< Êxodo 16 >
1 Eles fizeram sua viagem desde Elim, e toda a congregação dos filhos de Israel veio para o deserto de Sinai, que fica entre Elim e Sinai, no décimo quinto dia do segundo mês após sua partida da terra do Egito.
௧இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் ஏலிமைவிட்டு பயணம்செய்து, எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே, ஏலிமுக்கும் சீனாய்க்கும் நடுவே இருக்கிற சீன் வனாந்திரத்திற்கு வந்துசேர்ந்தார்கள்.
2 Toda a congregação dos filhos de Israel murmurou contra Moisés e contra Arão no deserto;
௨அந்த வனாந்திரத்திலே இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து:
3 e os filhos de Israel disseram-lhes: “Desejamos ter morrido pela mão de Javé na terra do Egito, quando nos sentamos junto às panelas de carne, quando comemos nossa fartura de pão, pois vocês nos trouxeram a este deserto para matar toda esta assembléia de fome”.
௩“நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களின் அருகிலே உட்கார்ந்து அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்தில், யெகோவாவின் கையால் செத்துப்போனால் பரவாயில்லை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படச்செய்து, இந்த வனாந்திரத்திலே அழைத்துவந்தீர்களே” என்று அவர்களிடம் சொன்னார்கள்.
4 Então Javé disse a Moisés: “Eis que choverei pão do céu por ti, e o povo sairá e recolherá a porção de um dia todos os dias, para que eu possa testá-los, quer andem ou não na minha lei”.
௪அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வரச்செய்வேன்; மக்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; அதினால் அவர்கள் என்னுடைய கட்டளையின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன்.
5 Acontecerá no sexto dia, que prepararão o que trouxerem, e será o dobro da porção que recolherem diariamente”.
௫ஆறாம் நாளிலோ, அவர்கள் தினந்தோறும் சேர்க்கிறதைவிட இரண்டுமடங்கு சேர்த்து, அதை ஆயத்தம்செய்து வைக்கவேண்டும்” என்றார்.
6 Moisés e Arão disseram a todos os filhos de Israel: “À noite, vocês saberão que Javé os tirou da terra do Egito”.
௬அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் மக்கள் எல்லோரையும் நோக்கி: “யெகோவாவே உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தவர் என்பதை மாலையில் அறிவீர்கள்;
7 Pela manhã, vocês verão a glória de Iavé; porque ele ouve seus murmúrios contra Iavé. Quem somos nós, que você murmura contra nós?”.
௭அதிகாலையில் யெகோவாடைய மகிமையையும் காண்பீர்கள்; யெகோவாவுக்கு விரோதமான உங்களுடைய முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நீங்கள் எங்களுக்கு விரோதமாக முறுமுறுப்பதற்கு நாங்கள் எம்மாத்திரம்” என்றார்கள்.
8 Moisés disse: “Agora Javé lhe dará carne para comer à noite, e de manhã pão para satisfazê-lo, porque Javé ouve suas murmurações que você murmura contra ele”. E quem somos nós? Suas murmurações não são contra nós, mas contra Yahweh”.
௮பின்னும் மோசே: “மாலையில் நீங்கள் சாப்பிடுவதற்குக் யெகோவா உங்களுக்கு இறைச்சியையும், அதிகாலையில் நீங்கள் திருப்தியடைவதற்கு அப்பத்தையும் கொடுக்கும்போது இது வெளிப்படும்; யெகோவாவுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுத்த உங்களுடைய முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நாங்கள் எம்மாத்திரம்? உங்களுடைய முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, யெகோவாவுக்கே விரோதமாக இருக்கிறது” என்றான்.
9 Moisés disse a Arão: “Diga a toda a congregação dos filhos de Israel: 'Aproximai-vos de Javé, pois ele ouviu vossas murmurações'”.
௯அப்பொழுது மோசே ஆரோனைப் பார்த்து: “நீ இஸ்ரவேல் மக்களாகிய சபையார்கள் எல்லோரையும் நோக்கி: யெகோவாவுக்கு முன்பாக சேருங்கள், அவர் உங்களுடைய முறுமுறுப்புகளைக் கேட்டார் என்று சொல்” என்றான்.
10 Quando Arão falou a toda a congregação dos filhos de Israel, eles olharam para o deserto, e eis que a glória de Javé apareceu na nuvem.
௧0ஆரோன் இஸ்ரவேல் மக்களாகிய சபையார்களுக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்திரதிசையாகத் திரும்பிப்பார்த்தார்கள்; அப்பொழுது யெகோவாவுடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது.
11 Javé falou a Moisés, dizendo:
௧௧யெகோவா மோசேயை நோக்கி:
12 “Ouvi os murmúrios dos filhos de Israel”. Fale com eles, dizendo: “À noite comerão carne, e de manhã se encherão de pão”. Então sabereis que eu sou Yahweh, vosso Deus””.
