< Esdras 4 >
1 Agora quando os adversários de Judá e Benjamim ouviram que os filhos do cativeiro estavam construindo um templo para Javé, o Deus de Israel,
௧சிறையிருப்பிலிருந்து வந்த மக்கள் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஆலயத்தைக் கட்டுகிறார்கள் என்று யூதாவுக்கும் பென்யமீனுக்கும் இருந்த விரோதிகள் கேள்விப்பட்டபோது,
2 eles se aproximaram de Zorobabel, e dos chefes de família dos pais, e lhes disseram: “Construamos com vocês, pois buscamos seu Deus como vocês; e temos feito sacrifícios a ele desde os dias de Esar Haddon, rei da Assíria, que nos trouxe até aqui”.
௨அவர்கள் செருபாபேலிடத்திற்கும் தலைவர்களான பிதாக்களிடத்திற்கும் வந்து: உங்களுடன் நாங்களும் கட்டுவோம்; உங்களைப்போல நாங்களும் உங்கள் தேவனை நாடுவோம்; இந்த இடத்திற்கு எங்களை வரச் செய்த அசீரியாவின் ராஜாவாகிய எசரத்தோன் நாட்கள் முதற்கொண்டு அவருக்கு நாங்களும் பலியிட்டுவருகிறோம் என்று அவர்களிடம் சொன்னார்கள்.
3 Mas Zerubabel, Jeshua e os demais chefes de família dos pais de Israel lhes disseram: “Vocês não têm nada a ver conosco na construção de uma casa para nosso Deus; mas nós mesmos juntos construiremos para Javé, o Deus de Israel, como nos ordenou o rei Ciro, o rei da Pérsia”.
௩அதற்கு செருபாபேலும், யெசுவாவும், இஸ்ரவேலில் உள்ள மற்ற தலைவர்களான பிதாக்களும் அவர்களை நோக்கி: எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை; பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ராஜா எங்களுக்குக் கட்டளையிட்டபடி. நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு அதைக் கட்டுவோம் என்றார்கள்.
4 Então o povo da terra enfraqueceu as mãos do povo de Judá, e os perturbou na construção.
௪அதனால் அந்த தேசத்து மக்கள் யூதா மக்களின் கைகளைத் தளரச்செய்து, கட்டாமலிருக்க அவர்களை வருத்தப்படுத்தி,
5 Contrataram conselheiros contra eles para frustrar seu propósito durante todos os dias de Ciro, rei da Pérsia, mesmo até o reinado de Dario, rei da Pérsia.
௫பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் காலமுழுவதும், தரியு என்னும் பெர்சியா ராஜா அரசாண்ட காலம்வரை, அவர்கள் யோசனையைப் பொய்யாக்க அவர்களுக்கு விரோதமாக ஆலோசனைக்காரர்களுக்கு லஞ்சம் கொடுத்தார்கள்.
6 No reinado de Assuero, no início de seu reinado, eles escreveram uma acusação contra os habitantes de Judá e Jerusalém.
௬அகாஸ்வேரு அரசாளுகிறபோது, அவனுடைய அரசாட்சியின் ஆரம்பத்திலே, யூதாவிலும் எருசலேமிலும் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகக் குற்ற மனுவை எழுதினார்கள்.
7 Nos dias de Artaxerxes, Bishlam, Mithredath, Tabeel e o resto de seus companheiros escreveram a Artaxerxes rei da Pérsia; e a redação da carta foi escrita em sírio e entregue na língua síria.
௭அர்தசஷ்டாவின் நாட்களிலும், பிஸ்லாமும், மித்திரேதாத்தும், தாபெயேலும், மற்றுமுள்ள அவர்களோடு உள்ளவர்களும், பெர்சியா ராஜாவான அர்தசஷ்டாவுக்கு ஒரு மனு எழுதினார்கள்; அந்த மனு சீரிய எழுத்திலும் சீரிய மொழியிலும் எழுதப்பட்டிருந்தது.
