< Mark 2 >
1 Sûn tômte suole chu Jisua Capernaum taka a se nôka, male ina a om ti roi ânthanga.
௧சில நாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டில் இருக்கிறார் என்று மக்கள் கேள்விப்பட்டு;
2 Masikin mi tamtak an hong intûpa, inkhâr pêntieng luo mun tong khâi maka. Jisua'n an kôm thurchi a misîr lâitakin
௨உடனே அநேக மக்கள் கூடிவந்தார்கள், வாசலுக்குமுன்பு நிற்க இடம் இல்லாமல்போனது; அவர்களுக்கு வசனத்தைப் போதித்தார்.
3 phalkhatthi inkhat mi minlîn a kôm an hong rojôna.
௩அப்பொழுது நான்குபேர், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவனைச் சுமந்துகொண்டு அவரிடம் வந்தார்கள்;
4 Nikhomrese loko an tam rai sikin a kôma hong tungpui thei mak ngeia, masikin Jisua omna ridîn taka inchung an phêna. An phên zoiin chu phalkhatthipu hah a jâmpher leh an juong musuma.
௪மக்கள்கூட்டம் அதிகமாக இருந்ததால் இயேசுவின் அருகில் செல்லமுடியாமல், அவர் இருந்த வீட்டின் மேல்கூரையைப் பிரித்து, அந்தப் பக்கவாதக்காரனை படுக்கையோடு இறக்கினார்கள்.
5 Jisua'n an taksôn tie hah a mua, phalkhatthipa kôm han, “Ka nâipasal, ni sietnangei ngâidam ani zoi,” a tia.
௫இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
6 Balam minchupungei senkhat ma muna insung ngei han an mindonna,
௬அங்கே உட்கார்ந்திருந்த வேதபண்டிதர்களில் சிலர்:
7 “Hi mi hin ithomo hi anga a chong ngam hi? Pathien a rilminsiet ani! Pathien vai ke sietnangei ngâidam thei!” an tia.
௭இவன் இப்படித் தேவநிந்தனை சொல்லுகிறது என்ன? தேவன் ஒருவரைத்தவிர பாவங்களை மன்னிப்பவர் யார் என்று தங்களுடைய இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.
8 Harenghan Jisua'n an mindon hah a rieta, an kôm, “Ithomo ma anghan nin mindonna?
௮அவர்கள் தங்களுடைய மனதில் இப்படிச் சிந்திக்கிறார்கள் என்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் உங்களுடைய இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறது என்ன?
9 Phalkhatthi kôm han, ‘Ni sietnangei ngâidam ani zoi,’ ti le ‘Inthoi inla, na jâmpher luok inla lôn ta roh,’ ti hih kho hi mo a ti abai uol?
௯உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, அல்லது எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று சொல்வதோ, எது எளிது?
10 Hanchu, philchung hin Miriem Nâipasal'n sietnangei ngâidam theina racham a dôn ti nangni lei min mu rong” a tia. Masikin phalkhatthi kôm han,
௧0பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து:
11 “Inthoi inla, na jâmpher luok inla, ni ina se ta roh!” tiin nang ki ril a tia.
௧௧நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
12 An rêngin an enchungchakin ama hah ânthoia, a jâmpher a luoka, a se kelen zoia. An rêngin an kamâm sabaka, Pathien an minpâka, “Hima anga neinun hih chu la mu tet ngâi mak me!” an tia.
௧௨உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் முன்பாக தன் வீட்டிற்குப்போனான். அப்பொழுது எல்லோரும் ஆச்சரியப்பட்டு: நாம் இதுவரை இப்படிப்பட்ட சம்பவத்தைப் பார்த்தது இல்லை என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
13 Jisua Galilee dîl panga a se nôka. Loko ngei a kôm an sea, male a minchu ngei phut zoia.
௧௩அவர் மீண்டும் புறப்பட்டுக் கடல் அருகே போனார்; அப்பொழுது மக்கள் எல்லோரும் அவரிடம் வந்தார்கள்; அவர்களுக்குப் போதனைப்பண்ணினார்.
14 A sena sumrusuongpa Levi Alphaeus nâipasal, a office taka ânsung a mua. Jisua'n a kôm, “Ni hong jûi roh,” a tipea. Levi ânthoia, male ama a jûi zoi.
௧௪அப்பொழுது அவர் நடந்துபோகும்போது, அல்பேயுவின் குமாரனாகிய லேவி வரிவசூலிக்கும் மையத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து: என் பின்னே வாஎன்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்னேசென்றான்.
15 Chomolte suole chu Levi ina bukhalâi an ota. Sumrusuong ngâi mi tamtak le mitelloingei Jisua an jûia, male mi tamtakin Jisua le a ruoisingei bukhalâi otna dosânga an inchela.
௧௫அப்பொழுது, அவனுடைய வீட்டிலே அவர் விருந்து சாப்பிடும்போது, அநேக வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் அவரோடு வந்திருந்தபடியால், அவர்களும் இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பந்தியில் இருந்தார்கள்.
16 Phariseengei le Balam minchupungei senkhatin, Jisua chu mitelloingei le sumrusuongpungei leh bu a nêk an mûn chu a ruoisingei kôm, “Khoitho mo ma anga mingei lâia bu a nêk?” tiin an rekela.
