< Salmos 94 >
1 Ó Senhor Deus, a quem a vingança pertence, ó Deus, a quem a vingança pertence, mostra-te resplandecente.
அநீதிக்கு பழிவாங்குகிற இறைவனாகிய யெகோவாவே, அநீதிக்கு பழிவாங்குகிற இறைவனே, பிரகாசியும்.
2 Exalta-te, tu, que és juiz da terra: dá a paga aos soberbos.
பூமியின் நீதிபதியே, எழுந்தருளும்; பெருமை உள்ளவர்களுக்குத் தக்கபடி பதிலளியும்.
3 Até quando os impios, Senhor, até quando os impios saltarão de prazer?
எவ்வளவு காலத்திற்கு யெகோவாவே, கொடியவர்கள், எவ்வளவு காலத்திற்கு கொடியவர்கள் களிகூர்ந்திருப்பார்கள்?
4 Até quando proferirão, e fallarão coisas duras, e se gloriarão todos os que obram a iniquidade?
அவர்கள் அகங்காரமான வார்த்தைகளைப் பேசுகிறார்கள்; தீமை செய்வோர் யாவரும் பெருமை நிறைந்து பேசுகிறார்கள்.
5 Reduzem a pedaços o teu povo, e affligem a tua herança.
யெகோவாவே, அவர்கள் உமது மக்களை தாக்குகிறார்கள்; உமது உரிமைச்சொத்தை ஒடுக்குகிறார்கள்.
6 Matam a viuva e o estrangeiro, e ao orphão tiram a vida.
விதவைகளையும் வேறுநாட்டைச் சேர்ந்தவரையும் அவர்கள் அழிக்கிறார்கள்; அவர்கள் தந்தையற்றவர்களைக் கொலைசெய்கிறார்கள்.
7 Comtudo dizem: O Senhor não o verá; nem para isso attenderá o Deus de Jacob.
“யெகோவா இவற்றைக் காண்பதில்லை, யாக்கோபின் இறைவன் இவற்றைக் கவனிப்பதில்லை” என்று சொல்கிறார்கள்.
8 Attendei, ó brutaes d'entre o povo; e vós, loucos, quando sereis sabios?
மக்கள் மத்தியில் அறிவற்றவர்களாய் இருப்பவர்களே, கவனமாயிருங்கள்; மூடரே, நீங்கள் எப்பொழுது அறிவு பெறுவீர்கள்?
9 Aquelle que fez o ouvido não ouvirá? e o que formou o olho não verá?
காதைப் படைத்தவர் கேட்கமாட்டாரோ? கண்ணை உருவாக்கியவர் பார்க்கமாட்டாரோ?
10 Aquelle que argúe as gentes não castigará? e o que ensina ao homem o conhecimento não saberá?
மக்களைத் தண்டிக்கிறவர் உங்களையும் தண்டிக்கமாட்டாரோ? மனிதருக்குப் போதிக்கிறவர் அறிவில் குறைந்தவரோ?
11 O Senhor conhece os pensamentos do homem, que são vaidade.
மனிதரின் சிந்தனைகளை யெகோவா அறிந்திருக்கிறார்; அவை பயனற்றவை என்பதையும் அவர் அறிவார்.
12 Bemaventurado é o homem aquem tu castigas, ó Senhor, e a quem ensinas a tua lei;
யெகோவாவே, நீர் தண்டித்து, உமது சட்டத்திலிருந்து போதிக்கிற நபர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
13 Para lhe dares descanço dos dias maus, até que se abra a cova para o impio.
கொடியவர்களுக்கோ குழிவெட்டப்படும் வரை கஷ்ட நாட்களிலிருந்து அவர்களுக்கு நீர் விடுதலை வழங்குகிறீர்.
14 Pois o Senhor não rejeitará o seu povo, nem desamparará a sua herança.
ஏனெனில் யெகோவா தமது மக்களைப் புறக்கணிக்கமாட்டார்; தமது உரிமைச்சொத்தை ஒருபோதும் கைவிடமாட்டார்.
15 Mas o juizo voltará á rectidão, e seguil-o-hão todos os rectos do coração.
நீதியின்மேல் நியாயத்தீர்ப்பு திரும்பவும் கட்டப்படும்; அதை இருதயத்தில் நேர்மையுள்ளோர் அனைவரும் பின்பற்றுவார்கள்.
16 Quem será por mim contra os malfeitores? quem se porá por mim contra os que obram a iniquidade?
எனக்காக கொடியவனுக்கு விரோதமாய் எழும்புகிறவன் யார்? தீமை செய்வோருக்கு எதிராய் எனக்குத் துணைநிற்பவன் யார்?
17 Se o Senhor não tivera ido em meu auxilio, a minha alma quasi que teria ficado no silencio.
யெகோவா எனக்கு உதவி செய்திருக்காவிட்டால், நான் சீக்கிரமாய் மரணத்தின் மவுனத்தில் குடிகொண்டிருந்திருப்பேன்.
18 Quando eu disse: O meu pé vacilla; a tua benignidade, Senhor, me susteve.
“என் கால் சறுக்குகிறது” என்று நான் சொன்னபோது, யெகோவாவே உமது உடன்படிக்கையின் அன்பே என்னைத் தாங்கியது.
19 Na multidão dos meus pensamentos dentro de mim, as tuas consolações recrearam a minha alma.
கவலை எனக்குள் பெரிதாய் இருக்கையில், உமது ஆறுதல் என் ஆத்துமாவுக்கு மகிழ்வைத் தந்தது.
20 Porventura o throno d'iniquidade te acompanha, o qual forja o mal por uma lei?
தான் பிறப்பிக்கும் விதிமுறைகளினாலேயே துன்பத்தைக் கொண்டுவரும், ஊழல் நிறைந்த ஆட்சியாளர்கள் உமக்கு கூட்டாளிகளாயிருக்க முடியுமோ?
21 Elles se ajuntam contra a alma do justo, e condemnam o sangue innocente.
அந்தக் கொடியவர்கள் நீதிமான்களுக்கு விரோதமாகக் கூட்டங்கூடி, குற்றமற்றவர்களுக்கு மரணத்தீர்ப்பு அளிக்கிறார்கள்.
22 Mas o Senhor é a minha defeza; e o meu Deus é a rocha do meu refugio.
ஆனால் யெகோவாவோ என் கோட்டையும், நான் தஞ்சமடையும் கன்மலையான என் இறைவனுமானார்.
23 E trará sobre elles a sua propria iniquidade; e os destruirá na sua propria malicia: o Senhor nosso Deus os destruirá.
அவர் அவர்களுடைய பாவங்களுக்காகப் பதில்செய்து, அவர்கள் கொடுமைகளினிமித்தம் அவர்களை தண்டிப்பார்; எங்கள் இறைவனாகிய யெகோவா அவர்களை தண்டிப்பார்.