< Deuteronômio 5 >
1 E chamou Moysés a todo o Israel, e disse-lhes: Ouve, ó Israel, os estatutos e juizos que hoje vos fallo aos ouvidos: e aprendel-os-heis, e guardal-os-heis, para os fazer.
௧“மோசே இஸ்ரவேலர்கள் எல்லோரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: இஸ்ரவேலர்களே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்; நீங்கள் அவைகளின்படியே செய்வதற்கு அவைகளைக் கற்றுக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
2 O Senhor nosso Deus fez comnosco concerto em Horeb.
௨நம்முடைய தேவனாகிய யெகோவா ஓரேபிலே நம்முடன் உடன்படிக்கை செய்தார்.
3 Não com nossos paes fez o Senhor este concerto, senão comnosco, todos os que hoje aqui estamos vivos.
௩அந்த உடன்படிக்கையைக் யெகோவா நம்முடைய முற்பிதாக்களுடன் செய்யாமல், இந்நாளில் இங்கே உயிரோடிருக்கிற நம் அனைவரோடும் செய்தார்.
4 Cara a cara o Senhor fallou comnosco no monte, do meio do fogo
௪யெகோவா மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து முகமுகமாக உங்களோடு பேசினார்.
5 (N'aquelle tempo eu estava em pé entre o Senhor e vós, para vos notificar a palavra do Senhor: porque temestes o fogo, e não subistes ao monte), dizendo:
௫யெகோவாவுடைய வார்த்தையை உங்களுக்கு அறிவிப்பதற்கு, அக்காலத்திலே நான் யெகோவாவுக்கும், உங்களுக்கும் நடுவாக நின்றேன்; நீங்கள் அக்கினிக்குப் பயந்து மலையில் ஏறாமல் இருந்தீர்கள்; அப்பொழுது அவர் சொன்னது என்னவென்றால்:
6 Eu sou o Senhor teu Deus, que te tirei da terra do Egypto, da casa da servidão:
௬நீங்கள் அடிமைகளாய் வாழ்ந்த எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன் தேவனாகிய யெகோவா நானே.
7 Não terás outros deuses diante de mim;
௭என்னைத்தவிர உனக்கு வேறு தெய்வங்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
8 Não farás para ti imagem de esculptura, nem similhança alguma do que ha em cima no céu, nem em baixo na terra, nem nas aguas debaixo da terra:
௮மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு உருவத்தையாகிலும் யாதொரு சிலையையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்.
9 Não te encurvarás a ellas, nem as servirás: porque Eu, o Senhor teu Deus, sou Deus zeloso, que visito a maldade dos paes sobre os filhos, até á terceira e quarta geração d'aquelles que me aborrecem,
௯நீ அவைகளை வணங்கவும் பூஜை செய்யவும் வேண்டாம்; உன் தேவனாகிய யெகோவாவாயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்து முற்பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம், நான்காம் தலைமுறைவரை விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
10 E faço misericordia em milhares aos que me amam, e guardam os meus mandamentos.
௧0என்னிடத்தில் அன்புசெலுத்தி, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைவரைக்கும் இரக்கம்செய்கிறவராயிருக்கிறேன்.
11 Não tomarás o nome do Senhor teu Deus em vão: porque o Senhor não terá por innocente ao que tomar o seu nome em vão;
௧௧உன் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்தாதிருப்பாயாக; யெகோவா தம்முடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்துகிறவனைத் தண்டிக்காமல் விடமாட்டார்.
12 Guarda o dia de sabbado, para o sanctificar, como te ordenou o Senhor teu Deus.
௧௨உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே, ஓய்வுநாளைப் பரிசுத்தமாக அனுசரிப்பாயாக.
13 Seis dias trabalharás, e farás toda a tua obra,
௧௩ஆறு நாளும் நீ வேலைசெய்து, உன் செயல்களையெல்லாம் நடப்பிப்பாயாக.
14 Mas o setimo dia é o sabbado do Senhor teu Deus: não farás nenhuma obra n'elle, nem tu, nem teu filho, nem tua filha, nem o teu servo, nem a tua serva, nem o teu boi, nem o teu jumento, nem animal algum teu, nem o estrangeiro que está dentro de tuas portas: para que o teu servo e a tua serva descancem como tu:
௧௪ஏழாம் நாளோ உன் தேவனாகிய யெகோவாவுடைய ஓய்வு நாள்; அதிலே நீயானாலும், உன்னுடைய மகனானாலும், மகளானாலும், வேலைக்காரனானாலும், வேலைக்காரியானாலும், எருதானாலும், கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் எந்தவொரு வேலையும் செய்யவேண்டாம்; நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும், வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்;
15 Porque te lembrarás que foste servo na terra do Egypto, e que o Senhor teu Deus te tirou d'ali com mão forte e braço estendido: pelo que o Senhor teu Deus te ordenou que guardasses o dia de sabbado.
௧௫நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய யெகோவா உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படச்செய்தார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வு நாளை அனுசரிக்க உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டார்.
16 Honra a teu pae e a tua mãe, como o Senhor teu Deus te ordenou, para que se prolonguem os teus dias, e para que te vá bem na terra que te dá o Senhor teu Deus.
௧௬உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும், தாயையும் மதிப்புடன் நடத்துவாயாக.
௧௭கொலை செய்யாதிருப்பாயாக.
௧௮விபசாரம் செய்யாதிருப்பாயாக.
