< Salmos 48 >

1 Uma Canção. Um Salmo dos filhos de Corá. Great é Yahweh, e muito a ser elogiado, na cidade de nosso Deus, em sua montanha sagrada.
கோராகின் மகன்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல். யெகோவா பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த மலையிலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.
2 Beautiful na elevação, a alegria de toda a terra, é o Monte Zion, no lado norte, a cidade do grande Rei.
வடதிசையிலுள்ள சீயோன் மலை அழகான உயரமும் முழு பூமியின் மகிழ்ச்சியுமாக இருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்.
3 God se mostrou em suas cidadelas como um refúgio.
அதின் அரண்மனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார்.
4 Pois, eis que os reis se reuniram, eles passaram juntos.
இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஒன்றாகக் கடந்துவந்தார்கள்.
5 Eles o viram, depois ficaram surpresos. Eles ficaram consternados. Eles se apressaram.
அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள்.
6 Trembling tomou posse deles lá, dor, como de uma mulher em trabalho.
அங்கே நடுக்கங்கொண்டு, பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப்போல வேதனைப்பட்டார்கள்.
7 Com o vento leste, você quebra os navios de Tarshish.
கிழக்கு காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர்.
8 As já ouvimos falar, por isso já vimos, na cidade de Yahweh dos Exércitos, na cidade de nosso Deus. Deus o estabelecerá para sempre. (Selah)
நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய யெகோவாவின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் பாதுகாப்பார். (சேலா)
9 Nós pensamos em sua bondade amorosa, Deus, no meio do seu templo.
தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
10 Como é seu nome, Deus, assim é seu elogio até os confins do mundo. Sua mão direita está cheia de retidão.
௧0தேவனே, உமது பெயர் வெளிப்படுகிறதுபோல உமது புகழ்ச்சியும் பூமியின் கடைசிவரையிலும் வெளிப்படுகிறது; உமது வலதுகை நீதியால் நிறைந்திருக்கிறது.
11 Que o Monte Zion fique contente! Que as filhas de Judá se regozijem por causa de seus julgamentos.
௧௧உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்காக சீயோன் மலை மகிழ்வதாக, யூதாவின் மக்கள் சந்தோஷப்படுவார்களாக.
12 Walk sobre Zion, e dê a volta a ela. Numere suas torres.
௧௨சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கோபுரங்களை எண்ணுங்கள்.
13 Notice seus baluartes. Considere seus palácios, que você pode contar isso para a próxima geração.
௧௩பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் சுவரை கவனித்து, அதின் அரண்மனைகளை உற்றுப்பாருங்கள்.
14 Pois este Deus é nosso Deus para todo o sempre. Ele será nosso guia até mesmo até a morte.
௧௪இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள எல்லா காலங்களிலும் நம்முடைய தேவன்; மரணம்வரை நம்மை நடத்துவார்.

< Salmos 48 >