< Иов 24 >
1 Почему не сокрыты от Вседержителя времена, и знающие Его не видят дней Его?
௧சர்வவல்லமையுள்ள தேவனுக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க, அவரை அறிந்தவர்கள் அவர் நியமித்த நாட்களை அறியாதிருக்கிறதென்ன?
2 Межи передвигают, угоняют стада и пасут у себя.
௨சிலர் எல்லைக்குறிப்புகளை மாற்றி, மந்தைகளைப் பலாத்காரமாகக் கொண்டுபோய் தங்கள் மந்தையில் சேர்க்கிறார்கள்.
3 У сирот уводят осла, у вдовы берут в залог вола;
௩தாய்தகப்பன் இல்லாதவர்களின் கழுதையை ஓட்டிக்கொண்டுபோய், விதவையின் மாட்டை ஈடாக எடுத்துக்கொள்ளுகிறார்கள்.
4 бедных сталкивают с дороги, все уничиженные земли принуждены скрываться.
௪தேசத்தில் சிறுமைப்பட்டவர்கள் எல்லோரும் ஒளித்துக்கொள்ளுமளவுக்கு, எளிமையானவர்களை வழியை விட்டு விலக்குகிறார்கள்.
5 Вот они, как дикие ослы в пустыне, выходят на дело свое, вставая рано на добычу; степь дает хлеб для них и для детей их;
௫இதோ, அவர்கள் காட்டுக்கழுதைகளைப்போல இரைதேட அதிகாலமே தங்கள் வேலைக்குப் புறப்படுகிறார்கள்; வனாந்திரப் பகுதிதான் அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் ஆகாரம் கொடுக்கவேண்டும்.
6 жнут они на поле не своем и собирают виноград у нечестивца;
௬துன்மார்க்கருடைய வயலில் அவர்கள் அவனுக்காக அறுவடைசெய்து, அவனுடைய திராட்சைத்தோட்டத்தின் பழங்களைச் சேர்க்கிறார்கள்.
7 нагие ночуют без покрова и без одеяния на стуже;
௭குளிரிலே போர்த்துக்கொள்ளுகிறதற்கு ஒன்றும் இல்லாததினால், உடையில்லாமல் இரவுதங்கி,
8 мокнут от горных дождей и, не имея убежища, жмутся к скале;
௮மலைகளிலிருந்துவரும் மழையில் நனைந்து, ஒதுங்க இடமில்லாததினால் கன்மலையிலே ஒதுங்கிக்கொள்ளுகிறார்கள்.
9 отторгают от сосцов сироту и с нищего берут залог;
௯அவர்களோ தகப்பனில்லாத பிள்ளையை முலையைவிட்டுப்பறித்து, தரித்திரன் போர்த்துக்கொண்டிருக்கிறதை அடகு வாங்குகிறார்கள்.
10 заставляют ходить нагими, без одеяния, и голодных кормят колосьями;
௧0அவனை உடையில்லாமல் நடக்கவும், பட்டினியாக அரிக்கட்டுகளைச் சுமக்கவும்,
11 между стенами выжимают масло оливковое, топчут в точилах и жаждут.
௧௧தங்கள் மதில்களுக்குள்ளே செக்காட்டவும், தாகமுள்ளவர்களாக ஆலையாட்டவும் செய்கிறார்கள்.
12 В городе люди стонут, и душа убиваемых вопит, и Бог не воспрещает того.
௧௨ஊரில் மனிதர் தவிக்கிறார்கள், குற்றுயிராய்க்கிடக்கிறவர்களின் ஆத்துமா கூப்பிடுகிறது; என்றாலும், தேவன் அவர்கள் விண்ணப்பத்தைக் கவனிக்கிறதில்லை.
13 Есть из них враги света, не знают путей его и не ходят по стезям его.
௧௩அவர்கள் வெளிச்சத்திற்கு விரோதமாக நடக்கிறவர்களின் கூட்டத்தார்; அவர்கள் அவருடைய வழிகளை அறியாமலும், அவருடைய பாதைகளில் தங்காமலும் இருக்கிறார்கள்.
