< Objawienie 19 >

1 Potem usłyszałem donośny głos wielkiego tłumu ludzi w niebie, który mówił: Alleluja! Zbawienie i chwała, i cześć, i moc Panu, naszemu Bogu.
இவைகளுக்குப் பின்பு, பரலோகத்தில் திரளான மக்கள்கூட்டம் ஆரவாரத்தோடு சத்தமிடுகிறதைக் கேட்டேன். அவர்கள்: “அல்லேலூயா, இரட்சிப்பும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.
2 Bo jego wyroki są prawdziwe i sprawiedliwe, gdyż osądził wielką nierządnicę, która skaziła ziemię swoim nierządem, i pomścił krew swoich sług z jej ręki.
தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரர்களின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே” என்றார்கள்.
3 I powtórnie powiedzieli: Alleluja! A jej dym wznosi się na wieki wieków. (aiōn g165)
மறுபடியும் அவர்கள்: “அல்லேலூயா” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள். (aiōn g165)
4 I upadło dwudziestu czterech starszych i cztery stworzenia, i oddali pokłon Bogu zasiadającemu na tronie, mówiąc: Amen! Alleluja!
இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் முகங்குப்புறவிழுந்து: ஆமென், அல்லேலூயா,” என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
5 A od tronu rozległ się głos, który mówił: Chwalcie naszego Boga wszyscy jego słudzy i ci, którzy się go boicie, i mali, i wielcy.
மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரர்களே, அவருக்குப் பயப்படுகிற சிறியோர்களே பெரியோர்களே, நீங்கள் எல்லோரும் அவரைத் துதியுங்கள்” என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து வந்தது.
6 I usłyszałem jakby głos wielkiego tłumu i jakby głos wielu wód, i jakby głos potężnych gromów mówiących: Alleluja, bo objął królestwo Pan Bóg Wszechmogący.
அப்பொழுது திரளான மக்கள் போடும் ஆரவாரம்போலவும், பெரியவெள்ளத்தின் இரைச்சலைப்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் உண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.
7 Cieszmy się i radujmy, i oddajmy mu chwałę, bo nadeszło wesele Baranka, a jego małżonka się przygotowała.
நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய திருமணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்” என்று சொல்லக்கேட்டேன்.
8 I dano jej ubrać się w bisior czysty i lśniący, bo bisior to sprawiedliwość świętych.
சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய ஆடை அணிந்துகொள்ளும்படி அவளுக்கு தரப்பட்டது; அந்த மெல்லிய ஆடை பரிசுத்தவான்களுடைய நீதிகளே.
9 I powiedział mi: Napisz: Błogosławieni, którzy są wezwani na ucztę weselną Baranka. I powiedział mi: To są prawdziwe słowa Boga.
பின்னும், அவன் என்னைப் பார்த்து: “ஆட்டுக்குட்டியானவருடைய திருமணவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்” என்று எழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.
10 I upadłem mu do nóg, aby oddać mu pokłon, lecz powiedział mi: Nie rób tego, bo jestem sługą razem z tobą i twoimi braćmi, którzy mają świadectwo Jezusa. Bogu oddaj pokłon, bowiem świadectwem Jezusa jest duch proroctwa.
௧0அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னைப் பார்த்து: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரர்களோடு நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாக இருக்கிறது என்றான்.
11 Potem zobaczyłem niebo otwarte, a oto koń biały, a ten, który na nim siedział, nazywa się Wiernym i Prawdziwym i w sprawiedliwości sądzi i walczy.
௧௧பின்பு, பரலோகம் திறந்திருப்பதைப் பார்த்தேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமும் உள்ளவர் என்று அழைக்கப்பட்டவர்; அவர் நீதியாக நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.
12 Jego oczy [były] jak płomień ognia, a na jego głowie [było] wiele koron. I miał wypisane imię, którego nikt nie zna, tylko on sam.
௧௨அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போலிருந்தன, அவருடைய தலையின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்கும் தெரியாத ஒரு பெயரும் எழுதியிருந்தது.
13 Ubrany [był] w szatę zmoczoną we krwi, a jego imię brzmi: Słowo Boże.
௧௩இரத்தத்தில் தோய்க்கப்பட்ட ஆடையை அணிந்திருந்தார்; அவருடைய பெயர் தேவனுடைய வார்த்தை என்பதே.
14 A wojska w niebie podążały za nim na białych koniach, ubrane w bisior biały i czysty.
௧௪பரலோகத்திலுள்ள படைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய ஆடை அணிந்தவர்களாக, வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள்.
15 A z jego ust wychodził ostry miecz, aby nim pobił narody. On bowiem będzie rządził nimi laską żelazną i on wyciska w tłoczni wino zapalczywości i gniewu Boga Wszechmogącego.
௧௫அந்நிய மக்களை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான வாள் புறப்படுகிறது; இரும்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கடுமையான கோபமாகிய மதுபான ஆலையை மிதிக்கிறார்.
16 A na szacie i na biodrze ma wypisane imię: Król królów i Pan panów.
௧௬ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய ஆடையின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.
17 I zobaczyłem jednego anioła stojącego w słońcu. I zawołał donośnym głosem do wszystkich ptaków latających środkiem nieba: Chodźcie, zgromadźcie się na ucztę wielkiego Boga;
௧௭பின்பு ஒரு தேவதூதன் சூரியனில் நிற்பதைப் பார்த்தேன்; அவன் வானத்தின் நடுவில் பறக்கிற எல்லாப் பறவைகளையும் பார்த்து:
18 Aby jeść ciała królów, ciała wodzów i ciała mocarzy, ciała koni i ich jeźdźców, i ciała wszystkich: wolnych i niewolników, małych i wielkich.
௧௮நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், படைத் தளபதிகளின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுதந்திரமானவர்கள், அடிமைகள், சிறியோர், பெரியோர், இவர்களுடைய மாம்சத்தையும் அழிக்கும்படிக்கு, தேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தமாகக் கூப்பிட்டான்.
19 I zobaczyłem bestię i królów ziemi, i ich wojska zgromadzone, by stoczyć bitwę z tym, który siedzi na koniu, i z jego wojskiem.
௧௯பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய படைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய படைகளோடும் யுத்தம்பண்ணுவதற்கு வருவதைப் பார்த்தேன்.
20 I schwytana została bestia, a z nią fałszywy prorok, który czynił przed nią cuda, jakimi zwiódł tych, którzy przyjęli znamię bestii i oddawali pokłon jej wizerunkowi. Oboje zostali żywcem wrzuceni do jeziora ognia, płonącego siarką. (Limnē Pyr g3041 g4442)
௨0அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாக அற்புதங்கள் செய்த கள்ளத்தீர்க்கதரிசியும் பிடிக்கப்பட்டான். தன்னுடைய அற்புதங்கள் மூலமாக மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களையும் அதின் உருவத்தை வணங்கினவர்களையும் ஏமாற்றினவன் இவனே; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடு தள்ளப்பட்டார்கள். (Limnē Pyr g3041 g4442)
21 Pozostali zaś zostali zabici mieczem wychodzącym z ust tego, który siedział na koniu. I wszystkie ptaki najadły się ich ciałami.
௨௧மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற வாளினால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.

< Objawienie 19 >