< Gênesis 45 >
1 Então Joseph não conseguiu se controlar diante de todos aqueles que estavam diante dele, e ele gritou: “Porque todos saiam de mim”! Ninguém mais ficou com ele, enquanto Joseph se deu a conhecer a seus irmãos.
௧அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லா வேலைக்காரர்களுக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கமுடியாமல்: அனைவரையும் என்னைவிட்டு வெளியே போகச்செய்யுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன் சகோதரர்களுக்குத் தன்னை வெளிப்படுத்தும்போது, ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை.
2 Ele chorou em voz alta. Os egípcios ouviram, e a casa do faraó ouviu.
௨அவன் சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர்கள் கேட்டார்கள், பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள்.
3 Joseph disse a seus irmãos: “Eu sou Joseph! Meu pai ainda vive?”. Seus irmãos não puderam responder-lhe, pois estavam aterrorizados com sua presença.
௩யோசேப்பு தன் சகோதரர்களைப்பார்த்து: நான் யோசேப்பு; என் தகப்பனார் இன்னும் உயிரோடு இருக்கிறாரா என்றான். அவனுடைய சகோதரர்கள் அவனுக்கு முன்பாகக் கலக்கமடைந்திருந்ததினாலே, அவனுக்கு பதில் சொல்லமுடியாமல் இருந்தார்கள்.
4 Joseph disse a seus irmãos: “Aproximem-se de mim, por favor”. Eles se aproximaram. Ele disse: “Eu sou José, seu irmão, a quem você vendeu para o Egito.
௪அப்பொழுது யோசேப்பு தன் சகோதரர்களை நோக்கி: என்னருகில் வாருங்கள் என்றான். அவர்கள் அருகில்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்திற்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்.
5 Agora não fiquem contristados, nem zangados com vocês mesmos, por me terem vendido aqui, pois Deus me enviou antes de vocês para preservar a vida.
௫என்னை இந்த இடத்திற்கு வருவதற்காக விற்றுப்போட்டதினால், நீங்கள் வருத்தப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; உயிர்களைப் பாதுகாக்க தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.
6 Durante estes dois anos a fome tem estado na terra, e ainda há cinco anos, nos quais não haverá arado nem colheita.
௬தேசத்தில் இப்பொழுது இரண்டு வருடங்களாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருடங்கள் விதைப்பும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும்.
7 Deus me enviou antes de você para preservar para você um remanescente na terra, e para salvá-lo vivo por uma grande libertação.
௭பூமியிலே உங்கள் வம்சம் அழியாமலிருக்க உங்களை ஆதரிப்பதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடு காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.
8 Então agora não foi você quem me enviou aqui, mas Deus, e Ele me fez um pai para o Faraó, senhor de toda sua casa, e governante de toda a terra do Egito.
௮ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இந்த இடத்திற்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவருடைய குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், முழு எகிப்துதேசத்திற்கும் அதிபதியாகவும் வைத்தார்.
9 Apresse-se, e vá até meu pai, e diga-lhe: 'Isto é o que seu filho José diz: “Deus me fez senhor de todo o Egito”. Desça até mim”. Não espere.
௯நீங்கள் சீக்கிரமாக என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்துதேசம் முழுவதிற்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்க வேண்டாம்.
10 Habitarás na terra de Gósen, e estarás perto de mim, tu, teus filhos, os filhos de teus filhos, teus rebanhos, teus rebanhos, e tudo o que tens.
௧0நீரும், உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற எல்லாவற்றோடும் கோசேன் நாட்டில் குடியிருந்து என் அருகில் இருக்கலாம்.
11 Lá eu te proverei; pois ainda há cinco anos de fome; para que não venhas à pobreza, tu e tua casa, e tudo o que tens”.
௧௧உமக்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கு இருக்கிற எல்லாவற்றிற்கும் வறுமை வராதபடி, அங்கே உம்மைப் பராமரிப்பேன்; இன்னும் ஐந்து வருடங்கள் பஞ்சம் இருக்கும் என்று, உம்முடைய மகனாகிய யோசேப்பு சொல்லச்சொன்னான் என்று சொல்லுங்கள்.
12 Eis que teus olhos vêem, e os olhos de meu irmão Benjamin, que é minha boca que fala contigo”.
௧௨இதோ, உங்களோடு பேசுகிற வாய் என் வாய்தான் என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பென்யமீனின் கண்களும் காண்கிறதே.
13 Diga a meu pai toda a minha glória no Egito, e tudo o que você viu. Apresse-se e traga meu pai para cá”.
௧௩எகிப்திலே எனக்கு உண்டாயிருக்கிற அனைத்து மகிமையையும், நீங்கள் கண்ட எல்லாவற்றையும் என் தகப்பனுக்கு அறிவித்து, அவர் சீக்கிரமாக இந்த இடத்திற்கு வரும்படிச் செய்யுங்கள் என்று சொல்லி;
14 Ele caiu sobre o pescoço de seu irmão Benjamin e chorou, e Benjamin chorou sobre seu pescoço.
௧௪தன் தம்பியாகிய பென்யமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்; பென்யமீனும் அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்.
15 Ele beijou todos os seus irmãos e chorou sobre eles. Depois disso, seus irmãos conversaram com ele.
௧௫பின்பு தன் சகோதரர்கள் அனைவரையும் முத்தம்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான். அதற்குப்பின் அவனுடைய சகோதரர்கள் அவனோடு உரையாடினார்கள்.
