< Faptele 5 >
1 Dar un anumit bărbat, numit Anania, cu soția lui, Safira, au vândut o proprietate,
௧அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்களுடைய சொத்துக்களை விற்றார்கள்.
2 Și a păstrat din preț, soția lui știind și ea în ascuns; și au adus o anumită parte și au pus-o la picioarele apostolilor.
௨தன் மனைவியின் சம்மதத்தோடு அவன் விற்ற பணத்திலே ஒரு பங்கை மறைத்துவைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தான்.
3 Dar Petru a spus: Anania, de ce ți-a umplut Satan inima să îl minți pe Duhul Sfânt și să păstrezi din prețul pământului?
௩பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, சொத்தை விற்றதில் ஒரு பங்கை மறைத்துவைத்து, பரிசுத்த ஆவியானவரிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?
4 Cât timp îți rămânea, nu rămânea al tău? Și după ce a fost vândut, nu a fost în propria ta putere? De ce ai conceput lucrul acesta în inima ta? Nu pe oameni ai mințit, ci pe Dumnezeu.
௪அதை விற்கும் முன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றப்பின்பும் அதின் கிரயப்பணம் உன்னிடத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணம் கொண்டதென்ன? நீ மனிதனிடத்தில் இல்லை, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.
5 Iar Anania, auzind aceste cuvinte, a căzut jos și și-a dat duhul; și mare frică a venit peste cei ce au auzit acestea.
௫அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்டவுடனே, கீழே விழுந்து மரித்துப்போனான். இவைகளைக் கேள்விப்பட்ட எல்லோருக்கும் மிகுந்த பயமுண்டானது.
6 Și tinerii s-au sculat, l-au învelit și l-au dus afară și l-au îngropat.
௬வாலிபர்கள் எழுந்து, அவனைத் துணியில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம்பண்ணினார்கள்.
7 Și s-a întâmplat, cam la trei ore după aceea, că a intrat soția lui, neștiind ce s-a făcut.
௭ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள்.
8 Iar Petru i-a răspuns: Spune-mi dacă cu atât ați vândut pământul? Iar ea a spus: Da, cu atât.
௮பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவிற்குத்தான் விற்றீர்களா என்று எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவிற்குத்தான் என்றாள்.
9 Atunci Petru i-a spus: Cum de v-ați înțeles voi împreună să îl ispitiți pe Duhul Domnului? Iată, picioarele celor care l-au îngropat pe soțul tău sunt la ușă și te vor duce afară.
௯பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் கணவனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான்.
10 Atunci, îndată a căzut jos la picioarele lui și și-a dat duhul; și tinerii au intrat și au găsit-o moartă și ducând-o afară, au îngropat-o lângă soțul ei.
௧0உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து மரித்துப்போனாள். வாலிபர்கள் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய கணவனருகே அடக்கம்பண்ணினார்கள்.
11 Și mare frică a venit peste toată biserica și peste toți câți au auzit acestea.
௧௧சபையாரெல்லோருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற எல்லோருக்கும், மிகுந்த பயமுண்டானது.
12 Și prin mâinile apostolilor s-au făcut multe semne și minuni în popor; (și toți erau cu un gând în porticul lui Solomon.
௧௨அப்போஸ்தலர்களுடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் மக்களுக்குள்ளே செய்யப்பட்டது. சபையாரெல்லோரும் ஒருமனப்பட்டு சாலொமோனுடைய மண்டபத்தில் கூடியிருந்தார்கள்.
13 Dar dintre ceilalți nu cuteza niciun om să li se alăture; dar poporul îi preamărea.
௧௩மற்றவர்களில் ஒருவரும் அவர்களோடு சேரத் துணியவில்லை. ஆனாலும் மக்கள் அவர்களைப் புகழ்ந்தார்கள்.
14 Și tot mai mulți credincioși erau adăugați Domnului, mulțimi deopotrivă de bărbați și femei).
௧௪அநேக ஆண்களும், பெண்களும் விசுவாசமுள்ளவர்களாகி கர்த்தரிடத்தில் அதிகமதிகமாகச் சேர்க்கப்பட்டார்கள்.
15 Într-atât de mult încât duceau afară în străzi pe bolnavi și îi puneau pe paturi și pe saltele, ca măcar umbra lui Petru, trecând pe acolo, să îi poată învălui pe unii din ei.
௧௫சுகவீனமானவர்களைப் படுக்கைகளின்மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகும்போது அவனுடைய நிழலாவது அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள்.
16 Și a venit de asemenea o mulțime din cetățile din jur la Ierusalim, aducându-i bolnavi și pe cei care erau chinuiți de duhuri necurate; și toți au fost vindecați.