௧௨“இஸ்ரவேல் மக்களின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன்; நீ அவர்களுடன் பேசி, நீங்கள் மாலையில் இறைச்சியைச் சாப்பிட்டு, அதிகாலையில் அப்பத்தால் திருப்தியாகி, நான் உங்களுடைய தேவனாகிய யெகோவா என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல்” என்றார்.
13 À noite, a codorniz surgiu e cobriu o acampamento; e pela manhã o orvalho circundava o acampamento.
௧௩மாலையில் காடைகள் வந்து விழுந்து முகாமை மூடிக்கொண்டது. அதிகாலையில் முகாமைச் சுற்றி பனி பெய்திருந்தது.
14 Quando o orvalho que jazia tinha desaparecido, eis que na superfície do deserto era uma pequena coisa redonda, pequena como a geada no chão.
௧௪பெய்திருந்த பனி நீங்கினபின்பு, இதோ, வனாந்திரத்தின்மீது எங்கும் உருண்டையான ஒரு சிறிய பொருள் உறைந்த பனிக்கட்டிப் பொடியைப்போலத் தரையின்மேல் கிடந்தது.
15 Quando as crianças de Israel o viram, disseram umas para as outras: “O que é isso?”. Pois eles não sabiam o que era. Moisés lhes disse: “É o pão que Javé lhes deu para comer”.
௧௫இஸ்ரவேல் மக்கள் அதைக் கண்டு, அது என்னவென்று அறியாமல் இருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, “இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: “இது யெகோவா உங்களுக்குச் சாப்பிடக்கொடுத்த அப்பம்.
16 Isto é o que Javé ordenou: “Recolhei dele todos de acordo com sua alimentação; um omer uma cabeça, de acordo com o número de vossas pessoas, tomai-o, cada homem para aqueles que estão em sua tenda””.
௧௬யெகோவா கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் சாப்பிடும் அளவுக்குத் தகுந்தபடி அதில் எடுத்துச் சேர்க்கட்டும்; உங்களிலுள்ள நபர்களின் எண்ணிக்கையின்படி, அவனவன் தன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காக தலைக்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக்கொள்ளட்டும்” என்றான்.
17 As crianças de Israel o fizeram, e algumas se reuniram mais, outras menos.
௧௭இஸ்ரவேல் மக்கள் அப்படியே செய்து, சிலர் அதிகமாகவும் சிலர் குறைவாகவும் சேர்த்தார்கள்.
18 Quando o mediram com um gômero, aquele que muito reuniu não tinha nada, e aquele que pouco reuniu não tinha falta. Cada um deles se reunia de acordo com sua alimentação.
௧௮பின்பு, அதை ஓமரால் அளந்தார்கள்: அதிகமாகச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை, குறைவாகச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை; அவரவர் தாங்கள் சாப்பிடும் அளவுக்குத்தகுந்தபடி சேர்த்தார்கள்.
19 Moisés disse-lhes: “Não deixem ninguém sair dele até de manhã”.
௧௯மோசே அவர்களை நோக்கி: “ஒருவனும் அதிகாலைவரை அதில் ஒன்றும் வைக்கக்கூடாது என்று அவர்களுக்குச் சொல்லியும்;
20 Notwithstanding eles não deram ouvidos a Moisés, mas alguns deles saíram dele até de manhã, então ele criou minhocas e se tornou sujo; e Moisés ficou furioso com eles.
௨0மோசேயின் சொல் கேட்காமல், சிலர் அதில் அதிகாலைவரை சிறிதளவு மீதியாக வைத்தார்கள்; அது பூச்சி பிடித்து நாற்றமெடுத்தது. அவர்கள்மேல் மோசே கோபம்கொண்டான்.
21 Eles o reuniram pela manhã, todos de acordo com sua alimentação. Quando o sol ficou quente, ele derreteu.
௨௧அதை அதிகாலைதோறும் அவரவர் சாப்பிடும் அளவுக்குத்தகுந்தபடி சேர்த்தார்கள், வெயில் ஏறஏற அது உருகிப்போகும்.
22 No sexto dia, eles juntaram o dobro do pão, dois presságios para cada um; e todos os governantes da congregação vieram e disseram a Moisés.
௨௨ஆறாம் நாளில் தலைக்கு இரண்டு ஓமர் வீதமாக இரண்டுமடங்காக ஆகாரம் சேர்த்தார்கள்; அப்பொழுது சபையின் தலைவர்கள் எல்லோரும் வந்து, அதை மோசேக்கு அறிவித்தார்கள்.
23 Ele lhes disse: “Isto é o que Javé disse: 'Amanhã é um descanso solene, um sábado santo para Javé'”. Cozinhem o que quiserem cozinhar, e cozam o que quiserem ferver; e tudo o que sobrar, fiquem deitados para serem guardados até a manhã””.
௨௩அவன் அவர்களை நோக்கி: “யெகோவா சொன்னது இதுதான்; நாளைக்குக் யெகோவாவுக்குறிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேகவைக்கவேண்டியதை வேகவைத்து, மீதியாக இருக்கிறதையெல்லாம் நாளைவரை உங்களுக்காக வைத்துவையுங்கள்” என்றான்.
