< Псалтирь 92 >
1 Псалом. Песнь на день субботний. Благо есть славить Господа и петь имени Твоему, Всевышний,
ஓய்வுநாளுக்கான பாடலாகிய சங்கீதம். யெகோவாவைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது பெயரைப் புகழ்ந்து பாடுவதும் நல்லது.
2 возвещать утром милость Твою и истину Твою в ночи,
காலையிலே உமது அன்பையும் இரவிலே உமது உண்மையையும் அறிவிப்பது நல்லது.
3 на десятиструнном и псалтири, с песнью на гуслях.
பத்து நரம்பு வீணையின் இசையினாலும், யாழின் ஓசையினாலும் அதை அறிவிப்பது நல்லது.
4 Ибо Ты возвеселил меня, Господи, творением Твоим: я восхищаюсь делами рук Твоих.
யெகோவாவே, நீர் உமது செயல்களினால் என்னை மகிழ்ச்சியாக்குகிறீர்; உமது கைகளின் வேலைகளினிமித்தம் நான் மகிழ்ந்து பாடுகிறேன்.
5 Как велики дела Твои, Господи! дивно глубоки помышления Твои!
யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு பெரிதானவை, உம்முடைய யோசனைகள் எவ்வளவு ஆழமானவை!
6 Человек несмысленный не знает, и невежда не разумеет того.
உணர்வற்ற மனிதன் அறியாததும், மூடர் விளங்கிக்கொள்ளாததும் இதுவே,
7 Тогда как нечестивые возникают, как трава, и делающие беззаконие цветут, чтобы исчезнуть на веки,
கொடியவர்கள் புல்லைப்போல் முளைத்தாலும், தீங்கு செய்கிறவர்கள் எல்லோரும் செழித்தாலும், என்றென்றைக்கும் அழிந்துபோவார்கள்.
8 Ты, Господи, высок во веки!
ஆனாலும் யெகோவாவே, நீர் என்றென்றுமாய் புகழ்ந்து உயர்த்தப்படுகிறீர்.
9 Ибо вот, враги Твои, Господи, - вот, враги Твои гибнут, и рассыпаются все делающие беззаконие;
யெகோவாவே, உமது பகைவர், நிச்சயமாகவே உம்முடைய பகைவர் அழிந்தேபோவார்கள்; தீமை செய்வோர் எல்லோருமே சிதறடிக்கப்படுவார்கள்.
10 а мой рог Ты возносишь, как рог единорога, и я умащен свежим елеем;
காட்டெருதின் பெலத்தைப்போல் நீர் என் பெலத்தை உயர்த்துவீர்; சிறந்த எண்ணெய் என்மேல் ஊற்றப்பட்டன.
11 и око мое смотрит на врагов моих, и уши мои слышат о восстающих на меня злодеях.
என் விரோதிகளின் தோல்வியைக் கண்ணாரக் கண்டேன்; என் செவிகள் என் கொடிய எதிரிகள் முறியடிக்கப்படுவதைக் காதாரக் கேட்டேன்.
12 Праведник цветет, как пальма, возвышается подобно кедру на Ливане.
நீதிமான்கள் பனைமரத்தைப்போல் செழிப்பார்கள், அவர்கள் லெபனோனின் கேதுரு மரம்போல் வளர்வார்கள்;
13 Насажденные в доме Господнем, они цветут во дворах Бога нашего;
அவர்கள் யெகோவாவினுடைய வீட்டிலே நாட்டப்பட்டு, நமது இறைவனுடைய ஆலய முற்றங்களில் செழிப்பார்கள்.
14 они и в старости плодовиты, сочны и свежи,
அவர்கள் செழுமையும் பசுமையுமாயிருந்து, தங்கள் முதிர்வயதிலும் கனி கொடுப்பார்கள்.
15 чтобы возвещать, что праведен Господь, твердыня моя, и нет неправды в Нем.
“யெகோவா நீதியுள்ளவர்; அவரே என் கன்மலை; அவரிடத்தில் அநீதி இல்லை” என்று அவர்கள் பிரசித்தப்படுத்துவார்கள்.