௧௬சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான மக்கள் சுகவீனமானவர்களையும் அசுத்தஆவிகளால் துன்புறுத்தப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லோரும் குணமாக்கப்பட்டார்கள்.
17 Atunci marele preot s-a sculat și toți cei împreună cu el, (aceștia fiind partida saducheilor) și au fost umpluți de indignare;
௧௭அப்பொழுது பிரதான ஆசாரியனும் அவனுடனே இருந்த சதுசேய சமயத்தினர் அனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து,
18 Și și-au pus mâinile pe apostoli și i-au pus în închisoarea comună.
௧௮அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள்.
19 Dar îngerul Domnului, în timpul nopții, a deschis ușile închisorii și i-a condus afară și a spus:
௧௯கர்த்தருடைய தூதன் இரவிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து:
20 Duceți-vă, stați în picioare și vorbiți poporului în templu toate cuvintele vieții acesteia.
௨0நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவனுள்ள வார்த்தைகள் எல்லாவற்றையும் மக்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.
21 Și, când au auzit, au intrat în templu devreme dimineața și îi învățau. Dar marele preot și cei cu el, au venit și au convocat consiliul și întreg sfatul bătrânilor copiilor lui Israel și au trimis la închisoare să îi aducă.
௨௧அவர்கள் அதைக்கேட்டு, அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்து போதகம்பண்ணினார்கள். பிரதான ஆசாரியனும் அவனுடனே இருந்தவர்களும் வந்து, ஆலோசனைச் சங்கத்தினரையும் இஸ்ரவேல் கோத்திரத்தின் மூப்பர்களெல்லோரையும் வரவழைத்து, அப்போஸ்தலர்களை அழைத்துவரும்படி சிறைச்சாலைக்கு அதிகாரிகளை அனுப்பினார்கள்.
22 Și când ofițerii au venit și nu i-au găsit în închisoare, s-au întors și au povestit,
௨௨அதிகாரிகள் போய், சிறைச்சாலையிலே அவர்களைக் காணாமல், திரும்பிவந்து:
23 Spunând: Într-adevăr, am găsit închisoarea închisă cu toate în siguranță și paznicii stând afară în fața ușilor; dar când am deschis, nu am găsit pe nimeni înăuntru.
௨௩சிறைச்சாலை மிகுந்த பத்திரமாகப் பூட்டப்பட்டிருக்கவும், காவல்காரர்கள் வெளியே கதவுகளுக்கு முன் நிற்கவும் கண்டோம்; திறந்தபொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம் என்று அறிவித்தார்கள்.
24 Și când marele preot și căpetenia templului și preoții de seamă au auzit aceste cuvinte, erau nedumeriți referitor la ei până unde se va ajunge cu aceasta.
௨௪இந்தச் செய்தியை ஆசாரியனும் தேவாலயத்தைக் காக்கிற படைத்தலைவனும் பிரதான ஆசாரியர்களும் கேட்டபொழுது, இது என்னமாய் முடியுமோ என்று, அவர்களைக்குறித்துக் கலக்கமடைந்தார்கள்.
25 Atunci a venit unul și le-a povestit, spunând: Iată, bărbații pe care i-ați pus în închisoare stau în picioare în templu și învață poporul.
௨௫அப்பொழுது ஒருவன் வந்து: இதோ, நீங்கள் காவலில் வைத்த மனிதர்கள் தேவாலயத்திலே நின்று மக்களுக்குப் போதகம்பண்ணுகிறார்கள் என்று அவர்களுக்கு அறிவித்தான்.
26 Atunci s-a dus căpetenia împreună cu ofițerii și i-au adus fără violență fiindcă se temeau de popor, ca nu cumva să fie împroșcați cu pietre.
௨௬உடனே படைத்தலைவன் அதிகாரிகளோடுகூடப்போய், மக்கள் கல்லெறிவார்களென்று பயந்ததினால், பலவந்தம்பண்ணாமல் அவர்களை அழைத்துக்கொண்டுவந்தான்.
27 Și după ce i-au adus, i-au așezat în fața consiliului; și marele preot i-a întrebat,
௨௭அப்படி அழைத்துக்கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாக நிறுத்தினார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி:
28 Spunând: Nu v-am poruncit noi cu tărie să nu îi învățați în numele acesta? Și iată, ați umplut Ierusalimul cu doctrina voastră și vreți să aduceți sângele acestui om peste noi.
௨௮நீங்கள் இயேசுவின் நாமத்தைக்குறித்து போதகம்பண்ணக்கூடாது என்று நாங்கள் உங்களுக்கு உறுதியாகக் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்களுடைய போதகத்தினாலே நிரப்பி, அந்த மனிதனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான்.
