< Ezequiel 18 >
1 A palavra de Yahweh veio até mim novamente, dizendo:
௧யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2 “O que você quer dizer, que você usa este provérbio a respeito da terra de Israel, dizendo “Os pais comeram uvas azedas, e os dentes das crianças estão no limite”?
௨பிதாக்கள் திராட்சைக்காய்களை சாப்பிட்டார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போனது என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துச் சொல்லுகிறது என்ன?
3 “Como eu vivo”, diz o Senhor Javé, “você não usará mais este provérbio em Israel”.
௩இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
4 Eis que todas as almas são minhas; como a alma do pai, assim também a alma do filho é minha”. A alma que pecar, ele morrerá.
௪இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவம்செய்கிற ஆத்துமாவே சாகும்.
5 “Mas se um homem é justo, e faz o que é lícito e correto,
௫ஒருவன் நீதிமானாக இருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து,
6 e não comeu nas montanhas, não levantou os olhos para os ídolos da casa de Israel, não contaminou a esposa de seu vizinho, não se aproximou de uma mulher em sua impureza,
௬மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் மக்களின் அசுத்தமான சிலைகளுக்கு நேராகத் தன்னுடைய கண்களை ஏறெடுக்காமலும் தன்னுடைய அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும் மாதவிடாயுள்ள பெண்ணுடன் சேராமலும்,
7 e não cometeu nenhum erro, mas restituiu ao devedor seu penhor, não levou nada por roubo, deu seu pão para os famintos, e cobriu a nua com uma peça de vestuário;
௭ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலும் இருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக்கொடுத்து, தன்னுடைய அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, ஆடையில்லாதவனுக்கு ஆடை அணிவித்து,
8 aquele que não emprestou a eles com interesse, não tirou nenhum aumento deles, que retirou sua mão da iniqüidade, tem feito verdadeira justiça entre o homem e o homem,
௮வட்டிக்குக் கொடுக்காமலும், அதிக லாபம் வாங்காமலும், அநியாயத்திற்குத் தன்னுடைய கையை விலக்கி, மனிதர்களுக்குள்ள வழக்கை உண்மையாகத் தீர்த்து,
9 entrou em meus estatutos, e manteve minhas ordenações, para lidar verdadeiramente; ele é justo, ele certamente viverá”, diz o Senhor Yahweh.
௯என்னுடைய கட்டளைகளின்படி நடந்து, என்னுடைய நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாக இருந்தால் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
10 “Se ele pai um filho que é um ladrão que derrama sangue, e que faz qualquer uma dessas coisas,
௧0ஆனாலும் அவனுக்கு ஒரு மகன் பிறந்து, அவன் கள்ளனும் இரத்தம் சிந்துகிறவனும், மேற்சொல்லிய கடமைகளின்படி நடக்காமல்,
11 ou que não faz nenhuma dessas coisas mas tem comido nos santuários da montanha e contaminou a esposa de seu vizinho, O site
௧௧இவைகளில் ஒன்றுக்கு ஒப்பானதைச் செய்கிறவனுமாக இருந்து, மலைகளின்மேல் சாப்பிட்டு, தன்னுடைய அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தி,
12 prejudicou os pobres e necessitados, foi levado por roubo, não restaurou a promessa, e levantou seus olhos para os ídolos, cometeu abominação,
௧௨சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, கொள்ளைக்காரனாக இருந்து, அடைமானத்தைத் திரும்பக் கொடுக்காமல், அசுத்தமான சிலைகளுக்கு நேராக தன்னுடைய கண்களை ஏறெடுத்து, அருவருப்பானதைச் செய்து,
13 tem emprestado com interesse, e tem tirado aumento dos pobres, viverá ele então? Ele não viverá. Ele já fez todas essas abominações. Ele certamente morrerá. Seu sangue estará sobre ele.
௧௩வட்டிக்குக் கொடுத்து, அதிகமாக வட்டி வாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை; இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே; அவன் இறக்கவே இறப்பான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும்.
14 “Agora, eis que, se ele pai um filho que vê todos os pecados de seu pai que ele fez, e teme, e não faz o mesmo,
௧௪பின்னும், இதோ, அவனுக்கு ஒரு மகன் பிறந்து, அவன் தன்னுடைய தகப்பன் செய்த எல்லாப் பாவங்களையும் கண்டு, தான் அவைகளின்படி செய்யாதபடி எச்சரிக்கையாக இருந்து,
15 que ainda não comeu nas montanhas, não levantou os olhos para os ídolos da casa de Israel, não contaminou a esposa de seu vizinho,
௧௫மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் மக்களின் அசுத்தமான சிலைகளுக்கு நேராகத் தன்னுடைய கண்களை ஏறெடுக்காமலும், தன்னுடைய அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும்,
16 não cometeu nenhum erro, não levou nada para se comprometer, não foi levado por roubo, mas deu seu pão para os famintos, e cobriu a nua com uma peça de vestuário;
௧௬ஒருவனையும் ஒடுக்காமலும், அடைமானத்தை வைத்துக்கொண்டிருக்காலும், கொள்ளையடிக்காமலும், தன்னுடைய ஆகாரத்தை பசித்தவனுக்குப் பங்கிட்டு, ஆடை இல்லாதவனுக்கு ஆடை அணிவித்து,
17 que retirou sua mão dos pobres, que não tenha recebido juros ou aumento, executou minhas ordenações, entrou em meus estatutos; ele não morrerá pela iniqüidade de seu pai. Ele certamente viverá.
௧௭சிறுமையானவனை துன்பப்படுத்தாதபடித் தன்னுடைய கையை விலக்கி, வட்டியும் அதிகமாக வாங்காமலிருந்து என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினால் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.
