< 2 Corinteni 4 >

1 De aceea văzând că avem acest serviciu, așa cum am primit milă, nu ne descurajăm;
இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறது இல்லை.
2 Ci am renunțat la cele ascunse ale necinstei, nu umblând în viclenie, nici mânuind înșelător cuvântul lui Dumnezeu, ci prin manifestarea adevărului ne recomandăm pe noi înșine conștiinței fiecărui om, înaintea lui Dumnezeu.
வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாக நடக்காமலும், தேவ வசனத்தைத் திரித்துக் கூறாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்குமுன்பாக எல்லா மனிதர்களுடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமர்கள் என்று விளங்கப்பண்ணுகிறோம்.
3 Dar dacă evanghelia noastră este ascunsă, este ascunsă celor pierduți,
எங்களுடைய நற்செய்தி மறைபொருளாக இருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாக இருக்கும்.
4 În care dumnezeul acestei lumi a orbit mințile celor ce nu cred, încât lumina glorioasei evanghelii a lui Cristos, care este chipul lui Dumnezeu, să nu strălucească peste ei. (aiōn g165)
தேவனுடைய சாயலாக இருக்கிற கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தியின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாக இல்லாதபடி, இந்த உலகத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். (aiōn g165)
5 Fiindcă nu ne predicăm pe noi înșine, ci pe Cristos Isus, Domnul; iar pe noi înșine robii voștri pentru Isus.
நாங்கள் எங்களையே பிரசங்கிக்காமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தர் என்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் நாங்கள் உங்களுடைய ஊழியக்காரர்கள் என்றும் பிரசங்கிக்கிறோம்.
6 Pentru că Dumnezeu, care a poruncit luminii să strălucească din întuneric, a strălucit în inimile noastre spre lumina cunoașterii gloriei lui Dumnezeu pe fața lui Isus Cristos.
இருளில் இருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்தில் உள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணுவதற்காக, எங்களுடைய இருதயங்களிலே பிரகாசித்தார்.
7 Dar avem acest tezaur în vase de lut, pentru ca măreția puterii să fie a lui Dumnezeu și nu din noi.
இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாகாமல், தேவனால் உண்டாகியிருக்கிறது என்று தெரியும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.
8 Suntem tulburați din fiecare parte, totuși nu strâmtorați; derutați, dar nu în disperare;
நாங்கள் எல்லாப் பக்கங்களிலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கம் அடைவதும், மனம் உடைவதும் இல்லை;
9 Persecutați, dar nu părăsiți; trântiți jos, dar nu distruși.
துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை.
10 Purtând totdeauna în trup uciderea Domnului Isus, pentru ca și viața lui Isus să fie arătată în trupul nostru.
௧0கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவன் எங்களுடைய சரீரத்திலே தெரியும்படி, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்களுடைய சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.
11 Fiindcă noi, care trăim, suntem totdeauna dați morții pentru Isus, ca și viața lui Isus să fie arătată în carnea noastră muritoare.
௧௧எப்படியென்றால், மரணத்திற்குரிய எங்களுடைய சரீரத்திலே இயேசுவினுடைய ஜீவன் தெரியும்படி உயிரோடு இருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவுக்காக மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம்.
12 Astfel că moartea lucrează în noi, dar viața în voi.
௧௨இப்படி மரணமானது எங்களிடமும், ஜீவனானது உங்களிடமும் பெலன் செய்கிறது.
13 Și, având același duh al credinței, conform cu ce este scris: Eu am crezut și de aceea am vorbit; și noi credem și de aceea vorbim,
௧௩விசுவாசித்தேன், ஆகவே, பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாக இருந்து, விசுவாசிக்கிறதினால் பேசுகிறோம்.
14 Știind că cel care l-a înviat pe Domnul Isus, ne va învia și pe noi prin Isus și ne va prezenta împreună cu voi.
௧௪கர்த்தராகிய இயேசுவை உயிரோடு எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களோடு தமக்குமுன்பாக நிறுத்துவார் என்று அறிந்திருக்கிறோம்.
15 Fiindcă toate sunt pentru voi, pentru ca harul abundent, prin mulțumirile multora, să abunde spre gloria lui Dumnezeu.
௧௫தேவனுடைய மகிமை அநேகருக்கு வெளிப்படுவதற்கேதுவாக அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே கிருபையானது பெருகும்படி, இவைகளெல்லாம் உங்களுக்காக உண்டாகியிருக்கிறது.
16 De aceea nu ne descurajăm; dar deși omul nostru de afară piere, totuși omul dinăuntru este înnoit zi de zi.
௧௬எனவே, நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்களுடைய புறம்பான மனிதன் அழிந்தாலும், உள்ளான மனிதன் நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறான்.
17 Fiindcă necazul nostru ușor, care este pentru o clipă, lucrează pentru noi, mai presus de orice, o greutate eternă de glorie; (aiōnios g166)
௧௭மேலும் காணப்படுகிறவைகளை இல்லை, காணாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கிப்போகும் இலேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. (aiōnios g166)
18 În timp ce noi nu ne uităm la cele văzute, ci la cele nevăzute, fiindcă cele care sunt văzute sunt trecătoare, dar cele nevăzute sunt eterne. (aiōnios g166)
௧௮ஏனென்றால், காணப்படுகிறவைகள் தற்காலிகமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள். (aiōnios g166)

< 2 Corinteni 4 >