< Neemias 12 >
1 Estes são sacerdotes e levitas que subiram com Zorobabel, filho de Sealthiel, e com Jesué: Seraias, Jeremias, Esdras,
௧செயல்தியேலின் மகனாகிய செருபாபேலோடும் யெசுவாவோடும் வந்த ஆசாரியர்களும் லேவியர்களும் யாரென்றால்: செராயா, எரேமியா, எஸ்றா,
2 Amarias, Malluch, Hattus,
௨அமரியா, மல்லூக், அத்தூஸ்,
3 Sechanias, Rehun, Meremoth,
௩செக்கனியா, ரேகூம், மெரெமோத்,
4 Iddo, Ginnethoi, Abias,
௪இத்தோ, கிநேதோ, அபியா,
5 Miamin, Maadias, Bilga,
௫மியாமின், மாதியா, பில்கா,
6 Semaias, e Joiarib, Jedaias,
௬செமாயா, யோயாரிப், யெதாயா,
7 Sallu, Amok, Hilkias, Jedaias: estes foram os chefes dos sacerdotes e de seus irmãos, nos dias de Jesué.
௭சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா என்பவர்கள்; இவர்கள் யெசுவாவின் நாட்களில், ஆசாரியர்களுக்கும் தங்கள் சகோதரர்களுக்கும் தலைவர்களாக இருந்தார்கள்.
8 E foram os levitas: Jesué, Binnui, Kadmiel, Serebias, Judah, Matthanias: este e seus irmãos presidiam sobre os louvores.
௮லேவியர்கள் யாரென்றால்: யெசுவா, பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா, மத்தனியா என்பவர்கள்; இவனும் இவனுடைய சகோதரர்களும் துதிசெய்தலுக்கு பொறுப்பாக இருந்தார்கள்.
9 E Bakbukias e Uni, seus irmãos, defronte d'elle, nas guardas.
௯பக்பூக்கியா, உன்னி என்கிற அவர்கள் சகோதரர்கள் அவர்களுக்கு எதிரே காவல்காத்திருந்தார்கள்.
10 E Jesué gerou a Joaquim, e Joaquim gerou a Eliasib, e Eliasib gerou a Joiada,
௧0யெசுவா யொயகீமைப் பெற்றான், யொயகீம் எலியாசிபைப் பெற்றான், எலியாசிப் யொயதாவைப் பெற்றான்.
11 E Joiada gerou a Jonathan, e Jonathan gerou a Jaddua.
௧௧யொயதா யோனத்தானைப் பெற்றான், யோனத்தான் யதுவாவைப் பெற்றான்.
12 E nos dias de Joaquim foram sacerdotes, cabeças dos paes: de Seraias, Meraias; de Jeremias, Hananias;
௧௨யொயகீமின் நாட்களிலே தகப்பன்மார்களின் குடும்பத்தார்களுக்கு தலைவர்களான ஆசாரியர்கள் யாரென்றால்: செராயாவின் சந்ததியில் மெராயா, எரேமியாவின் சந்ததியில் அனனியா,
13 D'Esdras, Messullam; de Amarias, Johanan;
௧௩எஸ்றாவின் சந்ததியில் மெசுல்லாம், அமரியாவின் சந்ததியில் யோகனான்,
14 De Melichu, Jonathan; de Sebanias, José;
௧௪மெலிகுவின் சந்ததியில் யோனத்தான், செபனியாவின் சந்ததியில் யோசேப்பு,
15 D'Harim, Adna; de Meraioth, Helkai;
௧௫ஆரீமின் சந்ததியில் அதனா, மெராயோதின் சந்ததியில் எல்காய்,
16 D'Iddo, Zacharias; de Ginnethon, Messullam;
௧௬இத்தோவின் சந்ததியில் சகரியா, கிநேதோனின் சந்ததியில் மெசுல்லாம்,
17 D'Abias, Zichri; de Miamin e de Moadias, Piltai;
௧௭அபியாவின் சந்ததியில் சிக்ரி, மினியாமீன் மொவதியா என்பவர்களின் சந்ததியில் பில்தாய்.
