< Pieśń nad Pieśniami 6 >

1 Dokąd poszedł twój umiłowany, o najpiękniejsza wśród kobiet? Dokąd się zwrócił twój umiłowany, abyśmy szukali go wraz z tobą?
உன் நேசர் எங்கே போனார்? பெண்களில் அழகுமிகுந்தவளே! உன் நேசர் எவ்விடம் போய்விட்டார்? உன்னோடேகூட நாங்களும் அவரைத் தேடுவோம். மணவாளி
2 Mój umiłowany zstąpił do swojego ogrodu między grządki wonności, aby paść w ogrodach i zbierać lilie.
தோட்டங்களில் மேயவும், லீலிமலர்களைப் பறிக்கவும், என் நேசர் தமது தோட்டத்திற்கும் கந்தவர்க்கப் பாத்திகளுக்கும் போனார்.
3 Ja należę do mego umiłowanego, a mój umiłowany [należy] do mnie; pasie on wśród lilii.
நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; அவர் லீலிமலர்களுக்குள்ளே மேய்கிறார். மணவாளன்
4 Piękna jesteś, moja umiłowana, jak Tirsa; urodziwa jak Jerozolima; groźna jak wojsko [z] chorągwiami.
என் பிரியமே! நீ திர்சாவைப்போல் அழகும், எருசலேமைப்போல் வடிவமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் பயங்கரமானவள்.
5 Odwróć ode mnie swoje oczy, gdyż one mnie urzekają. Twoje włosy są jak stado kóz, które schodzą z Gileadu.
உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு, அவைகள் என்னை வென்றது; உன் கருமையான கூந்தல் கீலேயாத் மலையிலே இலைகள்மேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது.
6 Twoje zęby są jak stado owiec, które wychodzą z kąpieli, wszystkie mają bliźnięta, a nie ma żadnej niepłodnej wśród nich.
உன் பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றாகிலும் மலடாக இல்லாமல் இரட்டைக்குட்டிகளை ஈன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போல் இருக்கிறது.
7 Twoje skronie między twoimi kędziorkami są jak połówki granatu.
உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதுளம்பழம்போல் இருக்கிறது.
8 Sześćdziesiąt jest królowych i osiemdziesiąt nałożnic, a dziewic bez liku.
ராணிகள் அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு; கன்னியர்களுக்குத் தொகையில்லை.
9 [Lecz] moja gołębica, moja nieskalana, jest jedna; jedynaczka u swojej matki, bez skazy u swojej rodzicielki. Widziały ją córki i nazwały ją błogosławioną, także królowe i nałożnice, i chwaliły ją, [mówiąc]:
என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; இளம்பெண்கள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; ராணிகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்.
10 Kim jest ta, która pokazuje się jak zorza poranna, piękna jak księżyc, czysta jak słońce, groźna jak uszykowane wojsko z chorągwiami?
௧0சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் பயங்கரமானவளாக, சூரிய உதயம்போல் உதிக்கிற இவள் யார்?
11 Zeszłam do ogrodu orzechów, aby patrzeć na owoce [rosnące] w dolinach, by zobaczyć, czy winorośl kwitnie i czy granaty wypuszczają pączki.
௧௧பள்ளத்தாக்கிலே பழுத்த பழங்களைப் பார்க்கவும், திராட்சைச்செடிகள் துளிர்விட்டு, மாதுளம்செடிகள் பூத்ததா என்று அறியவும், வாதுமைத் தோட்டத்திற்குப் போனேன்.
12 Nim się zorientowałam, moja dusza wsadziła mnie jakby w rydwany książąt mego ludu.
௧௨நினைக்காததற்குமுன்னே என் ஆத்துமா என்னை அம்மினதாபின் இரதங்களுக்கு ஒப்பாக்கினது. மணவாளியின் தோழிகள்
13 Zawróć, zawróć, Szulamitko; zawróć, zawróć, abyśmy mogli na ciebie patrzeć. Cóż widzicie w Szulamitce? [Widzimy] jakby oddziały wojenne.
௧௩திரும்பிவா, திரும்பிவா, சூலமித்தியே! நாங்கள் உன்னைப் பார்க்கும்படிக்கு, திரும்பிவா, திரும்பிவா. மணவாளி சூலமித்தியில் நீங்கள் என்னத்தைப் பார்க்கிறீர்கள்? அவள் இரண்டு படையின் கூட்டத்திற்குச் சமானமானவள்.

< Pieśń nad Pieśniami 6 >