< Evrei 5 >

1 Căci fiecare mare preot luat dintre oameni este rânduit pentru oameni în cele privitoare la Dumnezeu, ca să ofere deopotrivă daruri și sacrificii pentru păcate;
அன்றியும், மனிதர்களில் இருந்து தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்த, மனிதர்களுக்காக தேவகாரியங்கள் செய்வதற்கு நியமிக்கப்படுகிறான்.
2 El, care poate avea compasiune pentru cei neștiutori și rătăciți, pentru că și el este cuprins de neputință.
பிரதான ஆசாரியனும் பலவீனமுள்ளவனாக இருக்கிறதினாலே, அறியாதவர்களுக்கும் வழி தவறிப்போனவர்களுக்கும் இரங்கத்தக்கவனாக இருக்கிறான்.
3 Și din cauza acesteia este dator să aducă sacrificii pentru păcate, precum pentru popor, așa și pentru el însuși.
இதனால், அவன் மக்களுடைய பாவங்களுக்காகப் பலியிடவேண்டியதுபோல, தன்னுடைய பாவங்களுக்காகவும் பலியிடவேண்டியதாக இருக்கிறது.
4 Și nimeni nu își ia singur această onoare, ci acela chemat de Dumnezeu, precum Aaron.
மேலும், ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்படாமல், ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்திற்குத் தானாக ஏற்படுகிறதில்லை.
5 Tot astfel și Cristos nu s-a glorificat pe sine însuși ca să fie făcut mare preot, ci acela care i-a spus lui: Tu ești Fiul meu, astăzi te-am născut.
அப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய நேசகுமாரன், இன்று நான் உம் தகப்பனானேன் என்று அவரோடு சொன்னவரே அவரை உயர்த்தினார்.
6 Așa cum și spune în alt loc: Tu ești preot pentru totdeauna, după rânduiala lui Melchisedec. (aiōn g165)
அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார். (aiōn g165)
7 Care în zilele cărnii lui, după ce oferise rugăciuni și cereri cu strigăt puternic și lacrimi, către cel ce era în stare să îl salveze din moarte, a și fost ascultat în aceea că el s-a temut;
அவர் சரீரத்தில் இருந்த நாட்களில், தம்மை மரணத்திலிருந்து இரட்சிக்க வல்லமை உள்ளவரை நோக்கி பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் ஜெபம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினால் கேட்கப்பட்டு,
8 Cu toate că era Fiu, a învățat ascultarea prin cele ce a suferit.
அவர் குமாரனாக இருந்தும், அவர் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,
9 Și, fiind făcut desăvârșit, a devenit autorul salvării eterne pentru toți cei ce ascultă de el; (aiōnios g166)
தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, (aiōnios g166)
10 Numit de Dumnezeu mare preot după rânduiala lui Melchisedec.
௧0மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே பெயர் கொடுக்கப்பட்டது.
11 Despre care avem multe de spus și greu de explicat în vorbire, văzând că sunteți greoi la auzire.
௧௧இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் அதிகமாகப் பேசலாம்; நீங்கள் கேட்பதில் மந்தமாக இருப்பதினால், அதை உங்களுக்கு விளக்கிச் சொல்லுகிறது எனக்குக் கடினமாக இருக்கும்.
12 Fiindcă aveți nevoie să vă învețe cineva din nou care sunt principiile începătoare ale oracolelor lui Dumnezeu și ați devenit precum cei care au nevoie de lapte și nu de hrană tare, când voi de mult trebuia să fiți învățători.
௧௨காலத்தைப் பார்த்தால், போதகர்களாக இருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வார்த்தைகளின் அடிப்படை உபதேசங்களை மீண்டும் உபதேசிக்கவேண்டியதாக இருக்கிறது; நீங்கள் திடமான உணவைச் சாப்பிடுகிறவர்களாக இல்லை, பாலைக் குடிக்கிறவர்களானீர்கள்.
13 Fiindcă oricine folosește lapte este neiscusit în cuvântul dreptății, fiindcă este prunc.
௧௩பாலைக் குடிக்கிறவன் குழந்தையாக இருக்கிறதினாலே நீதியின் வசனத்தில் அனுபவம் இல்லாதவனாக இருக்கிறான்.
14 Dar hrana tare este a celor maturi, aceia care din cauza folosirii și-au antrenat simțurile ca să discearnă deopotrivă binele și răul.
௧௪திடமான உணவானது, நன்மை எது? தீமை எது? என்று புரிந்துகொள்ளும் பயிற்சியினால் சரியானது என்ன? தவறானது என்ன? என்று பகுத்தறியும் அனுபவம் உள்ளவர்களாகிய தேறினவர்களுக்கே உரியது.

< Evrei 5 >