18 De Bilga, Sammua; de Semaias, Jonathan;
௧௮பில்காவின் சந்ததியில் சம்முவா, செமாயாவின் சந்ததியில் யோனத்தான்,
19 E de Joiarib, Matthenai; de Jedaias, Ezzi;
௧௯யோயாரிபின் சந்ததியில் மதனாய், யெதாயாவின் சந்ததியில் ஊசி,
20 De Sallai, Kallai; de Amok, Eber;
௨0சல்லாயின் சந்ததியில் கல்லாய், ஆமோக்கின் சந்ததியில் ஏபேர்,
21 D'Hilkias, Hasabias; de Jedaias, Nethanael.
௨௧இல்க்கியாவின் சந்ததியில் அஷபியா, யெதாயாவின் சந்ததியில் நெதனெயேல் என்பவர்கள்.
22 Dos levitas foram nos dias d'Eliasib escriptos como cabeças de paes, Joiada, e Johnan, e Jaddua; como tambem os sacerdotes, até ao reinado de Dario o persa.
௨௨எலியாசிபின் நாட்களில் யொயதா, யோகனான், யதுவா என்கிற லேவியர்கள் தகப்பன்மார்களின் தலைவர்களாக எழுதப்பட்டார்கள்; பெர்சியனாகிய தரியுவின் ஆட்சி காலம்வரை இருந்த ஆசாரியர்களும் அப்படியே எழுதப்பட்டார்கள்.
23 Os filhos de Levi escriptos como cabeças de paes no livro das chronicas, até aos dias de Johanan, filho d'Eliasib.
௨௩லேவியின் சந்ததியர்களாகிய தகப்பன்மார் குடும்பத்தார்களின் தலைவர்கள் எலியாசிபின் மகனாகிய யோகனானின் நாட்கள்வரை நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டார்கள்.
24 Foram pois os cabeças dos levitas; Hasabias, Serabias, e Jesué, filho de Kadmiel, e seus irmãos defronte d'elles, para louvarem e darem graças, segundo o mandado de David, homem de Deus: guarda contra guarda.
௨௪லேவியர்களின் தலைவர்களாகிய அஷபியாவும், செரெபியாவும், கத்மியேலின் மகன் யெசுவாவும், அவர்களுக்கு எதிரே நிற்கிற அவர்களுடைய சகோதரர்களும், தேவனுடைய மனிதனாகிய தாவீதினுடைய கற்பனையின்படியே துதிக்கவும் ஸ்தோத்திரிக்கவும், ஒருவருக்கொருவர் எதிர்முகமாக பிரிவுகளாக இருந்தார்கள்.
25 Matthanias, e Bakbukias, Obadias, Mesullam, Talmon, e Akkub, eram porteiros, que faziam a guarda ás thesourarias das portas.
௨௫மத்தனியா, பக்பூக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப் என்பவர்கள் வாசல்களிலிருக்கிற பொக்கிஷ அறைகளைக் காவல்காக்கிறவர்களாக இருந்தார்கள்.
26 Estes foram nos dias de Joaquim, filho de Jesué, o filho de Josadak; como tambem nos dias de Nehemias, o governador, e do sacerdote Esdras, o escriba.
௨௬யோசதாக்கின் மகனாகிய யெசுவாவின் மகன் யொயகீமின் நாட்களிலும், ஆளுநராகிய நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும் இருக்கிற நாட்களிலும் அவர்கள் இருந்தார்கள்.
27 E na dedicação dos muros de Jerusalem buscaram os levitas de todos os seus logares, para os trazerem, afim de fazerem a dedicação com alegrias, e com louvores, e com canto, psalterios, alaudes, e com harpas.
௨௭எருசலேமின் மதிலை பிரதிஷ்டைசெய்யும்போது, துதியினாலும் பாடலினாலும், கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியர்களை எருசலேமுக்குக் கூட்டிவரத் தேடினார்கள்.
28 E assim ajuntaram os filhos dos cantores, tanto da campina dos arredores de Jerusalem, como das aldeias de Netophati;
௨௮அப்படியே பாடகர்களின் குழுவினர் எருசலேமின் சுற்றுப்புறங்களான சமபூமியிலும், நெத்தோபாத்தியர்களின் கிராமங்களிலும்,
29 Como tambem da casa de Gilgal, e dos campos de Gibeah, e Azmaveth: porque os cantores se edificaram aldeias nos arredores de Jerusalem.
௨௯பெத்கில்காலிலும், கேபா, அஸ்மாவேத் ஊர்களின் நாட்டுப்புறங்களிலுமிருந்து வந்து கூடினார்கள்; பாடகர்கள் எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்குக் கிராமங்களைக் கட்டியிருந்தார்கள்.
