< Ezequiel 47 >
1 Ele me trouxe de volta para a porta do templo; e eis que as águas saíam debaixo da soleira do templo para o leste, para a frente do templo voltada para o leste. As águas desciam de baixo, do lado direito do templo, ao sul do altar.
௧பின்பு அவர் என்னை ஆலயத்தின் வாசலுக்குத் திரும்பிவரச்செய்தார்; இதோ, வாசற்படியின் கீழிருந்து தண்ணீர் புறப்பட்டுக் கிழக்கே ஓடுகிறதாக இருந்தது; ஆலயத்தின் முகப்பு கிழக்கு நோக்கி இருந்தது; அந்தத் தண்ணீர் ஆலயத்தின் வலது பக்கமாகப் பலிபீடத்திற்குத் தெற்கே பாய்ந்தது.
2 Então ele me trouxe pelo caminho do portão para o norte, e me conduziu pelo caminho para fora até o portão externo, pelo caminho do portão que olha para o leste. Eis que as águas correram para o lado direito.
௨அவர் என்னை வடக்கு வாசல் வழியாகப் புறப்படச்செய்து, என்னை வெளியிலே கிழக்கு திசைக்கு எதிரான வெளிவாசல்வரை சுற்றி நடத்திக்கொண்டுபோனார்; அங்கே தண்ணீர் வலதுபக்கத்திலிருந்து பாய்கிறதாக இருந்தது.
3 Quando o homem saiu para o leste com a linha na mão, ele mediu mil cúbitos, e me fez passar pelas águas, águas que estavam até os tornozelos.
௩அந்த மனிதன் தமது கையில் நூலைப் பிடித்துக்கொண்டு, கிழக்கே புறப்படும்போது ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கச்செய்தார்; தண்ணீர் கணுக்கால் அளவாக இருந்தது.
4 Again ele mediu mil, e me fez passar pelas águas, águas que estavam até os joelhos. Novamente ele mediu mil, e me fez passar pelas águas que estavam até a cintura.
௪பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கச்செய்தார்; அங்கே தண்ணீர் முழங்கால் அளவாக இருந்தது; பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து என்னைக் கடக்கச்செய்தார்; அங்கே தண்ணீர் இடுப்பளவாக இருந்தது.
5 Afterward ele mediu mil; e era um rio pelo qual eu não podia passar, pois as águas haviam subido, águas para nadar, um rio que não podia ser percorrido a pé.
௫பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்தார்; அங்கே அது நான் கடக்கக்கூடாத நதியாக இருந்தது; தண்ணீர் நீச்சல் ஆழமும் கடக்கமுடியாத நதியுமாக இருந்தது.
6 Ele me disse: “Filho do homem, você já viu isso?” Depois ele me trouxe e me fez voltar à margem do rio.
௬அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இதைக் கண்டாயா என்று சொல்லி, என்னை நதியோரமாகத் திரும்ப நடத்திக்கொண்டுபோனார்.
7 Agora, quando eu tinha voltado, eis que na margem do rio havia muitas árvores de um lado e do outro.
௭நான் நடந்துவரும்போது, இதோ, நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் வெகு திரளான மரங்கள் இருந்தது.
8 Então ele me disse: “Estas águas fluem em direção à região leste e descerão para o Arabah”. Então elas irão em direção ao mar e fluirão para o mar que será feito fluir para fora; e as águas serão curadas”.
௮அவர் என்னை நோக்கி: இந்தத் தண்ணீர் கிழக்குதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், வனாந்திரவழியாக ஓடி கடலில் விழும்; இது கடலில் பாய்ந்து, விழுந்தபின்பு, அதின் தண்ணீர் ஆரோக்கியமாகும்.
9 Acontecerá que todos os seres vivos que se aglomeram, em todos os lugares onde chegam os rios, viverão. Então haverá uma multidão muito grande de peixes; pois estas águas chegaram lá, e as águas do mar serão curadas, e tudo viverá onde quer que o rio chegue.
௯நடந்தது என்னவென்றால், இந்த நதி போகுமிடமெங்கும் வாழும் உயிரினங்கள் யாவும் பிழைக்கும்; இந்தத் தண்ணீர் அங்கே வந்தபடியினால் வெகு ஏராளமான மீன்களும் உண்டாயிருக்கும்; இந்த நதி போகுமிடம் எங்குமுள்ள யாவும் ஆரோக்கியமடைந்து பிழைக்கும்.
10 Acontecerá que os pescadores ficarão ao seu lado. De En Gedi até En Eglaim será um lugar para a disseminação das redes. O peixe deles estará atrás de seus tipos, como o peixe do grande mar, extremamente muitos.
௧0அப்பொழுது என்கேதி துவங்கி எனெக்லாயிம்வரை மீன்பிடிக்கிறவர்கள் அதின் கரையிலே நிற்பார்கள்; அதெல்லாம் வலைகளை விரிக்கிற இடமாக இருக்கும்; அதின் மீன்கள் மத்திய தரைக் கடலின் மீன்களைப்போலப் பல வகையான மீன்கள் ஏராளமுமாக இருக்கும்.
11 Mas seus pântanos pantanosos não serão curados. Eles serão entregues ao sal.
௧௧ஆனாலும் அதினுடைய உளையான பள்ளங்களும் அதினுடைய சதுப்பு பகுதிகளும் ஆரோக்கியமாகாமல், உப்பாகவே விட்டுவிடப்படும்.
12 Junto às margens do rio, de ambos os lados, crescerá toda árvore para alimento, cuja folha não murchará, nem seus frutos falharão. Ela produzirá novos frutos a cada mês, pois suas águas saem do santuário. Seus frutos serão para o alimento, e suas folhas para a cura”.
