< Jó 29 >
1 E proseguiu Job em proferir o seu dito, e disse:
௧பின்னும் யோபு தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:
2 Ah! quem me dera ser como eu fui nos mezes passados! como nos dias em que Deus me guardava!
௨“கடந்துபோன வருடங்களிலும், தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும் எனக்கு உண்டாயிருந்த ஒழுங்கு இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும்.
3 Quando fazia resplandecer a sua candeia sobre a minha cabeça e quando eu pela sua luz caminhava pelas trevas:
௩அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.
4 Como era nos dias da minha mocidade, quando o segredo de Deus estava sobre a minha tenda:
௪தேவனுடைய இரகசியச்செயல் என் வீட்டின்மேல் இருந்தது.
5 Quando o Todo-poderoso ainda estava comigo, e os meus meninos em redor de mim.
௫அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் என்னுடன் இருந்தார்; என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.
6 Quando lavava os meus passos na manteiga, e da rocha me corriam ribeiros de azeite:
௬என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் ஒழுங்கு இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.
7 Quando sahia a porta pela cidade, e na praça fazia preparar a minha cadeira:
௭நான் பட்டணவீதியின் வாசலுக்குள் புறப்பட்டுப்போய், வீதியில் என் இருக்கையைப் போடும்போது,
8 Os moços me viam, e se escondiam, e até os edosos se levantavam e se punham em pé:
௮வாலிபர் என்னைக் கண்டு ஒளித்துக்கொள்வார்கள்; முதியோர் எழுந்து நிற்பார்கள்.
9 Os principes continham as suas palavras, e punham a mão sobre a sua bocca:
௯பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, கையால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள்.
10 A voz dos chefes se escondia: e a sua lingua se pegava ao seu paladar:
௧0பெரியோரின் சத்தம் அடங்கி, அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும்.
11 Ouvindo-me algum ouvido, me tinha por bemaventurado: vendo-me algum olho, dava testemunho de mim;
௧௧என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது.
12 Porque eu livrava o miseravel, que clamava: como tambem o orfão que não tinha quem o soccoresse.
௧௨முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் காப்பாற்றினேன்.
13 A benção do que ia perecendo vinha sobre mim, e eu fazia que jubilasse o coração da viuva.
௧௩அழிந்துபோக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கச் செய்தேன்.
14 Vestia-me da justiça: e ella me servia de vestido: como manto e diadema era o meu juizo.
௧௪நீதியை அணிந்துகொண்டேன்; அது என் ஆடையாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் தலைப்பாகையுமாக இருந்தது.
15 Eu fui o olho do cego, como tambem os pés do coxo:
௧௫நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலாகவும் இருந்தேன்.
16 Aos necessitados era pae, e as causas de que eu não tinha conhecimento inquiria com diligencia;
௧௬நான் எளியவர்களுக்குத் தகப்பனாக இருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்.
17 E quebrava os queixaes do perverso, e dos seus dentes tirava a preza.
௧௭நான் அநியாயக்காரருடைய கடைவாய்ப் பற்களை உடைத்து, அவர்கள் பறித்ததை அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன்.
18 E dizia: No meu ninho expirarei, e multiplicarei os meus dias como a areia.
௧௮என் கூட்டிலே நான் வாழ்ந்திருப்பேன்; என் நாட்களை மணலைப்போலப் பெருகச் செய்வேன் என்றேன்.
19 A minha raiz se estendia junto ás aguas, e o orvalho fazia assento sobre os meus ramos;
௧௯என் வேர் தண்ணீர்களின் ஓரமாகப் படர்ந்தது; என் கிளையின்மேல் பனி இரவுமுழுவதும் தங்கியிருந்தது.
20 A minha honra se renovava em mim, e o meu arco se reforçava na minha mão.
௨0என் மகிமை என்னில் செழித்தோங்கி, என் கையிலுள்ள என் வில் புதுப்பெலன் கொண்டது.
21 Ouvindo-me esperavam, e em silencio attendiam ao meu conselho.
௨௧எனக்குச் செவிகொடுத்துக் காத்திருந்தார்கள்; என் ஆலோசனையைக் கேட்டு மவுனமாயிருந்தார்கள்.
22 Acabada a minha palavra, não replicavam, e minhas razões distillavam sobre elles;
௨௨என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்; என் வசனம் அவர்கள்மேல் மழைத்துளியாக விழுந்தது.
23 Porque me esperavam, como a chuva; e abriam a sua bocca, como a chuva tardia
௨௩மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து, பின் மாரிக்கு ஆசையுள்ளவர்கள்போல தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள்.
24 Se me ria para elles, não o criam, e não faziam abater a luz do meu rosto;
௨௪நான் அவர்களைப் பார்த்து சிரிக்கும்போது, அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையை மாறவைக்கவும் இல்லை.
25 Eu escolhia o seu caminho, assentava-me como chefe, e habitava como rei entre as tropas: como aquelle que consola os que pranteiam.
௨௫அவர்கள் வழியில்போக எனக்கு விருப்பமாகும்போது, நான் தலைவனாய் அமர்ந்து, படைக்குள் ராஜாவைப்போலவும், துக்கித்தவர்களைத் தேற்றுகிறவனாகவும் இருந்தேன்.