< 1 Crônicas 15 >
1 Davi também fez casas para si em sua cidade, e preparou um lugar para a arca de Deus, e lhe armou uma tenda.
௧அவன் தனக்கு தாவீதின் நகரத்தில் வீடுகளைக் கட்டி, தேவனுடைய பெட்டிக்கு ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கு ஒரு கூடாரத்தைப் போட்டான்.
2 Então Davi disse: Ninguém pode trazer a arca de Deus, a não ser os levitas; porque o SENHOR os escolheu para que transportassem a arca do SENHOR, e para lhe servirem eternamente.
௨பிறகு தாவீது: லேவியர்கள் தவிர வேறொருவரும் தேவனுடைய பெட்டியை எடுக்கக் கூடாது; தேவனுடைய பெட்டியை எடுக்கவும், என்றைக்கும் அவருக்குப் பணிவிடைசெய்யவும், அவர்களையே யெகோவா தெரிந்துகொண்டார் என்றான்.
3 E Davi ajuntou a todo Israel em Jerusalém, para fazerem subir a arca do SENHOR a seu lugar, que ele tinha lhe preparado.
௩அப்படியே யெகோவாவுடைய பெட்டிக்குத் தான் ஆயத்தப்படுத்தின அதின் இடத்திற்கு அதைக் கொண்டுவரும்படி, தாவீது இஸ்ரவேலையெல்லாம் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.
4 Davi também ajuntou aos filhos de Arão e aos levitas:
௪ஆரோனின் சந்ததிகளையும்,
5 Dos filhos de Coate, Uriel o principal, e seus irmãos, cento e vinte;
௫லேவியர்களாகிய கோகாத் சந்ததியில் பிரபுவாகிய ஊரியேலையும், அவனுடைய சகோதரர்களாகிய நூற்றிருபதுபேரையும்,
6 Dos filhos de Merari, Asaías o principal, e seus irmãos, duzentos e vinte;
௬மெராரியின் சந்ததியில் பிரபுவாகிய அசாயாவையும், அவனுடைய சகோதரர்களாகிய இருநூற்றிருபதுபேரையும்,
7 Dos filhos de Gérson, Joel o principal, e seus irmãos, cento e trinta;
௭கெர்சோன் மகன்களில் பிரபுவாகிய யோவேலையும், அவனுடைய சகோதரர்களாகிய நூற்றுமுப்பதுபேரையும்,
8 Dos filhos de Elisafã, Semaías o principal, e seus irmãos, duzentos;
௮எலிசாபான் மகன்களில் பிரபுவாகிய செமாயாவையும், அவனுடைய சகோதரர்களாகிய இருநூறுபேரையும்,
9 Dos filhos de Hebrom, Eliel o principal, e seus irmãos, oitenta;
௯எப்ரோன் சந்ததியில் பிரபுவாகிய ஏலியேலையும், அவனுடைய சகோதரர்களாகிய எண்பதுபேரையும்,
10 Dos filhos de Uziel, Amidadabe o principal, e seus irmãos, cento e doze.
௧0ஊசியேல் சந்ததியில் பிரபுவாகிய அம்மினதாபையும், அவனுடைய சகோதரர்களாகிய நூற்றுப்பன்னிரெண்டு பேரையும் தாவீது கூடிவரச்செய்தான்.
11 E Davi chamou aos sacerdotes Zadoque e Abiatar, e a os levitas Uriel, Asaías, Joel, Semaías, Eliel, e Aminadabe;
௧௧பின்பு தாவீது ஆசாரியர்களாகிய சாதோக்கையும், அபியத்தாரையும், லேவியர்களாகிய ஊரியேல், அசாயா, யோவேல், செமாயா, ஏலியேல், அம்மினதாப் என்பவர்களையும் அழைத்து,
12 E disse-lhes: Vós que sois os chefes das famílias entre os levitas, santificai-vos, vós e vossos irmãos, e fazei subir a arca do SENHOR, Deus de Israel, ao lugar que eu lhe preparei;
௧௨அவர்களை நோக்கி: லேவியர்களில் நீங்கள் பிதாக்களுடைய சந்ததிகளின் தலைவர்கள், நீங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் பெட்டியை அதற்கு நான் ஆயத்தம்செய்த இடத்திற்குக் கொண்டுவரும்படி, உங்களையும் உங்களுடைய சகோதரர்களையும் பரிசுத்தம்செய்துகொள்ளுங்கள்.
