< Êxodo 11 >

1 Yahweh disse a Moisés: “Eu trarei ainda mais uma praga sobre o Faraó e sobre o Egito; depois ele o deixará ir”. Quando ele te deixar ir, certamente te expulsará por completo”.
அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “இன்னும் ஒரு வாதையைப் பார்வோன்மேலும் எகிப்தின்மேலும் வரச்செய்வேன்; அதற்குப்பின்பு அவன் உங்களை இந்த இடத்திலிருந்து போகவிடுவான்; முழுவதுமாக உங்களைப் போகவிடுவதும் மட்டுமின்றி, உங்களை இந்த இடத்திலிருந்து துரத்தியும் விடுவான்.
2 Fale agora aos ouvidos do povo, e deixe cada homem pedir ao seu próximo, e cada mulher do seu próximo, jóias de prata, e jóias de ouro”.
இப்பொழுது ஒவ்வொருவனும் அவனவன் அயலானிடத்திலும், ஒவ்வொருத்தியும் அவளவள் அயலாளிடத்திலும் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் கேட்கும்படி மக்களுக்குச் சொல்” என்றார்.
3 Yahweh deu ao povo um favor aos olhos dos egípcios. Além disso, o homem Moisés era muito grande na terra do Egito, aos olhos dos servos do Faraó, e aos olhos do povo.
அப்படியே யெகோவா மக்களுக்கு எகிப்தியர்களின் கண்களில் தயவுகிடைக்கும்படிச் செய்தார். மோசே என்பவன் எகிப்து தேசத்தில் பார்வோனுடைய ஊழியக்காரர்களின் பார்வைக்கும் மக்களின் பார்வைக்கும் மிகவும் பெரியவனாக இருந்தான்.
4 Moisés disse: “Isto é o que diz Javé: 'Por volta da meia-noite irei para o meio do Egito,
அப்பொழுது மோசே: “யெகோவா உரைக்கிறதாவது, நடு இரவிலே நான் எகிப்திற்குள்ளே புறப்பட்டுப்போவேன்.
5 e todos os primogênitos na terra do Egito morrerão, desde o primogênito do Faraó que se senta em seu trono, até o primogênito da criada que está atrás do moinho, e todos os primogênitos do gado.
அப்பொழுது சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் எந்திரம் அரைக்கும் அடிமைப்பெண்ணுடைய தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்திலிருக்கிற முதற்பேறனைத்தும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தும் சாகும் என்று சொன்னதுமன்றி,
6 Haverá um grande grito em toda a terra do Egito, como não houve, nem haverá mais.
அதினால் எகிப்து தேசம் எங்கும் முன்னும் பின்னும் ஒருபோதும் உண்டாகாத பெரிய கூக்குரல் உண்டாகும்.
7 Mas contra qualquer um dos filhos de Israel um cão não ladrará nem moverá sua língua, contra o homem ou animal, para que você saiba que Javé faz uma distinção entre os egípcios e Israel.
ஆனாலும் யெகோவா எகிப்தியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் செய்கிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படி, இஸ்ரவேல் மக்கள் அனைவருக்குள்ளும் மனிதர்கள்முதல் மிருகஜீவன்கள் வரைக்கும் ஒரு நாய் கூட தன்னுடைய நாவை அசைப்பதில்லை.
8 Todos esses seus servos virão até mim, e se curvarão diante de mim, dizendo: “Saia, com todas as pessoas que o seguirem;” e depois disso eu sairei”. Saiu do Faraó em fúria quente.
அப்பொழுது உம்முடைய வேலைக்காரர்களாகிய இவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து, பணிந்து. நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் எல்லோரும் புறப்பட்டுப்போங்கள் என்று சொல்லுவார்கள்; அதின்பின்பு புறப்படுவேன்” என்று சொல்லி, கடுங்கோபத்தோடு பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.
9 Yahweh disse a Moisés: “O Faraó não lhe dará ouvidos, para que minhas maravilhas se multipliquem na terra do Egito”.
யெகோவா மோசேயை நோக்கி: “எகிப்து தேசத்தில் என்னுடைய அற்புதங்கள் அநேகமாகும்படி, பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டான்” என்று சொல்லியிருந்தார்.
10 Moisés e Arão fizeram todas essas maravilhas diante do Faraó, mas Javé endureceu o coração do Faraó e não deixou os filhos de Israel saírem de sua terra.
௧0மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள். யெகோவா பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தியதால், அவன் இஸ்ரவேல் மக்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து போகவிடவில்லை.

< Êxodo 11 >