< Романь 7 >
1 Ну штиць, фрацилор – кэч ворбеск унор оамень каре куноск Леӂя – кэ Леӂя аре стэпынире асупра омулуй кытэ време трэеште ел?
௧நியாயப்பிரமாணத்தை தெரிந்திருக்கிறவர்களோடு பேசுகிறேன். சகோதரர்களே, ஒரு மனிதன் உயிரோடிருக்கும்வரைக்கும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறது என்று தெரியாமல் இருக்கிறீர்களா?
2 Кэч фемея мэритатэ есте легатэ прин Леӂе де бэрбатул ей кытэ време трэеште ел, дар, дакэ-й моаре бэрбатул, есте дезлегатэ де леӂя бэрбатулуй ей.
௨அது எப்படியென்றால், கணவனையுடைய ஒரு பெண் தன் கணவன் உயிரோடிருக்கும்வரை நியாயப்பிரமாணத்தின்படி அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; கணவன் மரித்தபின்பு கணவனைப்பற்றிய பிரமாணத்திலிருந்து விடுதலையாகி இருக்கிறாள்.
3 Дакэ, деч, кынд ый трэеште бэрбатул, еа се мэритэ дупэ алтул, се ва кема прякурвэ, дар, дакэ-й моаре бэрбатул, есте дезлегатэ де Леӂе, аша кэ ну май есте прякурвэ дакэ се мэритэ дупэ алтул.
௩ஆகவே, கணவன் உயிரோடிருக்கும்போது அவள் வேறொரு மனிதனை திருமணம்செய்தால் அவள் விபசாரி என்று சொல்லப்படுவாள்; ஆனால், கணவன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்திலிருந்து விடுதலையானபடியால், வேறொரு மனிதனை திருமணம் செய்தாலும் அவள் விபசாரி இல்லை.
4 Тот астфел, фраций мей, прин трупул луй Христос, ши вой аць мурит ын че привеште Леӂя, ка сэ фиць ай Алтуя, адикэ ай Челуй че а ынвият дин морць, ши ачаста, ка сэ адучем род пентру Думнезеу.
௪அதுபோல, என் சகோதரர்களே, நீங்கள் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று பலன் கொடுப்பதற்காக கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தவர்களானீர்கள்.
5 Кэч, кынд трэям суб фиря ноастрэ пэмынтяскэ, патимиле пэкателор, ацыцате де Леӂе, лукрау ын мэдулареле ноастре ши не фэчяу сэ адучем роаде пентру моарте.
௫நாம் சரீரத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்குரிய பலன்களைக் கொடுக்கக்கூடியதாக நம்முடைய சரீர உறுப்புகளிலே பெலன்செய்தது.
6 Дар акум, ам фост избэвиць де Леӂе ши сунтем морць фацэ де Леӂя ачаста, каре не циня робь, пентру ка сэ служим луй Думнезеу ынтр-ун дух ноу, яр ну дупэ векя словэ.
௬இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படி இல்லை, புதுமையான ஆவியின்படி ஊழியம் செய்வதற்காக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்திற்கு நாம் மரித்தவர்களாகி, அதில் இருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.
7 Деч че вом зиче? Леӂя есте чева пэкэтос? Ничдекум! Димпотривэ, пэкатул ну л-ам куноскут декыт прин Леӂе. Де пилдэ, н-аш фи куноскут пофта, дакэ Леӂя ну мь-ар фи спус: „Сэ ну пофтешть!”
௭எனவே, என்னசொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? இல்லையே, பாவம் என்னவென்று நியாயப்பிரமாணத்தினால்தான் நான் தெரிந்துகொண்டேனேதவிர மற்றப்படி இல்லை; “இச்சிக்காமல் இருப்பாயாக” என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் தெரியாமல் இருப்பேனே.
8 Апой, пэкатул а луат прилежул ши а фэкут сэ се наскэ ын мине, прин порункэ, тот фелул де пофте, кэч, фэрэ Леӂе, пэкатул есте морт.
௮பாவமானது கட்டளையினாலே வாய்ப்பைப்பெற்று எல்லாவிதமான இச்சைகளையும் எனக்குள் நடப்பித்தது. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாக இருக்குமே.
9 Одиниоарэ, фииндкэ ерам фэрэ Леӂе, трэям, дар кынд а венит порунка, пэкатул а ынвият, ши еу ам мурит.
௯முன்பே நியாயப்பிரமாணம் இல்லாதவனாக இருந்தபோது நான் ஜீவனுள்ளவனாக இருந்தேன்; கட்டளை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன்.
10 Ши порунка, еа, каре требуя сэ-мь дя вяца, мь-а причинуит моартя.
௧0இப்படியிருக்க, ஜீவனுக்குரிய கட்டளை எனக்கு மரணத்திற்குரியதாக இருப்பதைப் பார்த்தேன்.
11 Пентру кэ пэкатул а луат прилежул прин еа, м-а амэӂит ши, прин ынсэшь порунка ачаста, м-а ловит ку моартя.