13 Pois por não terdes feito assim vós da primeira vez, o SENHOR nosso Deus fez nos atingiu, porque não o buscamos conforme o mandamento.
௧௩முதலில் நீங்கள் அதை சுமக்காததாலும், நாம் நம்முடைய தேவனாகிய யெகோவாவை நியாயமானபடி தேடாமற்போனதாலும், அவர் நமக்குள்ளே அடிவிழச்செய்தார் என்றான்.
14 Assim os sacerdotes e os levitas se santificaram para trazerem a arca do SENHOR Deus de Israel.
௧௪ஆசாரியர்களும் லேவியர்களும் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் பெட்டியைக் கொண்டுவரத் தங்களைச் சுத்தம்செய்துகொண்டார்கள்.
15 E os filhos dos levitas trouxeram a arca de Deus com as barras sobre seus ombros, assim como Moisés tinha mandado conforme a palavra do SENHOR.
௧௫பின்பு லேவியர்கள் யெகோவாவுடைய வார்த்தையின்படியே, மோசே கற்பித்தபடி தேவனுடைய பெட்டியை அதின் தண்டுகளினால் தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டுவந்தார்கள்.
16 E Davi disse aos chefes dos levitas que constituíssem de seus irmãos cantores com instrumentos musicais, com saltérios, e harpas, e címbalos; para que fizessem sons e levantassem a voz com alegria.
௧௬தாவீது லேவியர்களின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரர்களாகிய பாடகர்களைத் தம்புரு சுரமண்டலம் கைத்தாளம் முதலிய கீதவாத்தியங்கள் முழங்க, தங்கள் சத்தத்தை உயர்த்தி, சந்தோஷம் உண்டாகப் பாடும்படி நிறுத்தவேண்டும் என்று சொன்னான்.
17 Então os levitas constituíram a Hemã, filho de Joel; e de seus irmãos, a Asafe filho de Berequias; e dos filhos de Merari e de seus irmãos, a Etã filho de Cusaías;
௧௭அப்படியே லேவியர்கள் யோவேலின் மகனாகிய ஏமானையும், அவனுடைய சகோதரர்களில் பெரகியாவின் மகனாகிய ஆசாப்பையும், மெராரியின் சந்ததியான தங்களுடைய சகோதரர்களில் குஷாயாவின் மகனாகிய ஏத்தானையும்,
18 E com eles a seus irmãos da segundo ordem, a Zacarias, Bene e Jaaziel, Semiramote, Jeiel, Uni, Eliabe, Benaia, Maaseias, Matitias, Elifeleu, Micneias, Obede-Edom, e Jeiel, os porteiros.
௧௮இவர்களோடு இரண்டாவது வரிசையாகத் தங்களுடைய சகோதரர்களாகிய சகரியா, பேன், யாசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்னும் வாசல் காவலாளர்களையும் நிறுத்தினார்கள்.
19 E os cantores: Hemã, Asafe, e Etã, fizeram sons com címbalos de metal.
௧௯பாடகர்களாகிய ஏமானும், ஆசாப்பும், ஏத்தானும், வெண்கல தொனியுள்ள கைத்தாளங்களை ஒலிக்கச்செய்து பாடினார்கள்.
20 E Zacarias, Aziel, Semiramote, Jeiel, Uni, Eliabe, Maaseias, e Benaia, com saltérios sobre Alamote.
௨0சகரியா, ஆசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், மாசெயா, பெனாயா என்பவர்கள் அல்மோத் என்னும் இசையில் பாடி, தம்புருக்களை வாசித்தார்கள்.