8 Reum o chanceler e Shimshai o escriba escreveram uma carta contra Jerusalém para Artaxerxes, o rei, como se segue.
௮ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும் பதிவாளனாகிய சிம்சாயியும் எருசலேமுக்கு விரோதமாக அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு எழுதின மனுவிலே கையொப்பம் போட்டவர்கள் யாரென்றால்:
9 Então Rehum o chanceler, Shimshai o escriba, e o resto de seus companheiros, os dinaítas, e os afarsatitas, os tarpelitas, os afarsitas, os arqueólogos, os babilônios, os shushanchitas, os dehaítas, os elamitas,
௯ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும், பதிவாளனாகிய சிம்சாயியும், மற்றும் அவர்களைச் சார்ந்த தீனாவியர்கள், அபற்சாத்தியர்கள், தர்பேலியர்கள், அப்பார்சியர்கள், அற்கேவியர்கள், பாபிலோனியர்கள், சூஷங்கியர்கள், தெகாவியர்கள், ஏலாமியரானவர்களும்,
10 e o resto das nações que o grande e nobre Osnappar trouxe e estabeleceu na cidade de Samaria, e no resto do país além do rio, e assim por diante, escreveu.
௧0பெரியவரும் பேர்பெற்றவருமான அஸ்னாப்பார், அந்த இடங்களிலிருந்து அழைத்துக்கொண்டுவந்து சமாரியாவின் பட்டணத்திலே குடியேறச் செய்த மற்ற மக்களும், நதிக்கு இந்தப் புறத்தில் இருக்கிற மற்ற மக்களுமே.
11 Esta é a cópia da carta que eles enviaram: Ao Rei Artaxerxes, de seus servos, o povo além do rio.
௧௧அவர்கள் அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு அனுப்பின மனுவின் நகலாவது: நதிக்கு இந்தப் புறத்தில் இருக்கிற உமது அடியார் முதலானவர்கள் அறிவிக்கிறது என்னவென்றால்.
12 Seja conhecido do rei que os judeus que vieram de você vieram até nós em Jerusalém. Eles estão construindo a cidade rebelde e má, e terminaram os muros e consertaram as fundações.
௧௨உம்மிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்த யூதர்கள் எருசலேமிலே கூடி, கலகமும் பொல்லாப்புமான அந்தப் பட்டணத்திற்கு அஸ்திபாரங்களை இணைத்து, அதின் மதில்களை எழுப்பிக்கட்டுகிறார்கள் என்பது ராஜாவுக்குத் தெரிந்திருப்பதாக.
13 Seja agora conhecido do rei que se esta cidade for construída e os muros terminados, eles não pagarão tributo, costume ou pedágio, e no final será prejudicial para os reis.
௧௩இப்போதும் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு, மதில்கள் கட்டி முடிக்கப்பட்டால், அவர்கள் எந்தவொரு வரியையும் கொடுக்கமாட்டார்கள்; அதனால் ராஜாக்களின் வருமானத்திற்கு நஷ்டம் வரும் என்று ராஜாவுக்குத் தெரிந்திருப்பதாக.
14 Agora porque comemos o sal do palácio e não é apropriado para nós ver a desonra do rei, por isso enviamos e informamos ao rei,
௧௪இப்போதும், நாங்கள் அரண்மனை உப்பை சாப்பிடுவதால், ராஜாவுக்குக் குறைவு வருவதைப் பார்க்கிறது எங்களுக்கு முடியாத காரியம்; ஆகையால் நாங்கள் இதை அனுப்பி, ராஜாவுக்குத் தெரியப்படுத்துகிறோம்.
15 que a busca pode ser feita no livro dos registros de seus pais. Você verá no livro dos registros, e saberá que esta cidade é uma cidade rebelde, e prejudicial para os reis e províncias, e que eles iniciaram rebeliões dentro dela no passado. É por isso que esta cidade foi destruída.
௧௫உம்முடைய பிதாக்களின் நடபடி புத்தகங்களில் சோதித்துப்பார்க்கக் கட்டளையிடவேண்டும்; அப்பொழுது இந்தப் பட்டணம் கலகமும், ராஜாக்களுக்கும் தேசத்திற்கும் நஷ்டமும் உண்டாக்குகிற பட்டணம் என்றும், பூர்வகாலமுதல் கலகம் உள்ளதாயிருந்ததால் இந்தப் பட்டணம் அழிக்கப்பட்டது என்றும், அந்த நடபடி புத்ததகங்களில் கண்டறியலாம்.
