্মাথে পতন্তি যে চাভিলাষা মানৱান্ ৱিনাশে নৰকে চ মজ্জযন্তি তাদৃশেষ্ৱজ্ঞানাহিতাভিলাষেষ্ৱপি পতন্তি|
செல்வந்தர்களாவதற்கு விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனிதர்களைத் தீமையிலும், அழிவிலும் அமிழ்த்திப்போடுகிற மதிகேடும் சேதமுமான பலவிதமான இச்சைகளிலும் விழுகிறார்கள்.
10 ১০ যতোঽৰ্থস্পৃহা সৰ্ৱ্ৱেষাং দুৰিতানাং মূলং ভৱতি তামৱলম্ব্য কেচিদ্ ৱিশ্ৱাসাদ্ অভ্ৰংশন্ত নানাক্লেশৈশ্চ স্ৱান্ অৱিধ্যন্|
௧0பணஆசை எல்லாத் தீமைகளுக்கும் வேராக இருக்கிறது; சிலர் அதை விரும்பி, விசுவாசத்தைவிட்டு விலகி, அநேக வேதனைகளாலே தங்களைத்தாங்களே கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
11 ১১ হে ঈশ্ৱৰস্য লোক ৎৱম্ এতেভ্যঃ পলায্য ধৰ্ম্ম ঈশ্ৱৰভক্তি ৰ্ৱিশ্ৱাসঃ প্ৰেম সহিষ্ণুতা ক্ষান্তিশ্চৈতান্যাচৰ|
௧௧நீயோ, தேவனுடைய மனிதனே, இவைகளைவிட்டு விலகி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் நாடிப் பெற்றுக்கொள்.
12 ১২ ৱিশ্ৱাসৰূপম্ উত্তমযুদ্ধং কুৰু, অনন্তজীৱনম্ আলম্বস্ৱ যতস্তদৰ্থং ৎৱম্ আহূতো ঽভৱঃ, বহুসাক্ষিণাং সমক্ষঞ্চোত্তমাং প্ৰতিজ্ঞাং স্ৱীকৃতৱান্| (aiōnios g166)
௧௨விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாக இருக்கிறாய். (aiōnios g166)
13 ১৩ অপৰং সৰ্ৱ্ৱেষাং জীৱযিতুৰীশ্ৱৰস্য সাক্ষাদ্ যশ্চ খ্ৰীষ্টো যীশুঃ পন্তীযপীলাতস্য সমক্ষম্ উত্তমাং প্ৰতিজ্ঞাং স্ৱীকৃতৱান্ তস্য সাক্ষাদ্ অহং ৎৱাম্ ইদম্ আজ্ঞাপযামি|
௧௩நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்வரைக்கும், நீ இந்தக் கட்டளையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கடைபிடிக்கும்படி,
14 ১৪ ঈশ্ৱৰেণ স্ৱসমযে প্ৰকাশিতৱ্যম্ অস্মাকং প্ৰভো ৰ্যীশুখ্ৰীষ্টস্যাগমনং যাৱৎ ৎৱযা নিষ্কলঙ্কৎৱেন নিৰ্দ্দোষৎৱেন চ ৱিধী ৰক্ষ্যতাং|
௧௪எல்லாவற்றையும் உயிரோடு இருக்கச்செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவிற்கு முன்பாக நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
15 ১৫ স ঈশ্ৱৰঃ সচ্চিদানন্দঃ, অদ্ৱিতীযসম্ৰাট্, ৰাজ্ঞাং ৰাজা, প্ৰভূনাং প্ৰভুঃ,
௧௫இயேசுவின் வருகையை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே ஸ்தோத்தரிக்கப்பட்ட ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,
16 ১৬ অমৰতাযা অদ্ৱিতীয আকৰঃ, অগম্যতেজোনিৱাসী, মৰ্ত্ত্যানাং কেনাপি ন দৃষ্টঃ কেনাপি ন দৃশ্যশ্চ| তস্য গৌৰৱপৰাক্ৰমৌ সদাতনৌ ভূযাস্তাং| আমেন্| (aiōnios g166)
௧௬அவர் ஒருவரே மரணம் இல்லாதவரும், ஒருவரும் நெருங்கமுடியாத ஒளியில் வாழ்கிறவரும், மனிதர்களில் ஒருவரும் காணாதவரும், காணக்கூடாதவருமாக இருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōnios g166)
17 ১৭ ইহলোকে যে ধনিনস্তে চিত্তসমুন্নতিং চপলে ধনে ৱিশ্ৱাসঞ্চ ন কুৰ্ৱ্ৱতাং কিন্তু ভোগাৰ্থম্ অস্মভ্যং প্ৰচুৰৎৱেন সৰ্ৱ্ৱদাতা (aiōn g165)
௧௭இந்த உலகத்தில் செல்வந்தர்கள் பெருமையான சிந்தையுள்ளவர்களாக இல்லாமலும், நிலையில்லாத செல்வத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அனுபவிக்கிறதற்கு எல்லாவித நன்மைகளையும் நமக்கு பரிபூரணமாகக் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், (aiōn g165)
18 ১৮ যোঽমৰ ঈশ্ৱৰস্তস্মিন্ ৱিশ্ৱসন্তু সদাচাৰং কুৰ্ৱ্ৱন্তু সৎকৰ্ম্মধনেন ধনিনো সুকলা দাতাৰশ্চ ভৱন্তু,
௧௮நன்மைசெய்யவும், நல்ல செயல்களில் செல்வந்தர்களாகவும், தாராளமாகக் கொடுக்கிறவர்களும், தங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொடுக்கிறவர்களாகவும் இருக்கவும்,
19 ১৯ যথা চ সত্যং জীৱনং পাপ্নুযুস্তথা পাৰত্ৰিকাম্ উত্তমসম্পদং সঞ্চিন্ৱন্ত্ৱেতি ৎৱযাদিশ্যন্তাং|
௧௯நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு உறுதியான அஸ்திபாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.
20 ২০ হে তীমথিয, ৎৱম্ উপনিধিং গোপয কাল্পনিকৱিদ্যাযা অপৱিত্ৰং প্ৰলাপং ৱিৰোধোক্তিঞ্চ ত্যজ চ,
௨0ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாகப் பெயர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகி இரு.
21 ২১ যতঃ কতিপযা লোকাস্তাং ৱিদ্যামৱলম্ব্য ৱিশ্ৱাসাদ্ ভ্ৰষ্টা অভৱন| প্ৰসাদস্তৱ সহাযো ভূযাৎ| আমেন্|
௨௧சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு விலகிப்போனார்கள். கிருபையானது உன்னோடு இருப்பதாக. ஆமென்.

< ১ তীমথিযঃ 6 >