16 O relatório foi ouvido na casa do faraó, dizendo: “Os irmãos de José vieram”. Agradou bem ao faraó e a seus servos.
௧௬யோசேப்பின் சகோதரர்கள் வந்தார்கள் என்ற செய்தி பார்வோன் அரண்மனையில் பரவியபோது, பார்வோனும் அவனுடைய ஊழியக்காரரும் சந்தோஷம் அடைந்தார்கள்.
17 O Faraó disse a Joseph: “Diga a seus irmãos: 'Façam isso: Carreguem seus animais, e vão, viajem para a terra de Canaã.
௧௭பார்வோன் யோசேப்பை நோக்கி: நீ உன் சகோதரர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் கழுதைகளின்மேல் பாரமேற்றிக்கொண்டு புறப்பட்டு, கானான்தேசத்திற்குப் போய்,
18 Pegue seu pai e suas famílias, e venha até mim, e eu lhe darei o bem da terra do Egito, e você comerá a gordura da terra”.
௧௮உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு எகிப்துதேசத்தின் நன்மையைத் தருவேன்; தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள்.
19 Agora você está ordenado a fazer isso: Tire as carroças da terra do Egito para seus pequenos, e para suas esposas, e traga seu pai, e venha.
௧௯நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காகவும் உங்கள் மனைவிகளுக்காகவும் வண்டிகளை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுபோய், அவர்களையும் உங்கள் தகப்பனுடனே ஏற்றிக்கொண்டு வாருங்கள்.
20 Também, não se preocupem com seus pertences, pois o bem de toda a terra do Egito é seu”.
௨0உங்கள் வீட்டு உபயோகப்பொருட்களைக் குறித்துக் கவலைப்படவேண்டாம்; எகிப்துதேசமெங்குமுள்ள நன்மை உங்களுடையதாயிருக்கும் என்று சொல்லச் சொல்லி, உனக்கு நான் கொடுத்த கட்டளையின்படியே செய் என்றான்.
21 Os filhos de Israel o fizeram. José lhes deu carroças, de acordo com o mandamento do Faraó, e lhes deu provisões para o caminho.
௨௧இஸ்ரவேலின் மகன்கள் அப்படியே செய்தார்கள், யோசேப்பு பார்வோனுடைய கட்டளையின்படியே அவர்களுக்கு வண்டிகளைக் கொடுத்ததுமன்றி, பயணத்திற்கு ஆகாரத்தையும்,
22 Ele deu a cada um deles trocas de roupa, mas a Benjamim ele deu trezentas moedas de prata e cinco trocas de roupa.
௨௨அவர்களில் ஒவ்வொருவனுக்கும் மாற்று உடைகளையும் கொடுத்தான்; பென்யமீனுக்கோ முந்நூறு வெள்ளிக்காசையும் ஐந்து மாற்று உடைகளையும் கொடுத்தான்.
23 Ele enviou o seguinte a seu pai: dez burros carregados com as coisas boas do Egito, e dez burras carregadas com grãos e pão e provisões para seu pai, a propósito.
௨௩அப்படியே தன் தகப்பனுக்குப் பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் சிறப்பான பதார்த்தங்களும், பத்து கழுதைகளின்மேல் தன் தகப்பனுக்காக பயணத்திற்குத் தானியமும் அப்பமும் மற்றத் தின்பண்டங்களும் ஏற்றி அனுப்பினான்.
24 Então ele mandou seus irmãos embora, e eles partiram. Ele lhes disse: “Vejam se não brigam pelo caminho”.
௨௪மேலும், நீங்கள் போகும் வழியிலே சண்டையிட்டுக்கொள்ளாதிருங்கள் என்று அவன் தன் சகோதரர்களுக்குச் சொல்லி அனுப்பினான்; அவர்கள் புறப்பட்டுப்போனார்கள்.
25 Saíram do Egito, e entraram na terra de Canaã, para Jacó, seu pai.
௨௫அவர்கள் எகிப்திலிருந்து போய், கானான்தேசத்திலே தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்திற்கு வந்து:
26 Eles lhe disseram, dizendo: “José ainda está vivo, e ele é o governante de toda a terra do Egito”. Seu coração desmaiou, pois ele não acreditava neles.
௨௬யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்துதேசத்திற்கெல்லாம் அதிபதியாக இருக்கிறான் என்று அவனுக்குத் தெரிவித்தார்கள். அவனுடைய இருதயம் அதிர்ச்சி அடைந்தது; அவன் அவர்களை நம்பவில்லை.
27 Contaram-lhe todas as palavras de José, que ele havia dito a eles. Quando ele viu as carroças que José havia enviado para carregá-lo, o espírito de Jacó, o pai deles, reviveu.
௨௭அவர்கள் யோசேப்பு தங்களுடனே சொன்ன வார்த்தைகள் எல்லாவற்றையும் அவனுக்குச் சொன்னபோதும், தன்னை ஏற்றிக்கொண்டு போகும்படி யோசேப்பு அனுப்பின வண்டிகளை அவன் கண்டபோதும், அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபின் ஆவி உயிர்த்தது.
28 Israel disse: “É suficiente. José, meu filho, ainda está vivo. Eu irei vê-lo antes de morrer”.
௨௮அப்பொழுது இஸ்ரவேல்: என் மகனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான்.