< Psalmii 115 >
1 Nu nouă, DOAMNE, nu nouă, ci numelui tău dă glorie, pentru mila ta și pentru adevărul tău.
எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல, உமது அன்பின் நிமித்தமும், உமது சத்தியத்தின் நிமித்தமும் உமது பெயருக்கே மகிமை உண்டாகட்டும்.
2 De ce să spună păgânii: Unde este acum Dumnezeul lor?
பிற நாடுகளோ, “அவர்களுடைய இறைவன் எங்கே?” என்று ஏன் கேட்கிறார்கள்.
3 Dar Dumnezeul nostru este în ceruri, el a făcut tot ce i-a plăcut.
நம்முடைய இறைவன் பரலோகத்தில் இருக்கிறார்; அவர் தமக்கு விருப்பமானதையே செய்கிறார்.
4 Idolii lor sunt argint și aur, lucrarea mâinilor oamenilor.
ஆனால் பிற மக்களின் விக்கிரகங்கள் வெள்ளியும் தங்கமும், மனிதருடைய கைகளினால் செய்யப்பட்டதுமாய் இருக்கிறது.
5 Au guri, dar nu vorbesc; au ochi, dar nu văd;
அவைகளுக்கு வாய்கள் உண்டு, ஆனாலும் அவைகளால் பேசமுடியாது; கண்கள் உண்டு, அவைகளால் பார்க்க முடியாது.
6 Au urechi, dar nu aud; au nări, dar nu miros;
அவைகளுக்குக் காதுகள் உண்டு, ஆனால் அவைகளால் கேட்கமுடியாது; மூக்கிருந்தும், அவைகளால் முகரமுடியாது.
7 Au mâini, dar nu ating; au picioare, dar nu umblă; nici nu vorbesc prin gâtul lor.
அவைகளுக்குக் கைகளிருந்தும் தொட்டுப் பார்க்க முடியாது; கால்கள் உண்டு, ஆனால் அவைகளால் நடக்க முடியாது; தங்கள் தொண்டைகளால் சத்தமிடக்கூட அவைகளால் முடியாது.
8 Cei ce îi fac sunt asemenea lor; și fiecare ce se încrede în ei.
அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிற எல்லோரும் அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
9 Israele, încrede-te în DOMNUL, el este ajutorul lor și scutul lor.
இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள்; அவரே உங்களுடைய உதவியும் கேடயமுமாய் இருக்கிறார்.
10 Casă a lui Aaron, încrede-te în DOMNUL, el este ajutorul lor și scutul lor.
ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள்; அவரே உங்களுடைய உதவியும் கேடயமுமாய் இருக்கிறார்.
11 Voi care vă temeți de DOMNUL, încredeți-vă în DOMNUL, el este ajutorul lor și scutul lor.
அவருக்குப் பயந்து நடக்கிறவர்களே, யெகோவாவை நம்புங்கள்; அவரே உங்களுடைய உதவியும் கேடயமுமாய் இருக்கிறார்.
12 DOMNUL și-a amintit de noi, el ne va binecuvânta; va binecuvânta casa lui Israel; va binecuvânta casa lui Aaron.
யெகோவா நம்மை நினைவில் வைத்திருக்கிறார், அவர் நம்மை ஆசீர்வதிப்பார்; அவர் இஸ்ரயேலின் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்; அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
13 Va binecuvânta pe cei ce se tem de DOMNUL, pe cei mici și pe cei mari.
யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற பெரியோரையும், சிறியோரையும் அவர் ஆசீர்வதிப்பார்.
14 DOMNUL vă va înmulți continuu, pe voi și pe copiii voștri.
யெகோவா உங்களைப் பெருகப்பண்ணுவாராக, உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பெருகப்பண்ணுவாராக.
15 Voi sunteți binecuvântați ai DOMNULUI care a făcut cerul și pământul.
வானத்தையும் பூமியையும் படைத்தவராகிய யெகோவாவினால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்களாக.
16 Cerul, chiar cerurile, sunt ale DOMNULUI, dar pământul l-a dat copiilor oamenilor.
மிக உயர்ந்த வானங்கள் யெகோவாவினுடையவை; பூமியையோ அவர் மனிதனுக்குக் கொடுத்திருக்கிறார்.
17 Morții nu laudă pe DOMNUL, nici vreunul ce coboară la tăcere.
இறந்தவர்கள் யெகோவாவைத் துதிப்பதில்லை, மரணத்தின் மவுனத்தில் இறங்குகிறவர்களும் துதியார்கள்.
18 Dar noi vom binecuvânta pe DOMNUL de acum înainte și pentru totdeauna. Lăudați pe DOMNUL.
இன்றுமுதல் என்றைக்கும் யெகோவாவைத் துதிப்போம். யெகோவாவுக்குத் துதி. அல்லேலூயா.