< Иов 13 >

1 Вот, все это видело око мое, слышало ухо мое и заметило для себя.
“இவை எல்லாவற்றையும் என் கண் கண்டிருக்கின்றது, என் காது கேட்டு அறிந்திருக்கிறது.
2 Сколько знаете вы, знаю и я: не ниже я вас.
உங்களுக்குத் தெரிந்தவையெல்லாம் எனக்கும் தெரியும்; நான் உங்களைவிட தாழ்ந்தவனல்ல.
3 Но я к Вседержителю хотел бы говорить и желал бы состязаться с Богом.
ஆனால் நான் எல்லாம் வல்லவரோடு பேசவும், இறைவனோடு என் வழக்கை வாதாடவும் விரும்புகிறேன்.
4 А вы сплетчики лжи; все вы бесполезные врачи.
எப்படியும் நீங்கள் என்னைப் பொய்களால் மழுப்புகிறீர்கள்; நீங்கள் எல்லோரும் ஒன்றுக்கும் உதவாத மருத்துவர்கள்.
5 О, если бы вы только молчали! это было бы вменено вам в мудрость.
நீங்கள் பேசாமல் மட்டும் இருப்பீர்களானால், அது உங்களுக்கு ஞானமாயிருக்கும்.
6 Выслушайте же рассуждения мои и вникните в возражение уст моих.
இப்பொழுது என் விவாதத்தைக் கேளுங்கள்; என் உதடுகளின் முறையிடுதலுக்குச் செவிகொடுங்கள்.
7 Надлежало ли вам ради Бога говорить неправду и для Него говорить ложь?
இறைவனின் சார்பாக கொடுமையாய்ப் பேசுவீர்களோ? அவருக்காக நீங்கள் வஞ்சகமாய்ப் பேசுவீர்களோ?
8 Надлежало ли вам быть лицеприятными к Нему и за Бога так препираться?
அவருக்கு நீங்கள் பட்சபாதம் காட்டுவீர்களோ? இறைவனுக்காக வழக்கை வாதாடுவீர்களோ?
9 Хорошо ли будет, когда Он испытает вас? Обманете ли Его, как обманывают человека?
அவர் உங்களைச் சோதித்தால், உங்களுக்கு நலமாகுமோ? மனிதரை ஏமாற்றுவதுபோல் அவரை ஏமாற்ற முடியமோ?
10 Строго накажет Он вас, хотя вы и скрытно лицемерите.
நீங்கள் இரகசியமாய் பட்சபாதம் காட்டினாலும், அவர் நிச்சயமாக உங்களைக் கண்டிப்பார்.
11 Неужели величие Его не устрашает вас, и страх Его не нападает на вас?
அவருடைய மகத்துவம் உங்களுக்குத் திகிலூட்டாதோ? அவருடைய பயங்கரம் உங்கள்மேல் வராதோ?
12 Напоминания ваши подобны пеплу; оплоты ваши - оплоты глиняные.
உங்கள் கொள்கைகள் சாம்பலை ஒத்த பழமொழிகள்; உங்கள் எதிர்வாதங்களும் களிமண்ணுக்கு ஒப்பானது.
13 Замолчите предо мною, и я буду говорить, что бы ни постигло меня.
“பேசாமல் இருங்கள், என்னைப் பேசவிடுங்கள்; அதின்பின் எனக்கு வருவது வரட்டும்.
14 Для чего мне терзать тело мое зубами моими и душу мою полагать в руку мою?
ஏன் நான் என்னையே இடரில் மாட்டி, உயிரைக் கையில் பிடித்துக்கொள்ள வேண்டும்.
15 Вот, Он убивает меня, но я буду надеяться; я желал бы только отстоять пути мои пред лицом Его!
அவர் என்னைக் கொன்றாலும், நான் இன்னும் அவரிலேயே நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவர்முன் குற்றமற்றவை என வாதாடுவேன்.
16 И это уже в оправдание мне, потому что лицемер не пойдет пред лице Его!
இது என் விடுதலைக்குக் காரணமாகும், இறைவனற்றவன் அவர்முன் சேரமாட்டான்.
17 Выслушайте внимательно слово мое и объяснение мое ушами вашими.
நான் பேசப்போவதைக் கவனமாய்க் கேளுங்கள்; நான் சொல்வதை உங்கள் செவி ஏற்றுக்கொள்ளட்டும்.
18 Вот, я завел судебное дело: знаю, что буду прав.
எனது வழக்கு ஆயத்தம், நான் குற்றமற்றவனென நிரூபிக்கப்படுவேன் என்பது எனக்குத் தெரியும்.
19 Кто в состоянии оспорить меня? Ибо я скоро умолкну и испущу дух.
எனக்கெதிராகக் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவர யாரால் முடியும்? அப்படியானால், நான் மவுனமாயிருந்தே சாவேன்.
20 Двух только вещей не делай со мною, и тогда я не буду укрываться от лица Твоего:
“இறைவனே, இந்த இரண்டு காரியங்களை மட்டும் கொடுத்தருளும், அப்பொழுது நான் உம்மிடமிருந்து மறைந்து கொள்ளமாட்டேன்:
21 удали от меня руку Твою, и ужас Твой да не потрясает меня.
உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும், உமது பயங்கரங்களால் என்னைத் திகிலடையச் செய்யாதீர்.
22 Тогда зови, и я буду отвечать, или буду говорить я, а Ты отвечай мне.
அதின்பின் என்னைக் கூப்பிடும்; நான் பதில் சொல்வேன், அல்லது என்னைப் பேசவிட்டு நீர் பதில் கொடும்.
23 Сколько у меня пороков и грехов? покажи мне беззаконие мое и грех мой.
அநேக பிழைகளையும் பாவங்களையும் நான் செய்திருக்கிறேன்? என் குற்றத்தையும், என் பாவத்தையும் எனக்குக் காட்டும்.
24 Для чего скрываешь лице Твое и считаешь меня врагом Тебе?
நீர் ஏன் உமது முகத்தை மறைத்து, என்னை உமது பகைவனாகக் கருதுகிறீர்?
25 Не сорванный ли листок Ты сокрушаешь и не сухую ли соломинку преследуешь?
காற்றில் பறக்கும் சருகை வேதனைப்படுத்துவீரோ? பதரைப் பின்னால் துரத்திச்செல்வீரோ?
26 Ибо Ты пишешь на меня горькое и вменяешь мне грехи юности моей,
ஏனெனில் எனக்கெதிராகக் கசப்பானவற்றை நீர் எழுதுகிறீர்; என் வாலிப காலத்தின் பாவங்களை எனக்குப் அறுக்கச்செய்கிறீர்.
27 и ставишь в колоду ноги мои и подстерегаешь все стези мои, - гонишься по следам ног моих.
நீர் எனது கால்களில் விலங்குகளை மாட்டுகிறீர், அடிச்சுவடுகளில் அடையாளமிட்டு என் வழிகளையெல்லாம் கூர்ந்து கவனிக்கிறீர்.
28 А он, как гниль, распадается, как одежда, изъеденная молью.
“ஆகவே அழுகிப்போன ஒன்றைப் போலவும், பூச்சி அரித்த உடையைப்போலவும் மனிதன் உருக்குலைந்து போகிறான்.

< Иов 13 >