< 1 Pedro 4 >
1 Portanto, como Cristo sofreu por nós na carne, armai-vos também vós com a mesma mente; pois aquele que sofreu na carne deixou de pecar,
௧இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக சரீரத்திலே பாடுகள்பட்டதினால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாக அணிந்துகொள்ளுங்கள்.
2 para que não vivais mais o resto de vosso tempo na carne pelas concupiscências dos homens, mas pela vontade de Deus.
௨ஏனென்றால், சரீரத்தில் பாடுபடுகிறவன் இனி சரீரத்தில் இருக்கும் காலம்வரைக்கும் மனிதர்களுடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய விருப்பத்தின்படியே பிழைப்பதற்காகப் பாவங்களைவிட்டு விலகியிருப்பான்.
3 Pois já passamos o suficiente de nosso tempo passado fazendo o desejo dos gentios, e tendo andado em luxúria, luxúrias, bebedeiras, orgias, carícias e idolatrias abomináveis.
௩கடந்த வாழ்நாட்களிலே நாம் யூதரல்லாத மக்கள் செய்ய விரும்புவதைபோல செய்துவந்தது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் தீயஆசைகளையும் நடத்தி, மதுஅருந்தியும், களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரக ஆராதனையைச் செய்துவந்தோம்.
4 Eles acham estranho que você não corra com eles para o mesmo excesso de tumulto, falando mal de você.
௪அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடு சேர்ந்து நீங்கள் விழுந்துவிடாமல் இருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களை அவமதிக்கிறார்கள்.
5 Eles darão contas àquele que está pronto para julgar os vivos e os mortos.
௫உயிரோடு இருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறவருக்கு அவர்கள் கணக்கு ஒப்புவிப்பார்கள்.
6 Pois para isso a Boa Nova foi pregada até mesmo aos mortos, para que eles possam ser julgados de fato como homens em carne e osso, mas vivam como a Deus no espírito.
௬இதற்காக மரித்தோர்கள், மனிதர்களுக்கு முன்பாக சரீரத்திலே தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன்முன்பாக ஆவியிலே பிழைப்பதற்காக, அவர்களுக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது.
7 Mas o fim de todas as coisas está próximo. Portanto, seja de mente sã, autocontrolada e sóbria na oração.
௭எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது; ஆகவே, தெளிந்த புத்தி உள்ளவர்களாக இருந்து, ஜெபம்பண்ணுவதற்கு கவனம் உள்ளவர்களாக இருங்கள்.
8 E, acima de tudo, seja sincero em seu amor entre vocês, pois o amor cobre uma multidão de pecados.
௮எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு உள்ளவர்களாக இருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.
9 Be hospitaleiros uns com os outros, sem resmungar.
௯முறுமுறுப்பு இல்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
10 Como cada um recebeu um dom, empreguem-no no serviço uns aos outros, como bons administradores da graça de Deus em suas diversas formas.
௧0அவனவன் பெற்றுக்கொண்ட வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல பொறுப்பாளர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.
11 Se alguém fala, que seja como se fossem as próprias palavras de Deus. Se alguém serve, que seja como da força que Deus fornece, para que em tudo Deus seja glorificado através de Jesus Cristo, a quem pertence a glória e o domínio para todo o sempre. Amém. (aiōn )
௧௧ஒருவன் போதனை செய்தால் தேவனுடைய வார்த்தைகளின்படியே போதனை செய்யவேண்டும்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படியே உதவிசெய்யவேண்டும்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn )
12 Querido, não se espante com a prova ardente que lhe aconteceu para testá-lo, como se uma coisa estranha lhe acontecesse.
௧௨பிரியமானவர்களே, உங்களைப் பரீட்சைப்பார்க்க உங்கள் நடுவில் அக்கினியைப்போன்ற சோதனைகள் வரும்போது ஏதோ புதுமை நடக்கிறது என்று ஆச்சரியப்படாமல்,
13 Mas, porque sois participantes dos sofrimentos de Cristo, regozijai-vos, para que, na revelação de sua glória, também vos regozijeis com uma alegria excessiva.
௧௩கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழ்வதற்காக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.
14 Se você é insultado pelo nome de Cristo, você é abençoado, porque o Espírito da glória e de Deus repousa sobre você. De sua parte ele é blasfemado, mas de sua parte ele é glorificado.
௧௪நீங்கள் கிறிஸ்துவின் நாமத்திற்காக அவமதிக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால், தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே அவமதிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.
15 Mas que nenhum de vocês sofra como assassino, ou ladrão, ou malfeitor, ou intrometido nos assuntos dos outros homens.
௧௫ஆகவே, உங்களில் யாரும் கொலைபாதகனாகவோ, திருடனாகவோ, தீங்கு செய்தவனாகவோ, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாகவோ இருந்து பாடுபடுகிறவனாக இருக்கக்கூடாது.
16 Mas se um de vocês sofrer por ser cristão, que não tenha vergonha; mas que glorifique a Deus neste assunto.
௧௬ஒருவன் கிறிஸ்தவனாக இருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமல் இருந்து, அதினால் தேவனை மகிமைப்படுத்தவேண்டும்.
17 Pois chegou a hora do julgamento começar com a família de Deus. Se começar por nós, o que acontecerá àqueles que não obedecem à Boa Nova de Deus?
௧௭நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே ஆரம்பமாகும் காலமாக இருக்கிறது; அது முதலில் நம்மிடத்திலே ஆரம்பிக்கப்பட்டால் தேவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு எப்படியாக இருக்கும்?
18 “Se é difícil para os justos serem salvos, o que acontecerá com os ímpios e os pecadores”?
௧௮“நீதிமானே இரட்சிக்கப்படுவது கடினமென்றால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பார்கள்?
19 Portanto, que também aqueles que sofrem segundo a vontade de Deus em fazer o bem confiem suas almas a Ele, como a um Criador fiel.
௧௯ஆகவே, தேவனுடைய விருப்பத்தினால் பாடுகளை அனுபவிக்கிறவர்கள் நன்மை செய்கிறவர்களாகத் தங்களுடைய ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும்.