24 Eles o deitaram até a manhã, como Moisés ordenou, e não se tornou sujo, e não havia minhocas nele.
௨௪மோசே கட்டளையிட்டபடி, அதை மறுநாள்வரைக்கும் வைத்துவைத்தார்கள்; அப்பொழுது அது நாறவும் இல்லை, அதிலே பூச்சிபிடிக்கவும் இல்லை.
25 Moisés disse: “Comam isso hoje, pois hoje é um sábado para Yahweh. Hoje você não o encontrará no campo”.
௨௫அப்பொழுது மோசே; “அதை இன்றைக்குச் சாப்பிடுங்கள்; இன்று யெகோவாவுக்குரிய ஓய்வுநாள்; இன்று நீங்கள் அதை வெளியிலே காணமாட்டீர்கள்.
26 Seis dias você o reunirá, mas no sétimo dia é o Sábado. Nele não haverá nenhum”.
௨௬ஆறுநாட்களும் அதைச் சேர்ப்பீர்களாக; ஏழாம்நாள் ஓய்வுநாளாக இருக்கிறது; அதிலே அது உண்டாகாது” என்றான்.
27 No sétimo dia, algumas das pessoas saíram para se reunir, e não encontraram nenhum.
௨௭ஏழாம்நாளில் மக்களில் சிலர் அதைச் சேர்க்கப் புறப்பட்டார்கள்; அவர்கள் அதைப் பார்க்கவில்லை.
28 Yahweh disse a Moisés: “Por quanto tempo você se recusa a guardar meus mandamentos e minhas leis?
௨௮அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய சட்டங்களையும் கைக்கொள்ள எதுவரை மனம் இல்லாமல் இருப்பீர்கள்?
29 Eis que, porque Javé te deu o sábado, por isso ele te dá no sexto dia o pão de dois dias”. Todos ficam em seu lugar. Que ninguém saia de seu lugar no sétimo dia”.
௨௯பாருங்கள், யெகோவா உங்களுக்கு ஓய்வுநாளை கொடுத்தபடியால், அவர் உங்களுக்கு ஆறாம்நாளில் இரண்டு நாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன்தன் இடத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் இடத்திலே இருக்கவேண்டும்” என்றார்.
30 Portanto, o povo descansou no sétimo dia.
௩0அப்படியே மக்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள்.
31 A casa de Israel chamou seu nome de “Maná”, e era como uma semente de coentro, branca; e seu sabor era como hóstias com mel.
௩௧இஸ்ரவேல் மக்கள் அதற்கு மன்னா என்று பெயரிட்டார்கள்; அது கொத்துமல்லி அளவாகவும் வெண்மைநிறமாகவும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணியாரத்தைப்போல இருந்தது.
32 Moisés disse: “Esta é a coisa que Javé ordenou: 'Que um gérmen cheio dele seja guardado através de vossas gerações, para que vejam o pão com o qual vos alimentei no deserto, quando vos tirei da terra do Egito'”.
௩௨அப்பொழுது மோசே: “யெகோவா கட்டளையிட்ட காரியம் என்னவென்றால், நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தபோது, வனாந்திரத்தில் உங்களுக்கு சாப்பிடக்கொடுத்த அப்பத்தை உங்கள் சந்ததியார்கள் பார்க்கும்படி, அவர்களுக்காக அதைப் பாதுகாப்பதற்கு, அதிலே ஒரு ஓமர் நிறைய எடுத்து வைக்கவேண்டும்” என்றான்.
33 Moisés disse a Aaron: “Pegue uma panela, e ponha nela um caramelo cheio de maná, e coloque-o diante de Yahweh, para ser guardado através de suas gerações”.
௩௩மேலும், மோசே ஆரோனை நோக்கி: “நீ ஒரு பாத்திரத்தை எடுத்து, அதிலே ஒரு ஓமர் அளவு மன்னாவைப் போட்டு, அதை உங்களுடைய சந்ததியார்களுக்காகப் பாதுகாப்பதற்குக் யெகோவாவுடைய சந்நிதியிலே வை” என்றான்.
34 Como Yahweh ordenou a Moisés, assim Aaron o colocou antes do Testemunho, para ser mantido.
௩௪யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது காக்கப்படும்படி ஆரோன் அதைச் சாட்சி சந்நிதியில் வைத்தான்.
35 Os filhos de Israel comeram o maná durante quarenta anos, até chegarem a uma terra habitada. Eles comeram o maná até chegarem às fronteiras da terra de Canaã.
௩௫இஸ்ரவேல் மக்கள் குடியிருப்பான தேசத்திற்கு வரும்வரை நாற்பது வருடங்கள் மன்னாவை சாப்பிட்டார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும்வரையும் மன்னாவை சாப்பிட்டார்கள்.
36 Now um omer é um décimo de uma efa.
௩௬ஒரு ஓமரானது எப்பாவிலே பத்தில் ஒரு பங்கு.