< 1 Crônicas 13 >

1 E teve David conselho com os capitães dos milhares, e dos centos, e com todos os principes.
தாவீது ஆயிரம்பேர்களுக்குத் தலைவர்களோடும் நூறுபேர்களுக்குத் தலைவர்களோடும் எல்லா அதிபதிகளோடும் ஆலோசனைசெய்து,
2 E disse David a toda a congregação de Israel: Se bem vos parece, e que vem do Senhor nosso Deus, enviemos depressa mensageiros a todos os nossos outros irmãos em todas as terras de Israel, e aos sacerdotes, e aos levitas com elles nas cidades e nos seus arrabaldes, para que se ajuntem comnosco.
இஸ்ரவேல் சபைகளையெல்லாம் நோக்கி: உங்களுக்கு விருப்பமாகவும் நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்கு சித்தமாகவும் இருந்தால், இஸ்ரவேலின் தேசங்களில் எல்லாம் இருக்கிற நம்முடைய மற்ற சகோதரர்களும், அவர்களோடு தங்களுடைய ஊரில் இருக்கிற ஆசாரியர்களும் லேவியர்களும் நம்மோடு சேரும்படி நாம் சீக்கிரமாக அவர்களிடம் ஆள் அனுப்பி,
3 E tornemos a trazer para nós a arca do nosso Deus; porque não a buscámos nos dias de Saul.
நமது தேவனுடைய பெட்டியைத் திரும்ப நம்மிடத்திற்குக் கொண்டு வருவோமாக; சவுலின் நாட்களில் அதைத் தேடாமற்போனோம் என்றான்.
4 Então disse toda a congregação que assim se fizesse; porque este negocio pareceu recto aos olhos de todo o povo.
இந்தக் காரியம் எல்லா மக்களின் பார்வைக்கும் சரியாக இருந்ததால், சபையார்கள் எல்லோரும் அப்படியே செய்வோம் என்றார்கள்.
5 Ajuntou pois David a todo o Israel desde Sihor do Egypto até chegar a Hamath; para trazer a arca de Deus de Kiriath-jearim.
அப்படியே தேவனுடைய பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து கொண்டுவரும்படி, தாவீது எகிப்தைச் சேர்ந்த சீகோர் நதிதுவங்கி ஆமாத்தின் எல்லைவரையுள்ள இஸ்ரவேலையெல்லாம் சேர்த்து,
6 E então David com todo o Israel subiu a Baala e d'ali a Kiriath-jearim, que está em Judah, para fazer subir d'ali a arca de Deus, o Senhor que habita entre os cherubins, sobre a qual é invocado o seu nome.
கேருபீன்களின் நடுவே வாசம்செய்கிற கர்த்தராகிய தேவனுடைய நாமம் தொழுதுகொள்ளப்படுகிற அவருடைய பெட்டியை யூதாவிலிருக்கிற கீரியாத்யாரீமிலுள்ள பாலாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் இஸ்ரவேலர்கள் அனைவரும் அந்த இடத்திற்குப் போனார்கள்.
7 E levaram a arca de Deus sobre um carro novo, da casa de Abinadab: e Uza e Ahio guiavam o carro.
அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்; ஊசாவும் அகியோவும் ரதத்தை வழிநடத்தினார்கள்.
8 E David, e todo o Israel, tocava perante Deus com toda a sua força; em canticos, e com harpas, e com alaudes, e com tamboris, e com cymbalos, e com trombetas.
தாவீதும் எல்லா இஸ்ரவேலர்களும் தங்களுடைய முழு பெலத்தோடும் தேவனுக்கு முன்பாக சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் மேளங்களையும் கைத்தாளங்களையும் பூரிகைகளையும் இசைத்து மகிழ்ச்சியாக ஆடிப்பாடினார்கள்.
9 E, chegando á eira de Chidon, estendeu Uza a sua mão, para ter mão na arca; porque os bois tropeçavam.
அவர்கள் கீதோனின் களம்வரை வந்தபோது, மாடுகள் தடுமாறியதால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன்னுடைய கையை நீட்டினான்.
10 Então se accendeu a ira do Senhor contra Uza, e o feriu, por ter estendido a sua mão á arca: e morreu ali perante Deus.
௧0அப்பொழுது யெகோவா ஊசாவின்மேல் கோபம்மூண்டவராக, அவன் தன்னுடைய கையைப் பெட்டியின் அருகில் நீட்டியதால் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான்.
11 E David se encheu de tristeza de que o Senhor houvesse aberto brecha em Uza; pelo que chamou áquelle logar Perez-uza, até ao dia d'hoje.
௧௧அப்பொழுது யெகோவா ஊசாவை அடித்ததால் தாவீது கவலைப்பட்டு, அந்த இடத்திற்கு இந்த நாள்வரை சொல்லப்பட்டவருகிற பேரேஸ் ஊசா என்னும் பெயரிட்டு,
12 E aquelle dia temeu David ao Senhor, dizendo: Como trarei a mim a arca de Deus?
௧௨அன்றையதினம் தேவனுக்கு பயந்து: தேவனுடைய பெட்டியை நான் என்னிடம் கொண்டுவருவது எப்படியென்று சொல்லி,
13 Pelo que David não trouxe a arca a si, á cidade de David; porém a fez retirar á casa de Obed-edom, o getheo.
௧௩பெட்டியைத் தன்னிடம் தாவீதின் நகரத்திலே கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத் ஏதோமின் வீட்டில் சேர்த்தான்.
14 Assim ficou a arca de Deus com a familia de Obed-edom, tres mezes em sua casa: e o Senhor abençoou a casa de Obed-edom, e tudo quanto tinha.
௧௪தேவனுடைய பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டிலே அவனிடம் மூன்று மாதங்கள் இருக்கும்போது, யெகோவா ஓபேத் ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.

< 1 Crônicas 13 >