௧௬இயேசு வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சாப்பிடுகிறதை வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் பார்த்து, அவருடைய சீடர்களை நோக்கி: அவர் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிடுவது ஏன் என்று கேட்டார்கள்.
17 Jisua'n an chong hah a lei rieta, an kôm, “Adamngeiin doctor nâng ngâi mak ngeia, aniatachu adamloi ngei chu doctor an nâng ngâi. Midikngei ralam ranga juong ni ma-unga, mitelloingei ralam ranga juong ke ki ni,” tiin a thuona.
௧௭இயேசு அதைக்கேட்டு: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவை, சுகமாக இருப்பவர்களுக்கு தேவை இல்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனம்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
18 Zora khat chu Baptispu John nûkjûingei le Phariseengei han bu an ngêia. Mingei senkhatin Jisua kôm an honga, a kôm, “Ithomo John nûkjûingei le Pharisee ruoisingei hi bu an ngêi ngena, aniatachu nu ruoisingei hi an ngêi ngâi loi?” tiin an rekela.
௧௮யோவானுடைய சீடர்களும் பரிசேயர்களுடைய சீடர்களும் உபவாசம்பண்ணிவந்தார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்து: யோவானுடைய சீடர்களும் பரிசேயர்களுடைய சீடர்களும் உபவாசம்பண்ணுகிறார்களே, ஆனால் உம்முடைய சீடர்கள் உபவாசம்பண்ணாமல் இருப்பது ஏன் என்று கேட்டார்கள்.
19 Jisua'n an kôm, “Inneina khuolmingei ha bungêi rangin nin lei sabei mini?” Ni thei no ni! Mâkpa hah an kôma aom kâr chu bungêi no ni ngei.
௧௯அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்கள் உபவாசம்பண்ணுவார்களா? மணவாளன் தங்களோடு இருக்கும்வரை உபவாசம்பண்ணமாட்டார்களே.
20 Hannirese an kôm renga mâkpa ha an tuong pai nikhuo la tung a ta, ma tika chu la ngêi an tih.
௨0மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள்.
21 “Tutên puon muruo chitphonân puon thar relek mang ngâi mak ngei, mang ngân khom senla athar han amuruo hah minchîrup a ta chet uol atih.
௨௧ஒருவனும் புதிய ஆடையின் துண்டைப் பழைய ஆடையோடு இணைத்து தைக்கமாட்டான், தைத்தால், அதினோடு இணைத்த புதிய ஆடை பழைய ஆடையை அதிகமாகக் கிழிக்கும், கீறலும் அதிகமாகும்.
22 Tutên uain thar khom savun ûm muruo taka thun ngâi mak ngei, thun ngân khom senla, uain thar han savun ûm hah mût khoi a ta, uain le savun ûm le mangmunboi chang atih. Manêkin, uain thar chu savun ûm thara ngêt thun nîng atih” tiin a thuona.
௨௨ஒருவனும் புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைக்கமாட்டான்; ஊற்றிவைத்தால், புதிய இரசம் தோல் பைகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்; புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும் என்றார்.
23 Sabbathnin Jisua bubilngei senkhata a lôna. A ruoisingeiin ama leh an lôn pumin buvûingei ha an china
௨௩பின்பு, அவர் ஓய்வுநாளில் வயல்வழியாக நடந்துபோனார்; அவருடைய சீடர்கள் அவரோடு நடந்துபோகும்போது, கதிர்களைச் சாப்பிட தொடங்கினார்கள்.
24 Masikin Phariseengeiin Jisua kôm, “En ta, nu ruoisingeiin Sabbathnia an tho hi! Mahi ei Balamin akhap ani,” an tia.
௨௪பரிசேயர்கள் அவரைப் பார்த்து: இதோ, ஓய்வுநாளில் செய்யக்கூடாததை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்றார்கள்.
25 Jisua'n an kôm, “David'n sâk rang ânsam lâihan a tho hah nin la pore tet ngâi loi mini? Ama le a miriemngei an vonchâm sabaka,
௨௫அதற்கு அவர்: தாவீதுக்கு உண்டான ஆபத்தில், தானும் தன்னோடு இருந்தவர்களும் பசியாக இருந்தபோது,
26 masikin David han Pathien ina a lûta, Pathien kôma pêksai vâipôl hah a sâka. Mahi Abiathar Ochai Inlaltak a chang lâihan ani. Ei Balam dungjûiin chu ha vâipôl hah Ochaingei vai ke an sâk thei ngâi ani, aniatachu David'n a sâka male a miriemngei khom a sem ngei sa.”
௨௬அவன் அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில் செய்ததை நீங்கள் படித்தது இல்லையா? அவன் தேவனுடைய வீட்டிற்கு சென்று, ஆசாரியர்கள்தவிர வேறு ஒருவரும் சாப்பிடக்கூடாத தேவ சமுகத்தின் அப்பங்களைத் தானும் சாப்பிட்டுத் தன்னோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்றார்.
27 Male Jisua'n, “Sabbathni chu miriemngei sana ranga sin ania, miriem chu Sabbathni ranga sin nimak.
௨௭பின்பு அவர்களை நோக்கி: மனிதன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டது;
28 Masikin Miriem Nâipasal hih Sabbathni a Pumapa khom ani” tiin chong a khâr zoi.
௨௮எனவே மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார்.