< Псалмул 39 >
1 Зичям: „Вой вегя асупра кэилор меле, ка сэ ну пэкэтуеск ку лимба; ымь вой пуне фрыу гурий кыт ва ста чел рэу ынаинтя мя.”
௧எதுதூன் என்னும் தலைவனுக்கு தாவீதின் பாடல். என்னுடைய நாவினால் பாவம்செய்யாதபடிக்கு நான் என்னுடைய வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்கும்வரை என்னுடைய வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.
2 Ам стат мут, ын тэчере; ам тэкут, мэкар кэ ерам ненорочит, ши тотушь дуреря мя ну ера май пуцин маре.
௨நான் மவுனமாகி, ஊமையனாக இருந்தேன், நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்; ஆனாலும் என்னுடைய துக்கம் அதிகரித்தது;
3 Ымь ардя инима ын мине, ун фок лэунтрик мэ мистуя, ши атунч мь-а венит кувынтул пе лимбэ ши ам зис:
௩என்னுடைய இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கும்போது நெருப்பு எரிந்தது; அப்பொழுது என்னுடைய நாவினால் விண்ணப்பம் செய்தேன்.
4 „Доамне, спуне-мь каре есте сфыршитул веций меле, каре есте мэсура зилелор меле, ка сэ штиу кыт де трекэтор сунт!”
௪யெகோவாவே, நான் எவ்வளவாக நிலையற்றவன் என்று உணரும்படி என்னுடைய முடிவையும், என்னுடைய நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்.
5 Ятэ кэ зилеле меле сунт кыт ун лат де мынэ ши вяца мя есте ка о нимика ынаинтя Та. Да, орьче ом есте доар о суфларе, орькыт де бине с-ар цине.
௫இதோ, என்னுடைய நாட்களை நான்கு விரல் அளவாக்கினீர்; என்னுடைய ஆயுள் உமது பார்வைக்கு ஒன்றும் இல்லாதது போலிருக்கிறது; எந்த மனிதனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா)
6 Да, омул умблэ ка о умбрэ, се фрэмынтэ деӂяба, стрынӂе ла коморь ши ну штие чине ле ва луа.
௬நிழலைப்போலவே மனிதன் நடந்து திரிகிறான்; வீணாகவே சஞ்சலப்படுகிறான்; சொத்தைச் சேர்க்கிறான். யார் அதை எடுத்துக்கொள்ளுவான் என்று அறியான்.
7 Акум, Доамне, че май пот нэдэждуи еу? Ын Тине ымь есте нэдеждя.
௭இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என்னுடைய நம்பிக்கை.
8 Избэвеште-мэ де тоате фэрэделеӂиле меле! Ну мэ фаче де окара челуй небун!
௮என்னுடைய மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னை விடுதலையாக்கும், மூடனின் அவமானப்படுத்துதலுக்கு என்னை ஒப்புக்கொடுக்க வேண்டாம்.
9 Стау мут, ну дескид гура, кэч Ту лукрезь.
௯நீரே இதைச் செய்தீர் என்று நான் என்னுடைய வாயைத் திறக்காமல் மவுனமாக இருந்தேன்.
10 Абате-Ць ловитуриле де ла мине! Ымь есе суфлетул суб ловитуриле мыний Тале.
௧0என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; உமது கையின் அடிகளால் நான் சோர்ந்து போனேன்.
11 Ту педепсешть пе ом ши-л ловешть пентру фэрэделеӂя луй; ый прэпэдешть, ка молия, че аре ел май скумп. Да, орьче ом есте доар о суфларе.
௧௧அக்கிரமத்திற்காக நீர் மனிதனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது, அவன் வடிவத்தைப் பூச்சி அரிப்பதுபோல அழியச்செய்கிறீர்; நிச்சயமாக எந்த மனிதனும் மாயையே. (சேலா)
12 Аскултэ-мь ругэчуня, Доамне, ши плякэ-Ць урекя ла стригэтеле меле! Ну тэчя ын фаца лакримилор меле! Кэч сунт ун стрэин ынаинтя Та, ун прибяг, ка тоць пэринций мей.
௧௨யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டு, என்னுடைய கூப்பிடுதலை காதுகொடுத்து கேளும்; என்னுடைய கண்ணீருக்கு மவுனமாக இருக்கவேண்டாம்; என்னுடைய முன்னோர்கள் எல்லோரையும்போல நானும் உமக்குமுன்பாக அந்நியனும் நிலையற்றவனுமாக இருக்கிறேன்.
13 Абате-Ць привиря де ла мине ши ласэ-мэ сэ рэсуфлу, пынэ ну мэ дук ши сэ ну май фиу!
௧௩நான் இனி இல்லாமல்போவதற்குமுன்னே, தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாக இரும்.