< Levítico 16 >
1 Yahweh falou a Moisés após a morte dos dois filhos de Aarão, quando eles se aproximaram antes de Yahweh, e morreram;
௧ஆரோனின் இரண்டு மகன்கள் யெகோவாவுடைய சந்நிதியிலே சேர்ந்து மரணமடைந்தபின்பு, யெகோவா மோசேயை நோக்கி:
2 e Yahweh disse a Moisés: “Diga a Aarão seu irmão que não venha a qualquer momento ao Santíssimo Lugar dentro do véu, diante do propiciatório que está sobre a arca; para que ele não morra; pois eu aparecerei na nuvem sobre o propiciatório.
௨“கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் மரணமடையாமலிருக்க, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாக எல்லா நேரங்களிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்.
3 “Aaron entrará no santuário com um touro jovem para oferta pelo pecado e um carneiro para oferta queimada.
௩ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையவேண்டிய விதமாவது: அவன் ஒரு காளையைப் பாவநிவாரணபலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி நுழையவேண்டும்.
4 “Ele colocará a túnica de linho sagrado. Ele terá as calças de linho em seu corpo, e vestirá a faixa de linho, e será revestido com o turbante de linho. Eles são as vestes sagradas. Ele banhará seu corpo em água, e as vestirá.
௪அவன் பரிசுத்தமான சணல்நூல்சட்டையை அணிந்து, தன் இடுப்பிற்குச் சணல்நூல் உள்ளாடையைப் போட்டு, சணல்நூல் இடுப்புக்கச்சையைக் கட்டி, சணல்நூல் தலைப்பாகையைத் அணிந்துகொண்டிருக்கவேண்டும்; அவைகள் பரிசுத்த உடைகள்; அவன் தண்ணீரில் குளித்து, அவைகளை அணிந்துகொண்டு,
5 Ele tomará da congregação dos filhos de Israel dois bodes masculinos para oferta pelo pecado e um carneiro para holocausto.
௫இஸ்ரவேல் மக்களாகிய சபையாரிடத்திலே, பாவநிவாரணபலியாக இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும், சர்வாங்கதகனபலியாக ஒரு ஆட்டுகடாவையும் வாங்கக்கடவன்.
6 “Aarão oferecerá o touro da oferta pelo pecado, que é para si mesmo, e fará expiação por si mesmo e por sua casa.
௬பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணபலியின் காளையைச் சேரச்செய்து,
7 Ele levará os dois bodes, e os colocará à porta da Tenda da Reunião.
௭அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் நிறுத்தி,
8 Arão lançará sorteio para os dois bodes: um lote para Javé e o outro lote para o bode expiatório.
௮அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் குறித்துக் யேகோவாக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு,
9 Arão apresentará o bode sobre o qual o lote caiu para Iavé, e o oferecerá por uma oferta pelo pecado.
௯யெகோவாக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரச்செய்து,
10 Mas o bode sobre o qual o lote caiu para o bode expiatório será apresentado vivo perante Iavé, para fazer expiação por ele, para mandá-lo embora como bode expiatório para o deserto.
௧0போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக்கொண்டு பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்திரத்திலே போகவிடவும், யெகோவாவுடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி;
11 “Arão apresentará o touro da oferta pelo pecado, que é para si mesmo, e fará expiação por si e por sua casa, e matará o touro da oferta pelo pecado que é para si mesmo.
௧௧“பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணத்திற்கான காளையைக் கொண்டுவந்து, அதைக் கொன்று,
12 Ele tomará um incensário cheio de brasas de fogo do altar diante de Javé, e dois punhados de incenso doce batido pequeno, e o trará dentro do véu.
௧௨யெகோவாவுடைய சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின்மேலுள்ள நெருப்புத்தணலினால் தூபகலசத்தை நிரப்பி, பொடியாக்கப்பட்ட நறுமண தூபவர்க்கத்திலே தன் கைப்பிடிகள் நிறைய எடுத்து, திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து,
13 Ele colocará o incenso no fogo diante de Yahweh, para que a nuvem do incenso possa cobrir o assento de misericórdia que está no pacto, para que ele não morra.