29 Atunci Petru și apostolii au răspuns și au zis: Trebuie să ascultăm de Dumnezeu mai degrabă decât de oameni.
௨௯அதற்கு பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும்: மனிதர்களுக்குக் கீழ்ப்படிகிறதைவிட தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாக இருக்கிறது.
30 Dumnezeul părinților noștri l-a înviat pe Isus, pe care l-ați ucis, atârnându-[l] pe lemn.
௩0நீங்கள் சிலுவையில் அறைந்து கொலைசெய்த இயேசுவை நம்முடைய முற்பிதாக்களின் தேவன் எழுப்பி,
31 Pe el l-a înălțat Dumnezeu cu dreapta sa pentru a fi Prinț și Salvator, pentru a da pocăință lui Israel și iertarea păcatelor.
௩௧இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் கொடுப்பதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலது கரத்தினாலே உயர்த்தினார்.
32 Și noi suntem martorii lui despre aceste lucruri; și la fel este Duhul Sfânt, pe care l-a dat Dumnezeu celor ce ascultă de el.
௩௨இந்தச் செய்திகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாக இருக்கிறோம்; தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குக் கொடுத்த பரிசுத்த ஆவியானவரும் சாட்சி என்றார்கள்.
33 Când au auzit, îi tăia la inimă și s-au sfătuit să îi ucidă.
௩௩அதை அவர்கள் கேட்டபொழுது, மிகுந்த கோபமடைந்து, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு யோசனைபண்ணினார்கள்.
34 Atunci s-a sculat unul în consiliu, un fariseu, numit Gamaliel, un învățător al legii, onorat printre toți oamenii și a poruncit să îi scoată puțin afară pe apostoli.
௩௪அப்பொழுது அனைத்து மக்களாலும் கனம்பெற்ற வேதபண்டிதர் கமாலியேல் என்னும் பெயர்கொண்ட ஒரு பரிசேயன் ஆலோசனைச் சங்கத்தில் எழுந்திருந்து, அப்போஸ்தலர்களைக் கொஞ்சநேரம் வெளியே கொண்டுபோகச் சொல்லி,
35 Și le-a spus: Voi bărbați ai Israelului, aveți grijă la voi înșivă ce vreți să faceți în legătură cu acești oameni.
௩௫சங்கத்தினரை நோக்கி: இஸ்ரவேலர்களே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
36 Fiindcă înainte de aceste zile s-a sculat Teuda, lăudându-se a fi cineva, la care s-au unit un număr de bărbați, aproape patru sute. Acesta a fost ucis, și toți câți ascultau de el, au fost împrăștiați și făcuți de nimic.
௩௬ஏனென்றால், இந்த நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறுபேர் அவனிடத்தில் சேர்ந்தார்கள்; அவன் மரித்துப்போனான்; அவனை நம்பின அனைவரும் சிதறிப்போனார்கள்.
37 După acesta s-a sculat Iuda din Galileea, în zilele impozitării, și a atras mult popor după el; și el a pierit; și toți câți ascultau de el au fost risipiți.
௩௭அவனுக்குப்பின்பு, மக்களைக் கணக்கெடுக்கும் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக மக்களை இழுத்தான்; அவனும் மரித்துப்போனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறிப்போனார்கள்.
38 Și acum vă spun: Depărtați-vă de acești oameni și lăsați-i în pace, pentru că dacă acest sfat sau această lucrare este de la oameni, va fi nimicită.
௩௮இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறது என்னவென்றால் இந்த மனிதர்களுக்கு ஒன்றும் செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தச் செயல்களும் மனிதர்களால் உண்டாயிருந்ததானால் அழிந்துபோகும்;
39 Dar dacă este din Dumnezeu, nu sunteți în stare să o doborâți; ca nu cumva, să vă aflați luptând chiar împotriva lui Dumnezeu.
௩௯தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை அழித்துவிட உங்களால் முடியாது; தேவனோடு போர் செய்யாதவர்களாக இருக்கும்படிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.
40 Și au fost de acord cu el; și după ce i-au chemat pe apostoli și i-au bătut, le-au poruncit să nu vorbească în numele lui Isus; și le-au dat drumul.
௪0அப்பொழுது அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலர்களை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள்.
41 Și au plecat atunci din fața consiliului, bucurându-se că au fost socotiți demni să îndure rușine pentru numele lui.
௪௧அவருடைய நாமத்துக்காக தாங்கள் அவமானமடைவதற்குத் தகுதியானவர்களாக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாக ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்,
42 Și în fiecare zi, în templu și în fiecare casă, nu încetau să îi învețe și să îl predice pe Isus Cristos.
௪௨தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி இயேசுவே கிறிஸ்து என்று பிரசங்கித்தார்கள்.