21 E Matitias, Elifeleu, Micneias, Obede-Edom, Jeiel, e Azazias, tocavam ao modo de Seminite.
௨௧மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல், அசசியா என்பவர்கள் செமனீத் என்னும் இசையில் பாடி, சுரமண்டலங்களை நேர்த்தியாக வாசித்தார்கள்.
22 E Quenanias, chefe dos levitas, estava encarregado de conduzir o cântico; ele ensinava o cântico porque era entendido.
௨௨லேவியர்களுக்குள்ளே கெனானியா என்பவன் சங்கீதத்தலைவனாக இருந்தான்; அவன் நிபுணனானபடியால், கீதவித்தையை நடத்தினான்.
23 E Berequias e Elcana eram porteiros da arca.
௨௩பெரகியாவும் எல்க்கானாவும் பெட்டிக்கு முன்பாகக் காவல்காத்துவந்தார்கள்.
24 E os sacerdotes Sebanias, Josafá, Natanael, Amasai, Zacarias, Benaia, e Eliézer, tocavam as trombetas diante da arca de Deus; e Obede-Edom e Jeías eram porteiros da arca.
௨௪செபனியா, யோசபாத், நெதனெயேல், அமாசாயி, சகரியா, பெனாயா, எலியேசர் என்னும் ஆசாரியர்கள் தேவனுடைய பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதினார்கள்; ஓபேத்ஏதோமும், எகியாவும் பெட்டிக்கு வாசல் காவலாளிகளாக இருந்தார்கள்.
25 Sucedeu, pois, que Davi, os anciãos de Israel, e os capitães de milhares, foram fazer subir a arca do pacto do SENHOR, de casa de Obede-Edom, com alegria.
௨௫இப்படி தாவீதும், இஸ்ரவேலின் மூப்பர்களும், ஆயிரம்பேர்களின் தலைவர்கள் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து மகிழ்ச்சியோடு கொண்டுவரச்செய்தார்கள்.
26 E foi que, por Deus estar ajudando os levitas que levavam a arca do pacto do SENHOR, eles sacrificaram sete novilhos e sete carneiros.
௨௬யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியர்களுக்கு தேவன் தயவு செய்ததால், அவர்கள் ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டார்கள்.
27 E Davi ia vestido de um roupão de linho fino, como também todos os levitas que levavam a arca, e os cantores; e Quenanias era o chefe da música e dos cantores. Davi também levava sobre si um éfode de linho.
௨௭தாவீதும், பெட்டியை சுமக்கிற எல்லா லேவியர்களும், பாடகர்களும், பாடகர்களின் வேலையை விசாரிக்கிற தலைவனாகிய கெனானியாவும், மெல்லிய புடவையான சால்வைகளை அணிந்திருந்தார்கள்; தாவீது சணல்நூல் ஏபோத்தை அணிந்திருந்தான்.
28 Assim todo Israel fez subir a arca do pacto do SENHOR, com júbilo, som de cornetas e trombetas, e címbalos, e ao som de saltérios e harpas.
௨௮அப்படியே இஸ்ரவேலனைத்தும் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கெம்பீரத்தோடும், எக்காளங்கள் பூரிகைகள் கைத்தாளங்களின் சத்தத்தோடும், தம்புருக்களையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற சத்தத்தோடும் கொண்டுவந்தார்கள்.
29 E foi que, quando a arca do pacto do SENHOR chegou à cidade de Davi, Mical, filha de Saul, olhou por uma janela, e viu o rei Davi dançando e saltando; e ela o desprezou em seu coração.
௨௯யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டி, தாவீதின் நகரம்வரை வந்தபோது, சவுலின் மகளாகிய மீகாள் பலகணி வழியாகப் பார்த்து, தாவீது ராஜா ஆடிப்பாடி வருகிறதைக் கண்டு, அவனைத் தன்னுடைய இருதயத்தில் அவமதித்தாள்.