18 Quanto a seu pai, porque ele oprimiu cruelmente, roubou seu irmão e fez o que não é bom entre seu povo, eis que ele morrerá em sua iniqüidade.
௧௮அவனுடைய தகப்பனோவென்றால் கொடுமைசெய்து, சகோதரனைக் கொள்ளையிட்டு, தகாததைத் தன்னுடைய மக்களின் நடுவிலே செய்தபடியினால், இதோ, இவன் தன்னுடைய அக்கிரமத்திலே மரிப்பான்.
19 “No entanto você diz: “Por que o filho não suporta a iniqüidade do pai? Quando o filho tiver feito o que é legal e correto, e tiver cumprido todos os meus estatutos, e os tiver feito, ele certamente viverá.
௧௯இதெப்படி, மகன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று நீங்கள் கேட்டால், மகன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான்.
20 A alma que pecar, ele morrerá. O filho não levará a iniqüidade do pai, nem o pai levará a iniqüidade do filho. A justiça dos justos recairá sobre ele, e a maldade dos ímpios recairá sobre ele.
௨0பாவம்செய்கிற ஆத்துமாவே சாகும்; மகன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் மகனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல் தான் இருக்கும்.
21 “Mas se o ímpio se converter de todos os seus pecados que cometeu, e guardar todos os meus estatutos, e fizer o que é lícito e correto, certamente viverá. Ele não morrerá.
௨௧துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்தால், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் மரிப்பதில்லை.
22 Nenhuma de suas transgressões que ele cometeu será lembrada contra ele. Em sua justiça que ele fez, ele viverá.
௨௨அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை; அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான்.
23 Tenho algum prazer na morte do ímpio?” diz o Senhor Javé, “e não antes que ele volte de seu caminho, e viva?
௨௩துன்மார்க்கன் மரணமடைகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன்னுடைய வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
24 “Mas quando o justo se afasta de sua justiça e comete iniqüidade, e faz de acordo com todas as abominações que o ímpio faz, deveria ele viver? Nenhuma de suas ações justas que ele tenha feito será lembrada. Em sua transgressão que cometeu, e em seu pecado que cometeu, morrerá neles.
௨௪நீதிமான் தன்னுடைய நீதியைவிட்டு விலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற எல்லா அருவருப்புகளின்படியும் செய்தால், அவன் பிழைப்பானோ? அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை; அவன் செய்த தன்னுடைய துரோகத்திலேயும் அவன் செய்த தன்னுடைய பாவத்திலேயும் மரிப்பான்.
25 “No entanto, você diz: 'O caminho do Senhor não é igual'. Ouça agora, casa de Israel: O meu caminho não é igual? Seus caminhos não são desiguais?
௨௫நீங்களோ, ஆண்டவருடைய வழி சரியாக இருக்கவில்லை என்கிறீர்கள்; இஸ்ரவேல் மக்களே, கேளுங்கள்; என்னுடைய வழி சரியாக இருக்காதோ? உங்களுடைய வழிகள் அல்லவோ சரியில்லாததாக இருக்கிறது.
26 Quando o homem justo se afasta de sua justiça, e comete iniqüidade, e morre nela, então ele morre em sua iniqüidade que ele fez.
௨௬நீதிமான் தன்னுடைய நீதியைவிட்டு விலகி, அநீதிசெய்து அதிலே இறந்தால், அவன் செய்த தன்னுடைய அநீதியினால் அவன் மரிப்பான்.
27 Novamente, quando o homem mau se afasta de sua maldade que cometeu, e faz o que é lícito e correto, ele salvará sua alma viva.
௨௭துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்தால், அவன் தன்னுடைய ஆத்துமாவைப் பிழைக்கச்செய்வான்.
28 Porque ele considera, e se afasta de todas as suas transgressões que cometeu, certamente viverá. Ele não morrerá.
௨௮அவன் எச்சரிப்படைந்து, தான் செய்த எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புகிறபடியினாலே அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் மரிப்பதில்லை.
29 No entanto, a casa de Israel diz: “O caminho do Senhor não é justo”. Casa de Israel, não são justos os meus caminhos? Seus caminhos não são injustos?
௨௯இஸ்ரவேல் மக்களோ: ஆண்டவருடைய வழி ஒழுங்காக இருக்கவில்லை என்கிறார்கள்; இஸ்ரவேல் மக்களே, என்னுடைய வழிகள் ஒழுங்காக இருக்காதோ? உங்களுடைய வழிகள் அல்லவோ ஒழுங்கில்லாததாக இருக்கிறது.
30 “Portanto, eu vos julgarei, casa de Israel, todos de acordo com seus caminhos”, diz o Senhor Yahweh. “Voltai, e convertei-vos de todas as vossas transgressões, assim a iniqüidade não será a vossa ruína”.
௩0ஆகையால் இஸ்ரவேல் மக்களே, நான் உங்களில் அவனவனை அவனவன் வழிகளுக்குத் தகுந்தபடி நியாயந்தீர்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்; அப்பொழுது அக்கிரமம் உங்களுடைய பொல்லாப்புக்கு காரணமாக இருப்பதில்லை.
31 Lançai de vós todas as vossas transgressões em que transgredistes; e fazei de vós um coração novo e um espírito novo”. Por que morrereis, casa de Israel?
௩௧நீங்கள் துரோகம்செய்த உங்களுடைய எல்லாத் துரோகங்களையும் உங்கள்மேல் இல்லாமல் விலக்கி, உங்களுக்குப் புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டாக்கிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேல் மக்களே, நீங்கள் ஏன் இறக்கவேண்டும்?
32 Pois não tenho prazer na morte daquele que morre”, diz o Senhor Yahweh. “Portanto, convertei-vos, e vivei!
௩௨மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; மரணமடைகிறவனுடைய மரணத்தை நான் விரும்புவதில்லை என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.