30 E purificaram-se os sacerdotes e os levitas; e logo purificaram o povo, e as portas, e o muro.
௩0ஆசாரியர்களும் லேவியர்களும் தங்களைச் சுத்தம்செய்துகொண்டு, மக்களையும் பட்டணவாசல்களையும் மதிலையும் சுத்தம்செய்தார்கள்.
31 Então fiz subir os principes de Judah sobre o muro, e ordenei dois grandes coros e procissões, um á mão direita sobre o muro da banda da porta do monturo.
௩௧அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை மதிலின்மேல் ஏறச்செய்து, துதிசெய்து நடந்துபோவதற்காக இரண்டு பெரிய கூட்டத்தார்களை நிறுத்தினேன்; அவர்களில் ஒரு கூட்டத்தார் மதிலின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலுக்குப் போனார்கள்.
32 E após elles ia Hosaias, e a metade dos principes de Judah,
௩௨அவர்கள் பின்னே ஓசாயாவும், யூதாவின் தலைவர்களில் பாதிப்பேர்களும்,
33 E Azarias, Esdras, e Mesullam,
௩௩அசரியா, எஸ்றா, மெசுல்லாம்,
34 Judah, e Benjamin, e Semaias, e Jeremias.
௩௪யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா என்பவர்களும்,
35 E dos filhos dos sacerdotes, com trombetas: Zacharias, filho de Jonathan, o filho de Semaias, filho de Matthanias, filho de Michaias, filho de Zacchur, filho d'Asaph,
௩௫பூரிகைகளைப் பிடிக்கிற ஆசாரியர்களின் மகன்களில் ஆசாப்பின் மகன் சக்கூரின் மகனாகிய மிகாயாவுக்கு மகனான மத்தனியாவின் மகன் செமாயாவுக்குப் பிறந்த யோனத்தானின் மகன் சகரியாவும்,
36 E seus irmãos, Semaias, e Azareel, Milalai, Gilalai, Maai, Nethanael, e Judah, e Hanani, com os instrumentos musicos de David, homem de Deus; e Esdras o escriba ia adiante d'elles.
௩௬தேவனுடைய மனிதனாகிய தாவீதின் கீதவாத்தியங்களை வாசிக்கிற அவனுடைய சகோதரர்களான செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி என்பவர்களும் போனார்கள்; வேதபாரகனாகிய எஸ்றா இவர்களுக்கு முன்பாக நடந்தான்.
37 Indo assim para a porta da fonte, e defronte d'elles, subiram as escadas da cidade de David pela subida do muro, desde cima da casa de David, até á porta das aguas, da banda do oriente.
௩௭அங்கேயிருந்து அவர்கள் தங்களுக்கு எதிரான தண்ணீர்வாசலுக்கு வந்தபோது, மதிலைவிட உயரமான தாவீது நகரத்தின் படிகளில் ஏறி, தாவீது வீட்டின் மேலாகக் கிழக்கேயிருக்கிற தண்ணீர்வாசல்வரை போனார்கள்.
38 E o coro segundo ia defronte, e eu após elle; e a metade do povo ia sobre o muro, desde a torre dos fornos, até á muralha larga;
௩௮துதிசெய்கிற இரண்டாம் கூட்டத்தார் எதிரேயிருக்கிற வழியாக நடந்துபோனார்கள், அவர்கள் பின்னே நான் போனேன்; மக்களில் பாதிப்பேர் மதிலின்மேல் சூளைகளின் கோபுரத்தைக் கடந்து, அகழ் மதில்வரை நேராகப்போய்,
39 E desde a porta d'Ephraim, e para a porta velha, e para a porta do peixe, e a torre d'Hananeel, e a torre de Mea, até á porta do gado; e pararam á porta da prisão.
௩௯எப்பிராயீம்வாசலையும், பழையவாசலையும், மீன்வாசலையும், அனானெயேலின் கோபுரத்தையும், மேயா என்கிற கோபுரத்தையும் கடந்து, ஆட்டுவாசல்வரை புறப்பட்டுக் காவல்வீட்டுவாசலிலே நின்றார்கள்.