௧௩தான் மரணமடையாமலிருக்க தூபமேகமானது சாட்சிப்பெட்டியின்மேல் இருக்கும் கிருபாசனத்தை மூடத்தக்கதாக, யெகோவாவுவுடைய சந்நிதியில் நெருப்பின்மேல் தூபவர்க்கத்தைப் போடக்கடவன்.
14 Ele tomará um pouco do sangue do touro e o polvilhará com o dedo sobre o propiciatório no leste; e diante do propiciatório ele polvilhará um pouco do sangue com o dedo sete vezes.
௧௪பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின்மேல் தெளித்து, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துக் கிருபாசனத்திற்கு முன்பாக ஏழுமுறை தன் விரலினால் தெளிக்கக்கடவன்.
15 “Então ele matará o bode da oferta pelo pecado que é pelo povo, e trará seu sangue dentro do véu, e fará com seu sangue como fez com o sangue do touro, e o polvilhará sobre o propiciatório e diante do propiciatório.
௧௫பின்பு மக்களுடைய பாவநிவாரணபலியான வெள்ளாட்டுக்கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்ததுபோல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின்மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து,
16 Ele fará expiação pelo Santo Lugar, por causa da imundícia dos filhos de Israel, e por causa de suas transgressões, mesmo todos os seus pecados; e assim fará pela Tenda da Reunião que habita com eles no meio de sua imundícia.
௧௬இஸ்ரவேல் மக்களுடைய தீட்டுகளினிமித்தமும், அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தம்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக்கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன்.
17 Ninguém estará na Tenda da Reunião quando ele entrar para fazer expiação no Santo Lugar, até que ele saia, e tenha feito expiação por si mesmo e por sua casa, e por toda a assembléia de Israel.
௧௭பாவநிவிர்த்தி செய்யும்படி அவன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து, தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, வெளியே வருமளவும் ஆசரிப்புக்கூடாரத்தில் ஒருவரும் இருக்கக்கூடாது.
18 “Ele sairá ao altar que está diante de Javé e fará expiação por ele, e tomará um pouco do sangue do touro, e um pouco do sangue do bode, e o colocará em torno dos chifres do altar.
௧௮பின்பு அவன் யெகோவாவுடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டை வந்து, அதற்காகப் பிராயச்சித்தம்செய்து, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக் கடாவின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்துக் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி,
19 Ele aspergirá um pouco do sangue com o dedo sete vezes, e o purificará, e o santificará da imundícia dos filhos de Israel.
௧௯தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து, ஏழுமுறை அதின்மேல் தெளித்து, அதை இஸ்ரவேல் மக்களின் தீட்டுகள் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தவேண்டும்.
20 “Quando tiver terminado de expiar o Santo Lugar, a Tenda da Reunião e o altar, ele apresentará o bode vivo.
௨0“அவன் இப்படிப் பரிசுத்த ஸ்தலத்திற்கும் ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் பிராயச்சித்தம் செய்துமுடிந்தபின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச் சேரச்செய்து,
21 Arão porá ambas as mãos sobre a cabeça do bode vivo e confessará sobre ele todas as iniquidades dos filhos de Israel, e todas as suas transgressões, mesmo todos os seus pecados; e os porá sobre a cabeça do bode, e o mandará para o deserto pela mão de um homem que esteja pronto.
௨௧அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் மக்களுடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஒருவன் கையில் கொடுத்து வனாந்திரத்திற்கு அனுப்பிவிடுவானாக.
22 O bode levará todas as suas iniquidades sobre si mesmo para uma terra solitária, e ele soltará o bode no deserto.
௨௨அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்திற்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்திரத்திலே போகவிடக்கடவன்.
23 “Aaron entrará na Tenda da Reunião, e tirará as roupas de linho que colocou quando entrou no Lugar Santo, e as deixará lá.