16 Informamos ao rei que se esta cidade for construída e as muralhas terminarem, então não terá posse além do rio. '
௧௬ஆகையால் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு, இதன் மதில்கள் கட்டி முடிக்கப்பட்டால், நதிக்கு இந்தப்புறத்திலே உமக்கு ஒன்றும் இல்லாமல்போகும் என்பதை ராஜாவுக்கு தெரியப்படுத்துகிறோம் என்று எழுதி அனுப்பினார்கள்.
17 Então o rei enviou uma resposta para Rehum, o chanceler, e para Shimshai, o escriba, e para o resto de seus companheiros que vivem em Samaria, e no resto do país além do rio: Paz.
௧௭அப்பொழுது ராஜா ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமுக்கும், பதிவாளனாகிய சிம்சாயிக்கும், சமாரியாவில் குடியிருக்கிற அவர்களைச் சார்ந்தவர்களுக்கும், நதிக்கு மறுபுறத்தில் இருக்கிற மற்றவர்களுக்கும் எழுதியனுப்பின மறுமொழியாவது: உங்களுக்கு சமாதானம்,
18 A carta que você nos enviou foi lida claramente antes de mim.
௧௮நீங்கள் அனுப்பின மனு நமது சமுகத்தில் தெளிவாக வாசிக்கப்பட்டது.
19 Decidi, e a pesquisa foi feita, e foi descoberto que esta cidade fez insurreição contra reis no passado, e que rebeliões e revoltas foram feitas nela.
௧௯நம்முடைய கட்டளையினால் சோதித்துப் பார்க்கும்போது, அந்தப் பட்டணம் பூர்வகாலமுதல் ராஜாக்களுக்கு விரோதமாக எழும்பினது என்றும், அதிலே கலகமும் ராஜதுரோகமும் காணப்பட்டது என்றும்,
20 There também foram poderosos reis sobre Jerusalém, que governaram todo o país além do rio; e tributo, costumes e pedágio foram pagos a eles.
௨0எருசலேமில் வல்லமையுள்ள ராஜாக்கள் இருந்தார்கள் என்றும், அவர்கள் நதிக்கு மறுபுறத்தில் இருக்கிற சகல தேசங்களையும் ஆண்டுவந்தார்கள் என்றும், அனைத்து வரியும் அவர்களுக்குச் செலுத்தப்பட்டது என்றும் தெரியவருகிறது.
21 Faça agora um decreto para fazer cessar estes homens, e que esta cidade não seja construída até que um decreto seja feito por mim.
௨௧இப்பொழுதும் நம்மிடத்திலிருந்து மறுஉத்திரவு வரும்வரை அந்த மனிதர்கள் அந்தப் பட்டணத்தைக் கட்டாமல் நிறுத்திவிடக் கட்டளையிடுங்கள்.
22 Tenha cuidado para não ser descuidado ao fazê-lo. Por que os danos devem crescer para a ferida dos reis? '
௨௨இதிலே நீங்கள் தவறாதபடி எச்சரிக்கையாக இருங்கள்; ராஜாக்களுக்கு நஷ்டமும் சேதமும் ஏன் வரவேண்டும் என்று எழுதி அனுப்பினான்.
23 Então, quando a cópia da carta do rei Artaxerxes foi lida antes de Rehum, Shimshai o escriba, e seus companheiros, eles foram apressados a Jerusalém para os judeus, e os obrigaram a cessar pela força das armas.
௨௩ராஜாவாகிய அர்தசஷ்டாவுடைய கட்டளையின் நகல் ரெகூமுக்கும், பதிவாளனாகிய சிம்சாயிக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கு முன்பாக வாசிக்கப்பட்டபோது, அவர்கள் விரைவாக எருசலேமிலிருக்கிற யூதரிடத்திற்குப்போய், நிர்பந்தம் செய்தும் வலுக்கட்டாயமாகவும் அவர்களை வேலைசெய்யவிடாமல் நிறுத்திப்போட்டார்கள்.
24 Em seguida, os trabalhos pararam na casa de Deus que fica em Jerusalém. Parou até o segundo ano do reinado de Dario, rei da Pérsia.
௨௪அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் வேலை தடைபட்டு, பெர்சியாவின் ராஜாவாகிய தரியு அரசாட்சி செய்த இரண்டாம் வருடம்வரை நிறுத்தப்பட்டிருந்தது.