40 Então ambos os coros pararam na casa de Deus; como tambem eu, e a metade dos magistrados comigo.
௪0அதற்குப்பின்பு துதிசெய்கிற இரண்டு கூட்டத்தார்களும் தேவனுடைய ஆலயத்திலே வந்து நின்றார்கள்; நானும் என்னோடு இருக்கிற தலைவர்களில் பாதிப்பேர்களும்,
41 E os sacerdotes Eliakim, Maaseias, Miniamin, Michaias, Elioenai, Zacharias, e Hananias, com trombetas,
௪௧பூரிகைகளைப் பிடிக்கிற எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனனியா என்கிற ஆசாரியர்களும்,
42 Como tambem, Maaseias, e Semaias, e Eleazar, e Uzzi, e Johanan, e Malchias, e Elam, e Ezer; e faziam-se ouvir os cantores, juntamente com Jezrahias, o superintendente.
௪௨மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் என்பவர்களும் நின்றோம்; பாடகர்களும், அவர்களை நடத்துகிறவனாகிய யெஷரகியாவும் சத்தமாகப் பாடினார்கள்.
43 E sacrificaram no mesmo dia grandes sacrificios, e se alegraram; porque Deus os alegrara com grande alegria; e até as mulheres e os meninos se alegraram, que a alegria de Jerusalem se ouviu até de longe.
௪௩அந்த நாளிலே அதிகமான பலிகளைச் செலுத்தி, தேவன் தங்களுக்குப் பெரிய சந்தோஷத்தை உண்டாக்கியதால் மகிழ்ச்சியாக இருந்தார்கள்; பெண்களும் பிள்ளைகளும்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது.
44 Tambem no mesmo dia se nomearam homens sobre as camaras, para os thesouros, para as offertas alçadas, para as primicias, e para os dizimos, para ajuntarem n'ellas, das terras das cidades, as partes da lei para os sacerdotes e para os levitas; porque Judah estava alegre por causa dos sacerdotes e dos levitas que assistiam ali.
௪௪அன்றையதினம் பொக்கிஷங்களையும், படைப்புகளையும், முதற்பழங்களையும், தசமபாகங்களையும் வைக்கும் அறைகளின்மேல், ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் நியாயப்பிரமாணத்தின்முறையில் வரவேண்டிய பட்டணங்களுடைய நிலங்களின் பங்குகளை அவைகளில் சேர்ப்பதற்கு, சில மனிதர்கள் பொறுப்பாளர்களாக வைக்கப்பட்டார்கள்; ஊழியஞ்செய்து நிற்கிற ஆசாரியர்கள்மேலும் லேவியர்கள்மேலும் யூதா மனிதர்கள் சந்தோஷமாக இருந்தார்கள்.
45 E faziam a guarda do seu Deus, e a guarda da purificação; como tambem os cantores e porteiros, conforme ao mandado de David e de seu filho Salomão.
௪௫பாடகர்களும், வாசல் காவலாளர்களும், தாவீதும் அவன் மகனாகிய சாலொமோனும் கற்பித்தபடி தங்கள் தேவனுடைய காவலையும், சுத்திகரிப்பின் காவலையும் காத்தார்கள்.
46 Porque já nos dias de David e Asaph, desde a antiguidade, havia cabeças dos cantores, e dos canticos de louvores, e d'acção de graças a Deus
௪௬தாவீதும் ஆசாப்பும் இருந்த பூர்வநாட்களில் பாடகர்களின் தலைவர்களும் வைக்கப்பட்டு, தேவனுக்குத் துதியும் ஸ்தோத்திரங்களும் செலுத்துகிற சங்கீதங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
47 Pelo que todo o Israel, já nos dias de Zorobabel, nos dias de Nehemias, dava as partes dos cantores e dos porteiros a cada um no seu dia; e sanctificavam as porções aos levitas, e os levitas sanctificavam aos filhos d'Aarão.
௪௭ஆகையால் செருபாபேலின் நாட்களிலும், நெகேமியாவின் நாட்களிலும், இஸ்ரவேலர்கள் எல்லோரும் பாடகர்களுக்கும் வாசல் காவலாளர்களுக்கும் அனுதின ஒழுங்கின்படி வேலைளைக் கொடுத்தார்கள்; அவர்கள் லேவியர்களுக்கென்று பிரதிஷ்டை செய்துகொடுத்தார்கள்; லேவியர்கள் ஆரோனின் சந்ததிக்கென்று அவர்கள் வேலைகளைப் பிரதிஷ்டை செய்துகொடுத்தார்கள்.