14 С рассветом встает убийца, умерщвляет бедного и нищего, а ночью бывает вором.
௧௪கொலைபாதகன் பொழுது விடிகிறபோது எழுந்து, ஏழையையும் தேவையுள்ளவனைக் கொன்று, இரவுநேரத்திலே திருடனைப்போல் திரிகிறான்.
15 И око прелюбодея ждет сумерков, говоря: ничей глаз не увидит меня, - и закрывает лице.
௧௫விபசாரனுடைய கண் மாலை மயங்குகிற நேரத்திற்குக் காத்திருந்து: என்னை ஒருவரும் பார்க்கமாட்டார்கள் என்று முகத்தை மூடிக்கொள்ளுகிறான்.
16 В темноте подкапываются под дома, которые днем они заметили для себя; не знают света.
௧௬அவர்கள் பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை இரவிலே கன்னமிடுகிறார்கள்; அவர்கள் வெளிச்சத்தை அறியமாட்டார்கள்.
17 Ибо для них утро смертная тень, так как они знакомы с ужасами смертной тени.
௧௭விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல் இருக்கிறது; அப்படிப்பட்டவன் மரண இருளின் பயங்கரத்துடன் பழகியிருக்கிறான்.
18 Легок такой на поверхности воды, проклята часть его на земле, и не смотрит он на дорогу садов виноградных.
௧௮நீரோட்டத்தைப்போல வேகமாகப் போவான்; தேசத்தில் அவனுடைய பங்கு சபிக்கப்பட்டுப் போகிறதினால், அவனுடைய திராட்சைத்தோட்டங்களின் வழியை இனிக்காண்பதில்லை.
19 Засуха и жара поглощают снежную воду: так преисподняя - грешников. (Sheol )
௧௯வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளை எரிக்கும். (Sheol )
20 Пусть забудет его утроба матери; пусть лакомится им червь; пусть не остается о нем память; как дерево, пусть сломится беззаконник,
௨0அவனைப் பெற்ற கர்ப்பம் அவனை மறக்கும்; புழு திருப்தியாக அவனைத் தின்னும்; அவன் அதன்பின்பு நினைக்கப்படுவதில்லை; அக்கிரமமானது பட்டமரத்தைப்போல முறிந்துவிழும்.
21 который угнетает бездетную, не рождавшую, и вдове не делает добра.
௨௧பிள்ளைபெறாத மலடியின் செல்வத்தை அழித்துவிட்டு, விதவைக்கு நன்மை செய்யாமல்போகிறான்.
22 Он и сильных увлекает своею силою; он встает и никто не уверен за жизнь свою.
௨௨தன் பலத்தினாலே வல்லவர்களைத் தன் பலமாக்குகிறான்; அவன் எழும்புகிறபோது ஒருவனுக்கும் உயிரைப்பற்றி நிச்சயமில்லை.
23 А Он дает ему все для безопасности, и он на то опирается, и очи Его видят пути их.
௨௩தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால், அதின்மேல் உறுதியாக நம்பிக்கை வைக்கிறான்; ஆனாலும் அவருடைய கண்கள் அப்படிப்பட்டவர்களின் வழிகளுக்கு விரோதமாயிருக்கிறது.
24 Поднялись высоко, - и вот, нет их; падают и умирают, как и все, и, как верхушки колосьев, срезываются.
௨௪அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து, பார்க்காமற்போய், தாழ்த்தப்பட்டு, மற்ற எல்லோரைப்போலும் அடக்கப்படுகிறார்கள்; கதிர்களின் நுனியைப்போல அறுக்கப்படுகிறார்கள்.
25 Если это не так, - кто обличит меня во лжи и в ничто обратит речь мою?
௨௫அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி, என் வார்த்தைகளைப் பொய்யாக்கக்கூடியவன் யார்” என்றான்.