< Salmos 95 >

1 Vinde, cantemos ao Senhor: jubilemos à rocha da nossa salvação.
யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைப் புகழ்ந்து பாடக்கடவோம் வாருங்கள்.
2 Apresentemo-nos ante a sua face com louvores, e celebremo-lo com salmos.
துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, பாடல்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடுவோம்.
3 Porque o Senhor é Deus grande, e Rei grande sobre todos os deuses.
யெகோவாவே மகா தேவனும், எல்லா தெய்வங்களுக்கும் மகாராஜனுமாக இருக்கிறார்.
4 Nas suas mãos estão as profundezas da terra, e as alturas dos montes são suas.
பூமியின் ஆழங்கள் அவருடைய கையில் இருக்கிறது; மலைகளின் உயரங்களும் அவருடையவைகள்.
5 Seu é o mar, e ele o fez, e as suas mãos formaram a terra seca.
கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; காய்ந்த தரையையும் அவருடைய கரம் உருவாக்கினது.
6 Ó, vinde, adoremos e prostremo-nos: ajoelhemos diante do Senhor que nos criou.
நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடுவோம் வாருங்கள்.
7 Porque ele é o nosso Deus, e nós povo do seu pasto e ovelhas da sua mão. Se hoje ouvirdes a sua voz,
அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் மக்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.
8 Não endureçais os vossos corações, assim como na provocação e como no dia da tentação no deserto
இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களென்றால், வனாந்திரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல, உங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தாமலிருங்கள்.
9 Quando vossos pais me tentaram, me provaram, e viram a minha obra.
அங்கே உங்களுடைய முற்பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சை பார்த்து, என்னுடைய செயல்களையும் கண்டார்கள்.
10 Quarenta anos estive desgostado com esta geração, e disse: É um povo que erra do coração, e não tem conhecido os meus caminhos.
௧0நாற்பது வருடங்களாக நான் அந்தச் சந்ததியின்மேல் கோபமாக இருந்து, அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள மக்களென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,
11 A quem jurei na minha ira que não entrarão no meu repouso.
௧௧என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் நுழைவதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.

< Salmos 95 >