௧௧பாவமானது கட்டளையினாலே வாய்ப்பைப்பெற்று, என்னை ஏமாற்றியது, அதினாலே என்னைக் கொன்றது.
12 Аша кэ Леӂя, негрешит, есте сфынтэ, ши порунка есте сфынтэ, дряптэ ши бунэ.
௧௨எனவே, நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளது, கட்டளையும் பரிசுத்தமாகவும் நீதியாகவும் நன்மையாகவும் இருக்கிறது.
13 Атунч, ун лукру бун мь-а дат моартя? Ничдекум. Дар пэкатул, токмай ка сэ ясэ ла ивялэ ка пэкат, мь-а дат моартя принтр-ун лукру бун, пентру ка пэкатул сэ се арате афарэ дин кале де пэкэтос, прин фаптул кэ се служя де ачеяшь порункэ.
௧௩இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமானதோ? அப்படி இல்லை; பாவமே எனக்கு மரணமானது; பாவம் கட்டளையினாலே அதிக பாவமுள்ளதாவதற்கும், அது நன்மையானதைக்கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே இருக்கும்படிக்கும் அப்படியானது.
14 Штим, ын адевэр, кэ Леӂя есте духовничяскэ, дар еу сунт пэмынтеск, вындут роб пэкатулуй.
௧௪மேலும், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாக இருக்கிறது, நானோ பாவத்திற்குக் கீழாக விற்கப்பட்டு, சரீரத்திற்குரியவனாக இருக்கிறேன்.
15 Кэч ну штиу че фак: ну фак че вряу, чи фак че урэск.
௧௫எப்படியென்றால், நான் செய்கிறது எனக்கே புரியவில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்.
16 Акум, дакэ фак че ну вряу, мэртурисеск прин ачаста кэ Леӂя есте бунэ.
௧௬இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாக இருக்க, நியாயப்பிரமாணம் நல்லது என்று ஏற்றுக்கொள்ளுகிறேனே.
17 Ши атунч, ну май сунт еу чел че фаче лукрул ачеста, чи пэкатул каре локуеште ын мине.
௧௭எனவே, நான் இல்லை, எனக்குள் வாழ்கிற பாவமே அப்படிச் செய்கிறது.
18 Штиу, ын адевэр, кэ нимик бун ну локуеште ын мине, адикэ ын фиря мя пэмынтяскэ, пентру кэ, че-й дрепт, ам воинца сэ фак бинеле, дар н-ам путеря сэ-л фак.
௧௮அது எப்படியென்றால், என்னிடம், அதாவது, என் சரீரத்தில், நன்மை வாழ்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டும் என்கிற விருப்பம் என்னிடம் இருக்கிறது, நன்மை செய்வதோ என்னிடம் இல்லை.
19 Кэч бинеле, пе каре вряу сэ-л фак, ну-л фак, чи рэул, пе каре ну вряу сэ-л фак, ятэ че фак!
௧௯எனவே, நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.
20 Ши дакэ фак че ну вряу сэ фак, ну май сунт еу чел че фаче лукрул ачеста, чи пэкатул каре локуеште ын мине.
௨0அதன்படி, நான் விரும்பாததை நான் செய்தால், நான் இல்லை, எனக்குள் வாழ்கிற பாவமே அப்படிச் செய்கிறது.
21 Гэсеск дар ын мине леӂя ачаста: кынд вряу сэ фак бинеле, рэул есте липит де мине.
௨௧ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடம் தீமை உண்டு என்கிற ஒரு பிரமாணத்தைப் பார்க்கிறேன்.
22 Фииндкэ дупэ омул динэунтру ымь плаче Леӂя луй Думнезеу,
௨௨உள்ளான மனிதனுக்குத் தகுந்தபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாக இருக்கிறேன்.
23 дар вэд ын мэдулареле меле о алтэ леӂе, каре се луптэ ымпотрива леӂий примите де минтя мя ши мэ цине роб леӂий пэкатулуй, каре есте ын мэдулареле меле.
௨௩ஆனாலும் என் மனதின் பிரமாணத்திற்கு எதிராகப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் உறுப்புகளில் இருக்கிறதைப் பார்க்கிறேன்; அது என் உறுப்புகளில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்திற்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது.
24 О, ненорочитул де мине! Чине мэ ва избэви де ачест труп де моарте?…
௨௪நிர்பந்தமான மனிதன் நான்! இந்த மரணசரீரத்திலிருந்து யார் என்னை விடுதலையாக்குவார்?
25 Мулцумирь фие адусе луй Думнезеу, прин Исус Христос, Домнул ностру!… Астфел дар, ку минтя, еу служеск Леӂий луй Думнезеу; дар ку фиря пэмынтяскэ, служеск леӂий пэкатулуй.
௨௫நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். எனவே, நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கும், சரீரத்தினாலே பாவப்பிரமாணத்திற்கும் சேவை செய்கிறேன்.