௨௩“ஆரோன் ஆசரிப்புக்கூடாரத்திற்குள் வந்து, தான் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையும்போது, அணிந்திருந்த சணல்நூல் உடைகளைக் கழற்றி, அங்கே வைத்துவிட்டு,
24 Então ele se banhará em água num lugar santo, vestirá suas vestes e sairá para oferecer seu holocausto e o holocausto do povo, e fará expiação por si e pelo povo.
௨௪பரிசுத்த இடத்திலே தண்ணீரில் குளித்து, தன் உடைகளை அணிந்துகொண்டு, வெளியே வந்து, தன் சர்வாங்கதகனபலியையும் மக்களின் சர்வாங்கதகனபலியையும் செலுத்தி, தனக்காகவும் மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து,
25 A gordura da oferta pelo pecado, ele queimará sobre o altar.
௨௫பாவநிவாரணபலியின் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்.
26 “Aquele que soltar o bode como bode expiatório lavará suas roupas, e banhará sua carne em água, e depois entrará no acampamento.
௨௬போகவிடப்படும் போக்காடாகிய வெள்ளாட்டுக்கடாவைக் கொண்டுபோய் விட்டவன், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, பின்பு முகாமிற்குள் வருவானாக.
27 “O touro para a oferta pelo pecado, e o bode para a oferta pelo pecado, cujo sangue foi trazido para fazer expiação no Lugar Santo, serão levados para fora do acampamento; e queimarão suas peles, sua carne, e seu esterco com fogo.
௨௭பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்த ஸ்தலத்திற்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், முகாமிற்கு வெளியே கொண்டுபோய், அவைகளின் தோலையும், மாம்சத்தையும், சாணியையும் நெருப்பிலே சுட்டெரிக்கக்கடவர்கள்.
28 Aquele que os queimar lavará suas vestes, e banhará sua carne em água, e depois entrará no acampamento.
௨௮அவைகளைச் சுட்டெரித்தவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, பின்பு முகாமிற்குள் வருவானாக.
29 “Será um estatuto para vós para sempre: no sétimo mês, no décimo dia do mês, afligireis vossas almas, e não fareis nenhum tipo de trabalho, quer nascido nativo ou estrangeiro que viva como estrangeiro entre vós;
௨௯“ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, இஸ்ரவேலனானாலும், உங்களுக்குள் தங்கும் அந்நியனானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக.
30 pois neste dia será feita expiação por vós, para purificar-vos. Estareis limpos de todos os vossos pecados diante de Iavé.
௩0யெகோவாவுடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கப்படும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்க, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும்.
31 É um sábado de descanso solene para vós, e afligireis vossas almas. É um estatuto para sempre.
௩௧உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வுநாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தக்கடவீர்கள்; இது நிரந்தரமான கட்டளை.
32 O sacerdote, que é ungido e que é consagrado sacerdote no lugar de seu pai, fará a expiação, e vestirá as vestes de linho, até mesmo as vestes sagradas.
௩௨அபிஷேகம் பெற்றவனும், தன் தகப்பனுடைய பட்டத்திற்கு வந்து ஆசாரிய ஊழியம்செய்யப் பிரதிஷ்டை செய்யப்பட்டவனுமாகிய ஆசாரியனே பாவநிவிர்த்தி செய்யக்கடவன். அவன் பரிசுத்த உடைகளாகிய சணல்நூல் உடைகளை அணிந்துகொண்டு,
33 Então fará expiação pelo Santo Santuário; e fará expiação pela Tenda da Assembléia e pelo altar; e fará expiação pelos sacerdotes e por todo o povo da Assembléia.
௩௩பரிசுத்த ஸ்தலத்திற்கும் ஆசரிப்புக்கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும், பிராயச்சித்தம்செய்து, ஆசாரியர்களுக்காகவும் சபையின் சகல மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
34 “Este será um estatuto eterno para você, para fazer expiação pelos filhos de Israel uma vez no ano por causa de todos os seus pecados”. Foi feito como Yahweh ordenou a Moisés.
௩௪இப்படி வருடத்தில் ஒருமுறை இஸ்ரவேல் மக்களுக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக என்று சொல் என்றார். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்.