20 E não dirás falso testemunho contra o teu proximo;
௨0மற்றவனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
21 E não cobiçarás a mulher do teu proximo: e não desejarás a casa do teu proximo, nem o seu campo, nem o seu servo, nem a sua serva, nem o seu boi, nem o seu jumento, nem coisa alguma do teu proximo.
௨௧மற்றவனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; அவனுடைய வீட்டையும், நிலத்தையும், வேலைக்காரனையும், வேலைக்காரியையும், எருதையும், கழுதையையும், மேலும் அவனுக்குச் சொந்தமான எதையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.
22 Estas palavras fallou o Senhor a toda a vossa congregação no monte do meio do fogo, da nuvem e da escuridade, com grande voz, e nada accrescentou: e as escreveu em duas taboas de pedra, e a mim m'as deu.
௨௨“இந்த வார்த்தைகளைக் யெகோவா மலையிலே அக்கினி, மேகம், காரிருள் ஆகியவற்றிலிருந்து உங்கள் சபையார் அனைவரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி என்னிடத்தில் கொடுத்தார்.
23 E succedeu que, ouvindo a voz do meio das trevas, e vendo o monte ardendo em fogo, vos achegastes a mim, todos os Cabeças das vossas tribus, e vossos anciãos;
௨௩மலை அக்கினியாக எரியும்போது இருளின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தை நீங்கள் கேட்டபோது, கோத்திரத் தலைவர்களும் மூப்பர்களுமாகிய நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வந்து:
24 E dissestes: Eis aqui o Senhor vosso Deus nos fez ver a sua gloria e a sua grandeza, e ouvimos a sua voz do meio do fogo: hoje vimos que Deus falla com o homem, e que o homem fica vivo.
௨௪“இதோ, நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்குத் தம்முடைய மகிமையையும் தம்முடைய மகத்துவத்தையும் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து பேசின அவருடைய சத்தத்தையும் கேட்டோம்; தேவன் மனிதனுடன் பேசியும், அவன் உயிரோடிருக்கிறதை இந்நாளில் கண்டோம்.
25 Agora pois, porque morreriamos? pois este grande fogo nos consumiria: se ainda mais ouvissemos a voz do Senhor nosso Deus, morreriamos.
௨௫இப்பொழுது நாங்கள் ஏன் சாகவேண்டும்? இந்தப் பெரிய அக்கினி எங்களை சுட்டெரிக்குமே; நாங்கள் இன்னும் நம்முடைய தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கேட்போமானால் சாவோம்.
26 Porque, quem ha de toda a carne, que ouviu a voz do Deus vivente fallando do meio do fogo, como nós, e ficou vivo?
௨௬நாங்கள் கேட்டதுபோல, அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தை மாம்சமானவர்களில் யாராவது கேட்டு உயிரோடிருந்தது உண்டா?
27 Chega-te tu, e ouve tudo o que disser o Senhor nosso Deus: e tu nos dirás tudo o que te disser o Senhor nosso Deus, e o ouviremos, e o faremos.
௨௭நீரோ அருகில் சென்று, நம்முடைய தேவனாகிய யெகோவா சொல்வதையெல்லாம் கேட்டு, அவைகளை நீரே எங்களுக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் கேட்டு, அதின்படியே செய்வோம் என்றீர்கள்.
28 Ouvindo pois o Senhor a voz das vossas palavras, quando me fallaveis a mim, o Senhor me disse: Eu ouvi a voz das palavras d'este povo, que te disseram: em tudo fallaram elles bem.
௨௮நீங்கள் என்னுடன் பேசும்போது, யெகோவா உங்கள் வார்த்தைகளைக் கேட்டு, யெகோவா என்னை நோக்கி; “இந்த மக்கள் உன்னிடம் சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்; அவர்கள் சொன்னது எல்லாம் நன்றாக இருந்தது.
29 Quem dera que elles tivessem tal coração que me temessem, e guardassem todos os meus mandamentos todos os dias! para que bem lhes fosse a elles e a seus filhos para sempre.
௨௯அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருப்பதற்கு, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்.
30 Vae, dize-lhes: Tornae-vos ás vossas tendas.
௩0நீ போய்: உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள் என்று அவர்களுக்குச் சொல்.
31 Porém tu está aqui commigo, para que eu a ti te diga todos os mandamentos, e estatutos, e juizos, que tu lhes has de ensinar que façam na terra que eu lhes darei para possuil-a.
௩௧நீயோ இங்கே என்னிடத்தில் நில்; நான் அவர்களுக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில் அவர்கள் செய்யும்படி நீ அவர்களுக்குப் போதிக்கவேண்டிய சகல கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் உனக்குச் சொல்லுவேன் என்றார்.
32 Olhae pois que façaes como vos mandou o Senhor vosso Deus: não declinareis, nem para a direita nem para a esquerda.
௩௨உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கற்பித்தபடியே செய்ய கவனமாக இருங்கள்; வலதுபுறமும் இடதுபுறமும் சாயாதிருப்பீர்களாக.
33 Andareis em todo o caminho que vos manda o Senhor vosso Deus, para que vivaes e bem vos succeda, e prolongueis os dias na terra que haveis de possuir.
௩௩நீங்கள் சொந்தமாக்கிக்கொள்கிற தேசத்திலே பிழைத்து சுகமாக நீண்டநாட்கள் வாழ, உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்கு ஏற்படுத்தின வழிகளெல்லாவற்றிலும் நடக்கக்கடவீர்கள்.