< Deuteronômio 16 >
1 Observe o mês de Abibe, e mantenha a Páscoa a Javé seu Deus; pois no mês de Abibe Javé seu Deus o trouxe para fora do Egito à noite.
௧“ஆபீப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பஸ்காவை அனுசரிக்கக்கடவாய்; ஆபீப் மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய யெகோவா உன்னை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்.
2 Sacrificareis a Páscoa a Javé vosso Deus, do rebanho e do rebanho, no lugar que Javé escolher para fazer habitar seu nome ali.
௨யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடத்தில், உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடுமாடுகளைப் பலியிடுவாயாக.
3 Não comereis pão levedado com ele. Comerá pão ázimo com ele sete dias, até mesmo o pão da aflição (pois saiu apressadamente da terra do Egito) para que se lembre do dia em que saiu da terra do Egito todos os dias de sua vida.
௩நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் நினைக்கும்படி, பஸ்கா பலியுடனே புளிப்புள்ள அப்பம் சாப்பிடாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லா அப்பங்களை ஏழுநாட்கள் வரைக்கும் சாப்பிடுவாயாக; நீ விரைவாக எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபடியினால் இப்படிச் செய்யவேண்டும்.
4 Nenhum fermento será visto convosco em todas as vossas fronteiras por sete dias; nem a carne, que sacrificais no primeiro dia à noite, permanecerá toda a noite até a manhã.
௪ஏழுநாட்களளவும் உன் எல்லைகளிலெங்கும் புளிப்புள்ள அப்பம் உன்னிடத்தில் காணப்படக்கூடாது; நீ முதல் நாள் மாலையில் செலுத்திய பலியின் மாம்சத்தில் ஏதாகிலும் இரவுமுழுதும் விடியற்காலம் வரைக்கும் வைக்கவேண்டாம்.
5 Não podereis sacrificar a Páscoa dentro de nenhuma de vossas portas que Iavé vosso Deus vos der;
௫உன் தேவனாகிய யெகோவா உனக்குக்கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம்.
6 mas no lugar que Iavé vosso Deus escolher para fazer habitar seu nome, ali sacrificareis a Páscoa à noite, ao pôr do sol, na estação em que saírdes do Egito.
௬உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும் இடத்திலே, நீ எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய சாயங்காலத்திலே சூரியன் மறையும்போது பஸ்காவை அடித்து,
7 Você a assará e comerá no lugar que Yavé seu Deus escolher. Pela manhã você voltará às suas tendas.
௭உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொண்ட இடத்திலே, அதைப் பொரித்துச் சாப்பிட்டு, விடியற்காலத்திலே உன் கூடாரங்களுக்குத் திரும்பிப்போவாயாக.
8 Seis dias você comerá pão ázimo. No sétimo dia será uma assembléia solene para Yahweh, vosso Deus. Não fará nenhum trabalho.
௮நீ ஆறு நாட்களும் புளிப்பில்லாத அப்பம் சாப்பிடவேண்டும், ஏழாம் நாள் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அனுசரிக்கப்படும் நாளாயிருக்கும்; அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
9 Vocês devem contar para si mesmos sete semanas. A partir do momento em que começarem a colocar a foice no grão em pé, vocês começarão a contar sete semanas.
௯“ஏழு வாரங்களை எண்ணுவாயாக; அறுப்பு அறுக்கத் துவங்கும் காலமுதல் நீ அந்த ஏழு வாரங்களையும் எண்ணவேண்டும்.
10 Guardareis a festa das semanas para Iavé vosso Deus com um tributo de uma oferta de livre vontade de vossa mão, que dareis de acordo com a forma como Iavé vosso Deus vos abençoa.
௧0அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய யெகோவாவுக்கென்று ஆசரித்து, உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதித்ததற்குத்தக்கதாக உன்னால் முடிந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி,
11 Você se alegrará diante de Iavé seu Deus: você, seu filho, sua filha, seu servo masculino, sua serva feminina, o levita que está dentro de seus portões, o estrangeiro, o órfão e a viúva que estão entre vocês, no lugar que Iavé seu Deus escolherá para fazer habitar ali seu nome.
௧௧உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடத்திலே, நீயும், உன் மகனும், மகளும், வேலைக்காரனும், வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு,
12 Você deve se lembrar que foi uma escrava no Egito. Observareis e cumprireis estes estatutos.
௧௨நீ எகிப்தில் அடிமையாயிருந்ததை நினைத்து, இந்தக் கட்டளைகளைக் கைக்கொண்டு இவைகளின்படி செய்யக்கடவாய்.
13 Você deve manter a festa dos estandes sete dias, depois de ter se reunido de sua eira e de seu lagar de vinho.
௧௩“நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழு நாட்கள் ஆசரித்து,
14 Você se alegrará em sua festa, você, seu filho, sua filha, seu servo masculino, sua empregada, o levita, o estrangeiro, o sem pai e a viúva que estão dentro de seus portões.
௧௪உன் பண்டிகையில் நீயும், உன் மகனும், மகளும், வேலைக்காரனும், வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் சந்தோஷப்படக்கடவீர்கள்;
15 Você celebrará uma festa a Javé seu Deus sete dias no lugar que Javé escolher, porque Javé seu Deus o abençoará em todo o seu crescimento e em todo o trabalho de suas mãos, e você estará totalmente alegre.
௧௫உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லா செயலிலும் உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதித்தபடியால், யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் உன் தேவனாகிய யெகோவாவுக்கு ஏழு நாட்கள் பண்டிகையை ஆசரித்து சந்தோஷமாயிருப்பாயாக.
16 Três vezes por ano, todos os seus homens aparecerão perante Iavé, seu Deus, no lugar que ele escolher: na festa dos pães ázimos, na festa das semanas e na festa dos estandes. Eles não comparecerão perante Iavé vazios.
௧௬வருடத்தில் மூன்றுமுறை புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லோரும் உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.
17 Todo homem dará o que puder, de acordo com a bênção de Yahweh vosso Deus, que ele vos deu.
௧௭ஆனாலும் அவர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய யெகோவா உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன்.
18 Farão juízes e oficiais em todos os seus portões, que Iavé vosso Deus vos dá, de acordo com vossas tribos; e julgarão o povo com juízo justo.
௧௮“உன் தேவனாகிய யெகோவா உன் கோத்திரங்கள்தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவர்களையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் மக்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள்.
19 Não perverterão a justiça. Não demonstrareis parcialidade. Não aceitas suborno, pois um suborno cega os olhos dos sábios e perverte as palavras dos justos.
௧௯நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; பாரபட்சம் பார்க்காமலும், லஞ்சம் வாங்காமலும் இருப்பாயாக; லஞ்சம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்.
20 Seguirás o que é totalmente justo, para que possas viver e herdar a terra que Yahweh teu Deus te dá.
௨0நீ பிழைத்து, உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள நீதியையே பின்பற்றுவாயாக.
21 Não plantareis para vós um Asherah de nenhum tipo de árvore ao lado do altar de Yahweh vosso Deus, que fareis para vós mesmos.
௨௧“நீ உன் தேவனாகிய யெகோவாவுக்கு உண்டாக்கும் பலிபீடத்திற்கு அருகில் எந்த தோப்பையும் உண்டாக்கவேண்டாம்;
22 Também não levantareis para vós mesmos uma pedra sagrada que Iavé vosso Deus odeia.
௨௨எந்த சிலையையும் நிறுத்தவேண்டாம்; உன் தேவனாகிய யெகோவா அதை வெறுக்கிறார்.