< Titus 1 >
1 Pavel, rob al lui Dumnezeu și apostol al lui Isus Cristos, conform cu credința aleșilor lui Dumnezeu și cu recunoașterea adevărului, care este conform cu evlavia,
௧தேவனுடைய ஊழியக்காரனும், இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல், பொதுவான விசுவாசத்தின்படி உத்தம மகனாகிய தீத்துவிற்கு எழுதுகிறதாவது:
2 În speranța vieții eterne, pe care Dumnezeu, care nu poate minți, a promis-o înainte de începutul lumii; (aiōnios )
௨பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராக இருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
3 Și la timpurile cuvenite a arătat cuvântul său prin predicarea ce mi s-a încredințat, conform poruncii lui Dumnezeu, Salvatorul nostru;
௩பொய்யுரையாத தேவன் ஆரம்பகாலமுதல் நித்தியஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம் செய்து அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, (aiōnios )
4 Lui Titus, adevăratul meu fiu după credința comună: Har, milă și pace, de la Dumnezeu Tatăl și Domnul Isus Cristos Salvatorul nostru.
௪ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார்.
5 Din această cauză te-am lăsat în Creta, ca să pui în ordine cele ce lipsesc și să rânduiești bătrâni în fiecare cetate, așa cum eu te-am rânduit pe tine;
௫நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பர்களை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தா தீவிலே விட்டுவந்தேன்.
6 Dacă cineva este ireproșabil, soțul unei singure soții, având copii credincioși, neacuzați de destrăbălare sau insubordonați.
௬குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கர்களென்றும் அடங்காதவர்களென்றும் பெயரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவன் இருந்தால் அவனையே மூப்பராக ஏற்படுத்தலாம்.
7 Fiindcă un episcop trebuie să fie ireproșabil ca administrator al lui Dumnezeu; nu încăpățânat, nu ușor de mâniat, nu dedat vinului, nu bătăuș, nu dedat câștigului murdar,
௭ஏனென்றால், கண்காணியானவன் தேவனுடைய மேற்பார்வைக்காரனுக்குரியவிதமாக, குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடிக்காதவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்காதவனும்,
8 Ci iubitor de ospitalitate, iubitor al oamenilor buni, cumpătat, drept, sfânt, chibzuit,
௮அந்நியர்களை உபசரிக்கிறவனும், நல்லவைகள்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும்,
9 Ținând strâns cuvântul demn de încredere așa cum a fost învățat, ca el să fie în stare, prin doctrină sănătoasă, deopotrivă să îndemne și să convingă pe cei împotrivitori cu vorba.
௯ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்த்து பேசுகிறவர்களைக் கடிந்துகொள்ளவும் வல்லவனுமாக இருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாகப் பற்றிக்கொள்ளுகிறவனுமாக இருக்கவேண்டும்.
10 Fiindcă sunt mulți insubordonați și palavragii și înșelători, mai ales dintre cei ai circumciziei,
௧0அநேகர், விசேஷமாக விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண் பேச்சுக்காரர்களும், மனதை மயக்குகிறவர்களுமாக இருக்கிறார்கள்.
11 Ale căror guri trebuie să fie astupate, care răstoarnă case întregi, învățând ce nu ar trebui, de dragul unui câștig murdar.
௧௧அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்திற்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
12 Unul dintre ei, un profet de-al lor, a spus: Cretanii sunt totdeauna mincinoși, fiare rele, pântece leneșe.
௧௨கிரேத்தா தீவைச்சேர்ந்தவர்கள் ஓயாத பொய்யர்கள், காட்டுமிராண்டிகள், பெருந்தீனிச் சோம்பேறிகள் என்று அவர்களில் ஒருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான்.
13 Această mărturie este adevărată. Din această cauză mustră-i aspru, ca ei să fie sănătoși în credință,
௧௩இந்தச் சாட்சி உண்மையாக இருக்கிறது; எனவே, அவர்கள் யூதர்களுடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தைவிட்டு விலகுகிற மனிதர்களுடைய கட்டளைகளுக்கும் செவிகொடுக்காமல்,
14 Nedând atenție la fabulații iudaice și la porunci ale oamenilor care se întorc de la adevăr.
௧௪விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாக இருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.
15 Pentru cei puri toate sunt pure, dar pentru cei întinați și care nu cred, nimic nu este curat ci și mintea și conștiința lor sunt întinate.
௧௫சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாக இருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாக இருக்காது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாக இருக்கும்.
16 Ei mărturisesc că îl cunosc pe Dumnezeu, dar în fapte îl neagă, fiind scârboși și neascultători și sunt netrebnici pentru fiecare lucrare bună.
௧௬அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், செயல்களினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நல்ல செயல்களையும் செய்ய தகுதியற்றவர்களுமாக இருக்கிறார்கள்.