< Objawienie 17 >
1 I przyszedł jeden z siedmiu aniołów, którzy mieli siedem czasz, i odezwał się do mnie, mówiąc mi: Chodź, pokażę ci sąd nad wielką nierządnicą, która siedzi nad wieloma wodami;
௧ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதர்களில் ஒருவன் வந்து என்னோடு பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடு பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் மக்களும் வெறிகொண்டிருந்தார்களே;
2 Z którą nierząd uprawiali królowie ziemi, a mieszkańcy ziemi upili się winem jej nierządu.
௨அவளுக்கு வருகிற தண்டனையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி;
3 I zaniósł mnie w duchu na pustynię. I zobaczyłem kobietę siedzącą na szkarłatnej bestii pełnej imion bluźnierstwa, mającej siedem głów i dziesięć rogów.
௩ஆவிக்குள் என்னை வனாந்திரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையும் உடையதும் அவதூறான பெயர்களால் நிறைந்ததுமான சிவப்பு நிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு பெண் ஏறியிருப்பதைப் பார்த்தேன்.
4 A kobieta była ubrana w purpurę i szkarłat i przyozdobiona złotem, drogimi kamieniami i perłami. Miała w swej ręce złoty kielich pełen obrzydliwości i nieczystości swego nierządu.
௪அந்தப் பெண் இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையும் அணிந்து பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.
5 A na jej czole wypisane było imię: Tajemnica, wielki Babilon, matka nierządnic i obrzydliwości ziemi.
௫மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் பெயர் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.
6 I zobaczyłem kobietę pijaną krwią świętych i krwią męczenników Jezusa. A gdy ją zobaczyłem, zdumiałem się bardzo.
௬அந்தப் பெண் பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைப் பார்த்தேன்; அவளைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
7 I powiedział do mnie anioł: Czemu się zdumiałeś? Ja ci wyjaśnię tajemnicę kobiety i bestii, która ją nosi, a która ma siedem głów i dziesięć rogów.
௭அப்பொழுது, தூதனானவன் என்னைப் பார்த்து: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்தப் பெண்ணுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாக இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்.
8 Bestia, którą widziałeś, była, a nie ma jej i ma wyjść z otchłani, i iść na zatracenie. I zdziwią się mieszkańcy ziemi, których imiona nie są zapisane w księdze życia od założenia świata, widząc bestię, która była i nie ma jej, a jednak jest. (Abyssos )
௮நீ பார்த்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, நாசமடையப்போகிறது. உலகம் உண்டானதுமுதல் ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியின் மக்களே, இருந்ததும், இல்லாமல்போனதும், இனி இருப்பதுமாக இருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். (Abyssos )
9 Tu jest rozum, który ma mądrość. Siedem głów to siedem gór, na których siedzi kobieta.
௯ஞானமுள்ள மனம் இதைப் புரிந்துகொள்ளும். அந்த ஏழு தலைகளும் அந்தப் பெண் உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்.
10 I królów jest siedmiu – pięciu upadło, jeden jest, inny jeszcze nie przyszedł, a gdy przyjdzie, ma pozostać na krótko.
௧0அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் ஆட்சி செய்வான்.
11 A bestia, która była, a nie ma jej, ona sama jest ósmym, a jest spośród siedmiu i idzie na zatracenie.
௧௧இருந்ததும், இப்பொழுது இல்லாததுமாகிய மிருகமே எட்டாவதாக வருகிறவனும், அந்த ஏழு இராஜாக்களில் ஒருவனும் நாசமடையப்போகிறவனுமாக இருக்கிறான்.
12 A dziesięć rogów, które widziałeś, to dziesięciu królów, którzy jeszcze nie objęli królestwa, ale wezmą władzę jak królowie na jedną godzinę wraz z bestią.
௧௨நீ பார்த்த பத்துக்கொம்புகளும், பத்து ராஜாக்களே; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடன் ஒருமணி நேரம்வரை ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
13 Mają oni jeden zamysł, a swoją moc i władzę oddadzą bestii.
௧௩இவர்கள் ஒரே மனதுடையவர்கள்; இவர்கள் தங்களுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.
14 Oni będą walczyć z Barankiem, a Baranek ich zwycięży, bo jest Panem panów i Królem królów, a [ci], którzy są z nim, są powołani, wybrani i wierni.
௧௪இவர்கள் ஆட்டுக்குட்டியானவரோடு யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாக இருக்கிறதினால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடு இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாக இருக்கிறார்கள் என்றான்.
15 I powiedział do mnie: Wody, które widziałeś, nad którymi siedzi nierządnica, to ludy, tłumy, narody i języki.
௧௫பின்னும் அந்த தூதன் என்னைப் பார்த்து: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைப் பார்த்தாயே; அவைகள் மக்களும், திரள்கூட்டமும், தேசங்களும், பல்வேறு மொழிகளைப் பேசுகிறவர்களுமே.
16 A dziesięć rogów, które widziałeś na bestii – oni znienawidzą nierządnicę i sprawią, że będzie spustoszona i naga i będą jeść jej ciało, i spalą ją w ogniu.
௧௬நீ மிருகத்தின்மேல் பார்த்த பத்துக்கொம்புகளைப் போன்றவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய சரீரத்தை நாசமாக்கி, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.
17 Bóg bowiem włożył im do serc, aby wykonali jego wolę, i to jednomyślnie, i oddali swoje królestwo bestii, aż wypełnią się słowa Boga.
௧௭தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறும்வரையும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே மனதுடையவர்களாக இருந்து, தங்களுடைய ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.
18 A kobieta, którą zobaczyłeś, to wielkie miasto, które króluje nad królami ziemi.
௧௮நீ பார்த்த அந்தப் பெண் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரமே என்றான்.