௧௨நதியோரமாக அதின் இக்கரையிலும் அக்கரையிலும் சாப்பிடுவதற்கான எல்லாவித மரங்களும் வளரும்; அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, அவைகளின் பழங்கள் கெடுவதுமில்லை; அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியினால் மாதந்தோறும் புதுபழங்களைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும்; அவைகளின் பழங்கள் சாப்பிடுவதற்கும், அவைகளின் இலைகள் உதிர்ந்து போகாது.
13 O Senhor Javé diz: “Esta será a fronteira pela qual você dividirá a terra por herança de acordo com as doze tribos de Israel”. José terá duas porções.
௧௩யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுடைய எண்ணிக்கையின்படியே தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு குறிக்கவேண்டிய எல்லையாவது: யோசேப்புக்கு இரண்டு பங்கு உண்டு.
14 Herdá-la-eis, tanto uma como outra; pois jurei dá-la a vossos pais”. Esta terra vos será entregue por herança.
௧௪சகோதரனுடன் சகோதரனுக்குச் சரிபங்கு உண்டாக அதைச் சொந்தமாக்கிக்கொள்ளவேண்டும்; அதை உங்களுடைய தகப்பன்மார்களுக்குக் கொடுப்பேன் என்று நான் வாக்களித்துக் கொடுத்தேன்; ஆகையால் உங்களுக்கு இந்த தேசம் சுதந்தரமாகக் கிடைக்கும்.
15 “Esta deve ser a fronteira da terra: “No lado norte, do grande mar, pelo caminho de Hethlon, até a entrada de Zedad;
௧௫தேசத்தின் எல்லையாவது: வடக்கு பக்கம் மத்திய தரைக் சமுத்திரம் துவங்கி, சேதாதுக்குப் போகிற எத்லோன் வழியாக இருக்கிற,
16 Hamath, Berothah, Sibraim (que fica entre a fronteira de Damasco e a fronteira de Hamath), até Hazer Hatticon, que fica junto à fronteira de Hauran.
௧௬ஆமாத்தும், பேரொத்தாவும், தமஸ்குவின் எல்லைக்கும் ஆமாத்தின் எல்லைக்கும் நடுவான சிப்ராயிமும், ஆப்ரானின் எல்லையுடன் சேர்ந்த ஆத்சார் அத்தீகோனுமானது.
17 A fronteira do mar será Hazar Enon, na fronteira de Damasco; e ao norte, na direção norte, é a fronteira de Hamath. Este é o lado norte.
௧௭அப்படியே மத்திய தரைக் கடலிலிருந்து போகிற எல்லை ஆத்சார் ஏனானும், தமஸ்குவின் எல்லையும், வடக்கு மூலையான வடக்கும் ஆமாத்தின் எல்லையுமானது; இது வடக்கு பக்கம்.
18 “O lado leste, entre Hauran, Damasco, Gilead e a terra de Israel, será o Jordão; da fronteira norte até o mar oriental você medirá. Este é o lado leste.
௧௮கிழக்கு பக்கத்தை ஆப்ரானுக்கும் தமஸ்குவுக்கும் நடுவாகவும், கீலேயாத்துக்கும் யோர்தானின் ஓரமான இஸ்ரவேல் தேசத்திற்கும், நடுவாகவும் கிழக்கு கடல்வரை இருக்கும் எல்லையாக அளப்பீர்களாக; இது கிழக்கு பக்கம்.
19 “O lado sul para o sul será de Tamar até as águas do Meriboth Kadesh, até o riacho, até o grande mar. Este é o lado sul, em direção ao sul.
௧௯தெற்கு மூலையான தெற்கு பக்கம் தாமார் துவங்கி, காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள்வரை, ஆறுவரை மத்திய தரைக் கடல்வரையாகவும் இருப்பது; இது தெற்குமூலையான தென்புறம்.
20 “O lado oeste será o grande mar, a partir da fronteira sul até a entrada de Hamath. Este é o lado oeste.
௨0மேற்கு பக்கம் அந்த எல்லை துவங்கி ஆமாத்துக்கு எதிராக வந்து சேரும்வரை இருக்கிற மத்திய தரைக் கடலே; இது மேற்கு பக்கம்.
21 “Portanto, vocês deverão dividir esta terra entre si, de acordo com as tribos de Israel.
௨௧இந்த தேசத்தை நீங்கள் இஸ்ரவேல் கோத்திரங்களின்படியே உங்களுக்குள்ளே பங்கிட்டுக்கொள்வீர்களாக.
22 Dividi-la-eis por sorteio por herança para vós e para os estrangeiros que vivem entre vós, que serão pais de filhos entre vós. Então eles serão para vocês como os nativos nascidos entre os filhos de Israel. Eles terão herança convosco entre as tribos de Israel.
௨௨உங்களுக்கும், உங்களுக்குள்ளே தங்கி உங்களுக்குள்ளே பிள்ளைகளைப்பெறுகிற அந்நியர்களுக்கும், நீங்கள் அதைச் சீட்டுப்போட்டுச் சொந்தமாக்கிக்கொள்வீர்களாக; இவர்கள் உங்களுக்கு இஸ்ரவேல் மக்களில் பிறந்தவர்களைப்போல இருந்து, உங்களுடன் இஸ்ரவேல் கோத்திரங்களின் நடுவே சொத்திற்கு உடன்படுவார்களாக.
23 Em qualquer tribo que o estrangeiro viva, ali lhe dareis sua herança”, diz o Senhor Yahweh.
௨௩அந்நியன் எந்தக் கோத்திரத்துடன் தங்கியிருக்கிறானோ, அதிலே அவனுடைய சொத்தை அவனுக்குக் கொடுக்கவேண்டும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.